Friday, October 30, 2020

ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம்

 

                    மாற்று மருத்துவம்

alternative medicine


 

         மருத்துவத்தில் மிகுந்த போற்றுதலுக்குரிய, மருத்துவத்தினுடைய கலைத் தன்மையை மிக உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடிய பகுதிகள் பல இருக்கின்றன. அதில் மிக குறிப்பிடத்தகுந்த தன்மை என்பது, மருத்துவம் ஒரு மனிதனுடைய உடலின் இயங்கும் முறை, உடலுக்கும் மனதுக்குமாக இருக்கிற இணக்கமான தன்மைகளைப் பற்றி வழிகாட்டுகிற பகுதி, மருத்துவக் கலையில் மிகக் குறிப்பிடத் தகுந்ததாக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். மருத்துவத்தைப் பொறுத்த அளவில் மருத்துவம் என்பது ஒரு மனிதனுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கான உடல் சார்ந்த, மனம் சார்ந்த இயங்குமுறைக்குரிய சாத்தியங்களையும் வழிகாட்டுதல்களையும் கொடுக்கிற துறை. ஒரு உடல் எந்த நேரத்தில் எவ்வாறு இயங்கும்? ஏன் அவ்வாறு இயங்கவில்லை? மனம் பரிதவிப்பாக இருக்கிற  போது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? ஏன் அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுகின்றன? எந்த உணவு உடலை வளர்க்கும்? எந்த உணவு உடலை சுருக்கும்? எந்த உணவு உயிர் வளர்க்கும்? எவ்வளவு உணவு மேற்கொள்ளலாம்? எந்த உடற்பயிற்சி ஆரோக்கியம் தரும்? என்று மருத்துவம் என்பது மிகப் பரந்த விரிந்த பகுதி.

ALSO READ: GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட


                          எல்லாவற்றிலும் பயணிக்கக்கூடிய, எல்லாவற்றிலும் சிறந்த இடத்தை பெற்றுக் கொள்ளவும் தக்கவைக்கவுமான அறிவுள்ள நபர்களை நிபுணர்கள் என்று அழைப்பதுண்டு. மருத்துவம் என்பது இத்தனை விரிவான நுணுக்கங்கள் சார்ந்தது. இவ்வளவு நுணுக்கங்களிலும் குறிப்பிடத்தகுந்த, முத்தாய்ப்பான, முதன்மையான மருத்துவ நுணுக்கம் என்பது மருத்துவம் உடல் சார்ந்து அதிகம் பேசுகிறது. வெறுமனே மருத்துவம் உடல் சார்ந்து மட்டும் பேசுவது இல்லை. ஆனால் மருத்துவம் பேசுகிற பேசுபடும் பொருளில், நோக்கத்தில் உடல் சார்ந்து, மனித உடல் சார்ந்து, உடலில் மகத்துவம் சார்ந்து அதிகமாக பேசப்படுகிறது. ஒரு மனிதனின் உடல் நலம் எதற்காக? ஒரு மனிதனின் உடல் நலம் எப்படியானது? ஒரு மனிதனின் உடல் நலம் எவ்வாறு இருக்க வேண்டும்? ஒரு மனிதனின் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது? என்று உடலை மையப்படுத்தி பேசுகிற மருத்துவ பொருண்மை என்பது மருத்துவ குறிப்புகள் என்பது கூடுதலாக இருக்கிறது.

                          ஆக, மருத்துவமும் உடலும் மிக நெருக்கமான இயங்குமுறை கொண்டவை. உறவு கொண்டவை. மருத்துவமும் மனித உடலும் மிக நெருக்கமான நட்பு கொண்டவை. மருத்துவத்திற்கும் மனித உடலுக்குமாய் இருக்கிற உறவு என்பது, பழக்கம் என்பது வெறுமனே ஒரு இயந்திரத்தை ஒரு பொறியாளர் விளக்கிச் சொல்வது போல விளக்க குறிப்பானது அல்ல. மருத்துவம் பேசுகிற, மருத்துவத்தை உடலில் இருந்து துவங்கி பேசுகிற ஒவ்வொரு மருத்துவ நிபுணர்களும் இந்த சமூகத்தின் தீர்க்கதரிசிகளாகவும் சித்தர்களாகவும் தத்துவ மகா புருஷர்களாகவும் இருந்து மடிந்து இருக்கிறார்கள். ஆழமான மருத்துவ உண்மைகளை தன் உடலில் இருந்து கற்றுக்கொண்டு, தன் உடல் வழியாக இந்த பிரபஞ்சத்தைப் புரிந்து கொண்டு மற்றவர்களின் உடல் குறித்து வியாக்கியானம் செய்கிற, விளக்கம் சொல்கிற, நுட்பமான கூர்மையான பார்வை உள்ளவர்களால் தொகுக்களிக்கப்பட்டு அளிக்கப்பட்ட குறிப்புகளாக மருத்துவக் குறிப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலில் இருந்து, உடலைப்பற்றி, உடலை ஆய்வு செய்த ஒருவரால் உண்டாக்கப்பட்டவை. மருத்துவக் குறிப்புகளுக்குள் இருக்கிற செய்திகள் என்பது ஏதோ ஒரு பொருளின் இயங்கு தன்மை பற்றி பேசுகிற குறிப்புச் செய்திகள் அல்ல.

ALSO READ: ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம் - அக்குபங்சர்

                          ஒரு மனிதனின் ஆழமான புரிதலும் அந்தப் புரிதலுக்கு காரணமாய் இருக்கிற, அவரது உடல் பற்றிய பார்வையும் மிகுந்த கவனத்திற்குரியது. தன் உடலை புரிந்து கொண்ட ஒரு மனிதனால் ஒரு மருத்துவ நூலை உருவாக்கும் வல்லமையை அந்த உடல் அவருக்கு கொடுத்திருக்கிறது என்கிற ரீதியிலும் இந்த மருத்துவ நூல்களை தொகுத்தளித்தவர்களை பார்க்க முடியும். அவ்வாறு நாம் கண்டு கொள்ளவும் முடியும். ஆழமான, மருத்துவம் குறித்து, உடல் குறித்து புரிந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொடுத்தவர்கள் அனைவரும் தம் உடலை புரிந்து கொள்ளவும் நம் உடலின் முழுமையை தெரிந்து கொள்ளவும் மேற்கொள்கிற முயற்சியின் விளைவாகவே பெரும்பான்மையான மருத்துவச் செய்திகள் சிதறிக்கிடக்கின்றன நூல்களாக. ஆக, ஒரு மனிதனுடைய மருத்துவ அறிவு என்பது நூல்களுக்குள் ஒளிந்திருக்கிற மருத்துவ குறிப்புகள் என்பது உடல் சார்ந்து உருவானவை. உடலில் இருந்தே உருவானவை.

                          இன்றைய மருத்துவம் என்பது ஒரு உடலை, மருத்துவம் தெரிந்த ஒருவர் தனக்குள் பரிசோதித்துப் பார்த்து தன் உடலிலிருந்து அறிவிக்கப்படுகிற, தெரிவிக்கப்படுகிற, உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கி வைத்திருக்கிற செய்திக்குறிப்புகள் போல அமையப் பெறவில்லை. மருத்துவங்கள் ஆய்வகங்கள் சார்ந்து இயங்குவதாக நாம் பார்க்க முடிகிறது. குறிப்பாக நவீன மருத்துவம் ஆய்வகங்களையும் ஆய்வகக்குறிப்புகளையுமே முதன்மைப்படுத்தி சிகிச்சை கொடுக்கிற ஒரு தன்மையில் வளர்ந்து வருவதை பார்க்கிறோம். மிக நுட்பமான உடல் இயங்கும் முறையை விஞ்ஞான கருவிகள் கொண்டு அளந்து விட முடியுமா? என்று விஞ்ஞானம் பேசுகிற விஞ்ஞானிகளிடம் கேட்கிற போது அவர்கள் சொல்லுகிற பதில், எல்லாவற்றையும் விடவும், எல்லாவற்றையும் கடந்து நுட்பங்கள் கடந்து விஞ்ஞான கருவிகள் கடந்து இயற்கையின் இயங்குமுறை இருக்கிறது என்பதை குறிப்பிடுகிறார்கள். இது மருத்துவத்திற்கும் பொருந்தும்.

ALSO READ: Human is an absolute natural component - மனிதன் ஒரு முழுமையான இயற்கை கூறு

                          ஆக, ஒரு மருத்துவத்தினுடைய ஆய்வகக் குறிப்பு என்பது மருத்துவரினுடைய தெளிவுக்காக மேற்கொள்ளப்படுகிற ஒரு நடைமுறை என்றாலும் கூட அது உடல் பற்றிய தெளிவை முழுமையாக கொடுக்கும் என்கிற நம்பிக்கை பரிசீலனைக்கு உரியது. ஏனென்றால் உடல், உடலினுடைய இயக்கம், உடலுக்குள் இயங்குகிற இயங்குமுறை எல்லாமும் ஆய்வகங்களினுடைய இயங்குமுறைக்கு அப்பாற்பட்டவை. ஒரு கருவியினுடைய நுட்பங்கள் கடந்தது. இயற்கையினுடைய மிகக்குறிப்பான, ஆழமான நுட்பம் குறித்து ஒரு ஆய்வகக் கருவியால் முழுமையாக கண்டுபிடித்து விட முடியும் என்பது சாத்தியமில்லாதது. அது எவ்வாறு சாத்தியம் இல்லாதது என்பது தனியாக உரையாடப்பட வேண்டிய செய்தி. ஆனால் எல்லா ஆய்வகங்களினுடைய குறிப்புகளை விடவும் ஆய்வகம் செய்கிற ஆய்வுகளை விடவும் மனித உடலானது புதிரானது, புனிதமானது, உயர்வானது, எல்லாவற்றையும் கடந்து அதற்கே உரிய தனிச் சிறப்போடு இயங்குகிற தன்மைகொண்டது. ஆக, ஒரு மருத்துவத்தினுடைய மருத்துவ அணுகுமுறை என்பது ஒரு உடலைப் பார்க்கிற பார்வை என்பது மிக நுட்பமானதாக இருக்க வேண்டும். மிக தீர்க்கதரிசனமானதாக இருக்கவேண்டும். அதற்கு நவீன மருத்துவங்களை விடவும் நுட்பமான ஆய்வுக் குறிப்புகளை வைத்திருக்கிற மரபு மருத்துவங்கள் கூடுதல் கவனத்திற்குரியவை.

