மரபு மருத்துவம் - அறிமுகம்
மரபு மருத்துவம் என்பது என்ன? மரபு மருத்துவங்களின் செயல்பாடுகள், அவற்றை ஆவணப்படுத்தி உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான தளங்களிலிருந்து மரபு மருத்துவங்கள் உரையாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மரபு மருத்துவமானது சமகாலத்தில் பேசப்படுகிற தன்மையில் இருக்கிறது என்றால் உண்மை. மரபு மருத்துவம் பற்றி
மிக முக்கியமான செய்திகளை பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. மரபு மருத்துவம் சமகாலத்தில், என்னை பொருத்த அளவில்
ஒரு மரபு மருத்துவம் குறித்து சில பகுதிகளில் வரவேற்கத்தகுந்த வண்ணம் இருக்கின்றன. சமகால அறிவியல் வளர்ச்சிக்கு போட்டியாக ஒப்பிடும்போது சில பகுதிகளில் அவை விவாதத்தை உருவாக்குகின்றன. அந்த வகையில் அவை எத்தகைய தன்மையில் இருக்கின்றன? என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. உண்மையிலேயே மரபு மருத்துவங்கள் ஆகச் சிறந்த மருத்துவ நுட்பங்களை, மருத்துவ உண்மைகளை வைத்திருக்கிறது. ஆனால் இந்த காலத்திற்கு அது பொருந்தாது என்று ஒரு வாதம் பேசப்படுகிறது. அதே நேரத்தில் மரபு மருத்துவம் என்பது மிக தொன்மையானது பழமையானது. மனிதர்கள் எல்லாம் பழமையை நோக்கி திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். நாமெல்லாம் ஆதிகால வாழ்க்கையை நோக்கி இயற்கை வாழ்க்கை முறையை நோக்கி விரும்பித்தான் ஆகவேண்டும். இல்லை யென்றால் மிகவும் மோசமான வாழ்க்கை முறைக்குள் சிக்கிக் கொள்வோம் என்பது மாதிரியான உரையாடலும் மரபு மருத்துவம் குறித்து பேசப்படுகின்ற உரையாடலாக இருக்கிறது.
ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)
ஒரு மரபு மருத்துவம் குறித்து நேர்மையான வெளிப்படையான சம காலத்தில் அது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது மாதிரியான ஒரு உரையாடல் தேவைப்படுகிறது. இதில் அப்படி ஒரு தேவை இருக்கிறது ஏனென்றால் நான் பார்த்திருக்கிறேன், மரபு மருத்துவத்தை புகழ்கிற, சிலாகித்து சொல்கிற ஒருவர் கூட ஒரு நெருக்கடியான உடல் தொந்தரவு ஏற்படுகிற போது அவர் பேசிய மருத்துவத்திற்கு முரணான முடிவை எடுக்கிறார். இயற்கை வாழ்க்கை முறையை வலியுறுத்தி பேசுகிற ஒருவர் அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய இயற்கை சார்ந்த மாற்றங்களைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக, தனக்கு வயதாகிறது என்பதை நவீன உலகத்திற்கு தகுந்தார்போல் அலங்கரித்துக் கொள்கிறவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இப்படி மரபு மருத்துவத்தை ஒரு தனி கிளையாகவும் தனது வாழ்க்கை முறையை தனி கிளையாகவும் பராமரித்துக் கொள்கிற மனித மனப்போக்கில் மரபு மருத்துவம் பேசப்பட வேண்டியது என்று ஒரு கருத்து இருக்கிறது. மேலும் மரபு மருத்துவம் என்பது இப்படி முரண்பாடுகளை காண்கிற போது கொந்தளித்து குமுறி எழுந்து அதை உடனடியாக புறக்கணித்துவிட வேண்டும், அந்த நம்பரை உடனடியாக சமூகத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும், அவருக்கு நேர் எதிராக பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் செயல்பாடு இல்லாமலும் இருக்கிறார் என்கிற விமர்சனமும் வருகிறது. உண்மையிலேயே மரபு மருத்துவம் என்பது
எதை நோக்கி ஒரு மனிதருக்கு உதவி செய்கிறது என்பது ஒரு தனியான வாதம். தனியாக பேசப்பட வேண்டியது. ஒருபுறம் மரபு மருத்துவத்திற்கு இருக்கக்கூடிய ஆதாரங்களும் உயிர்காப்பு நடவடிக்கைகளும் புனிதத் தன்மைகளும் இன்றைய அறிவியல் பூர்வமாக இருக்கிற அறிவியல் நுட்பங்களுக்கு சமமான தேவையான விளக்கங்களை கொடுக்க வல்லவையாக இருக்கின்றனவா? என்று மரபு மருத்துவ மருத்துவங்கள் சார்ந்தவர்கள் பேச வேண்டும்.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
மேலும் புனிதமாக இருக்கிற காரணத்தினாலேயே இவற்றையெல்லாம் ஒன்றாக வைத்துக் கொண்டு துன்பமாக இருக்கிற காரணத்தினாலேயே மரபு மருத்துவ தரவுகள் எல்லாமும் பழமையானது, புனிதமானது, சிறப்பானது என்று சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலமாக மட்டும் என்று வளர்ந்திருக்கிற தொழில், அறிவியல், பொருளாதாரம் சார்ந்த வேகம் இவற்றுக்கெல்லாம் இந்த மரபு மருத்துவம் எவ்வாறு விளக்கம் அளிக்கிறது? என்று நாம் பேச வேண்டி இருக்கிறது. மரபு மருத்துவம் என்றவுடன் இயற்கையை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே? என்று ஒரு மதத்தை பின்பற்றுவது போல மரபு மருத்துவங்களில் பின்பற்றுகிற மனோபாவமும் முழுமையை நோக்கி நகர்த்தாது. முழுமை என்பது மரபு மருத்துவத்திற்கு மிக நெருக்கமான ஒரு சொல்லாடல். ஒரு முழுமையை நோக்கிய நகர்வு என்பது மரபு மருத்துவத்தின் உடைய இலக்கிற்கு மரபு மருத்துவம் எதை நோக்கி வேலை செய்கிறதோ? அந்த வேலை தன்மைக்கு மிக நெருக்கமானது முழுமை என்பது.
ஆக, ஒரு மத பிரசங்கத்தை பின்பற்றுவது போல மரபு மருத்துவ ஆவணங்களை பின்பற்றுவது என்பது பலகீனமானது. அதே நேரத்தில் மரபு மருத்துவத்தில் இருக்கக்கூடிய தொன்மங்களையும் பழமைகளையும் புனிதமான பகுதிகளையும் உயர்த்தி வைத்துக் கொண்டு, பிடித்து வைத்துக்கொண்டு அவைதான் மிகச் சிறந்தவை; அவற்றை நாம் புறக்கணிக்க முடியாது; அவற்றை நாம் வெல்ல முடியாது; அவற்றுக்கு நாம் பதிலளிக்க முடியாது என்று அவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருப்பது இன்றைய சமகாலத்தில் வாழ்கிற ஒரு எளிய மனிதனுக்கு, சமூகத்தில் சந்திக்கிற தொழில்நுட்ப விளைவுகளும் பொருளாதாரம் சார்ந்த வேகமும் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மரபு மருத்துவத்திற்கு இருக்கிறது. இது ஒருபுறம். இன்றைய மருத்துவ உலகில் மரபு மருத்துவம் சார்ந்து இருக்கிற கோட்பாடுகளும் நவீன மருத்துவம் சார்ந்து இருக்கிற கோட்பாடுகளும் சண்டை போட்டுக் கொள்கிற ஒரு விரோதமான மருத்துவப் போக்கு என்பது இருக்கிறது அது விரோதமாக தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியும் நாம் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ALSO READ:ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம் - அக்குபங்சர்
