மரபு மருத்துவம் - அறிமுகம்
ஒரு அணுவிற்குள் இருக்கிற அசைவுகள், அணுவினுடைய மூலக்கூறுகள்
எவ்வாறு இயங்குகிறது? அந்த அணுவினுடைய உட்கிரகிப்பு எவ்வாறு இருக்கிறது? அந்த அணுவும்
புதிய உயிரை உற்பத்தி செய்வதற்கு எம்மாதிரியான முயற்சிகளை செய்கிறது? என்று அணுவிற்குள்
இருக்கிற அசைவுகளை வைத்துக் கொண்டு ஒரு மன வடிவத்தை, ஒரு மன வடிவத்திலிருந்து, அந்த
மன வடிவத்தோடு இயங்குகிற ஒரு நுட்பத்தை நவீன மருத்துவம் மனம் சார்ந்து விரிவாக பேசுகிறது.
டிஎன்ஏ, ஆர்என்ஏ மூலக்கூறுகளினுடைய தொகுப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு தாய்
வழி சமூகத்தினுடைய மன வடிவங்களை எடுத்து வைத்துக்கொண்டு, தந்தைவழி சமூகத்தினுடைய மன
வடிவங்களை எடுத்து வைத்துக்கொண்டு அந்தக் கருவில் உருவாகிற ஒரு சிசுவின் முதல் துளி
உயிரணுவில் இருந்து பிரித்து நுட்பமாக ஆய்வு செய்து ஒரு பெரிய மன வடிவம் குறித்த வேலைகளை
நவீன மருத்துவம் செய்கிறது என்று ஆய்வுகள் பதிவு செய்து வைத்திருக்கின்றன. இந்த மன
வடிவத்தினுடைய எல்லா சிக்கல்களையும் மரபு மருத்துவ பகுதியில் நாம் ஆய்வு செய்தோமானால்
ஹோமியோபதி மிகத்துல்லியமாக அவற்றை முன்வைக்கிறது. இரண்டு, மூன்று கேள்விகளில் அந்த
குழந்தையின் அந்த மனிதனின் மனம் எவ்வாறு இருக்கிறது? எவ்வாறு இயங்குகிறது? அந்த நோய்க்கு
உரிய மனக்காரணி என்ன? அந்த மனக் காரணியின் விளைவாக அந்த நோய் எத்தனை காலத்தில் சீராகும்?
எவ்வாறு உருவாகி இருக்கிறது? அதற்கான மருந்து என்ன? என்று விரிவாக அலசுகிறது ஒரு வேகத்தை
ஹோமியோபதி மருத்துவம் வைத்திருக்கிறது.
ALSO READ:Human is an absolute natural component - மனிதன் ஒரு முழுமையான இயற்கை கூறு
ஆக, மனதை பிரித்துப்
பார்க்கிற, பகுத்துப் பார்க்கிற தன்மையில்
நவீன மருத்துவம் முதன்மையாக இருக்கிறது என்றால் அதற்கு சொல்லப்படுகிற காரணத்தை மரபு
மருத்துவமும் வைத்திருக்கிறது. இன்னும் நவீன
மருத்துவத்தின் பிரச்சாரத்திற்கு சமமான பலத்தை மரபு மருத்துவமான, மன ஆய்வு மருத்துவமாக
இருக்கிற ஹோமியோபதி கொண்டிருக்கிறது. மரபு மருத்துவம் நிறைய விளம்பரங்களை பரப்புரைகளை
ஊடகங்கள் வழியாக செய்யப்படுகிற நிறைய உரையாடல்களை உடனடியாக தேவை உள்ளவர்களுக்கு அணுகக்கூடிய
அணுகுமுறைகளை நவீன மருத்துவம் வைத்திருக்கிறது. இப்படியான எந்த வாய்ப்பும் இல்லாத நிலையிலும்
கூட ஹோமியோபதி இத்தனை பலங்களையும் எதிர்கொண்டு போட்டி போடுவதற்கும் முன்னால் வருவதற்குமான
பெரும் பலத்தோடு இருப்பதை பார்க்க முடியும்.
ஆக, இப்படியான ஒரு
முன் வைப்பில் முதன்மைப்படுத்தபடுகிற காரணங்களில் இருந்து ஒரு மருத்துவம் சரியானது
என்றால் இந்த உதாரணங்களில் இருந்து நாம் பேச முடியும். ஒருவருக்கு திடீரென்று விபத்து
ஏற்பட்டு விட்டால், அவரது கால்களும் கைகளும் இரண்டாக உடைந்து விட்டால், அவர் மிகப்
பரிதாபமாக உயிர் போராட்டத்திற்கு ஆளாகும்போது என்ன செய்ய முடியும்? என்று விபத்து சிறப்பு
பிரிவு சார்ந்த கேள்விகள், விபத்து மருத்துவம் குறித்த கேள்விகள் நாம் எதிர்கொள்கிறோம்.
