Thursday, November 26, 2020

TRADITIONAL MEDICINE - மரபு மருத்துவம்

 

                                மரபு மருத்துவம்

www.swasthammadurai.com

காந்தியடிகள் பின்பற்றிய இயற்கை வழி சிகிச்சை முறை என்ற கட்டுரையின் தொடர்ச்சி

     ஆக, எதிர்வரும் காலத்தில் மிகப் பொருத்தமான அரசியல் வாழ்க்கை முறைக்கு அகிம்சை தான் பொருத்தமானது என்று வாதாடுகிற எவரும் பொருத்தமான ஆரோக்கிய முறைக்கு என்ன செய்வது? என்று தேடிப்பார்த்தால் அது காந்தியிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது வாதம். மரபு மருத்துவம், இயற்கை சார்ந்த மருத்துவத்தை அரசியலுக்கு தவிர்க்கமுடியாத மாற்றாக அகிம்சையை, அகிம்சை அணுகுமுறையை காந்தியடிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமாக உங்களுக்குப் படுகிறதோ? அவ்வளவு பொருத்தமானது காந்தியடிகள் சொல்கிற உடலை பின்பற்றுங்கள் என்கிற இயற்கை மருத்துவ முறை. காந்தியடிகள் மருத்துவ முறையைப் பொருத்தவரை அவர் செய்து பார்த்த பணி என்பது, பதிவு செய்திருக்கிற பணி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த காலத்தில் முதன்மையானது என்னும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ALSO READ:The natural way of treatment followed by Gandhiji - காந்தியடிகள் பின்பற்றிய இயற்கை வழி சிகிச்சை முறை


            மருத்துவத்தை அப்படித்தான் நான் பார்க்கிறேன். ஒரு மனிதனினுடைய உடல் எவ்வாறு இயங்குகிறது? ஒரு மனிதனின் உடல் உறுப்புகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன? அந்த உடலுக்கும் உள்ளே நிகழ்கிற உடல் இயக்கத்திற்கும் அவயங்களில் நிகழ்கிற இயங்கும் முறைகளுக்கும் இருக்கிற தொடர்பை இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் இருந்து காந்தியடிகள் பதிவுசெய்திருக்கிறார். காந்தியடிகளை நாம் அழுத்தமாக சேர்த்துக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் அரசியல் தளத்தில் அவர் அல்லது அவர் போற்றுகிற, நம்பிக்கை வைத்திருக்கிற, அகிம்சை கோட்பாடு என்பது எந்த காலத்திற்கும் வந்து சேர வேண்டிய இடமாகவே இருக்கிறது. எந்த அரசியல் பின்பற்றும் நம்பிக்கையாளரும் எந்த ஆட்சி முறையை பின்பற்றும் நம்பிக்கையாளரும் காந்தியடிகளை தவிர்த்துவிட்டு அரசியலமைப்பை, சமூக வாழ்க்கை முறையை உருவாக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் வைத்திருக்கிற பரிந்துரை, நான் முன்வைக்கிற பரிந்துரை காந்தியடிகளினுடைய அரசியல் பரிந்துரை என்பது எவ்வாறு தவிர்க்க முடியாததாக இருக்கிறதோ? அதே அளவிற்கு அவரது மருத்துவ முறையும் தவிர்க்க முடியாததாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மரபு மருத்துவத்தினுடைய சாராம்சத்தை எளிதில் புரிந்து கொள்ள உதவும்.மரபு மருத்துவத்தினுடைய இயங்கும் முறையை எளிதாக புரிந்துகொள்ள உதவும்.

