உடல் கடந்த மருத்துவம்
மருத்துவம் மிகுந்த கவனத்திற்குரிய துறையாக இருக்கிறது. மருத்துவத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதும் பேசிக்கொண்டு இருப்பது என்பதும் மக்கள் மத்தியில் அந்தப் பேச்சுக்கள் எந்த மாதிரியான அதிர்வுகளை அசைவுகளை ஏற்படுத்தும்? என்பதும் மருத்துவம் பற்றிய உரையாடலில் கவனம் பெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் மருத்துவம் என்பது எப்படியானதாக இருக்கிறது? மருத்துவத்தை எவ்வாறு கையாள்வது? அணுகுவது? ஒவ்வொரு மருத்துவமும் தன்னளவில் ஒரு மனிதனை எவ்வாறு பார்க்கிறது? என்பது குறித்து ஒரு விரிவான தளம் இருக்கிறது. பேச வேண்டிய தேவை இருக்கிறது. மருத்துவத்தைப் பற்றி மருத்துவத்தில் பணியாற்றுகிற பயிற்சியாளர்கள் பேசுகிற போது நாம் கவனிப்பது, ஒரு நோய்க்கு அல்லது ஒரு குறிப்பிட்ட உடல் மாற்றத்திற்கு சிகிச்சை வழங்குகிற தன்மையிலேயே மருத்துவத்தின் எல்லையை சுருக்கி விடுகிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. மருத்துவம் எப்படியானது? என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அக்கறையோடு பார்த்தோம் என்று சொன்னால் மருத்துவத்தை சிகிச்சை அளிக்கிற தளத்தில் மட்டும் பொருத்தி முடிவு செய்வது என்பது போதுமானது அல்ல என்பதை பார்க்க முடியும்.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
மருத்துவம் சற்று மனிதனின் உடல் கடந்து, மனிதனின் ஆன்ம நிலையில் மனிதனின் உயிர்ப்பு நிலையில் நெருக்கமான அசைவுகளை ஏற்படுத்தும் வல்லமை உடையது. ஒரு சமயம், ஒரு மத வழிபாட்டு செய்முறை எத்தனை நெருக்கமாக மனிதனுக்கு வழிகாட்ட முடியுமோ அத்தனை நெருக்கமாக மருத்துவமும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது. வழிகாட்டி கொண்டு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்திய சமூகத்தில் மருத்துவரை கடவுளுக்கு ஒப்பிடும் ஒருமொழி வழக்கு இன்றும் இருக்கிறது. கடவுளே மருத்துவராக இருக்கிறார் என்கிற தன்மையில் மருத்துவரை உயர்த்துகிற, போற்றுகிற மனப்பக்குவம் நீண்ட மருத்துவத்தின் மீது பெற்றிருக்கிற அனுபவத்தின் வாயிலாகவும் மருத்துவத்தின் மேல் இருக்கிற பற்றுதலின் வாயிலாக மட்டும் அமைந்து விடவில்லை. மருத்துவம் மனிதனின் பயன்பாடு தேவை கடந்து இன்னும் ஆழமாக இன்னொரு வேலையை செய்துகொண்டு இருக்கிறது என்கிற புரிதலில் இருந்து மருத்துவத்தையும் மருத்துவம் செய்கிற மருத்துவ பயிற்சியாளர்களையும் கடவுளுக்கு ஒப்பாக பேசுகிற ஒரு வழக்கு இந்திய சமூகத்தில் இருப்பதை நான் உணர்கிறேன்.
ALSO READ: EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
கடவுள் என்பதை இந்திய சமூகம் எவ்வாறு பார்க்கிறது? என்பதும் நமக்கு அவசியமானது. இந்திய சமூகத்தில் கடவுள் இறைநிலை என்பது மிகுந்த நுட்பமாகவும் அதே நேரத்தில் அடர்த்தியாகவும் குறிப்பிடக்கூடிய தன்மையில் இருக்கிறது. வெகுஜன மத்தியில் சாதாரண மக்கள் மத்தியில் சமூகத்தின் மத்தியில் கடவுள் அல்லது மத வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த செய்தியாகவும் செயல்பாடாகவும் இருக்கிறது. ஒரு வேலையை துவங்குவதற்கு முன் கடவுளிடம் தகவல் சொல்லிவிட்டு துவங்க வேண்டும் என்கிற அணுகுமுறையோடு தொடர்பு கொண்டு இருக்கிறது. ஆனால் சமூக மக்கள் மனநிலை கடந்து, கடவுளின் மறை நூல்கள் அல்லது கடவுளை விளக்குகிற செய்யுள்கள் கடவுளின் தன்மையை கொஞ்சம் விரிவாகப் பேசுகின்றன. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் கூறுகளை, இயங்கும் முறையை கடவுளின் தன்மையாக ஒப்பிடுகிற மறை நூல்கள் இந்திய சமூகத்தில் இருக்கின்றன.