ALSO READ: ENERGY - ஆற்றல்

                           மரபு மருத்துவங்கள் என்பது வெறுமனே ஆய்வகக் குறிப்புகள் போல மனித உடலை குறிப்புகளாக சேகரித்து வைக்கவில்லை. ஒரு மனிதனுக்கும் மனித உடலுக்கும் மனித உடல் இயற்கையோடு இயங்குகிற இயங்குமுறைக்கும் இடையே நடக்கிற எல்லா சம்பாசனைகளையும் பரிவர்த்தனைகளையும் மிக நுட்பமாக கண்டுபிடித்து சேகரித்து வைத்திருக்கிற, முறையாக மரபு முறை இருக்கிறது. ஒரு நவீன மருத்துவம் ஆய்வுக் குறிப்புகள் வெளியிடுவதைப் போல ஒரு மரபு மருத்துவம் மனித உடலை குறிப்புகள் கொண்டு அளப்பதில்லை. நவீன மருத்துவத்தினுடைய உடல் வர்ணனை என்பது உடலைப் பற்றிய குறிப்புகள் என்பது ஆய்வகங்களில் திரட்டப்பட்ட குறிப்புகள் போல் இருப்பதில்லை. மிக நுட்பமாக, துல்லியமாக இருப்பதை மரபுமருத்துவம் சார்ந்து இயங்குகிற எவராலும் பார்க்க முடியும்.

                          மரபு மருத்துவத்தை அக்கறையோடு விசாரிக்கிற மாற்று சிந்தனை உள்ளவர்கள் கூட மரபு மருத்துவத்தினுடைய உடல் குறிப்புகளை பரிசோதித்து பார்க்கிற போது, அனுபவித்து பார்க்கிறபோது, துல்லியத் தன்மையை கண்டுபிடிக்க முடியும். நவீன மருத்துவம் என்பது ஆய்வுக் குறிப்புகளை மையப்படுத்தி இயங்குகிற நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஆபத்தில் இருக்கிறது. ஆனால் மரபு மருத்துவங்கள் நேரெதிரான வேறொரு திசையில் மனிதனின் உடல் கூறுகளை விசாரிக்கிற தன்மையில் இருக்கிறது. மனிதனின் உடல் இயங்கு முறையை அக்கறையோடு பார்க்கிற தன்மையில் இருக்கிறது. இயல்பை இயல்பாகவே சொல்கிற தன்மையில் இருக்கிறது. மரபு  மருத்துவம் என்பது  இன்றைய மனிதனுக்கு இனி வருகிற மனிதனுக்கு எப்படி இதற்கு முன்னால் இருக்கிற மனிதக் கூட்டத்திற்கு வசதியான தன்மையோடு அந்த மனிதர்களுக்கு உதவியாக இருந்தது போல எதிர்வரும் காலத்திலும் கூட ஒரு மனிதனுக்கு, மனிதகுலத்திற்கு, மனித கூட்டத்திற்கு மிக நெருக்கமான குறிப்புகளை உள்ளடக்கி வைத்திருக்கிற தன்மையோடு இருக்கிறது மரபு மருத்துவம்.

ALSO READ: FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

                          மரபு மருத்துவங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டியவை; உடனடியாக கொண்டாடப்பட வேண்டியவை; உடனடியாக நடைமுறைக்கு செய்து பார்க்கப்பட வேண்டியவை. அத்தனை நுட்பங்களையும் அத்தனை செய்திகளையும் அத்தனை குறிப்புகளையும் தன் பாடல்கள் வழியாக தனது ஆய்வுகள் வழியாக உடலை ஆய்ந்தவர்கள், உடலில் செய்து பார்த்தவர்கள், உடலில் பயணித்தவர்கள், உடலை வைத்து இயற்கையோடு பேசியவர்கள் என நிறைய செய்தியாளர்கள், நிறைய ஆய்வாளர்கள் குறிப்புகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். மாற்று மருத்துவம் என்பது, மரபு மருத்துவம் என்பது வெறுமனே ஆய்வுக் குறிப்புகளை சேர்த்து வைப்பது போன்று, நுட்பங்களை சேர்த்து வைப்பது போன்று மேலான பார்வையில் இருந்து நகர்ந்து நாம் மரபு மருத்துவம் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் மனித உடலுக்கும் மனிதனின் உயிருக்குமாய் இருக்கிற தொடர்புகளை விவரித்துப் பார்க்கிற தன்மையில் இயங்குகிறது என்பதை  பார்க்க வேண்டிய தருணமாக இருக்கிறது. பார்க்கத் துவங்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...