Saturday, October 24, 2020

Human is an absolute natural component - மனிதன் ஒரு முழுமையான இயற்கை கூறு

 

           மனிதன் ஒரு முழுமையான இயற்கை கூறு

Human is an absolute natural component


      ஒரு மருத்துவ அணுகுமுறையில் மனிதன் என்பவன் ஒரு முழுமையான இயற்கை கூறு. ஒரு சடலத்தை, உடல் உறுப்புகளின் இணைப்பான ஒரு பிண்டத்தை மனிதன் என்று நாம் வரையறுப்பது கிடையாது. ஐம்பது ,அறுபது வயது நிரம்பி இருக்கிற ஒரு நபர், உயிர் பிரிந்த பின்பு அவரை நபராக நாம் கருதிக் கொள்வது கிடையாது. அவருக்கு உயிர் இருக்கிறவரை ஒரு சமூக அடையாளமும் மரியாதையும் கொடுக்கிற வழக்கம் நமது மரபு. எல்லாம் மனித இனத்திற்கும் அந்த மரபு உண்டு. உயிரோடு இருக்கிற போது அவரை நபராக, மனிதராக, பெயர் சொல்லி அழைக்கிற ஒரு பெயர் கொண்டவராக, கருதுகிற போது அவருக்கு உயிர் இல்லாதபோது, அவர் உயிர் பிரிந்த பின்பு அவரை அந்த அடையாளங்களோடு நாம் குறிப்பிடுவதில்லை. அவர் வெறுமனே கண்ணும் காதும் மூக்கும் உடல் அவயங்களும் தோலும் சுற்றப்பட்ட ஒரு சடலம்.

ALSO READ: GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட

                மருத்துவத்தில் மிக முக்கியமான உதாரணமாக நான் உங்கள் முன் உரையாட விரும்புகிறேன். ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனின் இதயமும் உயிரில்லாத ஒரு மனிதனின் இதயமும் ஒன்றல்ல.  ஒரு நபருக்கு சமூகம் தந்திருக்கிற ஒரு அடையாளம் அல்லது சமூகத்தின் பாற்பட்டு இருக்கிற ஒரு பாத்திரம், இணைப்பு அணுகுமுறை என்பது இருக்கிறபோது அவரது உடல் கூறு என்பது ஒரு விதமாக இருக்கிறது. இந்த சமூக வடிவமும் அடையாளங்களும் பிரிந்த பின்பு அதோடு தொடர்பு கொள்ள முடியாத உடல் அவயங்களை மட்டும் வைத்திருக்கிற ஒரு மனிதனுக்கு இத்தகைய தன்மைகள் இருப்பதில்லை. ஆனால் மருத்துவ சோதனைகளில் இதை நாம் பார்க்க முடியும். மருத்துவ சோதனைகளில் மாற்று மருத்துவத்திற்கும் அல்லது மரபு சார்ந்த மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவம் மரபுசார்ந்த மருத்துவம் இந்த  கோட்பாடுகளுக்கும் நவீன மருத்துவத்துக்கும் இடையே இருக்கிற ஒரு பெரும் வேறுபாடு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ALSO READ: DESIRE - ஆசை

                பெரும் வேறுபாடு என்றால் மாற்று மருத்துவங்கள் மரபுசார்ந்த மருத்துவங்கள் முழுக்க ஒரு மனிதனின் உடலை சில உறுப்புகளின் கூட்டுக் கலவையாக பார்ப்பதில்லை. அந்த மனிதனின் உடலில், அந்த உடலுக்குள் அந்த அவயங்களுக்குள் ஒரு ஓரத்தில் இதயம் இருக்கிறது; ஒரு ஓரத்தில் சிறுநீரகம் இருக்கிறது; சில பகுதிகளை இணைப்பதற்கு ரத்த ஓட்டம் இருக்கிறது; நரம்பு மண்டலம் இருக்கிறது என்கிற தன்மையில் மரபு மருத்துவங்கள் அந்த மனிதனை பார்ப்பதில்லை. அந்த மனிதனுக்குள் இருக்கிற ஒவ்வொன்றையும் ஒன்றோடொன்று மிகுந்த நேசத்தோடு இயங்குவதாக மாற்று மருத்துவங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. மாற்று மருத்துவத்தை பொறுத்தவரை ஒரு மனிதனின் ரத்த ஓட்டத்தில் வெறுமனே ரத்தத்தை அறுத்து அதற்குள் ஏதாவது ஆய்வு செய்ய வேண்டும் என்று மாற்று மருத்துவங்கள் மரபு மருத்துவங்கள் விரும்பினால் வெறுமனே இறந்துபோன உடலில் இருந்து பிரிந்து வந்த எதற்கும் பயன்படாத ரத்தமாக கணக்கு வைத்துக் கொள்கிறது. மரபு சார்ந்த மருத்துவ ஆய்வு முறைகளில் இப்படியான தன்மைகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