"அப்போ அந்த நவீன மருத்துவத்தினுடைய ராடுகளையும் அந்த இணைப்பான்களையும் தானே நீங்கள்
தேட வேண்டும்" என்று கேள்விகளை சந்திக்க முடிகிறது. மரபு மருத்துவம் இந்த கேள்விகளுக்குள்
மிக நுட்பமான சில விஷயங்களை வைத்திருக்கிறது.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
எந்த மருத்துவத்தையும்
உயர்த்தியோ எந்த மருத்துவர்களும் குறித்து குறைத்தோ பேசுவதாக நாம் இந்த உரையாடல் செய்யவில்லை.
எல்லா மருத்துவமும் அதற்கே உரிய ஞானத்தை வைத்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டுதான்
இந்த உரையாடலை நிகழ்த்துகிறோம். எல்லாம் மருத்துவத்திற்கும் போதுமான வளர்ச்சி அடைந்து
தன்னை வளர்த்துக் கொள்வதற்கான நுட்பமான பிடிமானம் இருக்கிறது என்பதை புரிந்த அடிப்படையில்தான்
இதை நாம் பேசுகிறோம். எந்த மருத்துவமும் இன்னொரு மருத்துவத்திற்கு போட்டியானதாகவோ உயர்வானதாகவோ வேறுபாடாகவோ புரிதல்
குறைபாடு நமக்கு கிடையாது. அப்படியான தன்மையில் நாம் இந்த உரையாடலை செய்ய வேண்டும்.
ஏனென்றால் மரபு மருத்துவத்தைப் பற்றி பேசுகிற அல்லது நவீன மருத்துவத்தை பற்றி பேசுகிற
உரையாடல் வந்த உடனேயே சண்டையாக, எந்த உபயோகமும் இல்லாத, யாருக்கும் பயன்படாத ஒரு சண்டையாக
விவாதம் முற்றிப்போய் அந்த உரையாடல் கசந்து விடுகிற நிலை நடக்கிறது. அது அவசியமில்லாதது.
மரபு மருத்துவத்திற்கும் சரி மரபு மருத்துவத்தின் சார்பில் அப்படியான எந்த நெருக்கடியும்
ஒன்றை கசப்பாக வேண்டிய அவசியம் மரபு மருத்துவத்திற்கு இல்லை.அதுவே எந்த மனிதனையும்
நேசிக்கிற மருத்துவத்திற்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.
ஆக, ஒரு மருத்துவ
விவாதம் என்பது இப்படியான தன்மையில் தான் இந்த உரையாடல் இந்த தொடர் நேரலை நிகழ்கிறது
என்கிற புரிதலில் நண்பர்கள் பயணிக்க வேண்டும் என்று உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிற காலகட்டத்தில் எப்படியானாலும் அவர்கள் மரபு மருத்துவத்தை
எப்படி எடுத்துக் கொள்வது என்ன காரணி இருக்கிறது? எப்படி செய்யமுடியும்? உடனடியாக என்ன
செய்ய முடியும்? என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. உடனடியாக ஆங்கில மருத்துவமோ
அல்லது நவீன மருத்துவமோ, நவீன செயற்கை கருவிகள், எலும்புகள், தோல் இதெல்லாம் செய்து
கொடுக்கக் கூடிய மருத்துவ நுட்பங்கள் இருக்கின்றது என்றெல்லாம் கேள்விகள் வருகிறது.
நல்ல மதிப்பிற்குரிய தன்மையோடு பார்க்கிற, ஒரு மனிதனின் உயிர் போராட்டத்தில் இருந்து
அவனை காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையில் இருந்து இந்த கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்
என்று புரிந்துகொள்ள முடிகிறது.
ALSO READ:ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம்
ஆனால் மரபு மருத்துவத்தில்
இரண்டு முன் வைப்புகள் இருக்கின்றன. ஒன்று மரபு மருத்துவம் முன்வைக்கிற வாழ்க்கை முறை.
மற்றொன்று மரபு மருத்துவம் குணப்படுத்துகிற குணமாக்கும் முறை. தமிழ் மருத்துவத்தில்
இருக்கிற சித்தமருத்துவத்தில் ஒடி முடிவு சாஸ்திரங்கள் என்கிற ஒரு தனி தொகுப்பே தேக சாஸ்திரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழ் இலக்கண இலக்கிய வரையறைகளுக்கு உட்பட்டு அந்த புத்தகத்தை பாடியிருக்கிறார்கள்.
அவை அந்தாதியில் இருக்கிறது. அந்தாதி என்றால் தமிழ் இலக்கியங்களில் மிகவும் கவர்ச்சியான
இலக்கிய நடை. எந்த சொல்லில் ஒரு பாடல் முடிகிறதோ அந்த முடிந்த சொல்லிலிருந்து அடுத்த
பாடல் தொடங்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள பெருவாரியான பாடல்கள் இலக்கிய புத்தகமாக,
மருத்துவ புத்தகமாக தமிழுக்கு சேவை செய்திருக்கிற பங்களிப்பாக என்று எல்லாவற்றிலும்
பொருத்திப் பார்க்க முடியும். அந்த புத்தகத்தில் உடலினுடைய கட்டுகளை வகைப்படுத்துகிறார்கள். உடல் எவ்வாறு இருக்கிறது?
உடலினுடைய தன்மை எவ்வாறு இருக்கிறது? எலும்புகளும் தசைகளும் எவ்வாறு பற்றி இருக்கின்றன?
ஒருவருக்கு உடலில் தாக்கம் ஏற்பட்டால், விபத்து ஏற்பட்டால், காயம் ஏற்பட்டால் அவற்றை
எவ்வாறு பிரிப்பது? எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? எவ்வாறு சேர்ப்பது? எவ்வாறு துண்டிப்பது?
என்று தொகுத்து நுட்பமாக, மிகவும் நுட்பமாக இருக்கிறது. கிட்டத்தட்ட சில நூறு ஆண்டுகளுக்கு
முன்பாக பதிவு செய்யப்பட்ட பாடல் வடிவம்.
சிறுவயதில் நான்
இருக்கும்பொழுது ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் செய்யப்படுகிற மருத்துவமானது நவீன மருத்துவத்திலேயே
செய்யப்படுகிற மருத்துவமானது இன்று வேறு ஒரு நிலைக்கு மாறி இருக்கிறது. எவ்வாறு? என்றால்
என்னுடைய அம்மாவிற்கு கீழே விழுந்து கையில் அடிபட்டுவிட்டது. இடது கையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
எலும்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். அந்த நேரத்தில் மருத்துவமனையில்
கட்டு போட்டுவிடுகிறார்கள். கையில் எலும்புகள்
உடைந்து விட்டது பின்னாளில் அது சேர்ந்துவிடும் ஓய்வெடுத்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்(40
நாட்கள்) என்று கூறுகிறார்கள். இதேபோல் நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது
இதே போல் ஒரு சம்பவம். ஆனால் இப்பொழுது எலும்புகளை சேர்ப்பதற்கு இரண்டு கம்பிகளை வைத்து
கட்டியிருந்தார்கள்.எலும்புகளை நேர் செய்வதற்காக கம்பிகளை கட்டியிருந்தார்கள். என்
அம்மாவிற்கும் நண்பருக்கும் ஒரே மாதிரியான காயம் தான்.ஆனால் என் அம்மாவிற்கு கொடுக்கப்பட்ட
சிகிச்சை நண்பருக்கு அளிக்கப்படவில்லை.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம்
மருத்துவ பயிற்சிக்கு
வந்த பிறகு ஒருவருக்கு இதே மாதிரியான விபத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தோள்பட்டையில்
கட்டு போடப்பட்டு இருக்கிறது. கைகளிலும் கட்டு போடப்பட்டு இருக்கிறது. இப்பொழுதும் அதே போல் கைகளில் கம்பிகள் ராடுகள் வைத்து
இணைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் நபருக்கு சிறிது காலம் கழித்து இணைக்கப்பட்ட கம்பிகளை
அகற்றி விட்டார்கள். ஆனால் மூன்றாம் நபருக்கு அவ்வாறு அகற்றப்படவில்லை. ஏனென்று காரணம்
கேட்டால் அது எலும்புகளோடு அப்படியே கரைந்து விடும் என்று கூறினார்கள். இவ்வாறு விதவிதமாக
ஒரு விபத்திற்கு, ஒரு எலும்பு முறிவிற்கு விதவிதமான ஆய்வுகள் செய்து கண்டுபிடிப்புகளை
வைத்துக்கொண்டு, நாளைக்கு இதுவும் மாறும்.இது நவீன மருத்துவத்தின் ஒரு வளர்ச்சி. ஆனால்
ஒடி முறிவு சாஸ்திரம் என்பது அவ்வாறு இல்லை. ஒடி முறிவு பாடமானது எழுதி முடிக்கப்பட்டவுடன்
ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் ஒருவருக்கு எப்படி சிகிச்சை செய்யப்பட வேண்டுமோ? அந்த
உடல் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ? அதில் இன்று வரை மாற்றமில்லை. அந்த உடலுக்குள்
ஏற்பட்டிருக்கக் கூடிய எந்த விதமான அசைவும் இன்றுவரை மாறவில்லை. வளர்ச்சி கூடியிருக்கும்,
குறைவாக இருக்கும். எடை வேறுபாடு இருக்கலாம். இந்த வேறுபாடும் இந்த வளர்ச்சியும் மட்டுமே
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆணாக இருந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தவர்கள்
பெண்களாகவும் உடல் தோற்றத்தில் ஆண்கள் என்ன மாதிரியான உடல் தோற்றத்தில் இருக்கிறார்களோ?
