உணர்வும் உணவும்

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வு.ஒருவன் மீன் பிடிக்க ஆற்றிற்கு செல்கிறான். கையில் தூண்டில் இருக்கிறது. வெறும் தூண்டிலோடு மீன் பிடிக்க முயற்சிக்கின்ற வேலையில் மீன்கள் அகப்படவில்லை. இப்போது உயிருள்ள புழுவைத் தூண்டில் முள்ளில் செருகி மீனுக்கு இரையாக்குகிறான். உயிரோடு துடிக்கிற புழுவை மீன் கடிக்க வருவதால் முள்ளில் மீன் சிக்கி துடிக்கிறது. இந்த நிகழ்வை வள்ளலார் தன் பாடல் ஒன்றில் பதிவு செய்கிறார்.உயிருக்கு போராடும் புழுவை மீன் உண்பதால், மீன் உயிருக்கு போராடுகிறது. உயிருக்கு போராடும் மீனை உண்பதால் மனிதன் என்னவாகப் போகிறானோ என்று கவலையோடு வள்ளலார் பதிவு செய்கிறார்.food in current life style
ஜீவகாருண்யம் என்கிற பிற உயிரை மதித்துப் போற்றுகிற தத்துவ மரபுகள் எல்லாமும் உணவு என்பது இந்த பூமியில் வாழ்கிற உயிர்களை தொந்தரவு செய்யாமல் பெற்றுக் கொள்வதாகும். பழம் பழுத்து தரையில் விழுவது உணவு.நெல் வளர்ந்து வளைந்து சிந்தினால் உணவு.இவ்வாறு ஒவ்வொரு உணவும் தமது விளைச்சலால் பண்பட்ட நிலையை எட்டும் போது பிறருக்கு உரிய பொருளாக மாறுகிறது.
ALSO READ:மருத்துவ பயிற்சி முறை
இத்தகைய மாற்றத்தில் விளையும் பொருளை உட்கொள்ளும் போது நிறைவான உணர்வு நிலையோடு காணப்படுவீர்கள்.நவீன உயிரியல் விஞ்ஞானம் கூட இதைப் பற்றி ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. ஒரு பெரிய மிருகத்தைக் கொன்று மாமிசமாக்கும் போது அந்த மிருகத்திற்குள் என்ன நிகழ்கிறது. உயிரியல் விஞ்ஞானம் சொல்வது இதைத் தான். அவர்களின் ஆராய்ச்சி இதைப்பற்றித்தான். கொல்லப்படும் விலங்கு முதலில் பதட்டமாகிறது, பயப்படுகிறது. அதனுள் இருக்கற எல்லா ஆக்ரோச உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறது. அவற்றின் மொத்த உடலும் இயல்பான நிலையிலிருந்து, பயந்து இறுக்கமான நிலைக்கு மாறி விடுகின்றன. இறுக்கமான மாமிசம் உட்கொள்ளும் ஒருவர் இறுக்கமான மனநிலையில் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானம் ஆய்வைத் தொடர்கிறது.
ALSO READ:மருத்துவரின் பண்பு
பண்டைய மருத்துவ முறைகள் உணவிற்கும் உடல் நலத்திற்கும் தொடர்பிருப்பது போல உணவிற்கும் உணர்விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக குறிப்பிடுகின்றன. நீங்கள் காடுகளில் வாழ்ந்த போது மாமிச உணவு உட்கொண்டது, மாமிச உணவு உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பது, ஜீவகாருண்ய உணவை உண்போர் நோய் வாய்ப்படுவது உள்ளிட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு உணவு முறையை தர்க்கபூர்வமாக அணுக முடியும். அன்றாடம் உங்கள் வாழ்க்கை முறையில் எந்த வகை உணவை வேண்டுமானாலும் உட்கொள்ளும் ஒருவர் நோய்வாய் பட்ட நிலையில் இயற்கை தருகிற இயல்பான உணவை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.உடல் நோயுற்ற நிலையில் மூன்று வேளையும் அசைவ உணவு உண்பவர்கள், மூன்று வேளையும் சமைத்த உணவு உண்பவர்கள், வேண்டிய நேரமெல்லாம் வேண்டிய உணவு, வேண்டிய அளவு உண்பவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கூட அவ்வாறே உட்கொண்டால் உயிர் வாழ்வதே சிக்கலாகும். நோய்வாய்ப்பட்ட நிலையில் உங்கள் உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கும், காப்பாற்றிக் கொள்வதற்குமான முயற்சியில் உணவின் பங்கு மிகப் பெரியது. நோய் களைய உடல் முயற்சித்தாலும் உடலுக்குள் எதிர் உணர்வுகள் வராத வண்ணம் பாதுகாத்துக் கொள்வது ஜீவகாருண்யம் வரிசைப் படுத்துகிற எளிதான உணவுகளே.
ALSO READ:திடீரென நிகழ்ந்தால் - 2
நோய்வாய்ப்பட்ட காலங்களில் இயல்பான உணவு,இயற்கையின் விளைச்சலால் வந்த உணவு, உடலுக்குள் நிகழ்த்துகிற ஆரோக்கியத்திற்குரிய மாற்றங்களை புரிந்து கொண்டு எல்லா நாட்களிலும் அவற்றை நடைமுறை படுத்திக் கொள்ளலாம். நல்ல உணவு நல்ல உணர்வை ஏற்படுத்தும் என்பது நோய்க் காலத்திற்கு பொருந்துவதுபோல, மற்ற காலங்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும்.உங்கள் உணவிற்கும் உடல் நலத்திற்கும் இருக்கிற தொடர்பு உங்கள் உடல் நலத்திற்கும் உளவியல் நலத்திற்கும் உள்ள தொடர்பை வடிவமைக்கிறது. தோலின் உணர்வு அனுபவத்தை பெற முடியாத ஒருவருக்கு தொடு உணர்வு பற்றி தெரியாது. குறைபாடுள்ள கண் பார்வையுள்ளவரால் பார்வை உணர்வை அனுபவிக்க முடியாது. செவித்திறன் குறைந்து போனால் ஒலியுணர்வை கிரகிக்க முடியாது. உங்கள் ஒலியை பெற்றுக் கொள்ள காது அவசியம். காது என்கிற வடிவம் சரியாவதற்கு உணவு அவசியம்.வெளிச்சத்தை உணர்ந்து கொள்ள முழுமையான கண்கள் அவசியம். கண் எனும் உறுப்பு நிறைவாக இருப்பதற்கு உணவு அவசியம். உங்கள் தொடு உணர்வு வேலை செய்ய தோல் அவசியம். தோலை முறையாக பராமரிக்க உணவு அவசியம். உங்கள் உணவிலிருந்தே உறுப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் உறுப்புகள் வழியாகவே உணர்வுகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒரு உணர்வு நிறைந்த அனுபவத்தை உறுப்புகள் வழியாக பெற்றுக் கொள்ள அடிப்படைக் காரணி உணவு.
No comments:
Post a Comment