வீட்டிற்குள் பாடசாலை
![]() |
Home Schooling |
சமூகக் கல்வி முறையில் குழந்தைகளை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளின் வெகுளித்தனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு வார்த்து எடுக்கப்படுகிற திட்டமிட்டு வைத்திருக்கிற கல்வி முறைகள் இருக்கின்றன. அவை குழந்தைகளை மையப்படுத்துவதாக வரையறுக்கப்பட்டு இருந்தாலும் கூட அவற்றின் அணுகுமுறை சிக்கலில் அவை குழந்தைகளின் மையத்தை நோக்கியோ குழந்தைகளை மையப்படுத்தியோ நகர்கிற வாய்ப்பை இழக்கின்றன. வீட்டு வழி பாடசாலையில் இவை குழந்தைகளுக்கு இணக்கமான வாழ்க்கைமுறையை வீட்டில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் இணக்கமான வாழ்க்கை முறையை ஒரு ஆழமான இயற்கைசார் வாழ்வியல் புரிதலோடு உருவாக்கப்படுகிற தன்மையோடு இருக்கின்றன. இயற்கை சார்ந்த வாழ்வியல் புரிதலை ஏற்றுக்கொள்வது என்பது இன்றைய சமகால கல்வி முறைக்கு எதிரானது அல்ல. இன்று சமகாலத்தில் உருவாகி இருக்கிற விஞ்ஞான நுட்பங்களுக்கு மாற்றானது அல்ல. மிகுந்த நிதானமான புரிதலோடு இவற்றை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)
உங்கள் முன் இருக்கிற ஒவ்வொரு கல்விமுறையும் ஏதாவது ஒரு நிலையில் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் மனநலனையும் கொடுக்கும் என்கிற நம்பிக்கையும் விருப்பமும் இந்த கல்வி முறையை நீங்கள் தேர்வு செய்வதற்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் குழந்தையின் மீது இருக்கிற அக்கரையிலிருந்து இந்தக் கல்வி முறையை தேர்வு செய்கிறீர்கள். மேலும் இந்த கல்வி முறையை தேர்வு செய்வதில் குழந்தை மீதான அக்கறையும் உங்கள் குழந்தை என்கிற லேசான அதிகாரமும் கலந்திருப்பதால் இந்த கல்வி முறை தேர்வு செய்வதற்கான அவசியம் உருவாகிறது. வீட்டு வழி கல்வி முறை என்பது நாம் முன் வைக்கிற இயற்கை வாழ்வியல் சார்ந்த அனைவருக்குமான கல்வி முறை என்பது அப்படியானது அல்ல. இது எந்த கல்வி முறைக்கும் எதிரானது அல்ல. இங்கு இருக்கிற எல்லா கல்வி முறைகளும் ஏதாவது ஒருவிதத்தில் குழந்தையின் வெகுளித்தனத்தை குழந்தையின் படைப்பாற்றலை பின்னுக்கு தள்ளுகின்றன என்கிற தன்மையில் பின்னுக்குத் தள்ளுகின்றன என்கிற அணுகுமுறையில் இருக்கிற சிக்கலிலிருந்து ஏற்பட்டிருக்கிற அடுத்தகட்ட வளர்ச்சி.
ALSO READ:குழந்தை(CHILD)
நீங்கள் இலகுவான தொலைபேசியை கையில் வைத்திருப்பதற்கு முன்பு கனமான தொலைபேசிகள் பல வந்திருக்கின்றன. வெகு தூரத்தில் இருக்கிற ஒருவரோடு தொடர்பு கொள்வதற்கு அதிகமான இரைச்சலோடு பேசிப் பழகிய உங்கள் காதுகள் மீண்டும் மீண்டும் புதிய தொலைபேசிக்கான அலசலோடு விசாரணையோடு கண்டுபிடித்து இன்று தந்திருக்கிற வளர்ச்சியான கருவியாக இலகுவான தொலைபேசிகள் உங்கள் கைகளில் இருக்கின்றன. இந்த இலகுவான தொலைபேசிகள் எப்போதும் கிரகாம் பெல் கண்டுபிடித்த கனத்த இரைச்சல் கொண்ட தொலைபேசிக்கு எதிரானது அல்ல. அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லினுடைய இரைச்சலான தொலைபேசியின் நவீனமான இலகுவான நாகரீகமான வளர்ச்சி பெற்ற தொலைபேசியாகவே இன்று உங்கள் கையில் இருக்கிற தொலைபேசிகள் இருக்கின்றன. எந்த விதத்திலும் அவை கிரகாம்பெல்லிற்கு எதிரானவை அல்ல. நீங்கள் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இரைச்சிலிலும் புதியபுதிய சாதனங்களை செய்து பார்த்து உருவாக்கி அதில் ஏற்பட்டிருக்கக் கூடிய இடர்பாடுகளை நீக்கி கண்டுபிடித்த தொலைபேசி போல இந்த உதாரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறேன்.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
