![]() |
money |
பணம்
பணம், செல்வத்தை, ஆஸ்தியை எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒரு மனிதனுக்கு சமூகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த மனிதனுக்கு பின்னால் இருக்கிற, அந்த மனிதனை சார்ந்து இருக்கிற குடும்பம், வழிபாட்டுமுறைகள், சமுதாய உறவு இவையெல்லாம் உள்ளடக்கிய ஒரு சமூக வடிவம்தான் அவன் எப்படி இயங்க வேண்டும் என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவன் போய் திரும்புவதற்கான வரைபடத்தை அவர் கையில் கொடுத்து இருக்கிறது. அங்க வரைபடத்திற்கு உட்பட்டுத்தான் சமூகச் சார்புள்ள ஒரு மனிதன் பயணிக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுது சமூகம் சார்புள்ள மனிதனுக்கு அந்த நிமிட வாழ்க்கையை வாழ்வது சாத்தியமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
ALSO READ:நோய் எங்கு ஆரம்பமாகிறது?
சமூகம் சார்புள்ள மனிதனுக்கு சலிப்பும் சங்கடங்களும் பெருகி இருக்கும் நிலையில், இந்த சலிப்பில் இருந்தும், சங்கடத்தில் இருந்தும் விடுபடுவதற்கு வழி என்ன? என்று தேடுகிற நிலையில், அவன் வந்து சேருமிடம், எடுக்கும் முடிவு நிம்மதியான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு செய்யவேண்டியது அந்த நிமிட வாழ்க்கையை நாம் வாழ்வது என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த நிமிட வாழ்க்கையை வாழ்வதே என்பதை கண்டுபிடித்து விட்டால் அந்த மனிதன் இந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தவுடன், வாழ்க்கையை வாழ துவங்கிய உடன் இந்தச் சமூகம் அல்லது இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற பழைய அனுபவங்கள் மறுபடியும் "நீ பணக்காரனாக வேண்டும்; எதிர்காலத்தில் பணம் சேர்க்கவில்லை என்றால் நீ தோற்றுப் போய் விடுவாய்" என்று சமூகச் சார்புடைய சிந்தனைகளை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டே இருக்கிறது. சமூகத்தோடு, சமூகம் சார்ந்த மனநிலையோடு பயணிக்கிற ஒரு மனிதனால் சலிப்பில் இருந்து விடுபட முடியுமா என்பது தெரியவில்லை.
ALSO READ:துயரருக்குரிய முதலுதவி
சலிப்பாய் இருக்கிற ஒரு மனிதனுக்கு விடுதலைக்கான வழி சமூக சார்பில் இருந்து அவன் தன்னை விலக்கி வைத்து பார்ப்பதுதான். சமூகத்தோடு பயணிக்கிற இந்த பயணத்தில் தன்னுடைய சுய சார்பு தன்மையை சமூகம் கொடுத்திருக்கிற சலிப்பில் இருந்து சமூகம் கொடுத்திருக்கிற சோர்வில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான முயற்சியில் இருந்து தான் அந்த நிமிட வாழ்க்கையை வாழ முடியும். நீங்கள் சமூகத்தோடு இருந்துகொண்டே இந்த நிமிடம் வாழ்க்கையை வாழ முடியுமா என்பது சோர்வுடன் இருந்து இந்த நிமிட வாழ்க்கையை வாழ முடியுமா என்று கேட்பது போல. சமூகத்தோடு வாழ்வது, சமூக மனநிலையோடு வாழ்வது, சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற கற்பனைகளோடு வாழ்வது, திட்டத்தோடு வாழ்வது என்பதும், இந்த நிமிட வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வது என்பதும் நேர் எதிரானது. இவை இரண்டும் சேர முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற பணக்கார கற்பனையும், சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற வாழ்க்கை குறித்த திட்டமிடலும், சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற விதவிதமான கற்பிதங்களும் உங்களை சலிப்பானவர்களாகவும் சோர்வானவர்களாகவும் மாற்றி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும். அப்படி பார்க்கப்படும் பொழுது தான் இந்த சலிப்பில் இருந்தும் இந்த சோர்வில் இருந்தும் விடுபடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கான வழியை நோக்கி நகர முடியும். அதற்கான வழி தான் இந்த நிமிட வாழ்க்கையை வாழ்வது.