கடவுளே ஒரு படைப்பாளியாக அல்லது படைப்புத்திறன் கடவுளாக கடவுளே அன்பாக, அன்பே கடவுளாக இவ்வாறு கடவுளை விதவிதமாக ஒப்பிட்டுச் சொல்கிற, விதவிதமாக விளக்கிச் சொல்கிற மறைநூல் நிறைந்திருக்கிற ஒரு சமூகம் மருத்துவரை கடவுளுக்கு ஒப்பாக பார்க்கிறது என்று சொன்னால் மருத்துவரிப் பணி என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்தை பரிந்துரைக்கிற பணியோடு நின்று விடக்கூடாது என்கிற பொறுப்பு அந்த மக்கள் வழக்கில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இன்று காண்கிற காட்சிகளும் உரையாடல்களும் ஒவ்வொரு மருந்துக்கும் என்ன வேலை? என்பதே அதிகபட்ச விளக்கமாக இருக்கிறது. ஒரு நோய்க்கு என்ன மருந்து? என்பதோடு மருத்துவத்தின் பணி சுருங்கி போகிற ஒரு சூழல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு மருத்துவமும் அது மனிதனை குணப்படுத்துகிற தன்மை என்கிற அளவில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் இயல்பு.
ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை
ஆனால் மருத்துவத்தின் நடைமுறை இயல்பு மீறியதாக இருக்கிறது. மனிதனை உடல் அளவில் பராமரித்து கொண்டால் போதுமானது என்கிற திசை நோக்கி மருத்துவம் செல்வதை நாம் கவனத்தோடு சரி செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் மருத்துவம் என்பது ஒரு படைப்புச் சொல்லின் படைப்பு இயக்கத்தின் செயல்பாட்டு வடிவம். கண்ணில் காண்கிற ஒரு படைக்கும் இருத்தலுக்குச் சமமாக இறைவனுக்குச் சமமாக ஒப்பிடப்படுகிற ஒரு படைப்பு இயங்குமுறை. அத்தகைய மருத்துவத்தை ஒரு இயந்திரம் போல் ஒரு இயந்திரத்தில் இந்த சத்தம் கேட்கிறது இந்த பொருளை மாற்றி விடலாம். ஒரு இயந்திரத்தில் இந்த இரைச்சல் கேட்கிறது இந்த எண்ணெயை ஊற்றி விடலாம் என்று ஒரு இயந்திரத்தை அணுகுவது போல் ஒரு உடலை அணுகுவதாக மருத்துவம் இருப்பது என்பது ஒரு பெரிய படைப்புத்திறன் மிக்க அணுகுமுறைக்கு விரோதமானது. எல்லாவற்றையும் எல்லா குறிகுணங்களையும் கடந்து மனிதனுக்குள் இருக்கிற மனித உடல் கடந்து சற்று ஆழமாக மனிதனுக்குள் இருக்கிற வேறு ஒரு பகுதியை தொட்டு வேலை செய்கிற தன்மை மருத்துவத்திற்கு இருக்கிறது என்பதை மருத்துவ நூல்கள் பறைசாற்றுகின்றன. அதன் வழி செய்யப்படுகிற பாரம்பரிய மரபு சார்ந்த மருத்துவங்கள் பறைசாற்றுகின்றன. நவீன ஆய்வுகள் மருத்துவம் இதுவரை கண்டு இருக்கிற எல்லா அனுபவங்களையும் பொய்யாக்கி விட்டு புதிய திசையை நோக்கி நுணுக்கமான அசைவுகளைக் தேடி நகர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்தச் சூழலில் ஒரு
சமூகம் சமகாலத்தில் மருத்துவத்தை உடல் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது என்பது
மருத்துவத்திற்கு உகந்தது அல்ல. மருத்துவத்தினுடைய
பணியை சீராக பார்க்க வேண்டும்
என்கிற அடிப்படையில் பார்க்கிறபோது மருத்துவம் என்பது உடலில் இருந்து
துவங்குகிறது. ஆனால் ஒரு உடலில்
நிறைவடைவதில்லை. உடலைத் தாண்டி பயணிக்கிறது.
No comments:
Post a Comment