Sunday, October 25, 2020

ENERGY - ஆற்றல்

 

ஆற்றல்

energy
energy


     மரபு சார்ந்த மருத்துவங்களில் மிக முக்கியமான பகுதிகள் பற்றி நாம் உரையாடிக் கொண்டு இருக்கிறோம். மரபு சார்ந்த மருத்துவங்கள் மனிதனை ஒரு முழுமையான தன்மையுள்ள ஒரு தொகுப்பாக பார்க்கிற கண்ணோட்டம் உடையதாக இருக்கிறது. அதில் வெவ்வேறு பகுதிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு பகுதி ஆற்றல். ஒரு மனிதனின் உடலுக்குள் ஒரு மனிதனின் இயக்கத்தை தீர்மானிப்பதற்கு அந்த  மனிதன் பிரபஞ்சத்தோடு இணைந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அல்லது ஆன்மீகமாக மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியில் இருந்து பேசுவதாக நாம் புரிந்துகொள்வோமாயின் மனிதனை இயக்குவதற்கு மனிதனுக்கு மேல் இயங்கும் சக்தி ஒன்று மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது என்றும் நாம் பேச முடியும்.

ALSO READ: HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை

                ஆக, மனிதனுக்கு மனிதனின் இயல்பை இயக்குகிற, இயங்குவதற்கு ஒரு சக்தி அவனுக்கு உதவி செய்கிறது. அந்த சக்தியை உடல் பெற்றுக் கொள்ளவும் அந்த சக்தியோடு ஆரோக்கியத்தை தக்கவைத்துக்கொள்ளவுமான ஒரு முயற்சி என்பது ஆற்றல் சார்ந்து இருக்கிற பகுதிகளில் நடைபெறும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடு. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு வேறு வேறு காரணங்கள் இருந்தாலும் ஆற்றல் சார்ந்த காரணங்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று மரபு மருத்துவம் பதிவு செய்து வைத்திருக்கின்றன. இந்த ஆற்றல் சார்ந்து இருப்பதை தமிழ் மருத்துவங்களில், தமிழ் பாரம்பரிய மருத்துவக் கூறுகளில் பகுத்து பார்க்கிற போது மனித உடலுக்குள் இருக்கிற பிரிவுகளை தமிழ் மருத்துவம் தனது 96 தத்துவ  நிலைகளில் உடலை மட்டும் 5  உடல்களாக பிரிக்கின்றன.

ALSO READ: HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை

                ஒன்று இந்த தோற்றம் சார்ந்த உடல். தோற்றமாக இருக்கிற உடல். தோற்றமாக இருக்கிற உடல் என்பது சமஸ்கிருதத்தில் அன்னமயகோஷ் என்றும் தமிழில் அன்னமயகோசம் என்றும் பதிவு செய்து வைத்திருக்கின்றன மருத்துவ நூல்கள். இந்த அன்னமய கோசம் என்பது உணவை, உணவின் வழியாக இருக்கிற சக்தியை தோற்றமாய் இருக்கிற தன்மையிலிருந்து கிரகித்துக் கொண்டு தோற்றமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற உடல் அன்னமய உடலாக மருத்துவத் தத்துவம் கூறுகின்றன. இம்மாதிரி இருக்கிற இன்னொரு உடல் பிராணமய உடல். பிராணம் என்றால் உயிர் என்று தமிழில் ஒரு பொருள் இருக்கிறது. இது பிராணமய கோசம். பிராணன் என்பது உயிர். உயிரை சக்தியை  உயிர்சக்தியை மையமாக வைத்து இயங்குகிற ஓர் உடல். பின்பு மனோமய கோசம். மனதை மையமாக வைத்து இயங்குகிற ஒரு உடல். விஞ்ஞானமய கோசம். விஞ்ஞானமய கோசம் என்பது தர்க்கங்களை விழிப்புணர்வை மனதிற்கு அப்பாற்பட்டு இருக்கிற ஒரு நிதானமான மன ஓட்டத்தை, மன ஓட்டத்திற்கு காரணமாக இருக்கிற கர்த்தாவை மையமாக வைத்து இயங்குகிற ஒரு வடிவம். ஆனந்தமய கோசம் என்பது முழுக்க பிரபஞ்சத்தோடு இணைந்து இருக்கிற ஒரு தன்மையை குறிக்கும் என்று மருத்துவ நூல்கள் பதிவு செய்து வைத்திருக்கிறன.

ALSO READ: HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)

                 அந்தவகையில், வித விதமான வேறுபட்ட கூறுகள் மனித உடலுக்குள் இருந்தாலும் அவற்றை ஐந்தாக பிரித்து வைத்திருக்கிற மனித உடல் கூறு என்பது மாற்று மருத்துவங்களில் மரபு மருத்துவங்களில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் உடல், உடல் தாண்டி இருக்கிற மற்றொரு பகுதி ஆற்றல். ஆற்றல் என்பது உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ? உடல் தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ? அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக ஆற்றல் மருத்துவம் ஆற்றல் உடல் இருக்கிறது. ஆற்றல் உடலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது ஒட்டுமொத்த மனித அணுகுமுறையை பொருத்தஅளவில்.

