தற்கொலை
![]() |
suicide |
எதிர்காலம் குறித்த கவலையில் பயத்தில் தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகள் என்பது விருப்பம். ஒரு மனிதன் தன்னை கொலை செய்து கொள்வதற்கான உரிமை; ஒரு மனிதன் தன்னை வாழ்வித்து கொள்வதற்கான உரிமை - இந்த இரண்டு உரிமைகளில் தேர்வு அந்த மனிதனின் மனம் சார்ந்தது. ஒரு மனிதன் சமூகத்தில் தான் எவ்வாறு இருக்க வேண்டும், இருக்கப் போகிறோம் என்கிற கற்பனையில் இருந்து தாம் வாழ்கிற அல்லது மரணிக்கிற ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறான். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு தைரியம் இல்லாமல் வாழ்வதற்கு பழக்கம் இல்லாமல் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிற செய்தி மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. என்னைப் பொருத்தவரை நான் அதை அவ்வாறு பார்க்கவில்லை.
ALSO READ:நலம் எனப்படுவது
ஒரு மனிதனுடைய வாழ்க்கை
என்பது எவ்வாறு வாழவேண்டும் என்று
அவன் தீர்மானிக்கிற தீர்மானத்துடன்
சம்பந்தப்பட்டது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை
என்பது சமூகம் தீர்மானிப்பதாக இருக்கிற
பட்சத்தில் சமூகம் வலியுறுத்துகிற வாழ்வையோ
சாவையோ அவன் தேர்வு செய்ய
வேண்டி இருக்கிறது. நாளைய தேவைக்காக சேமிப்பு
இல்லாத, கடன் பெறுங்கொண்டு கவலைகள்
கொண்டு இருக்கிற ஒரு மனிதனுக்கு சமூகம்
பரிந்துரைக்கிற நெருக்கடி, திணிக்கிற வாய்ப்பு அவனை நகர செய்வது
அல்லது மரணிக்க செய்வது. தற்கொலைகள்
இவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன. வாழ்வதற்கு வாய்ப்பு குறைந்தவர்கள் மத்தியில் தற்கொலைகள் திணிக்கப்படுகின்றன. அது சமூகத்தில் தன்னை
நிலைநிறுத்திக் கொள்வதற்கான குறுக்கு வழியாக சமூகம் வடிவமைத்து வைத்திருக்கிறது.
என்னைப் பொருத்தவரை தற்கொலைகள் நிச்சயமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தரம் இரண்டு வேறாக
நான் பார்க்கிறேன்.
ALSO READ:100.3
ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு அடிப்படை காரணம் அவனது மனம், மனம் பற்றிய சிந்தனை,அவனைப் பற்றிய கற்பனைகள். கற்பனை என்பது இல்லாததை இருப்பதாக எண்ணிக் கொள்வது; இருப்பதை இல்லை என்று கருதிக் கொள்வது. ஒரு மனிதனுக்கு இருக்கிற கற்பனைகள், ஆணவப்போக்கு அவனை தற்கொலை நோக்கி நகர்த்துகிறது. ஆணவம் இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை என்பது எனது வாதம். ஆணவம் இல்லாதவர்களால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று கூட என்னால் சொல்ல முடியும். ஆக, தற்கொலை என்பது ஆணவத்தின் பாற்பட்டு மட்டுமே நிகழ்வதால் மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிற போது அவன் ஆணவத்தை மட்டும் கொலை செய்து கொண்டால் போதுமானது. தற்கொலையில் இரண்டு வகையாக நான் பார்க்கிறேன். ஒரு மனிதன் தன் ஆணவத்தை தன் பொருட்டு கொலை செய்து கொள்வது ஒருவகையான ஆணவக்கொலை, இது தரம் உயர்வானது; ஒரு மனிதன் ஆணவத்தை முன்னிட்டு சமூகத்திற்காக தன்னுடலை கொலை செய்து கொள்வது, இது தரம் குறைவான தற்கொலை.
ALSO READ:பசுமைக் காலங்களே பண்டிகைக் காலங்கள்
ஆணவத்தை தன்னைத்தானே எரித்துக் கொள்கிற, ஆணவத்தினை தன்னைத்தானே கொலை செய்து கொள்கிற நுட்பங்களை மனம் குறித்து பேசுபவர்கள் பரிந்துரைக்க வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவ நிபுணர்கள் அதில் ஆய்வு செய்ய வேண்டும். மனம் இல்லாத, கற்பனை இல்லாத, ஆணவம் இல்லாத ஒரு மனிதனை உருவாக்குகிற போது சமூகத்தில் தற்கொலைகள் இல்லாமல் போகும். ஏனென்றால், ஆணவங்கள் தான் தற்கொலைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆணவங்கள் தான் தற்கொலைகளை ஊக்குவிக்கின்றன. ஆணவங்கள்தான் தற்கொலைகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனின் தற்கொலை என்பது ஆணவத்தை கொலை செய்வதாக மாறுகிற போது ஒரு மனிதனின் தற்கொலை என்பது ஆணவத்தை விடுவிப்பதாக மாறுகிற போது மனிதன் முழுமையாக இந்த வாழ்வை கற்பனை இல்லாமல், கவலைகள் இல்லாமல், அச்சமில்லாமல் முழுக்க இயல்பாக, மகிழ்வாக வாழ முடியும் என்பதே என்னுடைய பார்வை. ஆக, ஒரு மனிதனின் வாழ்வு என்பது ஆணவத்திற்கு அப்பாற்பட்டு நகர்கிற போது தற்கொலை இல்லாத வாழ்வாக மாறும். ஆணவத்திற்கு உட்பட்ட வாழ்வாக பயணிக்கிறபோது ஆணவத்தோடு பயணிக்கிறபோது அந்த மனிதனின் வாழ்க்கை வாழ்வதாக தெரிந்தாலும் தற்கொலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிற வாழ்வாகவே மாறிப்போகிறது.
No comments:
Post a Comment