துயரங்களிலிருந்து விடுபட
அதிக நகர் மயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையில் அதிக மருத்துவமனைகள் பெருகி இருக்கின்றன. அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டு வாழ்க்கை முறையில் அதிக நினைவாற்றல் காணாமல் போயிருக்கின்றன. இலகுவாக ஒரு வேலையை செய்வதற்கு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மனிதனின் இயல்பான உடல் வலு குறைந்து போய் இருக்கிறது. இவ்வாறு மனிதன் கண்டுபிடித்த ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் மனிதன் இழந்து தனக்கு நேரெதிரான சங்கடங்களை உருவாக்கி வைத்திருப்பது அதிகரித்து இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
மனிதனின் எல்லா துன்பங்களும் எல்லா துயரங்களும் இவ்வாறான விருப்பங்களும் நவீன வாழ்க்கை முறையும் கொண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்ப்பது ஒரு நேர்மையான பார்வையாக இன்று
தேவைப்படுகிறது, இருக்க வேண்டும் என்று
தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற மனோபாவங்கள் இத்தகைய சமூகச் சூழலை காரணமாகக் கொண்டு தன்னை பலியிட்டு கொண்டே இருக்கின்றன. அது மனிதனின் மனிதத்துவத்தை மனிதனின் மேன்மையை புரிந்துகொள்வதற்கும் தடையாக இருக்கின்றன. இந்த உலகில் பரிணாம வளர்ச்சி மனிதனோடு
நிறைவுக்கு வந்து விட்டது என்றே சொல்லும் அளவிற்கு விஞ்ஞானங்கள் கூறிக் கொண்டே இருக்கின்றன. ஆய்வாளர்கள் இனி வளர்ச்சி என்பது பரிணாமத்தின் தன்மையின் அளவில் மாற்றம் என்பது உடலளவில் இருக்கப்போவது இல்லை. மன அளவிலும் சிந்தனை அளவிலும் இருக்கும் என்று கூறுகின்றனர். அந்த வகையில் நிகழ்கின்ற காட்சிகளும் நிகழ்கின்ற வளர்ச்சி முறைகளும் இருப்பதை பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் இத்தகைய மன அளவில் ஏற்படுகிற வளர்ச்சி என்பது மனிதனுக்கு மிகுந்த துயரத்தை கொடுப்பதாக இருக்கின்றன என்பதை பார்க்கவேண்டும், பார்க்கவேண்டியுள்ளது.
ALSO READ: EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
இவ்வளவு துயரங்களும் நீங்கள் உங்கள் சமூகம் சார்ந்து உருவாக்கி வைத்தவை தான். எந்த ஒரு துயரமும் உங்களுக்கு இயல்பாக வழங்கப்பட்டது அல்ல; நீங்கள் தேர்வு செய்து கொண்டதுதான் என்று நான் திருத்தமாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் பொருளாதாரத்தில் துயரமுற்றுக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் உடலளவில் நோயுற்று காணப்படலாம். நீங்கள் உறவுகளில் சிக்கலை உருவாக்கி வைத்திருக்கலாம். உங்களுக்கு கவனிக்கக்கூடிய கவனிக்க முடியாத எல்லா துயரங்களுக்கும் எல்லா சிக்கல்களுக்கும் முழுப்பொறுப்பு நீங்கள்தான். உங்களது நவீன வளர்ச்சி முறையில் உங்களுக்கு இருக்கிற மோகம் தான் இத்தனை துயரங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
துயரங்கள் இல்லாமல் நவீனத்தை கண்டுபிடிக்கவேண்டும் என்ற கற்பனை இருந்தால் அந்த கற்பனை ஓரத்தில் வைத்துவிட்டு உங்கள் துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது? என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள் என்றால் நீங்கள் மிக எளிமையாக துயரங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கும் மனிதனின் மனித குலத்தின் மேன்மையை மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு பெற்றவராக மாறுவீர்கள். உங்களது துயரத்திற்கு மாற்றாக துயரத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு துவக்கமாக நீங்கள் வந்து சேரவேண்டிய இடம் உங்களது உடல். உங்களது உடல் என்பது வெறுமனே சதையும் எலும்பும் தசைகளுமாக இருக்கிற ரசாயனச் சேர்மானம் அல்ல. உங்களது உடல் என்பது என்பதும் உடலது இயக்கம் என்பதும் இந்தப் பிரபஞ்சத்தின் சிறிய அளவிலான மாதிரி. ஒரு சிறிய பிரபஞ்சம். நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறுகிற இரண்டு எரி கற்களின் மோதல் என்பது உங்கள் உடலுக்குள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் காற்றும் மழையும் இடியும் பெய்து கொண்டு இருக்கிற சூழல் உங்கள் உடலுக்குள் இருக்கிற நாளமில்லா சுரப்பிகள் செய்யக்கூடும்.
