மருத்துவங்கள் - வீட்டு வைத்தியம்
ஒரு நோயாளி இருக்கிறார். அந்த நோயாளி எந்த மருத்துவத்தை தேர்வு
செய்ய வேண்டும்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் முன்பு ஐந்து ஆறு மருத்துவங்கள் இருக்கின்றன. ஐந்து மருத்துவங்களும்
தன்னை அவர் முன்பு பிரதிநிதித்துவப் படுத்திகொண்டு இருக்கின்றன. எந்த மருத்துவமும்
எங்களிடம் வந்தால் உங்களுடைய நோய் குணமாக ஒரு வாரம் ஆகும் என்று சொல்லாது. தலை சுற்றுகிறது
என்று ஒரு ஹோமியோபதி மருத்துவரை பார்க்க சென்றோம் என்றால் இந்த உருண்டையை எடுத்துக்கொள்ளுங்கள்
பத்து நிமிடத்தில் தலை சுற்றல் நின்றுவிடும் என்று கூறுவார்கள். சித்த மருத்துவத்தில்
இந்த கசாயத்தை குடித்தால் பத்து நிமிடத்தில் தலை சுற்றல் நின்றுவிடும் என்று கூறுவார்கள்.
இயற்கை மருத்துவம் காற்றோட்டமான சூழலில் பத்து நிமிடம் நீங்கள் படுத்திருந்தால் தலை
சுற்றல் நின்றுவிடும் என்று சொல்வார்கள். நவீன மருத்துவம் ஒரு குறிப்பிட்ட வகையான மருந்தை
உட்கொள்ளுங்கள் அல்லது குறிப்பிட்ட வகையான ஊசியை உங்கள் உடம்பில் செலுத்துங்கள் பத்து
நிமிடத்தில் நோய் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். அக்குபஞ்சர் மருத்துவம் குறிப்பிட்ட
வகையான மருந்துகள் எதுவும் எடுக்க தேவையில்லை. இந்த புள்ளிகளில் உங்களுடைய நாங்கள்
தொடுவோம். தொட்டவுடன் உங்கள் உடலில் ஆற்றல் மாற்றம் ஏற்படும். சக்தி மாற்றம் ஏற்படும்.
வேகமாக உங்களது உடல் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். எந்த மருத்துவமும் உடல் நோய்
சரியாவதற்கு ஒரு வாரம் ஆகும் 15 நாட்கள் ஆகும் என்றெல்லாம் சொல்கிற தார்மீகமான தளர்வு
நிலை கிடையாது.
ALSO READ:உணவு சொல்லும் வாழ்க்கை முறை
எல்லா மருத்துவமும்
தன்னைத் தேடி வருகிற, நாடி வருகிற துயரருக்கு உடனடியான தீர்வை கொடுப்பதற்கு தயாராக
இருக்கின்றன என்பதை நாம் புரிந்து வைத்திருக்கின்றோம், புரிந்துகொள்ள வேண்டும் என்று
பரிந்துரைக்கிறோம். ஒரு மருத்துவம் மட்டும்தான் வேகமாக வேலை செய்யும். நீங்கள் தலைவலி
வந்தால் நவீன மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் சீக்கிரம் குணமாகும். கால்
வலி வந்தால் அக்குபஞ்சர் எடுத்துக்கொள்ளுங்கள் அதுதான் சீக்கிரம் சரியாகும். கால் உடைந்து
விட்டால் ஹோமியோபதி போக வேண்டாம் அது நீண்ட காலம் எடுக்கும். சித்த மருத்துவம் எடுத்துக்
கொள்ளுங்கள் என்றெல்லாம் எந்த மருத்துவமும் கிடையாது. எந்த நோய் வந்தாலும் எந்த மருத்துவத்தை
அணுகினாலும் அந்த மருத்துவம் உடனடியாக அந்த நோயாளிக்கு அந்த நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கு
உதவி செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் வைத்திருக்கிறது என்பது உண்மையா? இல்லையா?
என்பதை நான் பேச வேண்டும்.
மக்கள் மத்தியில்
மரபு மருத்துவங்கள் மிக மெதுவாக வேலை செய்கின்றன
என்கிற மன வடிவத்தை உருவாக்கியது எவ்வாறு? என்று நமக்கு கேட்க தோன்றுகிறது. ஆதாரமாய்
இருக்கிற, தத்துவமாய் இருக்கிற நூல்களில் ஒவ்வொரு மருத்துவமும் தன்னை தேடி வருகிற நாடி
வருகிற ஒரு நோயாளியை உடனடியாக விடுதலை நோயிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்கிற
நோக்கமும் அக்கறையும் இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆக, எல்லா
மருத்துவங்களையும் தொகுத்து ஓரிடத்தில் குவித்து வைத்து அவர்களிடம் தனித்தனியாகவும்
மொத்தமாகவும் உரையாடினால் எந்த மருத்துவம் குணப்படுத்துவதில் வேகம் கொண்டது? என்று
நீங்கள் அவர்களோடு பேசினால் எல்லோரும் ஒரே
குரலில் சொல்வார்கள், எங்களுடைய மருத்துவம்தான் வேகம் கொண்டது என்று. இது உண்மையும்
கூட.
ALSO READ: உணர்வும் உணவும்
மருத்துவத்தினுடைய
ஆதாரம் மருத்துவத்தினுடைய நோக்கம் ஒரு மனிதனை உடனடியாக குணப்படுத்துவது, உடனடியாக அவனை
நோயிலிருந்து விடுதலை செய்வது என்பது எந்த மருத்துவத்தின் மீதும் மாற்று மருத்துவங்களில்
நம்பிக்கையை பெற்றோருக்கும் கூட மாற்றுக் கருத்து இருக்காது. மரபு மருத்துவம் மெதுவாக
குணப்படுத்தும் என்கிற ஒரு பொது மனநிலையை எவ்வாறு நமக்குள் உருவாக்க வேண்டும்? என்பதுதான்
கேள்வி. மருத்துவம் உயர்வானதா? குறைவானதா? என்பது அல்ல பேச்சு. மருத்துவத்தினுடைய ஆதார
சுருதி, முதல் ஒளி, மருத்துவத்திற்குள் இருக்கிற நோக்கம், அந்த மருத்துவம் இயங்குகிற
இயங்கும் முறை - அது மிக வேகமாக மனிதனை குணப்படுத்துவதற்கு உதவி செய்யுமா? என்றுதான்
அந்த மருத்துவமே உருவாகியிருக்கிறது. வேறு வேறு காலகட்டங்களில், வேறு வேறு நாடுகளில்,
வேறு வேறு சமூகச் சூழலில், வேறு வேறு நிலங்களில் உருவானது மருத்துவம். இன்றைக்கு உலக
வளர்ச்சியில் தொலைத்தொடர்பு நெருக்கத்தில் எல்லா மருத்துவமும் ஏதோ ஒரே சந்துக்குள்
உருவானது போல நாம் பார்க்கிறோம். அப்படி அல்ல. மரபார்ந்த தொன்மமான ஆய்வுகளில் நீங்கள்
தேடிச் சென்றீர்களனால் பழமையான அணுகுமுறைகளை நீங்கள் தேடிச் சென்றீர்களானால் மத்திய
ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாரம்பரிய மருத்துவம் தன்னை வைத்திருக்கிறது. பாரசீகத்தில்
ஒரு பாரம்பரிய மருத்துவம் உருவாகி இருக்கிறது. கிழக்கிந்திய சூழலில் ஒரு பாரம்பரிய
மருத்துவம் உருவாகியிருக்கிறது. வடக்கு மாகாணங்களில் ஒரு பாரம்பரிய மருத்துவம் உருவாகியிருக்கிறது.
எல்லா மருத்துவங்களும் அந்தச் சூழலில், அந்த காலத்தில் அதையொட்டி வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்கும்
அந்த வாழ்க்கை முறையை நம்பி பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்டிருக்கிற நோயிலிருந்து
அவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் உருவாகியிருக்கிறது.