அத்தனையும் பெண்களுக்கு என்ன மாதிரியான உடல் தோற்றம் இருக்குமோ? அத்தனையும் உடல் தோற்றத்தில்
மாறுபாடு ஏதுமின்றி சிறுசிறு வளர்ச்சி, எடை இம்மாதிரியான மாறுபாடுகள் மட்டுமே நடந்து
இந்த உடல்கட்டு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்னும் பெற உயிர்களுக்கும் இன்ன
பிற ஜீவராசிகளுக்கும் எந்தவிதமான மாற்றமும் இல்லாத ஒரு இயற்கை வளர்ச்சியாக இயற்கையுடய
போக்காக இருக்கிறது என்கிற புரிதலோடு மரபு மருத்துவத்தில் ஒடிமுறிவு சாஸ்திரம் வகுக்கப்பட்டு
இருக்கிறது. ஒடி முறிவு சாஸ்திரத்திற்குள் இருக்கிற நுட்பங்கள் ஒடி முறிவு சாஸ்திரங்கள்
எவ்வாறு பேசுகிறது? எவ்வாறு ஒரு உடலை பார்க்கிறது? எவ்வாறு ஒரு உடலை பரிந்துரைக்கிறது?
எவ்வாறு உடலில் வேலை செய்கிறது? என்பதெல்லாம் மிக நேர்த்தியாக மிகத்துல்லியமாக இன்றைக்கு
நவீன மருத்துவம் என் அம்மாவிற்கு இருந்த துல்லியத்தை மாற்றி அமைத்திருக்கிறது என் நண்பருக்கு.
ஆக, என் அம்மாவைப்பற்றி சொல்கிறபோது அப்போதும் அது துல்லியமாக இருந்ததாகச் சொல்கிறது.
பின்னால் இன்னொரு நண்பருக்கு அதைச் சொல்லும்போது அப்போதும் துல்லியமாக இருக்கிறது என்று
சொல்கிறது. மூன்றாவது நண்பருக்கும் விபத்து ஏற்படும்போது அப்போதும் துல்லியமாக இருப்பதாக
சொல்கிறது. மீண்டும் இன்னும் துல்லியமாக அது நகரும், நகரலாம். அது ஒரு பக்கம்.
ஆனால் சிகிச்சை அளிப்பதில்
ஒரு மனிதனுக்கு நேர்த்தியாக எலும்புகளை நரம்புகளை தசைகளை அமைந்திருக்கும் அமைப்பை புரிந்துகொண்டு
ஒரு நெருக்கடியான சிகிச்சை தேவைப்படுகிற காலத்தில் அவர்களுக்கு எவ்விதமான உதவிகள் செய்ய
வேண்டும் என்பதை அடுக்கி தொகுத்து வைத்திருக்கிற மரபு மருத்துவக் கூறுகள் இருக்கின்றன.
ஆக ஒரு நெருக்கடி காலத்தில் ஒரு மனிதனுக்கு இந்த மருத்துவம்தான் உதவி செய்கிறது என்று
ஆர்வமாக கேட்கிறவர்களுக்கு, அந்தப் பகுதியிலிருந்து அதை முதன்மை காரணமாக வைத்து பேசுகிறோம்
என்றால் அதற்கு நவீன மருத்துவத்திற்கு எந்தவிதத்திலும் அல்லது நவீன மருத்துவத்திற்காக
சொல்லப்படுகிற காரணங்களில் எந்த விதத்திலும் சற்றும் குறைவில்லாத பொருத்தமான மனிதனுக்கு
இன்னும் நெருக்கமான காரணங்களை மரபு மருத்துவம் கொண்டிருக்கிறது.
தொடரும்...
No comments:
Post a Comment