ALSO READ: FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)
உங்கள் உடல் என்பது வெறுமனே உடல் அல்ல. உங்கள் உடல் என்பது வெறுமனே உங்கள் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் அறுத்துப் பார்க்கிற தசைகளும் சதைகளும் எலும்புகளும் குடல்களும் சேர்ந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல. உங்களது உடல் என்பது முழுக்க முழுக்க இயற்கை அல்லது நீங்கள் நம்புகிற இறைவன் அல்லது நீங்கள் போற்றுகிற முழுமை எந்த பெயரில் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு உங்கள் அறிவிற்கு உங்கள் மோகத்திற்குப் பிடிபடாத ஒரு பிரம்மாண்டத்தின் சிறிய முன்மாதிரி. உங்களது உடல் அமையப் பெற்றிருக்கிறது. உங்கள் வாழ்வின் எல்லா துயரங்களையும் நீங்கள் கடக்க வேண்டும் என்றும் உங்கள் வாழ்வின் நோய்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற சுமைகளை நீங்கள் இறக்கி வைக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்று சொன்னால் நீங்கள் துவங்க வேண்டியது அல்லது வந்து சேரவேண்டியது ஒரே இடம் உங்களது உடல். உங்களது உடலின் இயக்கத்தை நீங்கள் புரிந்து
கொள்வது. உங்களது உடலின் இயக்கம் எதற்கான பாதையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது. உங்கள் உடல் எந்தத் தன்மையில் இயங்குகிறதோ அந்த தன்மையில் உங்களது வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்வதும் மாற்றிக் கொள்வதும் உங்கள் எல்லா சுமைகளையும் கரைந்து போகச் செய்யும்.
இந்த பேரண்டத்தின் சிறு துகளாக சிறு மாதிரியாக இருக்கக்கூடிய உங்களது உடல் எப்போதும் தனக்கு அவசியம் இல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்வதில்லை. உங்கள் அறிவு சார்பு இல்லாமல் வெறுமனே உங்களது உடலை தேர்வு செய்ய சொன்னீர்கள் என்றால் ஒரு கனமான மூக்கு கண்ணாடியை உங்கள் மூக்கு தூக்கி எறிந்து விடும். இன்னும் மூக்குக்கண்ணாடி என்பது கூட உங்களது கண்களுக்கு அவசியமில்லாத பொருளாகவே உங்கள் உடல் கருதிக்கொள்ளும். நீங்கள் தேர்வு செய்கிற வேகமான பயணம் உங்கள் உடலுக்கு சுமையாகவும் தடையாகவும் இருக்கக்கூடும். உங்கள் உடலில் இருந்து உங்கள் வாழ்க்கையை துவங்குங்கள். உங்கள் உடலைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை தேர்வு செய்யுங்கள் உங்கள் உடல் முழுக்க முழுக்க உங்கள் மோகங்கள் கடந்து, உங்கள் கற்பனைகள் கடந்து உங்கள் உடலுக்கே தேவையான அடிப்படை அம்சங்களில் இருந்து உங்களை வழி நடத்தும். உங்களது உடலின் வழிநடத்துதல் என்பது உங்கள் கடவுள் உங்களுக்கு வழிகாட்டும் தன்மையை போன்றது. எப்போதும் அது உங்களை ஆசீர்வதிக்கும். ஏனென்றால் பிரபஞ்சத்தின் மிகச் சிறிய துகளாக இருக்கிற உங்கள் உடல் ஆசீர்வதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment