Saturday, December 12, 2020

CHILD HEALTH - PART 1 குழந்தை நலம் - பகுதி 1

 

                           குழந்தை நலம் 

www.swasthammadurai.com


     மருத்துவத்திற்கு இணையாக அல்லது மருத்துவத்திற்கு அடுத்தபடியாக உரையாட வேண்டிய, உரையாடப்படக்கூடிய பகுதியாக குழந்தைகள் நலம் இருக்கிறது. குழந்தைகள் நலம் என்றவுடன் பொதுவாகவே ஒரு குழந்தை என்ன சாப்பிட வேண்டும். எப்படி சாப்பிட வேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற அளவில்தான்  குழந்தைகளின் நலம் உரையாடப் படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பேச வேண்டும் என்றவுடன் அவர்கள் உடல் அளவில் நலம் உடையவர்களாக, பலம் உடையவர்களாக இருப்பதற்கு என்ன செய்வது என்கிற அளவில் குழந்தைகள் நலம் சமூகத்தில் உலவிக் கொண்டு இருக்கிறது. அந்த தன்மையில் குழந்தைகள் நலத்தை  நான் சுருக்கிப் பார்க்க விரும்பவில்லை. நலம் என்ற வார்த்தை உடல் நலத்தை மட்டும் குறிக்கிற சொல்லாக பயன்படுத்தப்படுவதல்ல. நலம் என்ற சொல் ஒரு பொதுச் சொல். ஒரு முழுமையான நலம் குறித்து பொருள் கொண்டிருக்கிற விரிவான பொருள் கொண்ட சொல் அது. குழந்தைகளின் நலம்  என்பது அவர்களின் உணவு, உறக்கம் எங்கிற தன்மையில் இருக்கிற நலமாக நாம் பார்க்கக் கூடாது என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

ALSO READ:ID, EGO, SUPER - EGO (இட், ஈகோ, சூப்பர் - ஈகோ)


            மேலும் குழந்தைகளின் நலம் என்பது உடல் சார்ந்த நலம் அல்லாமல் அதிகபட்ச எல்லையாக அவர்களின் கல்வி நலம் குறித்த தேடலாக இருக்கிறது. ஒரு குழந்தை எவ்வளவு படிக்க வேண்டும், எவ்வாறு படிக்க வேண்டும்என்பதில் தொடங்கி என்ன படிக்க வேண்டும் என்று அதன் எல்லை, குழந்தைகளுடைய அக்கறை, குழந்தைகளின் மீது இருக்கிற அக்கறை, குழந்தைகள் பற்றிய சிந்தனை என்பது அவர்களுக்கு என்ன கல்வி புகட்ட வேண்டும் என்ன கல்வி வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற தளத்திலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. மருத்துவம் என்பது எத்தகைய விரிவான உரையாடலாக செய்யப்பட வேண்டுமோ செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே அளவிற்கு குழந்தைகள் நலமும் விரிவான உரையாடலை கொண்ட பகுதியாக இருக்கிறது. குழந்தை பற்றி பேசவேண்டும் என்றவுடன் எல்லோருக்கும் ஒரு உற்சாகம் வருவதை பார்க்க முடிகிறது. அது குழந்தைகள் நம்மை விட இளையவர்கள் என்றும் அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என்கிற  பெருமிதத்தின் காரணமாக வருகிற உற்சாகமா அல்லது குழந்தைகளை எவ்வாறு வேண்டுமென்றாலும் நாம் வளர்க்க முடியும், திசைதிருப்ப முடியும் என்பதில் இருந்து பிறக்கிற உற்சாகமா என்பது ஒரு விவாதம். ஆனாலும் குழந்தைகள் எப்போதும் உற்சாகத்தை உண்டாக்கும் தன்மை உடையவர்களாகவே இருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது. இந்த உற்சாகத்திற்கு காரணமாய் இருப்பது வெறுமனே உடல் நலமா அல்லது வெகுளித்தனமானமா அந்த உற்சாகத்திற்கு காரணமாக இருப்பது அவர்களது மன ஆரோக்கியமா எதைப் பற்றியும் துல்லியமாக சிந்திக்கிற சிந்தனைத் திறனா அல்லது எதைப்பற்றியும் பெரிதுபடுத்திக் கொள்ளாத இலகுவான  மன ஓட்டமா என்று பார்க்கிறபோது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொருள்தான் நலம். குழந்தைகளின் உடல் ,மனம், வெகுளித்தனம், அவர்களது உற்சாகம் இவ்வாறு இருக்கிற எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பொருள் தான் ஆரோக்கியத்தை குறிக்கும் சொல் தான் குழந்தைகளின் நலம்.

ALSO READ:குழந்தை(CHILD)

            இத்தகைய நலம் கொண்ட குழந்தைகள் பற்றி நாம் பேசுவதற்கு ,உரையாடுவதற்கு ஒரு அவசியம் இருப்பதாக நான் பார்க்கிறேன்.  குழந்தைகள்  செயற்பாட்டாளராக இருக்கிற நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கிற வாய்ப்பு அமைந்தது. சமீபத்தில் நடந்த குழந்தைகள் மீதான அக்கறைகளும் வன்முறைகளும் பற்றி நிறைய பேசிக் கொள்ள நேர்ந்தது. தொடர்ந்து அவ்வாறு பேசுகிறபோது குழந்தைகளின் நலம் எப்படிப்பட்டதாக இருக்கிறது, குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று அவர் ஒரு கருத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். ஒரு மனிதன் தன்னளவில் தன்னை பார்க்கிற சுய பரிசீலனையும் தன்னைப் பார்க்க நேர்மையும் சமூகத்தோடு, பிறரோடு உறவாடுவதற்கு தேவைப்படும் அனுபவங்களும் அந்த அனுபவத்தில் இருந்து தன்னை வளர்த்துக் கொள்கிற நேர்மையும் கூர்மையும் யாருக்கு இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் குழந்தைகள் நலம் பற்றி ஏதாவது செய்ய முடியும் என்று தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். இது அவர் கண்டுபிடித்த அல்லது அவர் உணர்ந்து கொண்ட செய்தியாக என்னால் கடந்து போக முடியவில்லை. யார் ஒருவர் தன்னை கண்டுபிடிப்பதற்கு நேர்மையான தைரியத்தோடு இருக்கிறாரோ அவர்தான் குழந்தைகளோடு ஏதாவது செய்ய முடியும் என்று கருதுகிற மனோபாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மனோபாவத்தை அவர் வெளிப்படுத்தியது எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்

            குழந்தைகளோடு பேச வேண்டும் என்றவுடன் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களை அழுத்தி வைப்பதும் அல்லது குழந்தைகள் பூபோல,மீன் போல, வண்ணத்துப்பூச்சி போல என்று அவர்களை உதாசீனப்படுத்துவதும் நடந்து கொண்டே இருக்கிற சூழலில் எவர் ஒருவர் தன்னை பார்க்கிற தைரியத்தோடு இருக்கிறாரோ அவர் மட்டும்தான் குழந்தைகளுக்காக ஏதாவது செய்துவிட முடியும் என்று சுட்டிக் காட்டுகிற உணர்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். அவரது கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். குழந்தைகளை தத்துவம் சார்ந்து பார்க்க முடியுமா என்றால் குழந்தைகள் தத்துவம் சார்ந்துதான் இயங்குகிறார்கள் என்று நாம் பார்க்க முடியும். குழந்தைகளுக்கு தத்துவம் என்பதெல்லாம் தெரியாது என்றாலும் கூட குழந்தைகள் அவர்களுக்குரிய ஒரு புரிதல் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடியும். இதனால் குழந்தைகள் நலம் என்பது எப்படியானதாக இருக்கிறது என்பதை முதன்மையானதாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

            குழந்தைகள் நலம் என்பது வெறுமனே உடல் சார்ந்த நலமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது போதுமான பார்வை அல்ல. இன்னும் சீரிய தன்மையோடு உங்களது பார்வையை விரிவுபடுத்த வேண்டும். குழந்தைகள் நலம் என்பதை நீங்கள் வெறுமனே அவர்களது உடல் சார்ந்த நலமாக பார்க்கக்கூடாது என்று நான் உங்களுக்கு அழுத்தமாக பரிந்துரைக்கிறேன். குழந்தைகள் நலம் என்பது  அவர்கள் உடல் கடந்து சற்று ஆழமாக பார்க்கக்கூடிய அணுகக்கூடிய ஒரு நீரோட்டமாக இருக்கிறது. அதற்கு மிக முக்கியமாக இருப்பது நீங்கள் எவ்வாறு உங்களைப் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறீர்களோ நீங்கள் எவ்வாறு உங்களை புரிந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறார்களோ அதிலிருந்து குழந்தைகளினுடைய உணர்வை, உள்ளத்தை அவர்களுக்கான நலம் சார்ந்த பகுதிகளை நீங்கள் தொட்டுப் பார்க்க முடியும். அதோடு உறவாடி பார்க்கமுடியும் என்று ஒரு உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குழந்தைகள் நலம் என்பது உங்களைப் பற்றி உங்களது நலம் பற்றி உங்களுக்கு என்ன தெரிந்து இருக்கிறதோ அதில் இருந்து துவங்க கூடிய  எளிய வாய்ப்புள்ள பகுதி. இன்னும் நிறைய பகுதிகளில் நாம் பேச முடியும்.

ALSO READ:குழந்தையின் மொழி

            குழந்தைகளின் நலம் குறித்து பேசுகிற போது குழந்தைகளுக்கு என்ன தேவைப்படுகிறது என்று நாம் பேசுகிறபோது வேறு வேறு தளங்களில் குழந்தைகளின்  மனம் குறித்து, உளவியல் அணுகுமுறை குறித்து நாம் பேச முடியும். ஆனால் குழந்தைகளினுடைய ஒட்டுமொத்த நலம் என்பது அந்த நலத்தை நாடுகிற  குழந்தைகள் நலன் மீது அக்கறை படுகிற  ஒருவரின் தன்னுணர்வு சார்ந்த தீர்மானத்தில் தன்னுணர்வு சார்ந்த உணர்வு நிலையில் தொடங்குகிற மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் யார் ஒருவருக்கு அவரைப் பற்றி தெரிய வாய்ப்பு இருக்கிறதோ அவருக்கு மட்டும் தான் குழந்தைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் குழந்தைகள் நலம் என்பது தன்னைப் பார்ப்பவரின் நலம் சார்ந்தும் பயணிக்கிற ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளின் நலத்தை வெறுமனே அவருக்கு பால்  பிடிக்குமா, தேநீர்  பிடிக்குமா கோடுபோட்ட நோட்டு பிடிக்குமா, கோடு போடாத ஏடுகள் பிடிக்குமா என்கிற அளவிலேயே குழந்தைகளின் கல்வி நலத்தையும் உடல் நலத்தையும் புரிந்து கொள்கிற பெற்றோராக அக்கறையாளராக நாம் இருந்துவிட்டு போய்விடுவோம். அல்லது குழந்தைகள் நலம் பற்றி பேசுகிற, விசாரிக்கிற ஏதாவது ஒரு அரசியல் சாயம் கொண்ட நபராக நாம் கடந்து சென்றுவிடுவோம்.

            ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் என்ன நடக்கிறது என்பது ஒரு பிரபஞ்ச ரகசியம் போல் விரிந்து கிடக்கிறது என்று வர்ணித்து பேசுகிற பேச்சாளர்கள் போல் நாம் மயங்கி கிடப்போம். இந்தப் பேச்சுக்களுக்கு இடையில், இந்த வர்ணனைகளுக்கு இடையில், இந்த ஆலோசனைகளுக்கு இடையில் நிஜமான குழந்தைகளின் நலம் பற்றிய உரையாடலை நாம் தேடித்தான் காண வேண்டியிருக்கிறது. குழந்தைகள் நலம் என்பது சற்று மெனக்கெட்டு பெறப்பட வேண்டிய பகுதியாக இருக்கிறது. நீங்கள் மெனக்கெடல் வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம் நீங்கள் அடர்த்தியாக சமூக பொது  மனநிலையில் இருப்பீர்கள் என்றால் மெனக்கெட வேண்டும்.  நீங்கள் குழந்தைகள் மன நிலையில்  இருப்பீர்கள் என்றால் நீங்கள் மெனெக்கடுவதற்கு ஒன்றுமில்லை. வெறுமனே குழந்தைகளோடு பயணிக்க முடியும் என்பதுதான் அதில் இருக்கிற செய்தி. ஆக, குழந்தைகள் நலம் பற்றி பேச வேண்டும் என்றால் முதலில் நீங்கள் குழந்தைகளினுடைய உடல் ஆரோக்கியம் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள் என்றால் உங்களுக்கு ஆலோசனை சொல்லும் உரையாடலாக இது இருக்காது.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

            ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது ஒரு குழந்தைக்கு பல் வலிக்கிறது என்ன செய்வது என்று நாம் இந்த உரையாடலினுடைய  வேகத்தை வேறு திசையில் திருப்புவதற்கு விரும்பவில்லை. ஒரு குழந்தையினுடைய சுதந்திரம் குறித்தும் ஒரு குழந்தையினுடைய படைப்பாற்றல் குறித்தும் ஒரு குழந்தையினுடைய கற்றல் மேம்பாடு குறித்தும் ஒரு குழந்தை இந்த சமூகத்தோடு உறவாட வேண்டும், உரையாட வேண்டும் என்கிற மன நிலை குறித்தும் விருப்பம் கொள்கிற பெற்றோர்களுக்காக, விருப்பம் கொள்கிற குழந்தை நலம் கொண்டவர்களுக்காக நாம் உரையாடிப் பார்க்க வேண்டும் என்று இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இது ஒரு மருத்துவ உரையாடலாக மட்டும் பயணிக்க எனக்கு விருப்பமில்லை. மருத்துவ உரையாடல் என்பது மருத்துவம் பற்றி நாம் பேசுகிறபோது மருத்துவ உரையாடல் என்பது குழந்தைகள் விஷயத்தில் பெரும்பாலும் சமூக மனநிலையிலேயே மருத்துவம் நிறைவேற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு அறியாத வயதில் எப்படி மொட்டை போட்டு காது குத்தப்படுகிறதோ அதே போல் அவர்களுக்கு தடுப்பூசிகளும் சொட்டு மருந்துகளும் தரப்படுகின்றன. அந்தக் குழந்தை எட்டு வயது, ஒன்பது வயது ஆகும்போது காதிலே துளை  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடையலாம். அதே அதிர்ச்சி அந்த குழந்தைக்கு தடுப்பூசி போட்ட உணர்வின் காரணமாக விளைவின் காரணமாக ஏற்பட்டால் எதுவுமே செய்ய முடியாது. அப்படித்தான் குழந்தைகளினுடைய நலம் குறித்து இந்த சமூகம் புரிந்து வைத்திருக்கிறது. குறிப்பாக உடல் நலம் குறித்து. அந்த குழந்தையினுடைய எந்த அனுமதியும் இல்லாமல் அந்த குழந்தையின் காதிலே நீங்கள் ஓட்டு போட முடியும். அந்த குழந்தையின் எந்த அனுமதியும் இல்லாமல் குழந்தையினுடைய அழகான முடிகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும். அந்த குழந்தையினுடைய எந்த அனுமதியும் இல்லாமல் அந்த குழந்தைக்கு நீங்கள் தடுப்பூசி போட முடியும். இதற்கு உங்கள் பக்தியோ உங்களது அறிவோ உங்களது சமூக நியாயங்களோ கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையினுடைய தீர்மானிக்கும் தளத்தில் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பது நிஜம். இது குழந்தைக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற வன்முறையாக நான் பார்க்கிறேன். இந்த வன்முறை நிகழ்த்துகிற ஒருவரால்  ஒரு குழந்தையினுடைய நலம் குறித்து வேறு எதுவும் செய்துவிட முடியாது என்று நான் அழுத்தமாக நம்புகிறேன்.

            குழந்தையின் நலம் என்பது அப்படிப்பட்டதாகவே இருக்கிறது. குழந்தையின் நலன் பற்றி அக்கறைப்படாதவர்கள் குழந்தைகளுக்கு காதுகளில் துளையிடுவதிம்  கைகளில் கால்களில் விருப்பமான ஆபரணங்களை மாட்டிக் கொள்வதும் அவர்களின் விருப்பம் போல்  குழந்தைகளின் முடியை மாற்றி அமைத்துக் கொள்வதும் அல்லது  முடி முழுவதையும் நீக்கிவிடுவதும் கூட நடக்கிறது. இதுகுறித்து குழந்தைகள் அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நானும் பார்த்திருக்கிறேன். இத்தகைய மனநிலையில் இருக்கிற ஒருவரால் குழந்தைகளின் நலம் பற்றி ஏதாவது பேசிவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. குழந்தை நலம் இதைச் சார்ந்தது அல்ல. எந்த தடுப்பூசி எந்த வயதில் போடுவது? எந்த சாமிக்கு எப்போது மொட்டை போடுவது? என்று காது குத்தலாம்? எந்த ஆபரணங்களை கைகளில் கால்களில் மாற்றலாம்? எந்த ஆடை எந்த வயதிற்கு உகந்தது? என்கிற உரையாடல் இந்த உரையாடலுக்குள் பொருந்தாத ஒன்று. குழந்தைகள் நலம் என்பது சற்று விரிவாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டிய உரையாடல் என்கிற தன்மையோடு நாம் பேச வேண்டும் என நான்  விரும்புகிறேன்.

                                                                                                            தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...