மரபு மருத்துவம் - அறிமுகம்
மரபு மருத்துவத்தை ஏற்றுக் கொண்ட, மரபு மருத்துவத்தை வாழ்க்கை
முறையாக கொண்ட நபர்களுக்கு விபத்தே நிகழாது
என்று ஒரு அறிவியல் கூறுகிறது. சித்த மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் ஒடி முறிவு
சாஸ்திரங்களிலும் நாட்டு மருத்துவத்திலும் ஒரு வாழ்க்கை முறையாக செய்கிற ஒருவருக்கு,
காய்ச்சல் பார்க்கிறவருக்கு காய்ச்சல் வராது.
ஒரு மருத்துவத்தில் அந்த மருத்துவ முறையில் சிறப்பாக வைத்தியம் பார்க்கிற ஒருவருக்கு
அந்த நோய் வராது என்பது அவரது வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்ட அவர்கள் அளவில் அது
நிரூபனமாகிறது. இவை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்தால் எல்லோருக்கும் அப்படி இருக்குமா?
என்றால் இது வாழ்க்கை முறை. வாழ்க்கை முறையாக, மரபு மருத்துவத்தை கலையாக, மரபு மருத்துவத்தை ஆற்றல்
சார்ந்த ஒரு பேருண்மையாக ஏற்றுக் கொள்கிற, பற்றிக் கொள்கிற ஒரு வாழ்க்கை முறை மேற்கொள்கிற
ஒருவருக்கு நடக்கிற எதார்த்தம்.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம் PART -2
சித்தர்களுக்கு,
மரபு மருத்துவத்தில் வேலை செய்கிற ஹோமியோபதி மருத்துவர்களுக்கு, ஞானி போல் இருக்கிற
ஹோமியோபதி மருத்துவர்களுக்கு, மனம் சார்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிற ஹோமியோபதி
மருத்துவர்களுக்கு ஆற்றல் சார்ந்த நோய்கள் வருவது இல்லை. மனம் சார்ந்து பேசுகிற ஹோமியோபதி
மருத்துவருக்கு மனம் சார்ந்த சிக்கல்கள் வருவது இல்லை. மிகவும் நிதானமாக தங்களுடைய
அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடிகிறது. ஆற்றல் சார்ந்த மருத்துவர்களுக்கு ஆற்றல் சார்ந்த
தொந்தரவுகள் வருவது இல்லை. வாழ்க்கைமுறை சார்ந்த மரபு மருத்துவங்கள் முன்வைக்கிற, பயிற்சி
மேற்கொள்கிற மருத்துவர்களுக்கு வேறு ஒரு தளத்தில் மாற்றங்கள் நடைபெறுகிறது என்பதை நாம்
பார்க்க முடிகிறது. இந்த வாழ்க்கைமுறை சார்ந்த தரவுகளை, நுட்பங்களை ஆங்கில மருத்துவர்களுக்கு
பொருத்தி பார்க்கிறோம் என்றால் அவ்வாறு பொருத்தி பார்க்க முடிகிறதா? என்றால் அதற்குள்
நாம் வெளிப்படையாக உரையாட முடியாத அல்லது அது கோபம் ஏற்படுத்தக்கூடிய விமர்சனத்திற்குரியதாக
மாறி இருக்கிறது. நோயாளியின் நாடியைப் பிடித்து பார்த்தவுடனேயே எப்பொழுது குழந்தை பிறக்கும்?எப்பொழுது
ஒருவருக்கு உயிர் பிரியும்? என்பது மாதிரியான நோயறிதல் முறை மரபு மருத்துவத்தில் இருக்கிறது.
நோயறிதல் முறையில் மாற்று மருத்துவங்கள் மரபு மருத்துவங்களை முதன்மையாக வைத்து பேசினால்
மரபு மருத்துவங்களில் சமமான பலமான வேகத்தைக் கொண்டு இருக்கின்றன.
ஒரு மருத்துவ ஆய்வு
என்பது எவ்வாறு செய்யப்படுகிறது? மருத்துவ ஆய்வு என்பது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
என்று நேரெதிர் வாதங்கள் வலைதளங்களில் குவிந்து கிடக்கின்றன. மருத்துவத்தினுடைய புனிதத்தன்மையை
மருத்துவத்தினுடைய பாரம்பரியத்தை வைத்துக்கொண்டு மருத்துவத்தை மதிப்பீடு செய்வது என்பது
போதுமானது அல்ல. ஒரு மருத்துவத்தினுடைய நோக்கம் என்ன? என்பதில் மரபு மருத்துவமும் நவீன
மருத்துவமும் எவ்வாறு பயணிக்கின்றன? என்பது தான் இந்த உரையாடலினுடைய நோக்கம். எவ்வாறு
பயணிக்கின்றன? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். ஒரு
மரபு மருத்துவம், ஒரு நவீன மருத்துவம் தனது புனிதங்களை முன் வைத்துக் கொண்டு தனக்கிருக்கிற
சாதகமான அம்சங்களை முன்வைத்து கொண்டு பேசுவது என்பது ஒரு மருத்துவ ஆய்விற்கு, மருத்துவத்தை
மதிப்பீடு செய்வதற்கு போதுமானது அல்ல. அப்படி எனில் ஒரு மருத்துவத்தை எவ்வாறு மதிப்பீடு
செய்வது? என்று பார்த்தோமேயானால் மிக எளிய காரணத்தை நாம் பார்க்க முடியும்.
ALSO READ:Traditional Medicine - Introduction மரபு மருத்துவம் - அறிமுகம் PART - 1
ஒரு மருத்துவத்தை
பெற்றுக் கொள்கிற ஒரு மனிதன் அவனளவில் முழுமையானவனாக பிறருக்கு உதவி செய்பவனாக, பயனளிக்கக்
கூடியவனாக, அவனை உருவாக்குகிற சுயவிருப்பம் அவனுக்கு ஏற்படுகிற ஏதாவது ஒன்றை மருத்துவம்
செய்ய வேண்டும். அதுதான் அந்த மருத்துவத்தினுடைய தரம். அவனுக்குள் இருக்கிற ஒரு சுயநலப்
போக்கை அந்த மருத்துவம் தூக்கி எறிய வேண்டும். அவனுக்குள் இருக்கும் படபடப்பை அந்த
மருத்துவம் தூக்கி எறிய வேண்டும். அவனுக்குள் இருக்கிற சுயநலத்தை, சுயவெறுப்பு விருப்புகளை
மருத்துவம் தூக்கி எறிய வேண்டும். இப்படியாக அவனுக்குள் ஏதாவது ஒன்றை செய்கிற வல்லமை
எந்த மருத்துவத்திற்கு இருக்கிறதோ? அந்த மருத்துவம் தான் சிறந்த மருத்துவமாக இருக்க
வேண்டும், இருக்கமுடியும் என்று நான் நம்புகிறேன். அதுதான் இன்றைய நாம் பேசுகிற உரையாடலினுடைய
மெய்ப் பொருளாகும். நோக்கமாகும். ஒரு மனிதனை சற்று உயர்த்துகிற நுட்பம் எந்த மருத்துவத்திற்கு
அதிகமாக இருக்கிறது? இதுதான் நோக்கம். அதில் மரபு மருத்துவங்களா? அல்லது மரபு மருத்துவத்தை
புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிற ஒரு பொது மனநிலையில் இருக்கிற நவீன
மருத்தவங்களா? என்பது நாம் பேச வேண்டிய பகுதியாக இருக்கிறது. சண்டையாகவோ முரண்பாடாகவோ
எதுவும் இல்லை. தனது சாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு
அறிவியல் சிறப்புகளை வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு எந்த வேலையும் இல்லை.
இன்றைய நவீன நுட்பம்
என்பது நாளைக்கு மாறக்கூடியதாக இருக்கிறது, இருக்கும். அதுதான் நுட்பம். அதுதான் அறிவியல்.
வளர்ச்சி அடைவதுதான் அறிவியல். வளர்ச்சி அடையாதது பிணம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அறிவியல் மருத்துவத்திற்கும் சரி, அறிவியல் நோக்கில் பார்க்கப்படுகிற மரபு மருத்துவத்திற்கும்
சரி பொருந்தக் கூடியதே. ஆனா ஒரு மருத்துவத்தை பெற்றுக் கொள்கிற ஒருவர், ஒரு மருத்துவத்தை
பயன்பெறுகிற ஒருவர் ஒரு மருத்துவத்தில் தன்னை கரைத்துக் கொள்கிற ஒருவர், தன் உடல் அளவில்,
மன அளவில், சமூக அளவில், ஒரு படி மேலே உயர்வதற்கான வாய்ப்பை எந்த மருத்துவம் கூடுதலாக
கொடுக்கிறது? எந்த மருத்துவம் கூடுதலாக உதவுகிறது? எந்த மருத்துவம் இதற்கான சாதகமான
அம்சங்களை பெற்றிருக்கிறது? என்று பேசுவது தான் இந்த பேச்சினுடைய நோக்கம். இதில் அதிகமான
வாய்ப்புகளை மரபு மருத்துவங்கள் பெற்றிருப்பதாக பரப்புரைகளுக்கு அப்பாற்பட்டு நாம்
பார்க்கிறோம். அல்லது பரப்புரைகளுக்கு ஊடாக தேடி பார்க்கிற போது நவீன மருத்துவம் முன்வைப்பது
எல்லாமும் தனக்கு சாதகமான செய்திகளையும் தனது வெற்றிகளையும் முன் வைத்துக் கொண்டே இருக்கிறது.
இது போதுமானது அல்ல.
ALSO READ:ALTERNATIVE MEDICINE - மாற்று மருத்துவம்
ஏனென்றால் நவீன மருத்துவம் மேற்கொள்கிற எந்த ஒரு மனிதனும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுபம் நபராக மாறிப் போகிறார். நவீன மருத்துவம் மேற்கொள்கிற ஒவ்வொருவரும் அந்த மருத்துவத்தை மேற்கொண்ட காரணத்திற்காக அந்த மருந்துகளை உட்கொண்ட காரணத்திற்காக இன்ன பிற தொந்தரவுகளை பெற்றுக் கொள்கிற ஆபத்து இருப்பதாக நவீன மருத்துவமே பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆக, ஒரு மருத்துவம் என்பது எப்படியானதாக இருக்கிறது? என்று மதிப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்தோமானால், அந்த மனிதன் பெற்றுக் கொண்டவுடன் நலமாவது நடக்க வேண்டும்; மன அளவில் பலமாக இருக்க வேண்டும்; ஆன்மா அளவில் தன்னை சுத்தீகரித்துக் கொள்கிற தைரியமும் விருப்பமும் கொண்டவராக மாறுகிறான் என்பது நடக்க வேண்டும். இதுதான் மனிதன் தன்னை ஒரு மருத்துவத்தில் ஒப்படைப்பதற்கான இலக்காக இருந்து வந்திருக்கிறது இன்று அது பரப்புரைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பேருண்மையோடு ஒரு மருத்துவத்தை மதிப்பீடு செய்யவேண்டும் என்கிற தன்மையில் இந்த உரையாடல் நாம் நேரலை வழியாக நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். ஒரு மருத்துவத்தில் ஒரு மனிதன் தன்னை ஒப்படைக்கிறான் என்றால் அவன் தன்னளவில் உயர்த்திக் கொள்வதற்கு மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பு அளிப்பது எந்த மருத்துவம்? எந்த வகையில் அந்த மருத்துவம் அந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது? மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வது மட்டும் தான் காலத்தின் தேவை. வெற்றி பெறுவது அல்ல. மனிதன் கோடீஸ்வரனாக மாறுவது அல்ல. மனிதன் அமைதியாகவும் அன்பாகவும் கரடுமுரடான பைத்தியக்கார மன உளைச்சலில் இருந்து ஒருபடியேனும் தன்னை உயர்த்திக் கொள்வது தான் மனிதனினுடய உடைய இலக்கு. தன்னை பிறரை தன்னைப்போல் பிறரை நேசிக்கிற நேசத்தை வளர்த்துக் கொள்கிற ஒரு மனப்பக்குவத்தை உருவாக்குவதற்கு ஒரு மருத்துவ உதவி செய்ய வேண்டும். அந்த உதவி செய்கிற மருத்துவம்தான் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான மருத்துவம். உண்மையிலேயே உதவி என்கிற வார்த்தைக்கு பொருளுக்கு பொருத்தமான மருத்துவமாக அது இருக்கும். என்கிற வகையில் எந்த மருத்துவம் இணக்கமான பயணத்தை மேற்கொள்கிறது காலங்காலமாக என்று ஒரு விரிவான விவாதத்தை தொடர்ந்து செய்வோம். தொடரும்.....
No comments:
Post a Comment