ALSO READ:நோய் தீரும் வழிமுறை
ஒரு மனிதன், ஆனந்தமாக இருக்க வேண்டிய ஒரு மனிதன், ஆனந்தமாக வாழ்வதற்காகவே தன்னை அறிவாளி ஆக்கிக் கொண்ட மனிதன், புத்தி கூர்மையுள்ள ஒரு மனிதன், தான் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு தான் சலிப்பில்லாமல் வாழ வேண்டும் என்பது போல் இருந்தது என்றால் தன்னுடைய புத்திசாலித்தனத்தில் இருந்து எடுக்கப்படும் முடிவு தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும் என்றால் அவர் செய்ய வேண்டியது தன்னை கவனித்து சலிப்பில் இருந்து விடுவித்துக் கொள்வது எவ்வாறு என்பது போல செய்தியாக இருக்க வேண்டும். தன்னை கவனித்து இந்த சலிப்பில் இருந்து விடுதலையாகி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த மனிதன் கண்டுபிடிக்கிற வழி, கண்டுபிடித்து வந்து சேருகின்ற இடம், அந்த நிமிட வாழ்க்கை அவன் வாழ்வது. அந்த நிமிட வாழ்க்கையை அவன் வாழ்வதாக முடிவு செய்தால் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற கற்பனைகளை முழுவதுமாக தள்ளிவைப்பது தான் சரி. சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற திட்டமிட்ட மனநிலையை முழுவதுமாக தள்ளி வைப்பது தான் சரி. ஏனென்றால் இந்த திட்டமிடலும் இந்த கற்பனையும் திரும்பத் திரும்ப புதிர் போட்டுக் கொண்டே இருக்கும். இந்த புதிய எல்லாம் அவிழ்க்க முடியாதது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும். இவை சொல்வது எல்லாம் நாம் வந்து சேர முடியாத இடம். அது மீண்டும் களைப்பையும் மீண்டும் சோர்வையும் மீண்டும் இன்னொருவரை திருட முடியுமா? இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா? இன்னொருவருடன் சண்டை போட முடியுமா? எப்படியாவது நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது போல இதுமாதிரியான வன்முறை உணர்வுகளை தான் மனிதனுக்குள்ளே பரிந்துரை செய்து கொண்டே இருக்கும்.
ALSO READ:நோய்களிலிருந்து விடுபட
இந்த வாழ்க்கை முறையில் இந்த பரிந்துரைகளில் வழியாக நீங்கள் சோர்வானவர்களாக இருக்கிற பொழுது இன்னொருவரின் மீது அன்பு செலுத்த முடியாது. நீங்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் பொழுது இன்னொருவருடன் கனிவாக பேச முடியாது. நீங்கள் கஷ்டத்தில் இருக்கிற பொழுது இன்னொருவருடன் உரையாட முடியாது, அளவளாவ முடியாது. இந்த சோர்வும் இந்த வன்முறைகளும் இந்த சஞ்சலங்களும் விடுபட்டு நீங்கள் மகிழ்வாக இருப்பதற்கு நீங்கள் அமைதியாக இருப்பதற்கு கொண்டாட்டமாக இருப்பதற்கு வந்து சேர வேண்டிய இடம், இந்த நிமிட வாழ்க்கையை மிகுந்த உற்சாகத்தோடு எதிர்கொள்வதும் வாழ்வதும்தான். அது மட்டும் தான் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற மன வடிவங்களிலிருந்து உங்களுடைய பழைய அனுபவங்களிலிருந்து ஏற்பட்டிருக்கிற எல்லா சோர்வுகளிலிருந்தும் உங்களை விடுதலை செய்து மகிழ்வான, கொண்டாட்டமான ஆளாக மாற்றும்.
No comments:
Post a Comment