துயரரின் மருத்துவ தேர்வு
இன்று ஒரு மருத்துவ முறையை தேர்வு செய்கிற அதிக பொறுப்பு துயருற்றவருக்கு இருக்கிறது. இதற்குள் இருக்கிற நடைமுறை சரியாக இருந்தாலும் கூட எனது பார்வையில் அது போதுமானதாக தோன்றவில்லை. மருத்துவங்கள் கூறுகிற தத்துவார்த்த சிந்தனையின் அடிப்படையில் ஒரு மனிதன் நோயுற்று இருக்கிறான். அந்த நோயுற்ற தன்மை என்பது அவர்களது அந்த மனிதனது உடலளவிலோ மனதளவிலோ இருக்கலாம். உடலிலும் அல்லது மன அளவிலும் இரண்டிலும் கூட இருக்கக்கூடும். இன்னும் நுட்பமாக மனோவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி பார்க்கிறபோது, அநேக நோய்கள், பெரும்பாலான நோய்கள் மனம் சார்ந்தே உருவாகின்றன என்று நிரூபித்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை சமகாலத்தில் இருக்கிற எல்லா மருத்துவ நிபுணர்களும் மனவியல் சாராத உடலியல் மட்டும் பார்க்கிற, ஆய்வு செய்கிற மருத்துவ நிபுணர்களும் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.another article about medication
ஆக, ஒரு மனிதன் நோயுற்று இருக்கிறார் என்றால் அவர் பெரும்பாலும் மனம் சார்ந்த சோர்விலிருந்து நோய்வாய்பட்டு இருக்கிறார். மனம் சார்ந்த சோர்விலிருந்து அவருக்கு நோய் உடல் முழுவதும் பரவி இருக்கிறது என்கிற தன்மையில் நாம் பார்க்கவேண்டியதுள்ளதாக மனோவியல் நோய் குறிப்புகள் வலியுறுத்துகின்றன. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கூட. மன அளவில் நோயுற்று இருக்கிற மன அளவில் சஞ்சலமாக இருக்கிற ஒரு மனிதன் தன் தேவையின் பொருட்டு முடிவு செய்ய வேண்டியது அவரது மன அளவில் இருந்துதான் தீர்மானிக்கப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் தான் பார்க்கிற எல்லா நிகழ்வில் இருந்தும் தனக்கான மிகப் பொருத்தமான ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவரது மனம் சார்ந்த ஓட்டத்திலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. அவரது தேர்வு மருத்துவமாக இருக்கிற பட்சத்தில் அதுவும் அவரது மன நிலையில் இருந்தே தீர்மானிக்கப்படக் கூடியதாக நாம் கருதிக் கொள்ள முடியும். இந்த வகையில் ஒரு மனிதனுக்கு மன அளவில் அசவுகரியம் ஏற்பட்டிருக்கிற போது நோய் ஏற்பட்டிருக்கிற அவர் மருத்துவத்தை தேர்வு செய்வார் என்றால் அவருடைய தேர்வு என்பது அவருடைய மனம் குழப்பமான நிலையில் மனம் சோர்வான நிலையில் தேர்வு செய்கிற தேர்வாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அப்போது சோர்வாக இருக்கிற ஒரு மனிதன் மிகச் சரியான ஒரு தேர்வை செய்ய முடியாது என்பது என்னுடைய பார்வை. சோர்வாக இருக்கிற ஒரு மனிதன் நல்ல உணவை தேர்வு செய்ய முடியாது என்பதுபோல, சோர்வாக இருக்கிற ஒரு மனிதன் நல்ல சிந்தனையை காண முடியாது என்பதை போல, சோர்வாக இருக்கிற ஒரு மனிதன் ஒரு வேலையை நேர்த்தியாக செய்ய முடியாது என்பதைப்போல , சோர்வாக இருக்கிற ஒரு மனிதன் நல்ல மருத்துவத்தையும் தேர்வு செய்ய முடியாது. ஒரு நோயாளி தனக்கான மருத்துவத்தை தேர்வு செய்து கொள்வது என்பது ஒரு சோர்ந்த மனிதன் தனது சோர்வின் பாற்பட்டு தனது சோர்விற்கு உட்பட்டு சோர்ந்த நிலையிலேயே ஒரு மருத்துவத்தை தேர்வு செய்கிறார் . அவர் தேர்வு செய்வது சோர்வு அளவில் நல்ல மருத்துவமாக இருக்குமே தவிர இயல்பிலேயே அவரது சோர்வை போக்கக்கூடிய நல்ல மருத்துவமாக இருக்குமா என்பது கேள்வியாக எழுகிறது.
ALSO READ:மருத்துவரின் அணுகுமுறை
ஆக, ஒருவருக்கு நோய்வாய்பட்டு இருக்கிறது என்றால் ஒருவருடைய மனநிலை பிறழ்வாக இருக்கிறது என்றால் ஒருவருடைய உடல் நிலை பிறழ்வாக இருக்கிறது என்றால் அவரது தேர்வு என்பது மருத்துவம் சார்ந்த தேர்வாக இருக்கும் பட்சத்தில், மருத்துவத்திற்காக தேர்வாக இருக்கிற பட்சத்தில் அவர் தேர்வு செய்வதை விடவும் அவரோடு இருக்கிற அனுபவமாக இருக்கிறா அவருக்கு நம்பிக்கையாய் இருக்கிற, வேறு ஒரு சமூக உறவு அல்லது சமூக நட்பு அல்லது அவரோடு இருக்கிற மற்றொரு நபரினுடைய பரிந்துரையாக இருக்குமென்றால் இன்னும் கூடுதலாக அவருக்கு நோயிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நான் கருதுகிறேன்.