இதை மறுக்க முடியுமா? என்பது நான் உங்கள் முன் வைக்கிற கேள்வி.
ALSO READ:உணவு என்பது என்ன?
குறிப்பிட்ட வகையான
மருத்துவம் மட்டும்தான் எல்லா நோய்களுக்கும் உடனடியாக தீர்வு செய்யும் என்று சொல்கிறோம்.
எந்த மருத்துவத்தையும் உயர்வாகவோ தாழ்வாகவோ யாரும் புரிந்து கொள்ளக் கூடாது புரிந்து
கொள்ள மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் தான் இந்த உரையாடலை நான் உங்களோடு செய்து கொண்டு
இருக்கிறேன். இந்த உரையாடலுக்குள் இருக்கிற நோக்கம் மருத்துவத்தை நாம் இன்னும் விரிவாக
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக மரபு சார்ந்து இயங்குகிற மருத்துவத்தினுடைய
அழகியலை நாம் ரசிக்கத் தெரியாதவர்களாக மாறிப் போனோம். அது ஒரு கவிதை போல இலக்கியம்
போல மருத்துவம் சிதறிக்கிடக்கின்றன என்று நாம் பார்ப்பதில்லை. அப்படியே ஒரு தொலைபேசியில்
ஒரு உணவுக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்க தன்மையிலேயே மருத்துவத்தையும் பார்க்கிறோம்.
மரபு மருத்துவத்தின் ஆதார சுருதியாக இருக்கிற ஒரு ஒற்றை அடர்ந்த பகுதி மீது எனக்கு
தவிப்பும் அக்கறையும். மருத்துவம் பார்க்கிறோம் என்கிற கவனம் கூட இல்லாமல் மரபு மருத்துவங்கள்
மனித உடலோடு மனித வாழ்க்கையோடு பேசிக் கொண்டே இருக்கிறது.
நீங்கள் சாப்பிடுகிற
மிளகு ரசத்தில் மருத்துவம் இருக்கிறது. நான் ஆங்கில மருத்துவம் தான் பார்ப்பேன் என்று
நீங்கள் கூறினால் நீங்கள் மிளகு ரசத்தை சாப்பிடவே முடியாது. நான் நவீன மருத்துவத்தை
தான் நம்புவேன் என்றால் நீங்கள் சுக்கு மல்லி காபி குடிக்கவே முடியாது. சுக்கு மல்லி
காபி குடிக்கிற ஆளாக நீங்கள் இருந்தால் இயற்கை மருத்துவத்தை, மரபுசார்ந்த மருத்துவ
நுணுக்கத்தை, பரிந்துரையை பெற்றுக் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள். இவை அனைத்துமே
மரபுசார்ந்த மருத்துவ முறைகள். இவை அனைத்தையும் பார்க்காமல் நவீன மருத்துவம் தான் மனிதனுக்கு
ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு விரிவான தளத்தில்
மருத்துவங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.
இன்றைக்கும் கூட இந்தியாவில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நுட்பமாக உடலில்
ஏற்பட்டிருக்கக் கூடிய ஆபத்தை இளக்கி விடக்கூடிய இளக்கு முறை மருத்துவம் இருக்கிறது.
கேரளாவில் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய உடல் உபாதையை எண்ணை வைத்து பல வகையான
எண்ணையை உடலில் பூசி அவரது நோய்களை களைவதற்கான மருத்துவ நுட்பங்கள் இன்றும் இருக்கிறது.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது ஒரு மருத்துவம்.
சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை பாக்கு போடுவது ஒரு மருத்துவம். கால் கைகளை தூக்கும்போதும்
விரிக்கும் போதும் கடகடவென்று சத்தம் கேட்டால் அவர்கள் தொடர்ந்து வெற்றிலைப்பாக்கு
எடுத்துக்கொண்டால் அந்த சத்தம் நின்று விடும். தயிர் சாதத்திற்கு நார்த்தங்காய் ஊறுகாய்
பிரண்டை ஊறுகாய் சாப்பிடுகிறோம். கூழுக்கு பிரண்டை ஊறுகாய் வைத்து சாப்பிடுகிறோம்.
