Thursday, September 17, 2020

DESIRE - ஆசை

   ஆசை(DESIRE)

               

desire



         

     ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகில் தான் எவ்வாறு வாழ வேண்டும்? தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? என்ற விருப்பங்களும் கற்பனைகளும் இருக்கின்றன. ஒரு குழந்தையாக மனிதன்  பிறக்கிற போது  அந்த குழந்தைக்கு இப்படியான விருப்பங்களும் கற்பனைகளும் எந்த அளவில் இருக்கின்றன? என்று பார்க்க முடியாது. மேலும் ஒரு குழந்தை எத்தகைய விருப்பத்தோடும் கற்பனைகளோடும் இருந்தாலும் பெரிதாக இந்த சமூக மனிதர்களிடையே, தன்னைவிட வயது முதியவர்களிடையே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு குழந்தையாக இருக்கும்போது கற்பனைகளும்  விருப்பங்களும் இல்லாத மன வடிவம், வளர்ச்சி அடையும் போது உடல்ரீதியான தோற்றம் மாறும்போது மன ரீதியான அனுபவங்கள் மாறும்போது பெரும் ஆசைகளாக மாறிவிடுகின்றன.

ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

            தனக்கு துன்பம் ஏற்படும் என்கிற அளவிற்கு ஒரு மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் அவனுக்குள் இருக்கின்றன, அவனை இயக்குகின்றன. ஒரு துயரத்தை உருவாக்கும் தன்மை கொண்டதாக ஆசைகள் மனிதனுக்குள் உருவாக்கி வைத்திருக்கிற இயக்கம் எது? ஒரு துயரத்தை மனிதனுக்கு நீக்கி கொள்வதற்கான வாய்ப்பை தடைசெய்வது எது? ஒரு துயரத்தில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கிற தூண்டுதலை உந்துதலை மனிதன் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணமாய் இருப்பது எது? அதுதான் மனிதனின் ஆசைகளையும் விருப்பங்களையும் மையமாக வைத்து மனிதனை இயக்குவது.

            மனிதன் இயங்குவதற்கு ஆசைகள் அவசியம் என்கிற நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மனிதன் விருப்பம்போல் இயங்குவதற்கும் விருப்பம்போல் எந்த ஒன்றையும் செய்வதற்கும்  அவன் அனைத்திற்கும் ஆசைப்பட வேண்டும் ஆசைப்படுவது என்பது அவனை மிக உயர்ந்த தளத்திற்கு மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது மாதிரியான வழிகாட்டுதல்களை இந்த சமூகம் வேறு வேறு தன்மைகளில் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பது உங்களை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களது ஆசை சென்று  முடிகிற ஒரே இடம் துன்பம் தான்.

ALSO READ:Will Practice Give Happiness - 2 பயிற்சியால் மகிழ்ச்சி வருமா?

            இதைத்தான் தீர்க்கதரிசனமாக வாழ்க்கையை மனிதனினுடைய மகத்துவத்தை மனிதனினுடைய உயர்ந்த பண்பை புரிந்து கொண்டவர்கள், அறிவாளிகள், ஆசைக்கும் துன்பத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பை எடுத்துக் கூறிச் சென்றிருக்கிறார்கள். உங்களது ஆசை உங்களுக்கு துன்பம் விளைவிக்க கூடியது தான். ஆனாலும் ஆசைப்படுங்கள் என்று  பரிந்துரைக்கப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது. ஆசைப்படுங்கள் என்பதும் ஆசைப்பட்டால் துன்பம் விளையும் என்பதும் பரிந்துரைப் பவர்களுக்கு தெரிந்துதான் இருக்கிறது. மத மறை நூல்கள் ஆசை துன்பத்திற்கு காரணம் என்று பதிவு செய்து வைத்திருக்கின்றன.ஆனால் பூசாரிகள் சிறிது ஆசைப்பட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். வேத நூல்கள் ஆசையை மறுக்கச் சொல்கின்றன. போதகர்கள்  வாழ்வதற்கு ஆசைப்பட்டு கொள்ளலாம் என்று கூறுகின்றார்கள். மறை நூல்கள் ஒன்றாகவும்  மறை நூல்களை பரிந்துரைக்கிற பரப்புரை செய்கிற தனிமனிதர்கள் வேறு ஒன்றாகவும் புரிந்துகொண்டு மனித சமூகத்தின் துன்பத்தை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகின்றது.

            ஆசை துன்பத்திற்கு காரணமாக இருப்பதற்கு அடிப்படை. ஆசை என்பது என்ன? என்கிற பார்வை மனிதர்களுக்குள் இல்லை. ஆசை என்றால் என்ன? என்று ஒரு மனிதனால் தீர்க்கமான முடிவுக்கு வர முடியவில்லை. உங்களுக்குள் நீங்கள் ஆசை என்றால் என்ன? என்று கேட்டுப் பார்த்தால் உங்களிடம் இல்லாத ஒரு பொருளை வேண்டும் என்று கேட்பதை ஆசை என்று பதில் சொல்வீர்கள். ஒரு குழந்தையிடம் ஆசை என்றால் என்ன? எதற்கு நீ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டால் அது ஒரு விளையாட்டு சாமானை சொல்லக் கூடும். ஒரு பெண்மணியிடம் கேட்டால் அவர்கள் தமக்கு நெருக்கடியாக இருக்கிற வாழ்க்கை  முறையையோ அல்லது அலங்காரப் பொருட்களையோ கேட்கக்கூடும். ஒரு ஆணிடம் கேட்டால் தனக்கு நெருக்கடியாக இருக்கிற சூழ்நிலையை சுட்டிக்காட்டி மாற்று சூழ்நிலையை கேட்கக்கூடும். ஒரு ஆசிரியரிடம் கேட்டால் பாடத் திட்டங்கள் குறித்து அவர் ஆசையை வெளிப்படுத்தக் கூடும். மதபோதகர்களிடம் கேட்டால் கடவுளுக்கும் அவருக்கும் மட்டுமே இருக்கிற புரிந்துகொள்ளும் பகுதி குறித்து தனது ஆசையை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடும். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆசை என்பது என்ன? என்பது பற்றியே வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருக்கையில் ஆசை என்பது என்ன? ஏன் ஆசை துன்பத்திற்கு காரணமாக அமைகின்றது? ஒரு பெரும் தீர்க்கதரிசனமான தத்துவச் சொல் -  ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் வலியுறுத்தியது எதை? என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. பார்க்க அவசியமாய் இருக்கிறது.

ALSO READ:HOW TO BE HAPPY(மகிழ்ச்சி)

            வேறு வேறு பொருட்களும் வேறு வேறு புரிதல்களும் வெவ்வேறு நபர் வெவ்வேறு காரணங்களுக்காக ஆசையை வைத்துக்கொண்டு இருந்தாலும்கூட யாவருக்கும் ஆசை துன்பத்தைக் கொடுக்கும் என்று  ஒரு தத்துவச் சொல் எப்படி சொல்ல முடியும் என்று உங்களுக்கு வியப்பாகக் கூட தோன்றலாம். ஏனென்றால் ஆசை என்பதை துன்பத்தின் துவக்கமாக மட்டும்தான் வார்த்தைகளில் சொல்லி வைக்க முடியும். ஒரு ஆழமான சுய ஆய்வு மேற்கொள்ளும் ஒருவரால் மட்டும்தான் ஆசை என்கிற வார்த்தைக்குள் ஒளிந்து கிடக்கிற மன வடிவத்தை துல்லியமாக புரிந்து கொள்ளவோ அதனுள் நகரவோ அதற்கும் அந்த தனிமனிதனுக்குமாய் இருக்கிற தொடர்பைப் புரிந்து கொள்ளவோ முடியும்.

            ஆசை என்ற சொல்லின் பின்னால் உங்கள் மனம் வைத்திருக்கிற பொருளும் புரிந்து கொள்ளுதலும் உங்களுக்கு எது துன்பமாக இருக்கிறதோ அதற்கான துவக்கமாகவே உங்களது ஆசை இருக்கிறது. உங்களுக்கு எது பாரமாக மாற்றிக்கொள்ள முடியுமோ அதை நோக்கி ஆசை கொண்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புத்த பெருமான் கூறுகிறார். முதன்மையாக ஆசை என்பது வேறு வேறு துன்பங்களுக்கான வேறு வேறு நபர்களின் துவக்கப்புள்ளி. ஆசை என்பது தன்மையின் அளவில் துன்பத்திற்கான துவக்கம். ஆக, ஒரே பொருளின் மீது ஒரே செய்கையின் மீது ஒரே தன்மையோடு அனைவரும் ஆசைப்படுவோம் என்றால் ஒரே மாதிரியான துன்பத்தைஅனைவரும் துவங்கி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ALSO READ:SUICIDE(தற்கொலை)

            ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான திசைகளில் ஆசைப்படுகிறோம் என்றால் வெவ்வேறு வகையான திசைகளிலிருந்து துன்பங்களுக்கு நாம் வரவேற்பு செய்கிறோம் என்று புத்தரின் மேற்கோளின் படி நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசை என்பது துன்பத்திற்கு காரணம் என்கிற புத்தரின் செய்திக்குள் இருக்கிற நவீன மனிதனுக்கான கருத்துக்களை நவீன மனிதன் கருத்தில் கொள்ள வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய தன்னுணர்வு செயல்பாடுகளை இந்தத் தொடர் உரையாடல் வழியாக நாம் உரையாடலாம்.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...