Sunday, July 5, 2020

எது மருத்துவம்?-மருத்துவரின் பொறுப்பு,அணுகுமுறை

                             மருத்துவரின் பொறுப்பு

     மருத்துவம் என்பது ஒரு மனித குலத்தை, தனிமனிதனினுடைய மனநலத்தை, உடல் நலத்தை மேன்மை செய்வதற்காக செயல்படுகிற துறை. மனிதகுல வரலாற்றில், மனிதர்களுடைய நலவாழ்வு குறித்து நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆய்வுகளின் வழியாக மருத்துவங்கள் வேறுவேறு விதமான பரிணாமங்களில் வந்து சேர்ந்திருக்கிறது,வளர்ந்துகொண்டே இருக்கிறது.ஒவ்வொரு மருத்துவமும் அதற்கே உரிய சிறப்புத் தன்மைகளோடு, அதற்கே உரிய தனித்தன்மைகளோடு ஒரு மனிதனுடைய நலம் முழுமையாவதற்கு உதவி செய்துகொண்டே இருக்கின்றன. எந்த மருத்துவமும் தன்னளவில் மிடுக்கோடு உயர்வாக தத்துவார்த்தமாக இருந்தாலும்கூட வேறொரு மருத்துவத்தை குறை மதிப்பீடு செய்யவோ சுட்டிக்காட்டவோ தவறாக இருக்கிறது என்று உரையாடவோ ஆய்வுகள் இல்லை. ஆனால், சமகாலத்தில் நாம் பார்க்கிற, உரையாடுகிற மருத்துவப் பயிற்சியாளர்கள் மட்டுமல்லாமல் மருத்துவ நிபுணர்கள் கூட தான் சார்ந்திருக்கிற மருத்துவத்தை பேசுகிற அளவிற்கு, தான் பயிற்சி செய்கிற மருத்துவத்தை உயர்வாக பார்க்கிற அளவிற்கு மாற்று மருத்துவங்களை சமகாலத்தில் தனக்கு பக்கத்தில் இருக்கிற வேறொரு மருத்துவ கூடத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும் குறைவாக பார்ப்பதும் அவதூறாக பேசுவதும் கூட நிகழ்வதை பார்க்கிறோம். இது மருத்துவத்திற்கு ஆரோக்கியமான போக்கு அல்ல. மருத்துவர்களுக்குக் கூட பண்பட்ட அளவில் அவர்களை வளர்த்துக் கொள்வதற்கு போதுமானது அல்ல.

ALSO READ:உயிர்ப்பு நிலை


                எந்த மருத்துவமும் தத்துவார்த்த அடிப்படையில் மனித குலத்தினுடைய தேவையில் இருந்து மனித குலத்தினுடைய குணமாக்கும் வல்லமையை கற்றுக் கொடுக்கவோ பகிர்ந்தளிக்கவோ இருக்கிற தன்மையோடு மருத்துவ தத்துவங்கள், மருத்துவ ஆய்வுகள் இருந்து வந்திருக்கின்றன. ஆதி காலத்தில் தோன்றிய எந்த வகையான மருத்துவமாக இருந்தாலும் சரி, கிபி  1600, 1700 களில் ஆதி மருத்துவங்கள் தோன்றியதாக  வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்திற்கு முன்பாகவே மருத்துவங்கள் தோன்றியதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. எந்த மருத்துவ முறையும் எந்த மருத்துவ தத்துவ நூலும் எந்த தேகசாஸ்திர நூலும் கூட சமகாலத்தில் அது தோன்றிய காலத்தில் இருக்கிற வேறொரு மருத்துவத்தைப் பற்றி குறைவாகவோ அவதூறாகவோ குறை மதிப்பீடாகவோ பதிவு செய்ததாக பார்க்க முடியவில்லை. இன்றுவரை வேறு வேறு தளங்களில், வேறு வேறு மருத்துவ நூல்களை நாம் பார்க்க முடிகிறது. ஒரு மருத்துவ நூலானது இன்னொரு மருத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. தான் சிறந்த மருத்துவம் என்று கூட சொல்லுவதில்லை. ஒரு மனிதனுடைய தனிப்பட்ட உடல்நலம் ஒரு மனிதனினுடைய தனிப்பட்ட மனநலம் எவ்வாறு இருக்கிறது,அதை எவ்வாறு மேம்படுத்துவது என்கிற அளவில் மருத்துவங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன, அவற்றின் தத்துவ நூல்கள் இருக்கின்றன. ஆனால், அந்த மருத்துவத்தை பயிற்சி செய்கிற பயிற்சியாளர்கள் அப்படியான தன்மையோடு இருப்பதில்லை என்பதை காண முடிகிறது.

