Tuesday, June 15, 2021

JOHN HOLT - HOW CHILDREN LEARN - EDUCATION - INTRODUCTION - PART 1


    ஜான் ஹோல்ட் - கல்வி - எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?




ஜான் ஹால்ட் அல்லது ஜான் ஹோல்ட் என்று கல்வியாளர்கள் மத்தியில் குழந்தைகள் நலம் குறித்து உரையாடுகிற யாவருக்கும் மிக நெருக்கமான ஆர்வத்தைத் தூண்டுகிற பெயர். இந்த பெயருக்குப் பின்னால் இருக்கிற மிகவும் மதிக்கத்தக்க ஒரு ஆளுமையின் கருத்துருவாக்கங்களை பரிந்துரைகளைப் பற்றி ஒரு விரிவான உரையாடலை குழந்தைகள் நலத்தின் மீது கல்விக்குள் நடக்கிற பரிசீலனைகள் மீது உரையாடி பார்க்கவேண்டும் என்று எமக்கு தோன்றுகிறது. இந்த உரையாடலுக்கு அடிப்படையாக இருந்த, இப்போதும் இருந்து கொண்டிருக்கிற மதிப்புக்குரிய குட்டி ஆகாயம் வெங்கட் அவர்கள், சிந்துஜா டீச்சர், சம்பத் ஆசிரியர், தாய்த் தமிழ்வழிக் கல்வியை தன் வாழ்வின் கடமையாகக் கொண்டு இருக்கிற திருப்பூர் தங்கராசு ஐயா இன்னும் ஜான் ஹோல்ட் புத்தகத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட நிறைய ஆசிரியர் நண்பர்கள், இந்த கல்வி குறித்த உரையாடலில் ஏதாவது ஒரு வகையில் பங்கெடுக்கக் கூறிய, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்கள் இவர்கள் அத்தனை பேரும் மரியாதைக்குரியவர்கள், நன்றிக்குரியவர்கள்.

ALSO READ:CHILD HEALTH - PART 1 குழந்தை நலம் - பகுதி 1

 ஒரு குழந்தையின் கற்றல் குறித்து அல்லது குழந்தை குறித்து பேச வேண்டுமென்று விருப்பம் கொண்ட ஒவ்வொருவரும் ஜான் ஹோல்டிற்கு மிக நெருக்கமானவர்களாக நான் பார்க்கிறேன். ஜான் ஹோல்டினுடைய புத்தகங்களை, கருத்துக்களை உரையாடுவதற்கு முன்பு இன்றைய கல்வி சூழல் குறித்து குழந்தைகளினுடைய நலம் குறித்து நாம் சில பகுதிகளை புரிந்துகொண்டு ஜான் ஹோல்டின் கருத்துக்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். குழந்தைகள் என்ற உடன் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிற இயல்பான கேள்வி – அந்த குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? என்பது தான் இருக்கிறது. ஒரு குழந்தையைப் பார்த்தவுடன் நான் கேட்கிற முதல் கேள்வியாக சமூகம் முழுவதும் நிறைந்து இருக்கிற கேள்வி – “நீ என்ன படிக்கிற? நீ என்ன ஆகணும்னு நினைக்கிற?” என்று குழந்தைகளைப் பார்த்து கேட்டு பழகி இருக்கிற ஒரு பழக்கத்தை இந்த சமூகம் வைத்திருக்கிறது. நாம் எல்லோரும் கூட அத்தகைய கேள்விகளை சுமந்தவர்களாகவே இருக்கிறோம்.

ALSO READ:CHILD HEALTH - PART -2 குழந்தைகள் நலம் -பகுதி - 2

 நான் பார்த்த வரையில், எல்லா தளங்களிலும் அரசியலில் வேலை செய்கிறவர்கள், அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்கள், கல்விச்சாலையில் வேலை செய்கிறவர்கள், பாரம் சுமந்து உழைக்கிற உழைப்பாளி, எளிய வேலை செய்கிற கட்டுமான தொழிலாளர், ஒரு நூலகக் காப்பாளர், அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறவர், குடும்ப உறுப்பினர்கள், இல்லத்தரசிகள், படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கவர், பெண்கள், யுவதிகள், இளைஞர்கள் இப்படி எல்லா தரப்பினரும் ஒரு குழந்தையை கண்டவுடன் கேட்கிற பெரும்பாலான கேள்வி “நீ என்ன படிக்கிறாய்?” என்பதாகத்தான் இருக்கிறது இதன் வழி சமூகம் எதை உணர்த்துகிறது? அல்லது குழந்தை பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது? என்ற முதன்மையான பகுதி ஜான் ஹோல்டிற்குள் நாம் செல்வதற்கு முன்பு அலசிப் பார்க்க வேண்டியதாக எனக்கு தோன்றுகிறது.

நாம் ஒருவரைப் பார்த்தவுடன், குழந்தைகள் அல்லாத ஒருவரைப் பார்த்தவுடன் “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன சம்பளம்? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று நாம் கேள்விகளை வேறுவேறு தளங்களை கேட்கக் கூடும். ஆனால் குழந்தைகளைப் பார்த்தவுடன் கல்விச் சாலையை ஒட்டி, கல்வி நலனை ஒட்டி ஒரு கேள்வியை எழுப்புகிற ஒரு மனநிலை நமக்கு இருக்கிறது. இந்த மனநிலை எங்கிருந்து துவங்கியது? என்றெல்லாம் நான் விவாதம் செய்வதற்கு விரும்பவில்லை. எதார்த்தமாக இப்படி ஒரு மனநிலையை நான் பார்க்கிறேன். இந்த மனநிலை எனக்கு உணர்த்துவது சமூகம் முழுவதும் குழந்தைகள் என்பவர்கள் படிப்பதற்காக நேர்ந்து விடப்பட்டவர்களாக இந்த சமூகம் கருதுகிறது என்று நான் பார்க்கிறேன்.

கிராமங்களில் ஆடு, மாடு, கோழி இவற்றை சிறுதெய்வ வழிபாட்டுக் கூடங்களுக்கு நேர்த்திக்கடனாக விடுகிற ஒரு வழக்கம் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை அந்த உயிரியை வீடுகளில் வளர்ப்பது, பின்பு அவர்கள் வழிபடுகிற திருவிழா அன்று அந்த உயிரியை, அந்த சிறு தெய்வத்திற்கு வழிபாடு காரணமாக அந்த உயிரை உணவாக மாற்றுகிற ஒரு செயல்முறையை இந்த சமூகம் வழிபாட்டு முறையில் கடைபிடிக்கிறது. அப்படி ஒரு நேர்த்தி கடன் தன்மையோடு குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்குள் நேர்ந்துவிடுகிற தன்மையோடு இந்த சமூகம் பார்க்கிறதோ என்கிற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. ஒரு குழந்தையைப் பார்த்தவுடன் எந்த யோசனையும் இல்லாமல் என்ன படிக்கிறாய்? என்பதற்கான நேரடி பொருள் என்ன? என்று நாம் பேசவேண்டும் என்று கருதுகிறேன். ஒரு குழந்தையை ஏன் அவ்வாறு பார்க்கிறோம்? என்று இன்றுவரை விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வியாகவே அது இருக்கிறது.

ALSO READ:CHILD HEALTH PART - 3 குழந்தைகள் நலம் பகுதி -3

பள்ளிக்கூடங்களுக்கு போகாத குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தை சமூகத்தில் இயலாமையாக இருக்கிற குழந்தையாக பார்க்கிற ஒரு இரக்க குணத்தை நாம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறோம். “பள்ளிக்கூடத்திற்கு போகவில்லையா? ஐயோ பாவம்! படிக்க வேண்டிய வயசுல”. இப்படியான கருத்தாக்கங்களை, உரையாடல்களை நாம் பள்ளிக்கூடத்திற்கு செல்லாத குழந்தைகளிடம் செய்து பார்க்கிறோம். பள்ளிக்கூட பாட நூல்களில் பார்க்கிறபோது இன்று உலக ஆளுமைகளாக இருக்கிற விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் யாவரும் பள்ளிக்கூடத்திற்கு போகாதவர்களாகவே அவர்கள் வரலாறை படிக்க முடிகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பின்னாளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளாக இருந்தனர் என்றும் கூட பள்ளிக்கூட நூல்கள், வரலாற்று நூல்கள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வரலாற்றை தெரிந்து கொண்ட பின்பு, படிக்காத, பள்ளிக்கூடத்திற்கு செல்லாத ஒரு குழந்தையைப் பார்த்தவுடன் கருணையுடன் பார்க்கிற மனநிலையை நான் ஏன் சுமந்து கொண்டிருக்கிறோம்? என்பது குழந்தைகள் மீது நமக்கு இருக்கிற பார்வையை மீண்டும் ஒருமுறை கலைத்துப் போட்டு பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. பள்ளிக்கூடம் மட்டும்தான் குழந்தைகளுக்கான புகலிடமாக இருக்கிறதா? அந்த புகலிடத்தில் மட்டும் தான் குழந்தைகள் அடைக்கலம் பெற வேண்டுமா? என்றெல்லாம் நாம் பேசித் துவங்குகிற போதுதான் குழந்தை குறித்தான பார்வை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏற்படுகிறது என்று நான் நினைக்கிறேன். பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும் என்று  முடிவாக இருக்கிற ஒருவரிடம் இது குறித்து நாம் விவாதிப்பதற்கு அவரிடம் ஒன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன். “பள்ளிக்கூடத்திற்கு போய்தான ஆக வேண்டும்”  என்று உங்களில் யாராவது கூட ஒரு முடிவாக இருப்பீர்கள் என்று சொன்னால் அது உங்களுடைய விருப்பம் அல்லது உங்களுடைய அனுபவம்.

ALSO READ:CHILD HEALTH PART - 4 குழந்தைகள் நலம் பகுதி - 4

ஆனால் குழந்தையை கண்டவுடன் எங்கு படிக்கிறாய்? என்ன படிக்கிறாய்? என்று நான் ஏன் கேட்கிறேன் என்று உங்களுக்கு தோன்றும் என்றால் உங்களுக்கு இந்த உரையாடல் முக்கியமான வேறொரு உதவியை செய்யக்கூடும். ஒரு குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை என்று கேள்விப்பட்டவுடன் ஏன் அந்த குழந்தை பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை? என்று பதட்டம் அடைவதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வீர்கள் என்று சொன்னால் அது உங்களுடைய சிக்கல். அதன் மீது எனக்கு எந்த விமர்சனமும் அல்ல. ஆனால் பள்ளிக்கூடத்திற்கு போகாத குழந்தையை அந்தக் குழந்தை பின்னொரு காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வரக்கூடும் என்று அந்தப் படிப்பின் வழியாக ஒரு குழந்தைக்கும் பள்ளிக்கூடத்திற்கும் அவர் விஞ்ஞானியாக மாறுவதற்கும் தொடர்பில்லை என்று நீங்கள் கேள்வி கேட்டுப் பார்ப்பதற்கு தயாராக இருப்பீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு இந்த உரையாடல் முக்கியமான உதவியை செய்யக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.இந்த பள்ளிக்கூடங்கள், குழந்தைகள், பள்ளிக்கூடத்திற்கும் குழந்தைக்கும் இடையே இருக்கிற தொடர்பு இவற்றின் மீது நாம் இன்று பேசிப் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான மையப்புள்ளி இருக்கிறது.

                                                                                                            தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...