இடுப்பில் கடகடவென சத்தம் கேட்டால் பிரண்டை ஊறுகாயை ஒருவாரம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.
இவை அனைத்துமே மரபுசார்ந்த இயற்கை வழி மருத்துவங்கள்.
ALSO READ:ஐவகை உணவு
தண்ணீரில் மருத்துவம்
இருக்கிறதா? இருக்கிறது என்று காந்தியடிகள் கூறுகிறார். நேச்சர் க்யூர் என்று புத்தகத்தை
ஆங்கிலத்தில் எழுதிய ஆதி நாற்பதுகளில் தொகுத்து எழுதிய ஆங்கில புத்தகவியலாளர் தண்ணீர் மருத்துவமாக வேலை
செய்கிறது என்று கூறுகிறார். ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தண்ணீருக்குள் ஆற்றல்
கலைடாஸ்கோப் காட்சி போல விரிந்து சுருங்கி வருவதை புகைப்படம் எடுத்து பதிவு செய்த பதிவுகள்
இருக்கின்றன. தண்ணீர் மருத்துவமாக வேலை செய்கிறது. தண்ணீருக்கு ஒரு குணம் இருக்கிறது
என்று பேசுகிற ஆய்வுகள், ஆய்வு தொகுப்புகள் இருக்கின்றன. ஆக மருத்துவம் என்பது எப்படி
எல்லாம் இருக்கின்றது? என்று பார்ப்பதில் இருந்துதான் மருத்துவம் எவ்வாறு வேலை செய்கிறது?
என்று முடிவு எடுக்க முடியும். அந்தவகையில் ஒரு மருத்துவம் ஆகச் சிறந்த மருத்துவம்
என்று எந்த மருத்துவத்தை சொன்னாலும் அந்த தகவல் போதுமானதல்ல. சரியானதும் அல்ல.
எல்லா மருத்துவங்களுக்கும் வேகமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்பது மருத்துவ நூல்களை ஆய்வு செய்கிற, படித்து பார்க்கிற யாவராலும் கண்டு கொள்ள முடியும். எவராலும் ஏற்றுக் கொள்ள முடியும். ஒற்றை மருத்துவமே சிறந்த வேகத்திலும் சிறந்த குணப்படுத்தும் ஆற்றலிலும் முதன்மையாக இருக்கிறது என்று பேசுகிற பேச்சுக்களை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அக்கறையில் இருந்து இந்த உரையாடலை செய்கிறோம். ஒரு மருத்துவம் என்பது எப்படியானது? என்கிற உரையாடல் இது. ஆக, இந்த மருத்துவ ஆய்வுகள் என்பது குணமாக்கும் ஆற்றல் என்பது பொதுமையாகப் பேச வேண்டுமென்றால் மருத்துவ தொன்மங்களிலிருந்து, மருத்துவ பழமையில் இருந்து, மருத்துவ நூல்களில் இருந்து களைத்துப் போட்டு எடுத்து பேச வேண்டும் என்றால் நாம் கண்டுபிடிக்க சாத்தியம் இருக்கிற ஒரு உண்மை, வேறு வழியே இல்லாமல் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு சாத்தியம் இருக்கிற உண்மை - எல்லா மருத்துவமும் ஒரு நோயாளியை குணப்படுத்த வேண்டும் என்பதில், வேகமாக குணப்படுத்த வேண்டும் என்பதில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்வதில்லை என்பதுதான். என்னுடைய கருத்து ஒற்றை மருத்துவம் வேகமாக குணப்படுத்தும் என்கிற ஏதோ ஒரு மருத்துவத்தை முன்னுக்கு நிறுத்துகிற தொளதொளப்பான வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற தன்மையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி
.
No comments:
Post a Comment