பயம்
பயம் எதனால் ஏற்படுகிறது? ஏன் ஒருவர் பயப்படுகிறார்?
ஒருவருக்கு மனதில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? நாம் பார்க்கிற யாராவது
ஒருவரை எப்போதும் பயம் இல்லாதவராக பார்க்கிறோம். அது எவ்வாறு அவருக்கு சாத்தியமாக இருக்கிறது?
இப்படி நிறைய கேள்விகள் நமக்குள் வந்து செல்கிறது. பயம் குறித்த கேள்விகளாக இவை இருக்கின்றன.
பொதுவாக ஒருவருக்கு எப்போது பயம் ஏற்படுவதில்லை? என்று பார்த்தோம் என்றால், ஒரு வேலையை
செய்வதற்கு முன்பு அந்த வேலை குறித்து நமக்கு போதுமான அறிவு இருக்கும் என்றால் நமக்கு
பயம் ஏற்படுவதில்லை. ஒரு செயல்பாடு செய்வதற்கு முன்பு அந்த செயல்பாடு குறித்த அனுபவம்
நமக்கு இருக்கும் என்றால் அதன் மீதான பயம் நமக்கு ஏற்படுவதில்லை. எந்தத் துறையில் பணியாற்றுகிற
நபர்களுக்கும் இது பொருந்தும். மருத்துவத்தில் இருக்கிறோம், பொறியாளராக இருக்கிறோம்,
தொழில்நுட்ப வல்லுனராக இருக்கிறோம் இப்படி வேறு வேறு துறையில் பணியாளராக இருக்கிறபோது
அந்த பணி நிமித்தமாக நாம் பயணிக்கும் போது ஒரு புதிய செயல்பாடை செய்கிற போது நமக்கு
பயம் ஏற்படுவதில்லை. நமக்கு தெரியாத பகுதிகளில் மீது நாம் பயம் கொண்டவராக நாம் இருக்கிறோம்.
நமக்கு எல்லாமும் தெரிந்திருக்க வேலையில் பயம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
பயம் குறித்த கேள்விகளும் பயம் குறித்த குழப்பங்களும்
நமக்குள் இருக்கிற வரை, பயப்படுவது நமது இயல்பாக இருக்கிறவரை பயம் இல்லாத எந்த ஒரு
உரையாடலையும் நாம் செய்து பார்க்க முடியாது. பயத்தைப் பற்றி தேடுகிற ஒவ்வொருவருக்கும்
பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்று பார்க்கிற ஒவ்வொருவருக்கும் பயம் குறித்தான தன்முனைப்பு
உரையாடல்களும் செய்திகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பயத்திலிருந்து விடுபட
வேண்டும் என்று தேடுவீர்கள் என்றால் ஒரு இருபது கட்டளைகளை உங்களுக்கு பரிந்துரைத்து
அந்த இருபது கட்டளைகள் குறித்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று உங்களுக்கு வழிகாட்டினால்
நீங்கள் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று ஒரு காட்சியை நீங்கள் காண வாய்ப்பிருக்கிறது.
பயத்திலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான பயிற்சியை மேற்கொண்டால்
பயத்திலிருந்து விடுபட முடியும் என்று உங்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு பயிற்சிக்
கூடங்கள் காத்திருக்கின்றன. உண்மையிலேயே உங்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் வழியாக பயத்திலிருந்து
விடுபட முடியும் என்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் பயத்தை வைத்திருக்கிற ஒருவர்,
பயத்தோடு வாழ்கிற ஒருவர், பயத்திலேயே தன் வாழ்நாளை கழித்து கொண்டிருக்கிற ஒருவர் பயத்திலிருந்து
விடுபடுவதற்கு சாத்தியம் இல்லை என்னும் அளவிற்கு சிக்கல் இருக்கிறது.
ALSO READ:DESIRE - ஆசை
எல்லோருக்கும் பயம் குறித்து இத்தகைய மன வடிவம்
இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
பயம் என்பது என்ன? என்று உங்களுக்கு தெரியும் என்றால், நீங்கள் பயத்தை புரிந்துகொள்ள
முடியும் என்றால், பயத்தோடு உரையாடி பார்க்க முடியும் என்றால் நீங்கள் பயம் குறித்த
வேறொரு தளத்திற்கு நகர வாய்ப்பிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பயத்தில் இருந்து விடுபடுவது
அல்லது பயத்தோடு இருப்பது என்பது என்கிற பேச்சை தவிர்த்து, அந்த பேச்சை கடந்து நீங்கள்
பயத்தை புரிந்து கொள்வதன் வழியாக பயத்தோடு உறவாடுவதா? பயத்தில் இருந்து விடுபடுவதா?