நவீன மருத்துவர்கள் மரபு மருத்துவத்திற்கு விரோதமானவர்களா? நவீன மருத்துவம் மரபு மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? என்கிற விவாதத்தையும் நாம் செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் நவீன மருத்துவ ஆய்வாளர்கள் சொல்வது, மரபு மருத்துவத்தின் பலவீனமான பகுதிகளில் இருந்துதான் ஒரு வளர்ச்சிப் போக்காகத்தான் நவீன மருத்துவம் உருவாகி இருக்கிறது. மருத்துவம் என்பது ஒரு அறிவியல் நாற்காலி கண்டுபிடிக்கப்பட்டது போல, ஒரு மின்விசிறி கண்டுபிடிக்கப்பட்டது போல, ஒரு மருத்துவத்தினுடைய பயன்பாடு பற்றாக்குறையின் காரணமாக ஒரு புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது என்று மருத்துவ அறிவியலாக பேசுகிற மரபு மருத்துவத்தை பின்னுக்கு தள்ளுகிற ஒரு விவாதம், வாதம் வைக்கப்படுகிறது. அதன் மீதும் மரபு மருத்துவம் என்ன சொல்கிறது? என்று நாம் பேசி பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஒரு முக்கியமான பகுதி.
அதோடு நவீன மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய சிக்கல்களை மரபு மருத்துவம் எவ்வாறு கையாளுகிறது? என்று நுட்பமான தொழில்நுட்பம் சார்ந்த சமன்படுத்தும் நிலை ஒரு மனிதனை, உடலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய உபாதைகளை ஒரு மருத்துவமானது எவ்வாறு கையாளுகிறது? மரபு மருத்துவமானது எவ்வாறு கையாளுகின்றன? நவீன மருத்துவம் எவ்வாறு கையாளுகின்றது? அதற்குள் இருக்கிற சிக்கல்கள் என்ன? என்று தொழில்நுட்பமாக இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டிய ஒரு உரையாடலும் நமக்கு அவசியமாக இருக்கிறது. ஆக, ஒரு பரந்த விவாதங்களுக்கு மத்தியில், பரந்த உரையாடலுக்கு மத்தியில், மருத்துவத்தை பொத்தாம் பொதுவாக பேசாமல், மருத்துவத்தில் இருக்கக்கூடிய முரண்பாடுகளை தனிநபரின் தவறுகளை அந்த மருத்துவத்தின் தவறாக குறிப்பிடாமல், தனிநபரின் நல்லொழுக்கங்களை மருத்துவத்தின் நல்ஒழுக்கமாக உயர்த்தாமல், தனிநபர் - மருத்துவம் - ஒரு சமூகம் - ஒரு காலகட்டம் - ஒரு வரலாற்று நிகழ்வு இப்படி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நிதானமான உரையாடல் மரபு மருத்துவம் குறித்து நாம் செய்து பார்க்க வேண்டியிருக்கிறது என்பது இன்றைய மருத்துவ சூழலின் தேவை.
ALSO READ:ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம்
கொடிய நோய்கள், புதிது புதிதாகக் கண்டுபிடித்து மனித சமூகம் பெரும் துயரத்தை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கை சீரழிவுகளை புரிந்து கொள்ள முடியாமல் மனித சமூகம், இயற்கை சீற்றங்களை சமாளிப்பதற்கு என்ன செய்வது? என்று தெரியாமல் ஒரு மனித கூட்டம், தன்மை கொண்டிருக்கிற வேளையில் மனிதனை இயற்கையை புரிந்து கொள்வதற்கும் உறவாடி இயற்கையோடு இணைந்து பயணிப்பதற்கும் இம்மாதிரியான உரையாடல் வரவேண்டும்.இன்று நமது நாட்டில் அல்லது உலக அளவில் மருத்துவம் என்றால் என்னவாக இருக்கிறது? என்பதில் ஒரு தெளிந்த, வெளிப்படையான பதிவேடுகள் இல்லை. இந்தியா மாதிரியான வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நாடுகளில், வளர்ந்த நாடுகளில் ஒரு மருத்துவம் பின்பற்றப்படுவதாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் இருபது, இருபத்தைந்து தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்ப்டுவதாக, அந்த தடுப்பூசிகளை ஒரு மருத்துவம் தொடர்ந்து கவனமாக மனிதர்களுக்கு உபயோகித்து வருகிறது. அதுதான் சிறந்த மருத்துவம் என்று இந்தியா மாதிரியான இந்தியா போல் இருக்கிற மூன்றாம் உலக நாடுகள் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நாடுகளில் பரப்புரை செய்யப்படுகின்றன.
இன்னொரு பக்கத்தில் இந்தியா மாதிரியான நாடுகளில் இருக்கிற மரபு மருத்துவத்தை பின்பற்றுகிற, நம்புகிற, மரபு மருத்துவத்தின் மீது ஆழமான பற்று வைத்திருக்கிற நபர்கள் வேறொரு தகவலைச் சொல்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிற மருத்துவங்களும் மருந்துகளும் தடுப்பூசிகளும் அதை பயன்படுத்தும் முறைகளும் ஏற்படுத்துகிற பக்க விளைவுகள் எவ்வாறு வீரியம் கொண்டு மனிதக் குழந்தைகளை சமூகத்தை அழிக்கிறது. எனவே அந்த மருத்துவம் ஒரு போதாமையில் சிக்கி இருக்கிறது. அந்த மருத்துவம் போதாது. மரபு மருத்துவங்கள் தான் உண்மையிலேயே சரி. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருக்கிற மரபு மருத்துவங்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிற மருத்துவங்களின் தன்மைகள் எவை? என்று ஒரு பட்டியலை தனியாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இரண்டும் நாம் தொலைக்காட்சியின் வழியாகவோ ஊடகங்களின் வழியாகவோ தெரிந்து கொள்கிற செய்திதான். உண்மையில் எவ்வாறு இருக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. இவர்களை கேட்டால் அரசு தரப்பிலோ அல்லது பொதுவான மக்கள் மனநிலையிலேயே பேசினால், கேட்டால் சமூகத்தில் இருக்கிற எல்லா பிரபலங்களும் சமூகத்தில் இருக்கிற எல்லா உயரிய அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் பயன்படுத்துகிற மருத்துவம் என்ன? என்று பார்த்தால் ஒரு பெரும்பான்மை மக்கள் அல்லது உலக ரீதியில், உலக அளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு பொது மனநிலையில் உள்ள மருத்துவமாக இருக்கிறது. அவர்கள் மரபு மருத்துவத்தை உலகில் இருக்கிற, வேறு பகுதியில் பயன்படுத்தப்படுகிற மரபுசார்ந்த காரணங்களைக் கொண்டு இருக்கிற ஒரு மருத்துவத்தை பயன்படுத்தியதாக, ஒரு உலகில் இருக்கிற ஒரு பெரிய ஆட்சியாளர் பெரிய வளர்ச்சியடைந்த நாட்டைச் சார்ந்தவர். உலகில் இருக்கிற எளிமையான ஒரு மருத்துவ முறையை பின்பற்றுகிறார் என்கிற சான்றுகளை நாம் பார்க்க முடியவில்லை.
ALSO READ:ENERGY - ஆற்றல்
வேறு வேறு பகுதிகளில், வேறு வேறு காலங்களில் மிகச் சிறிய அளவிலோ குறிப்பிடத்தகுந்த அளவிலோ கூட மரபு மருத்துவ பரிந்துரை என்பதும் நம்பிக்கை என்பதும் நடந்து இருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் முழுக்க நாம் பார்க்கிற மிக முக்கியமான பதிவு என்பது மருத்துவ உலகில் பொதுவாக மருத்துவம் என்றால் எந்த மருத்துவம் முன்வைக்கப்படுகிறது? அந்த மருத்துவம் அவ்வாறு முன்வைக்கப்படுவதற்கான அடிப்படை முகாந்திரம் என்ன? என்பது முதன்மையான விவாதமாக, முதன்மையான உரையாடலாக செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களை முதன்மைப்படுத்துவதன் வழியாக அந்த மருத்துவத்தை உயர்த்திப் பிடிப்பது என்று நாம் வகைப்படுத்தினோம் என்றால் மருத்துவத்திற்கு இருக்கிற சிறப்பு அம்சங்கள் எல்லாம் மருத்துவத்திற்கும் ஒன்றாகவே இருக்கின்றன.
ஒரு மருத்துவத்தினுடைய நோய் அறியும் திறன் அதன் சிறப்பம்சம் என்று வைத்துக் கொண்டால், ஒரு ஹோமியோபதி மருத்துவம் பேசுகிற மனதின் துல்லியப் தன்மையை நவீன மருத்துவத்தின் நவீன மனோதத்துவ மருத்துவங்கள் பேசவே முடியாது. அவை நரம்புகளையும் மூளை செயல் திறனையும் விரிவாக பேசுகின்ற தன்மையோடு ஆய்வுகள் செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மனோதத்துவம் குறித்து மனதின் தன்மை குறித்து, நுட்பம் குறித்து மரபு சார்ந்த மருத்துவ
ஆய்வாக ஹானிமேன் உருவாக்கி வைத்திருக்கிற ஒரு மனம் சார்ந்த நோய் கூறுகளை அறிகிற ஹோமியோபதி மருத்துவம் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு மனிதனின் ஆழமான, மன உணர்வுகளை வெளிப்படுத்துகிற, வெளியில் எடுக்கிற, அவற்றை நோய்க்கூறாக மாற்றி அமைக்கிற அவற்றை மருந்தாக நோயாளிக்கு திரும்ப அளிக்கிற விந்தையான பிரமிப்பு ஹோமியோபதி.
ALSO READ:Human is an absolute natural component - மனிதன் ஒரு முழுமையான இயற்கை கூறு
ஹோமியோபதி மருத்துவத்தை
நவீன மனம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளோடு ஒப்பிடும் முயற்சியை நாம் மேற்கொண்டோமானால்
மரபு சார்ந்து இயங்குகிற தளத்தில் ஹோமியோபதி மருத்துவம் மிக ஆழமான வேலைகளைச் செய்து
கொண்டே இருக்கிறது. நவீன மருத்துவம் முன்வைக்கப்படுகிற மருத்துவம் என்றால் முன்வைக்கப்படுகிற
சமகாலத்தில் நமக்கு உடனடியாக வந்து விழுகிற மருத்துவம் என்பது நவீன மருத்துவமாக திரும்பத்திரும்ப
சொல்லப்பட்டுக் கொண்டே இருப்பதனால் இதனை நாம் பேச வேண்டியிருக்கிறது. முழுமையான சிறப்பான
ஒரு மருத்துவம் மனம் சார்ந்தது எது? என்று நீங்கள் வலைதளத்திலோ, தெரிந்த நண்பர்களிடமோ,
மனம் சார்ந்த ஒரு ஆற்றுப்படுத்துதலுக்கு நீங்கள் அறிந்திருக்கிற பிரபல்யம் எதை நாடுகிறார்?
என்று நீங்கள் விசாரித்தாலோ வந்து விழுகிற உங்களுக்கு கிடைக்கிற செய்தி என்பது சமூகம்
பொதுவாக கருதிக் கொள்கிற ஒரு மருத்துவத்தைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் சில காரணங்களைச்
சொல்கிறார்கள். அந்த காரணத்தை வைத்துக் கொண்டு ஒரு மருத்துவத்தை தீர்மானிக்கலாம் என்றால்,
அதே காரணத்திற்கு இன்னொரு மரபு மருத்துவம் அதனை விட பன்மடங்கு திறமை மிகுந்த மருத்துவமாக
இருப்பதை பார்க்க முடிகிறது.
தொடரும்....
No comments:
Post a Comment