Saturday, July 4, 2020

எது மருத்துவம்?-மருத்துவ பயிற்சி முறை, சிறப்பம்சங்கள்

                        மருத்துவ பயிற்சி முறை

    ஒரு மருத்துவத்தை பயிற்சி செய்கிற பயிற்சியாளர் இரண்டு வகையில் பயிற்சிக்கு வருவதாக காணமுடிகிறது. ஆதி மருத்துவங்களாக  இருக்கிற பட்சத்தில், பாரம்பரிய மருத்துவங்களாக இருக்கிற பட்சத்தில், அது குடும்பம் சார்ந்து, முன்னோர் சார்ந்து கடத்தப்படுகிற, பரிமாறிக் கொள்கிற மருத்துவ முறையாக இருக்கிறது. இது ஒருவகையான மருத்துவம் கற்கும் முறை. மற்றொன்று, கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படுகிற  மருத்துவக்கல்வி. இந்த இரண்டு வகையான மருத்துவம் கற்கும் முறை சமூகத்தில் நிலவுகிறது. இந்த இரண்டு வகையான மருத்துவக் கல்வி முறையும் ஒரு விதத்தில் இணைந்து செயல்பட வேண்டிய தேவை இன்று மனித சமூகத்திற்கு உருவாகியிருக்கிறது. பாடத் திட்டத்தின் வழியாக கற்கிற கல்வி முறையில் வரலாற்று ரீதியான அனுபவங்களை பதிவுகளை கண்டுகொள்ள முடியும் என்பது என்னுடைய பார்வை. அதற்கு சமமாக, பாடத்திட்டத்தின் வழியாக கற்றுக் கொடுக்கப்படக் கூடிய மருத்துவ முறையில் நவீனம் இருக்கும் அளவிற்கு, புதிய செய்திகள் பதிவேற்றப்பட்டு இருக்கும் என்கிற அளவிற்கு பழைய வரலாறுகளும் குறிப்புகளும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும் என்கிற அளவிற்கு அனுபவங்கள் இருக்காது. மற்றொருபுறம் பரம்பரை வாயிலாக பாரம்பரியமாக கடத்தப்படுகிற பரிமாறப்படுகிற மருத்துவ கற்றல் முறை. பாரம்பரியத்தின் வழியாக கற்றுக்கொள்கிற ஒருவருக்கு ஆவணப்படுத்துதல், ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்குறிப்புகள் குறைவாக இருக்கலாம்.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்


                ஆனால், ஒரு மருத்துவத்தின் வழியாக ஒரு மனிதனுடைய உயிர்ப்பு நிலையை மேம்படுத்துகிற குணப்படுத்துகிற பேராற்றலை அவர் பெற்றிருப்பார். ஒரு நவீன கல்வி முறையின் வழியாக கற்றுக்கொள்கிற ஒரு மருத்துவ பயிற்சியாளரை விடவும் எந்த வகையிலும்  பாரம்பரியம் வழியாக கற்றுக்கொள்கிற ஒரு பயிற்சியாளர் ஒரு மருத்துவர் குறைந்தவர் இல்லை. ஒரு தர்க்கமாக உரையாடுகிற போது ஏதாவது ஒன்று, பாரம்பரிய மருத்துவ முறையோ அல்லது நவீன கற்றல் முறை வழியாக கற்றுக்கொள்கிற மருத்துவ முறையோ உயர்ந்தது அல்லது தாழ்ந்தது, குறைவானது என்று மதிப்பு செய்வோம் என்றால் அது போதுமானது அல்ல. ஒரு மருத்துவ முறையை இரண்டு அம்சங்களிலும் அணுக வேண்டிய பொறுப்பு, அணுக வேண்டிய தேவை இன்று நம்முன் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளின் பாற் பட்டு அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிற ஒரு பாரம்பரிய மருத்துவனினுடைய அனுபவங்கள் ஒரு மருத்துவருக்கு அவசியமானது. அதேநேரத்தில் நூறாயிரம் ஆண்டுகளுக்கு உரிய ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ நூல்களும் தத்துவ உரைகளும் ஒரு மருத்துவனுக்கு அவசியமானது. இந்த இரண்டும் சேர்ந்த போது தான் ஒரு மருத்துவர், ஒரு மருத்துவத் துறை பயிற்சியாளர், ஒரு மருத்துவத் துறை நிபுணர்  முழுமை பெற்றவராக திகழ முடியும் என்பது எனது பார்வை. இன்று மருத்துவ பணிகளில் மருத்துவத் துறைகளில் பார்க்கிறபோது நவீன மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை பொருட்படுத்துவதே இல்லை. பாரம்பரிய மருத்துவர்கள் கல்லூரிகளில் படித்து, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பெற்ற நவீன மருத்துவர்களைக் கண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிற நிலை காண முடிகிறது. இந்த இரண்டும் இந்த இரண்டு துறை, இந்த இரண்டு கற்றல் முறை சார்ந்தவர்களுக்கும் போதுமானது அல்ல, சிறந்ததல்ல. இந்த இரண்டு தன்மையான அணுகுமுறையும் நவீனமான ஆவணப்படுத்தப்பட்ட கல்வி  முறையில் கற்கிற மருத்துவமும் அனுபவங்களை மட்டும் சேகரித்து  வைத்திருக்கிற, கடத்தல் முறையாக இருக்கிற, பரிமாறும் முறையாக இருக்கிற பாரம்பரிய மருத்துவ முறையும் கலந்து செயல்பட வேண்டிய தேவை மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து பயணிக்கிற இரண்டையும் கலந்து முன்வைக்கிற ஒரு அனுபவம்தான் சிறந்த மருத்துவமாக இந்த மனித குலத்திற்கு பணிபுரிய முடியும் என்று நான் நம்புகிறேன். ஒரு பாரம்பரிய மருத்துவத்தினுடைய அனுபவங்களும் நவீன மருத்துவத்தினுடைய ஆவணப்படுத்தும் முறைகளும் வரலாற்றுப் பதிவுகளும் கலந்த கலவையாக இருக்கிற மருத்துவ குறிப்புகள் தான் மருத்துவ முறைகள்தான் சிறந்த மருத்துவமாக புதியதொரு தலைமுறைக்கான முழுமையான மருத்துவமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.

ALSO READ:குணமளிப்பவர்

                       மருத்துவத்தின் சிறப்பம்சங்கள்

     மருத்துவம் என்பது இலக்கியமாக வரையருக்கிறபோது ஒரு கடல் போல, பிரபஞ்சம் போல, நுட்பமானது, விரிவானது, அழகானது என்றெல்லாம் நாம் விளக்கம் சொல்ல முடியும். ஆனால் மருத்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவம் என்பது மூன்று அம்சங்களில் இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒன்று, மருத்துவத்தினுடைய ஆவணங்களும் அனுபவங்களும். இது ஒரு பகுதி. இரண்டாவது, மருத்துவ பயிற்சி மேற்கொள்கிற, மருத்துவத்தை கற்றுக்கொள்கிற, மருத்துவத்தை கற்றுக்கொடுக்கிற மருத்துவ நிபுணர்களினுடைய செயல்பாடுகள். மூன்றாவது, மருத்துவத்தை மேற்கொள்கிற, மருத்துவ சிகிச்சையை பயன்படுத்துகிற பயனாளரின், துயரின் மனோநிலை, தேர்வு முறை. இந்த மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு மருத்துவம் என்பது இருக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது சரியானதும் கூட.

                மருத்துவம், மருத்துவத்தினுடைய ஆவணங்கள், மருத்துவ ஆய்வுகள், மருத்துவம் வைத்திருக்கக்கூடிய அனுபவங்கள் என்பது பகுதி ஒன்று. மருத்துவம் மேற்கொள்கிற, மருத்துவம் பயிற்சி செய்து பார்க்கிற நிபுணர்களின் உடைய அணுகுமுறை என்பது பகுதி-இரண்டு. மருத்துவத்தை தேர்வு செய்கிற  துயரர்களினுடைய பகுதி மூன்று. இந்த மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய மருத்துவம் என்பதே மருத்துவத்தைப் பற்றி உரையாடுகிற போது நாம் வரையறுத்து வைக்கிற இடமாக நான் காண்கிறேன். இதில் ஆவணப்படுத்துகிற மருத்துவம் பற்றி ஆய்வு செய்கிற பகுதி என்பது ஒருபுறம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நிபுணர்களினுடைய தன்மை என்பது அதற்கு இணையான இன்னொரு கோணத்தில் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் நான் கருதுகிறேன்.

ALSO READ:நோயற்ற வாழ்வு

                ஒரு மருத்துவத்தை பயிற்சி மேற்கொள்கிற பயிற்சியாளர் ,ஒரு மருத்துவத்தை நேசிக்கிற பயிற்சியாளர், மருத்துவர் என்கிற முறையில் தன்னை உயர்த்திப் பிடிக்கிற பயிற்சியாளர், மிகவும் சிகிச்சை பலன் அளிப்பதில்  மிகவும் உதவக்கூடிய தன்மையோடு இருக்கிறவர். ஒரு நோயாளிக்கு, எந்த வகையான மருத்துவ முறையாக இருந்தாலும் முழுமையாக நோய் தீர்வதற்கு, முழுமையாக அவர் நோயில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவ பயிற்சியாளரின் பங்கு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது . ஒரு மருத்துவ பயிற்சியாளருடைய அணுகுமுறை என்பது, இணக்கம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு  நோயாளியினுடைய நோய் என்பது எக் காரணத்தினாலும் வந்திருக்க முடியும்

    ஒரு நோயாளியினுடைய நோய் தன்மை என்பது தத்துவார்த்த அடிப்படையில் எந்த காரணத்தில் இருந்தும்கூட வெளிப்படக்கூடும். ஆனால் நோய் தீர்வதற்கு ஒரு நோயாளியினுடைய மனோ நிலையில் இருந்து ஒரு மருத்துவரினுடைய  அணுகுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அது நவீன  மருத்துவ மருத்துவர்களாக இருக்கலாம், பாரம்பரிய மருத்துவ மருத்துவர்களாக இருக்கலாம். எத்தகைய மருத்துவத்துறை சார்ந்த பயிற்சி மேற்கொள்கிற மருத்துவர்களாக இருந்தாலும்கூட மருத்துவரினுடைய அணுகுமுறை என்பது ஒரு மனிதனுக்கு நோய் சரியாவதற்கு, அசௌகரியம் சரியாவதற்கு மிகுந்த உதவி செய்வதாக இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படி என்றால் ஒரு மருத்துவர், இன்று சமகாலத்தில் பெருகி வருவதுபோல மருத்துவத்தை தேர்வு செய்கிற முறை மாற்றப்பட வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் சமூகத்தில் உருவாக்கப்படவேண்டும். வேறு படிப்பு கற்றல் முறைக்கு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைக்காததால் மாற்று மருத்துவம் தேர்வு செய்கிற மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதிக பணம் பெற்றுக்கொள்ளமுடியும், அதிக பணம் சம்பாத்தியம் செய்து கொள்ள முடியும் என்கிற மனோபாவத்தை உருவாக்குகிற மருத்துவ காட்சிகளை நாம் இன்று மருத்துவ படிப்புகளின் வழியாக காணமுடிகிறது. இப்படியான மருத்துவ தேர்வு முறையில் கற்றுக் கொள்கிற ஒரு மருத்துவரால் ஒரு நல்ல நோய் தீர்க்கும் வல்லுனராக மாற முடியாது. மருத்துவம் என்பது ஒரு பல்கலைக்கழகங்கள் வழங்குகிற நற்சான்றிதழ் வழியாக அடையக்கூடிய இலக்கு அல்ல. ஒரு மருத்துவரினுடைய ஆழமான புரிதலும் அவருக்கும் ஒரு நோயாளிக்கும் இடையே இருக்கிற இண்க்கமும்தான் இங்கு உரையாடுவதற்குரிய  தேவையாக  இருக்கிறது. ஆயிரக்கணக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதை போல ஒரு மருத்துவச் சான்றிதழையும் பெற்றுக்கொண்டு மருத்துவம் செய்துவிடமுடியும் என்கிற மனோபாவத்தை சமூகம் உடனடியாக நிருத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைய காலத்தில் அது அவசியமானதும் கூட. ஒரு குழு இளம் தலைமுறையினர் தாம் தேர்வு செய்கிற கல்வியில் மருத்துவத்தை கல்வியாக மட்டுமே வேலைக்குச் செல்கிற வேலைவாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தக்கூடிய மனோபாவத்தை இந்த சமூகம் முன்நின்று முறியடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தையோ நவீன மருத்துவத்தையோ தேர்வு செய்கிற ஒரு கல்வியாளர் மருத்துவத்தின் பாற்பட்டு இருக்கிற நேசத்திலிருந்து தேர்வு செய்தார் என்றால் அவர் மிகச் சிறந்த மருத்துவ நிபுணராக இயல்பிலேயே மாறமுடியும். அவரது இயல்பே குணம் அளிக்கக்கூடிய வல்லமை கொண்டதாக மாறும் என்பது என்னுடைய பார்வை. சான்றிதழ்கள் மருத்துவர்களை ஒருபோதும் உற்பத்தி செய்யாது

ALSO READ:மருத்துவர்களுக்கான பரிந்துரை

    சான்றிதழ்கள் ஒருபோதும் மருத்துவர்களுக்கு அதற்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்து விடாது. மருத்துவர் என்பவர் ஒரு தத்துவத்தை உள்வாங்கிக்கொண்டு ஒரு மருத்துவ முறையை தன் நேசத்தின் பாற்பட்டு ஈர்க்கப்பட்டு தன்னுடைய குணமளிக்கும் வல்லமையையும் மருத்துவத்தினுடைய தத்துவத்தையும் இணைத்து பதிவு செய்கிற இணைத்துப் பயணிக்கிற தன்மையோடு இருக்கிற ஒருவர் தான் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக எந்த வகையான மருத்துவத்தையும் கையாளுகிற மருத்துவ சாதனையாளராக மாற முடியும்  என்பது எனது பார்வை. அந்த வகையில் மருத்துவம் என்பது வேலை வாய்ப்பிற்கான துறை அல்ல. மருத்துவம் என்பது மனித உயிர்களுக்கு மிக நெருக்கமாக மனிதனுடைய உயிர்ப்பு நிலையை சற்று உயர்த்துவதற்கு பயன்படக்கூடிய உயர்வுக்காக, உயர்த்துவதற்காக பயன்படக்கூடிய ஒரு துறையாக ஒரு பலமான, மகிழ்வான பயணமாக இருக்க வேண்டும், இருக்கிறது. அதனுடைய தத்துவங்களும் ஆய்வுகளும் பதிவுகளும் அதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் மிகச் சிறந்த மருத்துவருக்கான மிகச்சிறந்த மருத்துவ நிபுணருக்கான பாதையாக இருக்கிறது.

.


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...