ALSO READ:இயற்கைக்கு திரும்புவது

                ஒரு மருத்துவத்தை பயிற்சி செய்கிற பயிற்சியாளர் தன் மருத்துவத்தை உயர்த்தி சொல்கிற அளவிற்கு சம அளவில் இன்னொரு மருத்துவத்தை குறை மதிப்பீடு செய்கிறார். சுட்டிக் காட்டிப் பேசுகிறார். இந்தப் போக்கு மருத்துவர்களுக்கு தாம் சார்ந்திருக்கிற மருத்துவ தத்துவத்தை  குறைவாக பார்க்கச் செய்யும் என்பது என்னுடைய பார்வை. மருத்துவ  தத்துவம் என்பது தனிமனிதனினுடைய மனித சமூகத்தினுடைய உயிர்ப்பு நிலையை அக வாழ்வை மனப்பூர்வமான வாழ்வியல் பயணத்தை உயர்த்தி கட்டுவதாக இருக்கிறது. ஆனால், மருத்துவத்தை  பயின்று  நிபுணத்துவம் பெற்ற  ஒருவர் அவ்வாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். அப்படியான மனிதர்கள் அப்படியான மருத்துவர்கள் மாற்று மருத்துவத்தை, தான் சாராத இன்னொரு மருத்துவத்தை குறை மதிப்பீடு செய்யாத மருத்துவ நிபுணர்கள் உருவாக வேண்டும் என்பது இன்றைய தேவை. அவர்களின் தேவை என்பதை விடவும், மருத்துவத்தின் தேவை என்பதை விடவும், சமகாலத்தில் இருக்கிற மருத்துவத்தை எதிர்பார்த்து  நிற்கிற மனித குலத்தினுடைய தேவையாக இருக்கிறது.இந்த சஞ்சலமான மன ஓட்டம் இருக்கிற மனித குலத்தினுடைய தேவையாக இருக்கிற மருத்துவத்தினுடைய மருத்துவருடைய பண்பு நாம் கணக்கிட கூடியது, கணக்கிட வேண்டியது. ஒரு நல்ல மருத்துவம், நல்ல மருத்துவத் தத்துவம் நல்ல மருத்துவர்களை உருவாக்க  வேண்டிய அவசியம் இருக்கிறது. உருவாக்குகிறது என்கிற வரலாறும் இருக்கிறது. இந்த அவசியத்தையும் வரலாறையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு நல்ல மருத்துவர் உருவாக வேண்டியது அந்த மருத்துவரினுடைய தனிப்பட்ட பொறுப்பு.video of this article

 

                          மருத்துவரின் அணுகுமுறை

 

     மருத்துவம் என்பது மருத்துவர்கள், பயன்படுகிற துயர்கள், மருத்துவத்தை  ஆவணப்படுத்துகிற  மருத்துவ ஆர்வலர்கள், மருத்துவத்தை பண்பாட்டோடு இணைத்து வைத்திருக்கிற பண்பாட்டு சமூகதளம் இவைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிணைப்பு. மருத்துவம் காலம் காலமாக இருப்பதற்கும் வளர்வதற்கும் இத்தகைய கூறுகளும் இயங்கு முறைகளும் ஒரு இசைவான திசையில் நகர வேண்டியது அவசியம். மருத்துவத்தை பயிற்சி செய்கிற பயிற்சியாளர்கள், பண்பாட்டுத் தளத்திலிருந்து மருத்துவத்திற்கான தத்துவ சாரங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக் கொண்டு அதனை சமகால மனிதனுடைய உடல் கூறுகளுக்கு தகுந்தாற்போல் உடல் தன்மைக்கு தகுந்தாற்போல் அவர்களின் தனிப்பட்ட பயிற்சி அனுபவத்திலிருந்து மேன்மையுறச் செய்யவும் முடியும். மருத்துவ தத்துவம் என்பது சமன்பாடு போல ஒன்றை வைத்துக்கொண்டு மனிதனுடைய உடல் வளர்ச்சியை உளவியல் வளர்ச்சியை ஆய்வு செய்யவோ சரி செய்யவோ கூடியது அல்ல. முதல் மனிதன் தோன்றியதிலிருந்து இன்றைய மனிதன் வரை ஏராளமான உடல் மாற்றங்களை, உளவியல் மாற்றங்களை தனி மனிதனுடைய உடலும் உளவியல் அம்சமும் மாறிமாறி பெற்றிருக்கிறது. எதிர்வரும் காலத்தில் இந்த மனோநிலை கூட இன்னும் வேறு தளத்தில் தீவிரமாகவோ மிதமாகவோ சோர்வாகவோ மாறக்கூடும்.

ALSO READ:நோய் தோற்றம்

                முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருவாக்கப்பட்ட மருத்துவ தத்துவம் நூல்களின் அடிப்படையில் மருத்துவ சாரத்தின் அடிப்படையில் ஒரு சமன்பாடு போல  மனிதனை அணுகுவது, நோய்களை களைய முற்படுவது இன்றைய மனிதனுக்கு நோய் தீர்க்கும் முறைக்குறிய போதுமான செயல்பாடு அல்ல.  ஒரு மருத்துவரினுடைய சொந்த முயற்சியில் அவருடைய தனிப்பட்ட அனுபவப் பயிற்சியில் அல்லது பயிற்சி அனுபவத்தில் தான் உள்வாங்கிக்கொண்ட தத்துவத்தை தன்னுடைய பயிற்சியின் பாற்பட்டு தன்னுடைய அனுபவத்தின் பாற்பட்டு சமகாலத்தில் தான் சந்திக்கிற ஒரு துயரருக்கு நோய் தீர்ப்பதற்கு அவருக்கு உதவி செய்வதே சிறந்த மருத்துவ முறை. ஒரு மருத்துவரினுடைய பொறுப்பும் கூட. ஒரு மருத்துவரினுடைய சீர்தூக்கி சுயவிமர்சனமான பார்வையும் அவ்வாறு இருக்க வேண்டும். தான் பெற்றுக்கொண்ட தத்துவத்தை தான் வாசித்து வைத்திருக்கிற தத்துவத்தை, தான் எடுத்து வைத்திருக்க உணவு பழக்கவழக்கங்களை, தான் அணுகுகிற சிகிச்சை முறைகளை அப்படியே தான் சந்திக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் பொருத்திப் பார்த்து, செயல்படுத்திப் பார்த்து எல்லா மனிதனுக்கும் ஒரேவிதமான மருத்துவ அணுகுமுறையே போதுமானது என்கிற மனோபாவம் மருத்துவர்கள் மத்தியில் இருப்பது சாலச்சிறந்தது அல்ல. தத்துவத்தை ஒருவாறாக உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு மருத்துவரும் தத்துவத்தின் பாற்பட்டு மருத்துவத்தினுடைய ஆதார சுருதியோடு இணையக் கூடிய தன்முனைப்பு பயிற்சியை மேற்கொள்கிற போது அதோடு இணைந்து சமகால மனிதனுடைய உளவியல் உயிர் சார்ந்த உடல்சார்ந்த பகுதிகளை கணக்கிட்டுக் கொள்ளவும் தேவை இருக்கிறது. தத்துவமும் சமகாலத்தில் பயன்படக்கூடிய அனுபவம் பாற்பாட்டு அணுகுமுறையும் மட்டுமே ஒரு  துயரரினுடைய ஒரு நோயாளியினுடைய நோயை முழுவதுமாக, விரைவாக மேம்படுத்த, சீர்படுத்த உதவி செய்யக்கூடிய அணுகுமுறை. ஆக, தலைசிறந்த தத்துவமாக இருக்கிற மருத்துவ நூல்களும் நடப்பில் இருக்கிற நோயாளிக்கு தகுந்தாற்போல் அணுகுமுறையோடு மாற்ற வேண்டிய பயன்படுத்த வேண்டிய பொறுப்பு ஒரு மருத்துவருக்கு இருக்கிறது. தத்துவம் சொல்கிற அத்தனை சமன்பாடுகளையும் சமகாலத்தில் இருக்கிற மனிதனுக்கு தகுந்தாற்போல் மாற்றி இளக்கி  நெகிழ்வாக சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பும் கூட அந்த மருத்துவரை சார்ந்ததே.video of this article


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...