குழந்தைகள் நலம்
குழந்தைகள் நலம் என்பது குழந்தைகளினுடைய சுதந்திரம் குறித்து பேசுகிற நலம். குழந்தைகளினுடைய அக வளர்ச்சி பற்றி பேசுகிற நலம். குழந்தைகளின் படைப்பாற்றல் குறித்து பேசப்படுகிற நலம். இத்தகைய நலம்தான் குழந்தைகளினுடைய நிஜமான நலமாக நான் நம்புகிறேன். நீங்கள் நம்ப வேண்டும் என்று உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். ஆக, இத்தகைய நலம் என்பது இன்று சமூகத்தில் பேசப்பட வேண்டிய பகுதியாக, பேசப்பட வேண்டிய உரையாடலாக இருப்பது நமக்கு ஒருவகையில் பேச முடியும் என்கிற வாய்ப்பு என்று புரிந்து, இத்தகைய நவீன வளர்ச்சியில் குழந்தைகள் குறித்து ஒரு உரையாடல் நடத்துவது என்பது நமது அறிவின் வேகம் எத்தனை குறைவாக குழந்தைகள் பற்றி இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஒரு மனிதன் பிறந்த காலத்திலிருந்து வகைப்படுத்துகிற வரலாற்று ரீதியில் விதவிதமாக வகைப்படுத்தப்படுகிறான். வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய குறிப்புகளை பார்க்கிறபோது மனிதன் மலைகளில் வாழ்ந்ததாக குறிப்புகள் இருக்கின்றன. மனிதன் மரப்பொந்துகளில் வாழ்ந்ததாக குறிப்புகள் இருக்கின்றன. காடுகளில் வாழ்ந்ததாக, மலைகளுக்குள், பாறைகளுக்குள், இடுக்குகளுக்குள் வாழ்ந்ததாக குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய மனித வாழ்க்கை முறையை காட்டுமிராண்டி வாழ்க்கை முறை,அறிவு வளர்ச்சி அடையாத வாழ்க்கை முறையாக இந்த மனித சமூகம் கடந்து வந்திருக்கிறது. இதெல்லாம் எனது கற்பனையில் இருந்து வந்தவை அல்ல. வரலாற்று ஆவணங்கள். காலகாலமாக மனித சமூகம் எவ்வாறு வளர்ந்து இருக்கிறது? என்பதற்கான சான்றுகள். அந்தவகையில் மனித சமூகம் காட்டுமிராண்டி வாழ்க்கை முறையை வாழ்ந்து, புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, நவீன கருவிகளை பயன்படுத்தி, புதிய தொழில்களை உருவாக்கி, ஒரு நாகரிகமான அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையிலிருந்து, ஒரு மென்மையான வாழ்க்கைக்கு நகர்ந்ததாக நம்பிக் கொண்டிருக்கிற வேளையில், குழந்தைகள் மீது நடத்தப்படுகிற வன்முறை குறித்து நாம் பேசுகிறோம் என்பது இந்த உரையாடலினுடைய மையப்புள்ளி.
ALSO READ:CHILD HEALTH - PART 1
காட்டுமிராண்டித்தனமாக இருப்பதற்கு சான்றாக சொல்லப்படுகிற ஒருவரை ஒருவர் மதிக்காத நிலை, ஒருவருக்கு வலிக்கும் என்பது இன்னொருவருக்கு தெரியாத நிலை, ஒருவரால் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் அல்லது ஒன்றை மறுக்க முடியும் என்கிற சுதந்திரம் இல்லாத ஏற்பாடு. இத்தகைய வடிவங்கள் உள்ளடக்கிய நிலைக்குப் பெயர் காட்டுமிராண்டித்தனம் என்று வரலாற்று ஆய்வு பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு காட்டிலேயே இருக்கிற ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு என்ன வேண்டும்? என்பது பற்றி கவலைப்படாத ஒரு வாழ்க்கை முறையை காட்டுமிராண்டி வாழ்க்கை முறையாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தாக்குதல் ஏற்படும் போது, எனக்கு வலிப்பது போல் அவனுக்கும் வலிக்கும் என்கிற புரிதல் இல்லாத தன்மையில் அந்த மனித வாழ்க்கை இருந்திருக்கிறது. இதுவும் காட்டுமிராண்டி வாழ்க்கை முறை என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய இயேசு கிறிஸ்து "உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி" என்று மனித சமூகத்திற்கு ஒரு வாக்கு பரிந்துரைக்கிறார். என்னை நேசிப்பது போல் இன்னொருவரையும் நேசிக்க வேண்டும் என்று அறியாத மனோபாவம் மனிதனுக்கு இருந்திருக்கிறது என்பது இயேசுவின் வார்த்தை வழியாக நாம் பார்க்க முடிகிறது. ஒரு மனிதன் காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பரலோக ராஜ்ஜியத்தை நோக்கி, இறைவனின் ராஜ்ஜியத்தை நோக்கி நகர வேண்டும் என்றால் அவன் மென்மையான ஆளாக மாற வேண்டும் என்பதற்காக இயேசுகிறிஸ்து ஒரு பரிந்துரையை ஒரு மனிதனுக்கு சொல்கிறார். நீ உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி என்று. அப்படி என்றால் ஒரு மனிதன் தன்னை நேசிப்பது போல் பிறரை நேசிப்பதில்லை என்பது தெளிவாகிறது.
ALSO READ:EDUCATION FOR THE CHILD
அத்தகைய காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை முறையில் மனித சமூகம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய ஆய்வுகளிலிருந்து பார்க்கிறபோது இன்று மனித சமூகம் நவீன வாழ்க்கை முறைக்கு நகர்ந்து இருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டு இருக்கிறோம். நமது நம்பிக்கை ஒரு புறம் இருக்கிறது. ஆனால் இந்த மேன்மையான வாழ்க்கை முறை என்பது குழந்தைகள் விஷயத்தில் எவ்வாறு இருக்கிறது? என்பதுதான் இன்றைய கேள்வி. உங்களை நேசிப்பது போல் உங்கள் குழந்தையை நேசிக்கிறீர்களா? ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு கொண்டிருக்கிறீர்கள். காலை 9 மணிக்கு நீங்கள் அலுவலகம் செல்லவேண்டும். ஒரு தாயாகவோ தந்தையாகவோ நீங்கள் இருக்கலாம். 9 மணிக்கு நீங்கள் அலுவலகம் செல்லவேண்டும். 8. 45 க்கு நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பத்து நிமிடத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் உங்கள் அலுவலகத்தை நீங்கள் அடைந்து விட முடியும். ஒரு பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒரு தூரத்தில் பேருந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த பேருந்து உங்களை நெருங்கி வரவர அந்த பேருந்தில் ஏறி பயணிக்க முடியும் என்று முடிவு செய்கிறீர்கள். இப்போது பேருந்துக்குள் பார்க்கிறீர்கள் அதிக கூட்டமாக இருக்கிறது. நாம் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று முடிவு எடுக்கிறீர்கள். மீண்டும் நேரத்தை பார்க்கிறீர்கள். நேரம் உங்கள் அலுவலக நேரத்தை நெருங்கிவிட்டது. மீண்டும் இதே பேருந்திலேயே செல்லலாம் என்கிறீர்கள். மீண்டும் முடிவு மாறுகிறது. மீண்டும் நெருங்கி வந்து உடன் இன்று சொல்லிவிடலாம் என்று மேலாளர் விடுமுறைதான், நாம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறீர்கள். இப்படி ஒரு முப்பது முறை நாற்பது முறை பேருந்து உங்கள் அருகில் வருவதற்குள் அந்த பேருந்தில் ஏறுவது குறித்தும் இறங்குவது குறித்தும் அடுத்த பேருந்தில் செல்வது குறித்தும் நீங்கள் ஒரு முப்பது முறை நாற்பது முறை மாற்றி மாற்றி முடிவெடுத்து இருப்பீர்கள். இது எல்லோருக்கும் நடப்பது. இந்த முடிவெடுக்கும் நிலை, இந்த இருபது முறை முப்பது முறை ஒரு முடிவை மாற்றி மாற்றி எடுக்கிற உங்களால் உங்களை ஏற்றுக் கொள்வது போல இந்த முடிவை உங்கள் குழந்தை பக்கத்திலிருந்து மாற்றி மாற்றி சொல்கிறது என்றால் இரண்டாவது முறை மூன்றாவது முறை நீங்கள் உங்கள் குழந்தையை அடித்து விடுவீர்கள். இந்தக் காட்சியில் அதே பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் நின்று கொண்டிருக்கிற போது ஒரு நேரத்திற்கு ஒரு திருமண வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து இருக்கிற போது உங்கள் அருகில் உங்கள் குழந்தை நான்கு வயது, ஐந்து வயது மதிக்கத்தக்க உங்கள் குழந்தை நின்றுகொண்டிருக்கிறது. இந்த பேருந்தில் செல்லலாம் என்று அந்த குழந்தை முதலில் சொல்கிறது. பின்பு வேண்டாம் என்கிறது. பின்பு செல்லலாம் என்கிறது. பின்பு வேண்டாம் என்கிறது. பேருந்து உங்கள் பக்கத்தில் வருவதற்குள் ஒரு பதினைந்து முறை சொல்லும் என்றால் நீங்கள் மூன்றாவது முறை, நான்காவது முறைக்குள் நீங்கள் எரிச்சல் ஆகி விடுகிறீர்கள். இந்த எரிச்சல் வருகிறது என்றால் நீங்கள் சராசரியான சமூக மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது பெரும்பாலான பெற்றோர்களுக்கு. இன்னும் சொல்லப்போனால் எல்லா பெற்றோர்களுக்கும் இந்த எரிச்சல் வருகிறது. ஆனால் இதே முடிவு 30 முறை உங்களுக்குள் நிகழ்ந்திருக்கிற போது நீங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்கிற நிஜத்தில் இருந்து குழந்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது என்கிற தளத்தில் இருந்து பேச வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த உரையாடலின் உடைய மையப்புள்ளி.
ALSO READ:குழந்தையின் மொழி
ஒரு குழந்தையை, உங்கள் அருகில் நிற்கிற ஒரு குழந்தை 30 முறை அல்ல 300 முறை மாற்றி மாற்றி சொன்னாலும் கூட அந்தக் குழந்தையை பார்க்கவோ ஏற்றுக்கொள்ளவோ எப்போதும் போல பேசிக் கொள்ளவோ பார்த்துக் கொள்ளவோ முடியும் என்றால் நீங்கள் குழந்தையை நன்றாக புரிந்து கொள்ளும் தன்மையோடு இருக்கிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். நான் சொல்வது அத்தகைய மதிப்பு மிக்கதாக எனக்கு தெரியவில்லை என்றாலும் கூட ஒரு அடிப்படையாக ஒரு குழந்தையை ஏற்றுக் கொள்வதற்கான தார்மீக எல்லை இங்கிருந்து தான் துவங்குகிறது. ஒரு குழந்தையினுடைய முடிவு தனது அனுபவத்தில் மாறிக் கொண்டே இருக்கிறது என்று அந்த குழந்தை நிதானிக்கவரை நம் முடிவை மாற்றி மாற்றி எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த குழந்தை முடிவு செய்கிற வரை அந்த குழந்தைக்கு காப்பாளராக இருக்கிற ஒருவர் அந்த குழந்தையை அப்படியே வாரிக் கொள்கிற இலகுத் தன்மை உடையவராக இருக்க வேண்டும் என்பதுதான் குழந்தை மீது குழந்தையினுடைய நலம் மீது நாம் வைத்திருக்கும் அக்கறை. இப்படியான அக்கறைதான் குழந்தைகளினுடைய
நலம் வலுவாக வளமாக மாறுவதற்கு உதவி செய்யும். தாகூர் தனது கவிதை குறிப்பில் சொல்லியதாக
ஒரு செய்தி நா ன்சமீபத்தில் ஒரு இலக்கிய பத்திரிகை ஒன்றில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஒரு குழந்தை தன் தாயிடம் கேட்கிறது, அந்த குழந்தை, "அம்மா, என் உணவை, என் தட்டில்
இருக்கிற போது எனக்கு பதிலாக ஒரு நாய்க்குட்டி சாப்பிடும் என்றால் அந்த நாய்க்குட்டியை
நீ என்னை பராமரிப்பது போல உன்னால் பராமரிக்க முடியுமா? ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றால்
நீ கொடுக்கிற உணவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்" என்று ஒரு குழந்தை பேசுவது
போல இரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதை ஒன்றில் படத்திருக்கிறார். இந்த கவிதையை இரவிந்திரநாத்
தாகூரினுடைய படைப்பு பற்றி தமிழில் புகழ்பெற்ற நாடக நடிகரும் திரைப்பட நடிகருமான என்.
எஸ். கிருஷ்ணன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியினுடைய தன்மை
குறித்து. இது படைப்பாளியின் தன்மை குறித்து இரவீந்திரநாத் தாகூரை நாம் உதாரணம் எடுத்துக்
கொள்வதை விடவும் இரவீந்திரநாத் தாகூர் ஒரு குழந்தையின் மனநிலையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. தன் தாயிடம் ஒரு குழந்தை தான் உண்ணுகிற
உணவை ஒரு நாய்க்குட்டி அப்படியே வாய் வைத்து உண்ண அனுமதிக்க முடியுமா? என்கிற குழந்தையின்
பார்வை மிக முக்கியமானது. குழந்தைகள் எல்லாவற்றையும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment