Saturday, October 3, 2020

ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம் - அக்குபங்சர்

 

                மாற்று மருத்துவம் -  அக்குபங்சர்   

alternative medicine


     உலகில் எல்லா மனிதனும் வாழ்வதற்குரிய உரிமையும் ஆற்றலும் அந்த மனிதனுக்குள் பொதிந்து இருக்கிறது என்பதை  மனிதன் உணர்ந்தும் உணராமலும் இருக்கின்றான். ஒரு மனிதன் நல்ல வாழ்வை வாழ்வதற்கு அவனுக்குள் எல்லா வாய்ப்புகளும் இருப்பதும் அவனுக்காக எல்லா வழிமுறைகளும் இருப்பதாகவும் மறை நூல்களும் ஆன்மீக வழிகாட்டும் நூல்களும் கூட மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே  இருக்கின்றன. ஒரு நூலின் வழிகாட்டுதல் தாண்டி, ஒரு மறை போதனையாளர் வழிகாட்டுதல் தாண்டி, ஒரு மனிதன் தனக்கு கிடைத்திருக்கிற வாழ்வதற்கான வாய்ப்பில் மிக இலகுவாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்பது நிஜமானது.

மேலும் வாசிக்க:உடலோடு பரிவாக இருங்கள்

            ஒரு மனிதன் அவனளவில் மகிழ்ச்சியாக நலமாக கொண்டாட்டமாக உற்சாகமாக இருப்பதற்கு  அவனுக்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த வாய்ப்பை புரிந்துகொள்வதற்கும் இந்த வாய்ப்புகளுக்குள் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் பிணைத்துக் கொள்வதற்கும் இந்த  வாய்ப்பினுடைய வேறொரு தளங்களை தன்மைகளை மறுப்பதற்கும் பயணிப்பதற்குமான சாத்தியங்கள் மனிதன் தவறவிட்ட பகுதியாக இருக்கிறது. மிக எளிமையாக இந்த வாழ்வின் நுணுக்கங்களை, நுட்பங்களை புரிந்து கொள்வதன் வழியாக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளவும் இந்த வாழ்வின் சந்தோசங்களை பேணிக் கொள்ளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய வாய்ப்பை இத்தகைய கொண்டாடும் முறைகளை, கொண்டாடுவதற்கான சாத்தியத்தை, மனிதனுக்கு கற்றுக் கொடுப்பது மறை நூல்களுக்கு சமமாக நான் கருதுவது மருத்துவ நூல்களை.

            மறை நூல்கள், மருத்துவ நூல்கள்  இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறை கொண்டவையாக, இயங்கும் முறை கொண்டவையாக இருப்பதை நான் பார்க்கிறேன். மறை நூல்களை மறை நூல்களாகவும் மருத்துவ நூல்களை விஞ்ஞான நூல்களாகவும் பிரித்துப் பார்த்து வைத்திருக்கிற படிக்கக்கூடிய ஒரு சமூக நடைமுறை இருந்தாலும்கூட என்னால் அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவம், மறை நூல்கள் இரண்டும் மனிதனுக்கு வேறு தளங்களில் உதவக்கூடிய ஒரே நோக்கம் கொண்டவையாக இருப்பதை நான் பார்க்கிறேன். மருத்துவம் என்பது மனிதன் மறை நூல்கள் சொல்கிற இறைவனை, இறைநிலையை, ஆன்மாவை, உயிரை, தத்துவத்தை என்று மறை நூல்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிற எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான ஆலோசனைகளை வழங்குவதில் மறை நூல்கள் முன்னிலை வகிக்கின்றன. ஒரு புரிதலும் ஆலோசனைகளும் மறை நூல்கள் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களும் மனிதனின் மனம் சார்ந்தவை, அறிவு சார்ந்தவை. ஆனால் மறைநூல்களுக்கு இணையாக மறை நூல்கள் வலியுறுத்துகிற மகிழ்ச்சியையும்  கொண்டாட்டங்களையும் ஆன்ம நிலையையும் உயிர் நிலையையும் உணர்ந்து கொள்வதற்கும் அதில் இணைத்துக் கொள்வதற்கும் மறைநூல்களுக்கு இணையாக மனிதனுக்கு உதவி செய்வது மனிதனினுடைய உடலைப் பேணிக் கொள்வதற்கும் உடலின் இயங்கு முறையை பேணி கொள்வதற்கும் சக்தி ஓட்டங்களை பேணிக் கொள்வதற்கும் வலியுறுத்துகிற வழிகாட்டுகிற மருத்துவ நூல்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

மேலும் வாசிக்க:உணவு சொல்லும் வாழ்க்கை முறை

            ஒரு மனிதனினுடைய கொண்டாட்டம் என்பது மறை நூல்களும் ஆன்மிக நூல்களும் வலியுறுத்துவது போல அவை மனம் சார்ந்ததாக இருக்கக்கூடும், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மனிதனினுடைய கொண்டாட்டம் என்பதும் மகிழ்ச்சி என்பதும் உற்சாகம் என்பதும் ஆன்மிக நூல்களும் ஆன்மிக வழிகாட்டுதல்களும் சொல்லப்படுகிற புரிதல் தளம் தாண்டி, புரிதல் என்கிற நிலை தாண்டி ஒரு மனிதனின் அடிப்படையான உடல் இயங்கு முறையில் அது சாத்தியமாகிறது. ஒரு மனிதனின் உடல் நலத்தின் வழியாகவே ஒரு மனிதன் தன்னுடைய கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும். நலமான ஒரு மனிதனால் மட்டும்தான், அவனுடைய நலம் பெற்ற உடலால் மட்டும்தான் அவனுடைய ஆழமான சுவாசத்தை பருக முடியும். நலம் பெற்ற உணவுப்பை உள்ள ஒரு மனிதனால் தான் சுவையான உணவுகளை செரிமானம் செய்ய முடியும். நல்ல நாக்கு இல்லாத மனிதனிடம் சுவை பற்றி பேச முடியாது.

மேலும் வாசிக்க:உணவு என்பது என்ன?

            இவ்வாறு ஒரு மனிதனினுடைய நல்ல கொண்டாட்டமான, மகிழ்ச்சியான, உற்சாகமான ஒவ்வொன்றிற்கும் துவங்குகின்ற இடமாக மருத்துவ ஆலோசனைகளும் மருத்துவ நூல்களும் உதவி செய்கின்றன. ஒரு மனிதன் நலமாக வாழ்வதற்கு துவக்கமாக இருப்பது மறை நூல்கள் சொல்கிற வராத தெரியாத ஆன்மா பற்றியும் உயிர் பற்றியும் புரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல அறிவை தயார் செய்வதற்கும் கூட மிக அடிப்படையாக மனிதனுக்கு தேவைப்படுவது நல்ல உடல். நல்ல உடலுக்கு நல்ல இயக்கத்திற்கு நல்ல துவக்கமாக உடலை பராமரித்துக் கொள்வதற்கு என எல்லா தன்மைகளுக்கும் அடிப்படையாக வழிகாட்ட வேண்டிய நூல்கள் மருத்துவ நூல்கள். மருத்துவ நூல்கள் மறை நூல்களை விடவும் அதிக முக்கியத்துவம் பெற்றதாக அல்லது சமமான முக்கியத்துவம் பெற்றதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் மனிதனுக்கு மனமும் ஆன்மீகமும் அறிவும் புரிதலும் எவ்வளவு முக்கியமோ சிறிதும் குறைவில்லாத அளவிற்கு உடலும் முக்கியமானது. அந்த உடலை  பலப்படுத்துவதற்கு உடலை மேன்மை செய்வதற்கு உதவுகிற ஒரு கலை, உதவுகிற ஒரு நிலை, உதவுகிற ஒரு யுக்தி, உதவுகிற ஒரு நுட்பம் மருத்துவம் சார்ந்தது. மருத்துவ நூல்கள் சார்ந்தது. மருத்துவம் என்பது வெறுமனே உடல் சார்ந்த இயக்கம் மட்டுமல்ல. மனிதனின் அடிப்படையான வாழ்வியல் உரிமையாக இருக்கக்கூடிய கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோல்.

                                                                                                            - தொடரும்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...