ALSO READ: FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

                ஒரு கூட்டாக இருக்கிற ஒரு மனிதனுக்குள் இருக்கிற, இயங்குகிற மருத்துவ தன்மை என்பது ஆய்வு செய்யமுடியும், ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆனால் ஒரு பொருளை உள்ளிருந்து எடுத்த பின்பு; ஒரு அவயத்தை உள்ளிருந்து எடுத்த பின்பு; ஒரு துளியை உள்ளிருந்து எடுத்த பின்பு அந்த உடலுக்கும் அந்தப் பொருளுக்கும் அந்த அவயத்திற்கும் அந்த ஒரு துளிக்கும் அந்த உடம்புக்குமாய் இருக்கிற உறவு துண்டிக்கப்பட்ட உடன் இது வெறுமனே பிணமாகப் போகிறது பிணத்தை வைத்துக் கொண்டு ஒரு மனிதனின் உடலமைப்பை, உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது மரபு சார்ந்த மருத்துவங்கள்.

     நவீன மருத்துவம் வேறு திசையில் பயணிக்கிறது. நவீன மருத்துவத்தை பற்றி எந்த விமர்சனத்திற்குள்ளும் நாம் போக வேண்டாம். மாற்று மருத்துவத்தின் மரபு மருத்துவத்தின் ஆழமான அடர்த்தியான அணுகுமுறை குறித்து நாம் உரையாடிக் கொண்டு இருக்கிறோம் என்கிற காரணத்தினால் மரபு மருத்துவத்தினுடைய ஆழமான அடர்த்தியான தன்மை இது. ஒரு மனிதனை ஒரு மருத்துவம் பார்ப்பது போல பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த மனிதனினுடைய ஒட்டுமொத்த தன்மையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பது மரபு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான கோட்பாடு. மனிதன் என்பவன் உயிரோடு மனதோடு நிதானத்தோடு சமூகம் சார்ந்திருக்கிற ஏற்ற இறக்கங்களோடு கலந்து இருக்கிற முழுமையான இயங்குமுறை கொண்ட ஒரு இயங்கு தன்மை கொண்ட ஒரு தோற்றம். அந்த மனிதனுக்கு எல்லாமும் இருந்தால்தான் அவர் மனிதன். வெறுமனே உடல் அவயங்கள் மட்டும் இருக்கிற ஒரு பொருள் என்றால், அது வெறுமனே சடலமாக ஒரு பொருளாக மருத்துவங்கள், மரபுசார்ந்த மருத்துவங்கள் பார்க்கின்றன. எல்லாமும் இருக்கிற ஒருவர் தான் மனிதன். மரபுசார்ந்த மருத்துவங்களைப் பொருத்தவரை மனிதன் என்பவன் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற மனிதன் என்பது இரண்டாவது விவாதம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கின்றானா? ஆரோக்கியம் அல்லாமல் இருக்கின்றானா? என்பது அல்ல மரபுசார்ந்த மருத்துவங்கள் பற்றி மரபு சார்ந்த மருத்துவர்களில் மனிதனைப் பற்றி இருக்கிற அபிப்பிராயம். எல்லாமும் இருக்கலாம். ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் இருக்கலாம். ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆரோக்கியத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம். ஆரோக்கியத்துக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கலாம். அதுபற்றி எந்த யோசனையும் மரபுசார்ந்த மருத்துவத்திற்கு கிடையாது.

ALSO READ: HOW TO BE HAPPY(மகிழ்ச்சி)

                ஆனால் மனிதன் என்பவன் யார்? என்றால் மரபுசார்ந்த மருத்துவங்கள் மிகத் தெளிவாக சில முடிவுகளை தனது ஆய்வுப் பதிவுகளில் வைத்திருக்கின்றன. ஒரு மனிதன் என்றால் வெறுமனே அதில் சடலம் அல்ல. சில உறுப்புகள், தோல்கள் மூடி இரத்த ஓட்டங்களால் இணைக்கப்பட்ட சவம் போல மனிதனை பார்க்க முடியாது என்பது மரபு சார்ந்த மருத்துவங்களின் நிலைப்பாடு. மரபுசார்ந்த மருத்துவங்களைப் பொருத்தவரை மனிதன் என்பவன் ஒரு உடல், உடலுக்குள் இயக்கமாக  இருக்கிற ஒரு இயங்கு முறை. அதை இயங்கச்  செய்கிற மன  வடிவம். ஒவ்வொன்றுக்கும் இணக்கம் கொள்கிற, மறுப்பு சொல்கிற மன ஓட்டம், இதற்கெல்லாம் காரணமாக இருக்கிற உயிர்ப்பு நிலை, சக்திநிலை இவ்வாறு விதவிதமான குறிப்புகளையும் இயங்கும் முறைகளையும் வைத்திருக்கிற ஒரு இயற்கை சார்ந்து, இயற்கையோடு இயைந்து இருக்கிற ஒரு. ஒரு குறியீடு ஒரு தொகுப்பு  மனிதன்.

ALSO READ: SUICIDE(தற்கொலை)

     ஆக, மனிதனை இவ்வாறாக புரிந்து கொள்ள வேண்டும் என்பது மரபு மருத்துவங்களின் அழுத்தமான நிலைப்பாடு. இன்றைய மருத்துவ விவாதங்களில் பார்க்கிறபோது மனிதன் என்பது (மனிதன் என்பது) என்ற வார்த்தையை மருத்துவ விவாதங்களில் பயன்படுத்துவதை பார்க்கிறேன். மனிதன் என்பது என்றுதான் மருத்துவ விவாதங்கள் நடக்கின்றன. மருத்துவ ஆய்வுகள் நடக்கின்றன. எடுத்து வைத்திருக்கிற சாம்பிள், எடுத்து வைத்திருக்கிற மாதிரிகள் என்றுதான் பார்க்கிறோம். ஒரு மனிதனின் இதயத்தை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, அது துடிப்புள்ள ஒரு இதயமாக, உடலிலிருந்து பிரித்து  வைத்திருக்கிற ஒரு இதயமாக உடலிலிருந்து பிரித்து வைத்திருக்கிற ஒரு பொருளாக மாறிப் பார்க்கிற ஒரு மருத்துவப் பார்வை என்பது வளர்ந்து வருகிற சூழலில் மரபு மருத்துவங்கள் முழுவதுமாக வேறுபடுகின்றன. மனிதனை முழுக்க ஒரு மனிதனாக, ஒரு கலவையாக, ஆற்றல்மிக்க உயிர் இருக்கிற ஒவ்வொன்றிற்கும் எதிர்வினை செய்கிற  ஒரு அடர்த்தியான  தொகுப்பாக மாற்று மருத்துவங்கள் பார்க்கின்றன. அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும். அந்த நினைவூட்டல் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும். மனிதன் என்பவன் வெறுமனே பிண்டம் அல்ல; வெறுமனே சவம் அல்ல. எல்லாமும் கலந்து இருக்கிற உயிர்ப்புள்ள ஒரு தொகுப்பு. அந்த வகையில் மாற்று மருத்துவங்கள் மரபு மருத்துவங்கள் இயங்குகின்றன. தொடர்ந்து அவை பதிவு செய்து வைத்திருக்கின்றன. அவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கின்ற போதும் சரி, மாற்று மருத்துவத்தில் பயிற்சி செய்கிற பயிற்சியாளர்கள் இதை எளிமையாக கண்டுகொள்ள முடியும் என்கிற அனுபவத்திலும் சரி, மாற்று மருத்துவங்கள் மீண்டும் மீண்டும் சொல்லவருவது மனிதன் என்பவன் வெறுமனே உடல் மட்டுமல்ல; ஒரு முழுமையான தொகுப்பு.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...