துயரருக்குரிய முதலுதவி
ஒரு மனிதனுக்கு உடலளவில், உளவியல் சார்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற அசௌகரியத்திலிருந்து ,ஒரு மனிதனை விடுதலை செய்வதே, நலம் நோக்கி நகர்த்துவதே, உயர்த்துவதே சிறந்த மருத்துவமாக இருக்க முடியும். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்றால், அவர் உடலளவிலோ மன அளவிலோ நோய்வாய்ப்பட்டதற்கான வெளிப்பாடுகள் தெரியக்கூடும். அவருக்கு உடல் அளவில் அல்லது மன அளவில் அவர் மருத்துவத்தை தேர்வு செய்வதற்கான உதவி தேவைப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எந்த மருத்துவம் இணக்கமாக, சிறப்பாக இந்த நேரத்தில் சரியாக உதவக்கூடும் என்று தேர்வு செய்கிற பொறுப்பு மனிதனை காப்பாற்ற வேண்டிய, மனிதனுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பாக நான் கருதுகிறேன். ஒரு மனிதன் சார்ந்திருக்கிற , மனிதனை இயக்குகிற, மனிதனை பயன்படுத்திக் கொள்கிற ஒரு சமூகம் அந்த பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ALSO READ:மருத்துவத்தின் சிறப்பம்சங்கள்
ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்றால் அவருக்கு மிகப் பொருத்தமான மருத்துவம் எதுவாக இருக்கும் என்று ஆய்வு செய்யக்கூடிய ஒரு குழுவை மருத்துவம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ உருவாக்குவது நல்லது. மனிதனுடைய உளவியல் சார்ந்து, உடலியல் சார்ந்து இயங்கக்கூடிய நிபுணர்கள் அந்தக்குழுவில் இடம்பெற வேண்டும். அந்தக் குழு அந்த மனிதனுடைய மனநிலையை உடல்நிலையை உயர்ப்புநிலையை கண்டு கொள்கிற நுட்பமாக பார்க்க தெரிந்திருக்கிற குழுவாக இருக்க வேண்டும். ஒருவருக்கு உடல் சார்ந்தோ விபத்தாகவோ உடல் நிலை மாற்றம் ஏற்படும் என்றால், மனநிலை மாற்றம் ஏற்படும் என்றால் அவருக்கு இந்த நேரத்தில் அந்த உடல் பிறழ்வு, மனப்பிறழ்வு ஏற்படக் கூடிய நேரத்தில் அவருக்கு உதவி செய்யக் கூடிய சிறந்த மருத்துவ உதவி எதுவாக இருக்க வேண்டும் என்று அந்தக் குழு தீர்மானிக்க வேண்டும். அந்தக் குழுவே பரிந்துரைக்க வேண்டும். ஒரு மனிதன் நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்கிற நிலை வரும்போது அவரை அவரோடு இருக்கிறவர்கள் அந்த குழுவினுடைய பரிந்துரைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது எனது பார்வை. அந்தக் குழு அவரை, அவர் பற்றிய விவரங்களை அவரோடு உரையாடுவதில் இருந்து கண்டு கொள்ள வேண்டும். அதன் பாற்பட்டு அந்த உரையாடலின் விளைவாக அவருக்கு இந்த நேரத்தில் எந்த மருத்துவம் சிறப்பாக உதவி செய்ய முடியும் என்பதை அந்தக்குழு அறிவுறுத்த வேண்டும், பரிந்துரைக்க வேண்டும் என்பது சரியான நோய் தீர்க்கும் முறையாக இருக்கும். இதுவே மிக எளிமையாக அவருக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய நோயைத் தீர்ப்பதற்கு உதவும். இந்த சமூகத்தில் இருக்கிற மற்றொரு சிக்கல் சமகாலத்தில் நிலவுகிற ஒரு குழுவானது சுயநலம் சார்ந்தோ சமூகத்தினுடைய சுரண்டல் நலம் சார்ந்தோ தேவை சார்ந்தோ இயங்குகிற எந்த பார்வையோடும் எந்த நிலைப்பாட்டோடும் இருக்குமென்றால் இந்த நோய் தீர்க்கும் முறை முழுவதுமாக தோல்வியுறும். எந்த சுரண்டல் நோக்கமும் இல்லாமல் ஒரு மனிதனுடைய உயிர்ப்பு நிலையை நுட்பமாக சீர் செய்வதற்கு அக்கறையுள்ள ,மனித மருத்துவ நிபுணர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்று சொன்னால் அந்த மனிதனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய துயரத்திலிருந்து அந்த மனிதனை எல்லா மட்டங்களிலும் முழுமையாக குணப்படுத்த முடியும் அவருடைய உயிர்ப்பு நிலையை உயர்த்த முடியும் என்பது என்னுடைய பரிந்துரை. அந்த வகையில் ஒரு மனிதனுடைய நோய்வாய்ப்பட்ட காலத்தில் அந்த மனிதனுக்கு மிக நெருக்கமாக நோய் தீர்ப்பதற்கு உதவி செய்கிற குழுவே நல்ல முதலுதவி குழுவாக இருக்க முடியும். நோயைத் தீர்ப்பதற்கு முன் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், மருத்துவம் சார்ந்த அறிவை அவர் பெற்றுக் கொள்வதற்கு முன், அவருக்கு செய்யப்படுகிற பரிந்துரைகளே மருத்துவ தேர்வுக்காக வழங்கப்படுகிற அறிவுரைகளே அந்த மனிதனுக்கான நோய் தீர்ப்பதற்குரிய முதன்மையான உதவியாக இருக்க முடியும் முதல் உதவியாகவும் இருக்க முடியும்.
No comments:
Post a Comment