என்று முடிவு செய்ய முடியும் என்று நான் பார்க்கிறேன். இது எளிய வழி. பயத்திலிருந்து
விடுபட வேண்டும் என்று நீங்கள் சூத்திரங்கள் சொல்வதும் மந்திரங்கள் ஜெபிப்பதும் பயத்தை
உங்களது பக்கத்து அறையில் அடைத்து விட்டு நீங்கள் தனியாக வந்து விட முடியும் என்கிற
சாமர்த்தியமான செயல்பாடுகளும் பயத்திலிருந்து உங்களை விடுதலை செய்யாது.
ஏனென்றால் பயம் என்பது உங்களுக்கு வாய்த்திருக்கிற
வளர்ச்சிக்கான வாய்ப்பு. என்னைப் பொருத்தவரை பயம் என்பது உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட
பரிசுப் பொருள். மனித சமூகம் வளர்ந்து வருகிற வரலாறு முழுவதும் நீங்கள் பார்த்தீர்கள்
என்றால் இருட்டைக் கண்டு ஏற்பட்ட பயம் தான் ஒரு மனிதனின் மின்சார விளக்கிற்கு அடிப்படையாக
அமைந்தது. சௌகரியமாக உட்கார வேண்டும். நாம் கீழே விழுந்து விடுவோம் என்கிற பயம்தான்
ஒரு நல்ல நாற்காலியை கண்டுபிடித்து தந்திருக்கிறது. நீங்கள் பணி நிமித்தமாக வெளியில்
வந்து விட்டால் நீங்கள் நேசிக்கிற ஒருவரோடு நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடியாமல்
போய்விட்டால் என்ன செய்வது? என்கிற பயம்தான் உங்களுக்கு தொலைபேசியை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது.
உங்களைச் சுற்றி இருக்கிற உலகில் உங்களுக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விட்டால் என்ன
செய்வது? என்கிற பயம் தான் உங்களை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
இப்படி உங்களுக்குள் ஏற்பட்டிருக்கிற ஒவ்வொரு மாற்றமும் உங்களை சுற்றி நடந்து கொண்டிருக்கிற
ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் உங்களுக்கு பயம் கொடுத்தவை தான். பயப்படாத
ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்றால் நீங்கள் எப்போதும் ஒரு தொலைக்காட்சியை பார்ப்பவராக,
தொலைக்காட்சியை கண்டுபிடிப்பவராக இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு புத்தகத்தை வாசிப்பவராக
இருக்க மாட்டீர்கள். ஒரு புதிய செயல்பாடை செய்து பார்க்க வேண்டும் என்கிற வேகம் உங்களுக்குள்
இருக்காது. வெறுமனே ஒரு பொருள் போல எந்த அசைவும் இல்லாத ஒரு நபராக, ஒரு பொருளாகவே நீங்கள்
உங்களை வைத்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் இயங்குவதற்கு, நீங்கள் திரும்புவதற்கு,
உட்காருவதற்கு, நடப்பதற்கு, ஒவ்வொரு செயலாக நீங்கள் உங்களை மாற்றி செயல்படுவதற்கு அடிப்படையாக
இருப்பது பயம் தான்.
ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)
பயம் இல்லாமல் நீங்கள் வாழ வேண்டும் என்று முடிவு
செய்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த உலகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்
இல்லாமல் போகும். எனவே நீங்கள் தொலைக்காட்சியை தவிர்த்து விடுவீர்கள். பயம் இல்லாமல்
வாழ வேண்டும் என்று நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்கள் கணவனோடு காதலனோடு காதலியோடு
நீங்கள் விரும்புகிற உங்களது குழந்தைகளோடு அவர்கள் இந்நேரம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
என்கிற நினைவு உங்களுக்கு இல்லாமல் போகும். அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்கிற எந்த
யோசனையும் இல்லாமல் போகும். எனவே உங்களுக்கு தொலைபேசியும் வலைதளமும் தேவையில்லாமல்
போகும். அவற்றைப் பயன்படுத்தாத இடத்திற்கு நீங்கள் நகர்ந்து விடுவீர்கள். உங்களுக்கு
பயம் இல்லாமல் போகும் என்றால் நல்ல உணவை, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உயிருக்கு
ஆபத்து இல்லாத உணவை தேர்வு செய்ய வேண்டும் என்கிற உணவுத் தேர்வு இல்லாமல் போகும். நீங்கள்
எதை வேண்டுமென்றாலும் உண்ணவோ அல்லது உண்ணாமலே இருக்கவோ முடிகிற நபராக நீங்கள் மாறக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது. உங்களது சுவையான, சுகாதாரமான உணவை உடலுக்கு உகந்த உணவை தேர்வு
செய்ய வைப்பது உங்களது பயம்தான். இப்படி பயத்திற்கும் உங்களுக்குமாக இருக்கிற உறவு
என்னவெல்லாம் செய்கிறது? என்கிற செயல்பாடுகளை கவனிப்பதன் வழியாக பயம் உங்களை என்ன செய்கிறது?
என்பதை புரிந்து கொள்வதன் வழியாக மட்டுமே உங்களால் பயத்தோடு உறவாட அல்லது பயத்தின்
உறவை துண்டிக்க ஏதாவது செய்ய முடியும் என்று நான் பார்க்கிறேன்.
ALSO READ:HOW TO BE HAPPY(மகிழ்ச்சி)
பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கிறது. உங்கள் நம்பிக்கை குறைபாடுகளை பயமாக நீங்கள் சித்தரிக்கிற செயல்பாடு உங்களை
சுற்றி நடந்து கொண்டே இருக்கும். நாளைய வாழ்வை பற்றி நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள்
என்றால் அது பயமாக உங்களுக்கு வரையறுத்துச் சொல்லக்கூடிய செயல்பாடுகள் உங்களைச் சுற்றி நடக்கும். உண்மையிலேயே
நாளைய வாழ்வு குறித்து உங்களுக்கு இருக்கிற கேள்வி என்பது உங்களது பயமா? அல்லது நம்பிக்கை
குறைபாடா? என்று நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். அடுத்த வினாடி குறித்த உங்களது கேள்வி
என்பது உங்களது பயமா? நம்பிக்கை குறைபாடா? என்பதை நீங்கள் பார்த்தாக வேண்டும். அடுத்த
விநாடி குறித்து இருக்கிற எல்லா நம்பிக்கை குறைபாடுகளும் பயங்களாக நீங்கள் புரிந்து
கொண்டால் நீங்கள் பயத்தை உங்களுக்குள் இருக்கிற ஒரு புத்திசாலித்தனத்தை நீங்கள் தவற
விடுவீர்கள் என்று நான் கூறுகிறேன். பயம் என்பது உங்களை எப்போதும் புத்திசாலியாக வைத்திருக்க
கருவி. பயம் என்பது உங்களை எப்போதும் கவனத்தில் வைத்து இருக்கிற கருவி. பயம் என்பது
உங்களை எப்போதும் சலிப்பை உடைத்துக் கொள்கிற தைரியத்தை கொடுக்கிற கருவி. பயம் இல்லாத
ஒருவரால் இந்த உலகத்தில் எந்த ஒன்றையும் கண்டுபிடித்து இருக்கவோ சாதித்து இருக்கவோ
வாய்ப்பே இல்லாத அளவிற்கு பயம் வேலை செய்கிறது. இது உங்களுக்கும் பொருந்தும். ஆக பயம்
என்பது எங்கிருந்து வருகிறது? என்பதை விடவும் பயத்தை போக்க வேண்டும் என்கிற உங்களது
கற்பனையை விடவும் என்னவெல்லாம் செய்கிறது? என்று நீங்கள் பயத்தை பார்க்க வேண்டிய தருணம்
இது.
அந்தவகையில் பயம் என்பது பயப்பட வேண்டும், பயப்பட
கூடாது என்கிற ஆலோசனைகள் கடந்து, பயம் உங்களுக்குள் என்ன செய்கிறது? என்பதை புரிந்து
கொள்வதன் வழியாக பயத்தோடு உறவாட முடியும். பயத்தில் உறவிலிருந்து நீங்கள் அடுத்த கட்டத்திற்கு
நகர்ந்து கொள்ள முடியும். பயம் உங்களை வழி காட்டும்.
No comments:
Post a Comment