Friday, December 11, 2020

ID, EGO, SUPER - EGO (இட், ஈகோ, சூப்பர் - ஈகோ)

மனித இயல்புகளில் வளர்ச்சிக்கு மிக குறிப்பான தடையாக இருப்பது என்ன?

www.swasthammadurai.com


     மனித இயல்புகளில் இருக்கிற எதிர்மறையான செயல்பாடுகளாக கோபம், நிதானமின்மை, பய உணர்வு இவற்றையெல்லாம் குறிப்பிடுகின்றனர். இந்த வரிசையில் மிக முக்கியமானதாக ஒவ்வொரு பொருளை பேசுகிற போதும் அவை முக்கியமானதாக முன்வைக்கப்படுகிறது. மனித இயல்புகளாக இருக்கிற நிஜமான வடிவம் என்ன? என்பது பற்றி நமக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் மட்டும் தான் கோபம், பயம், நிதானமின்மை இவற்றிற்கும் இயல்பிற்குமாக இருக்கிற தொடர்பை நம்மால் பிரித்துப் பார்க்க முடியும். சமூகமாக வாழ்கிற மனிதர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? மனிதர்கள் என்பது சமூகமாக வாழ்வதைத் தாண்டி வேறு தளங்களில் பயணிக்க முடியுமா? என்கிற விசாரணையில் இருந்து நாம் இயல்பு குறித்து ஒரு முடிவிற்கு வர முடியும். மனித இயல்புகளுக்குள் கட்டமைக்கப்பட்டு வைத்திருக்கிற ஒவ்வொரு உணர்வும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சமூகத்தினுடைய கருத்துச் சாய்வாக, கருத்துச் சாயலாக மனிதனுக்குள் இருக்கிற ஒவ்வொரு உணர்வும் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

            "உளவியலின் தந்தை" என்று போற்றப்படுகிற சிக்மன் பிராய்ட் மனித உளவியல் பற்றி சில கருத்துக்களை முன் வைக்கிறார். சிக்மண்ட் பிராய்டின் கோட்பாடுகள் நவீன உளவியலில் மிக மதிப்புமிக்கவையாக நான் பார்க்கிறேன். சிக்மண்ட் பிராய்டினுடைய உளவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் மிகப்பொருத்தமான தன்மையிலேயே இந்த சமூக வரையறைகளை புரிந்து வைத்திருக்கிறது. அவை குறித்து விளக்கம் அளிக்கிறது. மனித இயல்பு குறித்து சிக்மெண்ட் ப்ராய்டு மனித உணர்வை உள அமைப்பை மூன்றாகப் பிரிக்கிறார்.  இட்(ID), ஈகோ(EGO), சூப்பர் ஈகோ(SUPER EGO) என்று மூன்று பெயர்களை அதற்கு சுட்டுகிறார். ஒரு மனிதனினுடைய சூப்பர் ஈகோ சமூகம் வழங்கியது. சூப்பர் ஈகோ தான் மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று ப்ராய்ட் தன் கருதுகோளில் முன்வைக்கிறார். இது பொருத்தமானதும் கூட. இந்த சூப்பர் ஈகோ ஒரு மனிதனுக்கு மேற்சொன்ன எல்லா குழப்பங்களையும் நிதானமின்மையையும் கோபங்களையும் பயங்களையும் விதைத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஆழமாக ஈகோ என்பது அவருடைய தன் முனைப்பாகவும் இட் என்று வழங்கப்படுகிற கருப்பொருள் அவருடைய உந்துதலாகவும் ஆசையாகவும் இருப்பதாக சிக்மன் பிராய்ட் வரையறுத்து வைத்திருக்கிறார். இந்த மூன்று அம்சங்களில் மனித உளவியல் என்பது பயணிக்கிறது. இந்த மூன்று தளங்களில் இந்தப் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)

            அடிப்படையாய் இருக்கிற ஆசையும் உந்துதலும் அதைத் தொடர்ந்து அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற தன்முனைப்பு சார்ந்த பகுதியும் அதை கட்டுப்படுத்துகிற ஈகோ, ஈகோவின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிற சூப்பர் ஈகோ இவற்றிற்கு இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள்தான் நிதானமின்மைகளையும் பய உணர்வுகளையும் மனிதனுக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது. இவற்றை கவனிக்கிற ஒரு முயற்சியை கடந்து போவதற்கு கருவியாக பயன்படுத்த முடியும் என்று மேற்கத்திய உளவியல் கடந்த வேறு வகையான பயிற்சி முறைகளும் தத்துவங்களும் முன்வைக்கின்றன. மிக குறிப்பாக கிழக்குத் தத்துவ மரபில் தாவோ என்ற ஒரு தத்துவ மரபு இருக்கிறது. தாவோவின் மரபின் அடிப்படையில் மனிதனினுடைய ஒவ்வொரு சுகமும் துக்கமும் கூட சூப்பர் ஈகோ வழங்குகிற, தன்முனைப்பு வழங்குகிற, உந்துதல் வழங்குகிற ஒரு மாயை என்று வரையறுக்கிறது. ஒரு மனிதன் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று சமூகம் வலியுறுத்துகிற போது எந்த ஒன்றையும் தேர்வு செய்யாத நடுநிலையோடு இருக்கிற நிதானத்தை தாவோ முன்வைக்கிறது.

ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட

            ஒரு மனிதனுக்குள் இருக்கிற எல்லா முரண்பாடுகளும் சமூகம் கொடுத்தவை. இன்னும் சொல்லப்போனால் அதிக முரண்பாடுகளுடைய கலவையான நிலைப்பாடுதான் மனிதன். மனிதனின் மனம் என்பது விதவிதமான ஏற்ற இறக்கங்கள் கொண்ட மன வேகமும் உளவியல் சிக்கலும் கலந்து நிற்கிற ஒரு மனோபாவம். ஒரு கலவையான மன உணர்வு. இந்த கலவையான மன உணர்வு தான் ஒரு மனிதனை மனிதனாக நிறுத்துகிறது. முன்வைக்கிறது. இந்த கலவையான மன உணர்வை கண்காணிக்கிற ஒரு நபர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நினைவாற்றல் கடந்து இருப்பதை தாவோ குறிப்பிடுகிறது. இந்த தாவோவின் அடிப்படையில், தாவோ சொல்கிற தத்துவங்களின் அடிப்படையில் மனிதனைப் பார்த்தால் போதுமானதா? என்று உங்களுக்கு தோன்றலாம். இயற்கையாகவே மனிதன் எவ்வாறு பிறந்திருக்கிறார்? வரலாற்று  ரீதியில் ஆதி சமூகத்தில் மனிதனுடைய இருப்பு எவ்வாறு இருந்திருக்கிறது? அது எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது? என்கிற வரலாற்றுப் பின்னணியோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது மனிதன் தனக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய சமூக முரண்பாடும் உளவியல் முரண்பாடுமாக வளர்ந்து நிற்கிற சிக்கலின் வடிவமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வளர்ந்து நிற்கிற சிக்கலுக்கு மாற்றாக மனிதன் அமைதியை தேடி நகர்கிறபோது தாவோ முன்வைக்கிற நடுநிலையோடு இருக்கிற, விழிப்புணர்வோடு இருக்கிற, ஒரு உளவியல் பாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றுகிறது.

ALSO READ:FEAR -பயம்

            இந்தவகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற இந்த சிக்கல்களை கடந்து போவதற்கு தாவோ போன்ற வேறொரு விழிப்புணர்வு சார்ந்த தத்துவம் பயன்படக்கூடும். இந்தச் சிக்கல்களை கடந்து போக முடியும் என்பதற்காக தாவோவினுடைய ஒப்பீடை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த சிக்கல்களை கடந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற பயத்தையும் குற்ற உணர்வையும் நிதானமின்மைகளையும் கடந்து போவதற்கான வாய்ப்பு மனிதனுக்குள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எந்த ஒரு மனிதனும் நிதானத்தை விரும்புகிற மனிதனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், பயமற்ற மனிதனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால்,பிறருக்கு பயனுள்ள மனிதனாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால்  அவன் தேர்வு செய்யவேண்டிய  முதன்மையான மற்றும் ஒரே வழி அவன் தனக்குள் பயணித்து தன்னைக் கண்டு பிடித்துக் கொள்கிற ஒரு வழியை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. அந்தத் தேர்வு அவர் எல்லாவிதமான சமூகச் சிக்கல்களையும் பிராய்டு முன்வைத்த எல்லாவிதமான சூப்பர் ஈகோ குறைபாடுகளையும் தீர்த்துக் கொண்டு ஒரு முழுமையான வெற்றியாளராக தன்னை மிளிரச் செய்ய முடியும் என்பது நம்முன் இருக்கிற உண்மை.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...