ALSO READ: நரிகள் வடைசாப்பிடுவதில்லை

                ஒரு மனிதனுக்கு கண் பார்ப்பதற்கு; ஒரு மனிதனுக்கு நாக்கு சுவைப்பதற்கு; ஒரு மனிதனுக்கு மூக்கு நுகர்வதற்கு; ஒரு மனிதனுக்கு தோல் பரிசத்தை உணர்வதற்கு என்று ஒவ்வொரு உணர்விற்கும் இந்த உடல் தோற்றம் சார்ந்து ஒரு தன்மையை பெற்றிருப்பதைப் போல அவற்றிற்கெல்லாம் ஒரு முக்கியத்துவம் இருப்பதைப் போல எந்த விதத்திலும் குறைவில்லாத முக்கியத்துவம் ஆற்றலுக்கும் ஆற்றலை வைத்து இயங்குகிற அந்த ஆற்றல் உடலுக்கும் இருக்கிறது என்று மரபு மருத்துவம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இந்த ஆற்றலை மையமாக வைத்து இயங்குகிற மரபு மருத்துவங்களாக நிறைய மருத்துவங்களை வகைப்படுத்த முடியும். ஆற்றல் ஐந்து விதமாக பிரிக்கப்பட்டு ஐந்து பூதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற ஆற்றல் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிற நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் என்று தொகுத்தளிக்கப்பட்டு இருக்கிற விரிவாக பேசப்பட்டிருக்கிற ஆற்றலை மையமாக வைத்து இயங்குகிற, ஆற்றலை பெற்றுக்கொண்டு இயங்குகிற உடலாக பிராண உடல் இருக்கிறது. இந்தப் பிராண உடலுக்குள் நடக்கிற இயங்குமுறை என்பது இப்படி ஒரு பருவுடலில் நடக்கிற இயங்கு முறைக்கு எத்தனை நுட்பங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் இந்த பிராண உடலுக்குள்ளும் இருக்கிறது.

ALSO READ:  நலம்(health)

                பரு உடலையும் பிராண உடலையும் ஒப்பிட்டோம் என்று சொன்னால் பருவுடல் போல் ஒரு தொழிற்சாலையை கட்டுவதற்கு சில நூறு ஏக்கர் அளவில் இடப்பரப்பும் அதற்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிற தொழில்நுட்பமும் எல்லாமும் சேர்ந்து இயங்குகிற போது ஏற்படுகிற ஒரு விளைவு மனித உடலுக்குள் நடக்கிறது என்று விஞ்ஞானம் ஆய்வு செய்து வைத்திருக்கிறது. அத்தகைய பெரிய பரப்பில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறபோது செய்யப்படுகிற உற்பத்தி, அந்த நேர்த்தி என்பது கூட மனித உடலில் இயங்குகின்ற நேர்த்திக்கு பக்கத்தில் வர முடியாத அளவிற்கு இருக்கும். அவ்வளவு துல்லியமாக இயங்கி விட முடியாது என்று நவீன ஆய்வு ஒப்பிட்டு சொல்கிறது. அவ்வளவு நுட்பமான பருவுடல் நமக்கு இருக்கிறது. பரு உடலுக்குள் என்ன நடக்கிறது? எவ்வாறு நடக்கிறது? என்பதை தீர்மானிக்கிற அறிவு இன்னமும் கூட நம்மை நவீன உடல் ஆய்வுகளுக்கு வரவில்லை. அத்தனை நுட்பங்களையும் பருவுடல் பெற்றிருக்கிறது. அப்படியான பருவுடல் தன்மைக்கு சற்றும் குறைவில்லாத நுட்பங்களும் நேர்த்திகளும் திட்டமிடலும் ஆற்றல் உடலுக்கும் இருக்கிறது என்பதை மாற்று மருத்துவங்கள் மரபு ருத்துவங்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஆற்றல் மருத்துவம் என்று பார்க்கிறபோது, ஆற்றல் மருத்துவத்திற்குள் இருக்கிற நுட்பங்களை நாம் பேசுகிற போது, உடலில் மூச்சுக் காற்று உள்ளே செல்கிறது; உள்ளுக்குள் இருக்கின்ற கழிவுக் காற்றினை வெளியே எடுத்து வருகிறது என்கிற ஒரு பொதுவான பார்வை நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்கின்றன கல்வி முறைகளின் வழியாக.

ALSO READ: உடலோடு பரிவாக இருங்கள்

                ஆனால் மூச்சுக்காற்றிற்கும் அது வெளிப்படுத்துகிற கழிவுக் காற்றிற்கும் இடையே இருக்கிற அந்த செயல்பாடு உடம்புக்குள் இருக்கிற ஏராளமான முக்கியமான ஆற்றல் அசைவுகளை செய்துவிடுகின்றன. தொடர்ந்து  பரு உடல் பரு உடலாக இருப்பதற்கும் சிறப்பாக இயங்குவதற்கும் அந்த இயக்கத்திற்கு காரணமாக பெரிய செயலை, மிக முக்கியமான செயலை ஆற்றல் மருத்துவங்கள் சொல்வது போல,  உடல் பெற்றுக் கொள்கிற அந்த பஞ்சபூத ஆற்றலும் ஒரு உதவியாக கடமையாக உடலுக்கு செய்து கொண்டே இருக்கின்றன என்பது ஆற்றல் மருத்துவம் பற்றி இருக்கிற குறிப்புகளில் மிக கவனத்திற்குறியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...