இன்றைய கல்வி முறை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் குழந்தைக்கு எதிராகவும் எதிர்கால தலைமுறையினருக்கு சிக்கலாகவும் இருப்பதை தடையோடு இருப்பதை நீங்கள் பார்க்கவும் அந்த தடையை உடைக்க வேண்டும் என்கிற அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு பெற்றீர்கள் என்றால் உங்களுக்கு இந்த கல்வி முறையின் அவசியம் இலகுவாக புரியும். இந்த கல்விமுறை பற்றிய பரிந்துரை என்பது நீங்கள் கையில் வைத்திருக்கிற கல்வி முறையின் வளர்ச்சி. இந்த கல்வி முறையினுடைய அவசியம் என்பது இந்த எதிர்கால தலைமுறையினருக்கு தடையாக இருக்கிற எல்லாவித நெருக்கடிகளையும் உடைப்பதற்கான ஆலோசனை. அந்தவகையில் நீங்கள் எவ்வளவு தற்கால கல்வி முறையில் சலிப்புற்றவர்களாகவும் தற்கால கல்வி முறை குறித்து தற்கால போதனைகள் குறித்து அதற்குள் இருக்கிற சிக்கல்கள் குறித்து தெளிவு பெற்றவராக இருக்கிறீர்களோ அவற்றிலிருந்தே புதிய கல்வி முறைக்கான தேடலும் அந்த தேடலில் இருந்து நான் பரிந்துரை கல்விமுறையின் அவசியமும் எட்ட முடியும். அதுவே வளர்ச்சிக்கானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்குமென்று கருதுகிறேன்.
ALSO READ:குழந்தையின் மொழி
ஒரு தொடர்ந்த கல்விமுறை குறித்த விவாதங்களில் பள்ளிக் கூடங்களையும் கல்வி முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டுமென்று இந்த சமூகம் அக்கரைப்படுகிற அளவிற்கு கல்வியில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களுக்கு இலகுவாக கற்பித்தலையும் கற்றலையும் எளிதாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் ஆர்வப்படுகிற அளவிற்கு மாணவர்களை மையப்படுத்திய கல்விமுறையை உருவாக்குவதில் குழந்தைகளை மையப்படுத்திய கல்வி முறையை உருவாக்குவதில் அக்கறை கொள்வதாக பார்க்க முடியவில்லை. முழுக்க கல்விமுறை என்பது மாணவர்களினுடைய உடல் மனம் சமூக சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவும் அவர்களின் இயல்பிலிருந்து இடைவெளி உடையதாகவுமே பார்க்க முடிகிறது.
ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை
ஆனாலும் இந்த கல்வி முறைக்குள் பயணித்து இந்த கல்வி முறைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு இந்தக் கல்விமுறை இலக்காக வைத்திருக்கிற இலக்குகளை வெற்றியடைய வேண்டும் என்கிற முனைப்போடு இயங்குகிற குழந்தைகளும் மாணவர்களும் இந்த கல்வி முறைக்குள் இருக்கத்தான் செய்கிறார்கள். இயல்பாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இயல்பான கற்றல் வழியாக சமூக இலக்குகளை அடைய வேண்டும் என்பதும் எனது பார்வையில் நேர் முரணானதாக தெரிகிறது. இயல்பாக கற்றுக் கொள்பவர் சமூக இலக்குகளை அடைவது சாத்தியமில்லாதது. சமூக இலக்கை அடைய வேண்டும் என்று வெற்றிக்கு எல்லை வகுத்துக் கொண்டவர் இயல்பு நிலையிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாது என்பதும் இருக்கிறது.
ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
ஆக, இயல்பான கற்றல் முறையும் சமூக வெற்றி இலக்கை அடைய வேண்டுமென்கிற வலியுறுத்தலும் ஒருபோதும் சேர்ந்து இருக்க முடியாது என்று என்னால் உறுதியாக கூற முடியும். இன்றைய கல்வி முறைக்குள் இருக்கிற மிக நுட்பமான செயல்வடிவ சிக்கல் என்பது குழந்தைகள் இயல்பாக கற்க வேண்டும் என்று ஒருபுறம் வலியுறுத்தப்படுவதும் வழிகாட்டப்படுவதும் அதற்கான பாடத்திட்டங்கள் தொகுக்கப்படுவதும் நடந்தாலும் சமூகம் தீர்மானித்து வைத்திருக்கிற இலக்குகளை நோக்கி கற்பவர்கள் நகர வேண்டும் என்கிற இன்னொரு சமமான சிக்கலும் இருக்கிறது. இந்த இருவகையான நேர் எதிர் கொண்ட நேர் எதிரான திசையில் பயணிக்க கூடிய சிந்தனா முறை என்பது கல்விக்குள் இருக்கிற முரண்பாடுகளை குழந்தைகளுக்கு உதவுவதற்காக இருக்கும் வாய்ப்புகளை எளிதாக்குவதை விடவும் கடினமாக்கி கொண்டே போகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
No comments:
Post a Comment