            விரைவாக குணமாக வேண்டும், விரைவாக குணமாகிறது என்று ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற நோய் என்பது எவ்வளவு காலத்தில் குணமாக வேண்டும்? என்று தீர்மானிப்பது சரியா? போதுமானதா? என்பது மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தெரிந்த தெளிவான செய்தி. ஆனால் மருத்துவத் துறையில் பணியாற்றுகிறவர்களே மருத்துவத்துறையில் இருக்கிற ஏற்ற இறக்கங்கள் தெரிந்தவர்களே, ஒரு நோய் எவ்வளவு காலத்தில் தீரும் சீராகும்? என்று துல்லியமாக கணித்துச் சொல்வது என்றெல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள், தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு நோய் தீர்வதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது, குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பது தெரியும். நவீன மருத்துவத்தில் நோய்கள் தீர்க்கவே முடியாது. உடல் ஆரோக்கியத்தை ஒரு முறை களைத்துப் போட்டு விட்டால் நீங்கள் பெரிய  இழப்பில்லாமல் பராமரித்துக் கொள்ளலாம் என்பது வரைக்கும் முடிவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ALSO READ:HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை

            ஒருவருக்கு நீரிழிவு சர்க்கரை என்கிற குறியீடில் அவரது உடல் ஆரோக்கியம் களைக்கப்பட்டு விட்டால், ரத்த அழுத்தத்தின் காரணமாக அவரது ஆரோக்கியம் களைக்கப்பட்டு விட்டால் அவர் மீண்டும் ஆரோக்கியமான ரத்த அழுத்தம் இல்லாத சர்க்கரை நோய் இல்லாத ஒரு நபராக மாறவே முடியாது என்று நவீன மருத்துவம் ஆய்வுகளை பதிவு செய்து வைத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறது. அவர் ஆண்டு முழுவதும் அவர் ஆயுள் முழுவதும் அதற்காக பராமரிப்பு செய்து கொள்வதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும். இது அந்த மருத்துவத்தினுடைய செயல்முறை. அப்படி செய்ய வேண்டுமா? என்று சண்டை போடுவது அல்ல நமது நோக்கம். ஆனால் மருத்துவத்திற்குள் இன்னபிற மருத்துவத்திற்குள் ஒரு நோயானது எவ்வாறு இருக்கிறது? எப்போது சரியாகும்? எவ்வளவு நாள் முன்பு அந்த நோய் துவங்கியது? ஏன் அந்த நோய் அந்த உடலில் அவ்வாறாக வெளிப்படுகிறது? என்றெல்லாம் கூட பகுத்துப் பார்க்கிற மரபு மருத்துவ பதிவுகள், முயற்சிகள் நடந்து இருக்கின்றன நடந்து கொண்டு இருக்கின்றன.

            இந்த இரண்டு தன்மைகளிலும் மருத்துவங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நவீன காலத்தில் உடனடியாக நோய் தீர்வதற்கு  ஒரு குறிப்பிட்ட வகையான மருத்துவம்தான் உதவி செய்கிறது என்று மீண்டும் மீண்டும்  சொல்லப்படுவது நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது தெரியவில்லை. இயற்கை மருத்துவத்தில் ஒருவருக்கு நோய் சரியாவதற்கு ஒரு புளிப்புச்சுவையை அந்த உடலில் அதிகமாக்கினால் சேர்த்துக் கொண்டால் அவரது நோய் சீராகும் என்று ஒரு மருத்துவக் குறிப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உதாரணமான ஒரு கதையை நான் உங்களிடம் சொல்கிறேன். ஒருவருக்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு உடலில் புளிப்பு சுவையை சேர்க்க வேண்டும். அவருக்கு புளிப்புச்சுவை சேர்க்கப்பட்ட உடன் அவரது நோய் தீரும் என்பது மருத்துவ தீர்வு குறிப்பு. அப்படி என்றால் உடனடியாக அவருக்கு நோய் தீர்ந்து விடுமா? என்றால் புளிப்பை சேர்த்துவிட்டால் நோய் தீர்ந்துவிடும். மருத்துவத்தை பின்பற்றுகிற  ஒருவர் வேறு ஒன்றும் செய்யாமல் எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு துளி எலுமிச்சம்பழச்சாறு அவரது நாக்கில் விட்டு  அந்த புளிப்பு சுவை அவரது நாக்கில் பட்ட உடன் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவரது கண்கள் கூசி விடும். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அந்த புளிப்பை கிரகித்துக் கொண்டு கண்களை கூசச் செய்யும் வேகம் இயற்கை சார்ந்த, மரபு சார்ந்த பொருட்களுக்கு இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்கிற பக்குவம் உடலுக்கு இன்றும் இருக்கிறது  என்கிற அம்சத்திலிருந்து நோய் விரைவாக குணமாவதற்கு இயற்கை மருத்துவம் எவ்வளவு வேகமாக வேலை செய்யும்? என்பதை பார்க்க முடியும்.

ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்

            ஒரு குறிப்பிட்ட வகையான நோய் கண்டுபிடித்தாயிற்று. குறிப்பிட்ட வகையான உடல் உபாதையை நோயறிதல் முறையில் கண்டு பிடித்தாயிற்று. அவருக்கு ஒரு குறிப்பிட்ட நோய்க்குரிய அந்த உருண்டையை அவரது நாக்கில் வைத்தவுடன் அந்த நோயின் தீவிரம் குறைவதை ஹோமியோபதி மருத்துவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். நான்கு ஐந்து ஆண்டுகளாக சீரான சிறுநீர் பிரியும் உடல் தன்மை இல்லை, சிறுநீர் பிரிவதில் எரிச்சலும் வலியும் இருக்கிறது. சிறுநீர் பிரிய வேண்டும் என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறுகிற நோயாளியை பார்த்தவுடன் கையில் இருக்கிற சிறிய ஊசியை அக்குபஞ்சர் மருத்துவ முறையில் அவரது உடலில் ஒரு இடத்தில் தொட்டவுடன் ஆற்றல் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக சிறுநீர் பிரிகிற காட்சியை நான் பார்த்திருக்கிறேன். ஒரு விபத்தில் வலது கை தோள்பட்டை சதை பிரண்டு அமைப்பிலிருந்து அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்து சற்று வீக்கமாகவும் விலகியும் வெளியில் தள்ளி இருக்கிற நேரத்தில், அவரை, அந்த நோயாளியை விபத்துக்குள்ளானவரை தொட்டு குறிப்பிட்ட இடங்களில் அவரது உடலை அழுத்தி எண்ணெய் தேய்த்து ஒரு ஐந்து நிமிட சிகிச்சையில் அவரது உடல் உறுப்பானது வீக்கம் குறைந்து உரிய இடத்திற்கு நகர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒடி முறிவு சாஸ்திரத்தின்படி சித்த மருத்துவத்தில் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று கருதுகிற பெரிய அறுவை சிகிச்சையின் வழியாகத்தான் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று எலும்பு முறிவுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிற காலகட்டங்களில் கூட  அவரை ஒடி முறிவு சாஸ்திரத்தின் அடிப்படையில் உடல் தசைகளையும் சதைகளையும் ஒழுங்குபடுத்தி எலும்புகளை சீர்ப்படுத்தி கட்டி நடக்கச் செய்கிற ஓடச் செய்கிற மருத்துவ நுட்பங்கள் இருக்கின்றன. ஆக, ஒரு நோய் எவ்வளவு விரைவாக குணமாகும்? என்கிற தளத்தில் இருந்து நாம் மருத்துவத்தை அணுகுகிறோம் என்றால் எல்லாம் மருத்துவங்களின் நோய் குணமாகும் தீவிரத்தை நாம் எடுத்து வைத்துப் பேச வேண்டும். ஒவ்வொரு மருத்துவமும் தன்னை நாடி வருகிற, தேடி வருகிற துயரருக்கு நோயாளிக்கு மிக விரைவாக அவர் விடுதலையாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பிலிருந்து தான் வேலை செய்கின்றன என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...