மருத்துவம் மனிதனை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதில்லை
மருத்துவம் என்பது பல்வேறு விதமான மக்களுக்கு பயன்படக்கூடிய பயன்பாட்டை மையப்படுத்திய ஒரு துறையாக இன்று வளர்ந்து இருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது ஒரு வணிகம் போல பரவலாக்கப்பட்டதனுடைய விளைவாக ஏற்பட்டது. மருத்துவம் என்பது வணிகமா? சேவையா? அல்லது மருத்துவம் என்னவாக இருக்கிறது? என்பது பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நேரம் இல்லாமலும் அவசியம் இல்லாமலும் இருப்பது போன்ற ஒரு சூழலை எதிர் கொள்கிறோம். மருத்துவத்தை ஒரு துறையாக எளிமையாக கடந்து போகிற ஒரு பொதுவான வடிவம் உருவாகி இருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். ஒரு பொறியியல் துறை போல, ஒரு கணிப்பொறி துறை போல, மருத்துவத் துறை என்பது ஒரு பணிபுரிவதற்கான துறை என்கிற அளவில் இருக்கிறது. அவ்வளவுதான் மருத்துவம் என்பது இருப்பதாக பார்க்கவும் முடிகிறது. உண்மையிலேயே மருத்துவத்துறை என்பது அவ்வளவு தானா? என்று நாம் பார்த்தோம் என்றால் இந்த பொதுவான மன வடிவத்திற்கு பொதுவான துறை சார்ந்த வரையறைக்கு மருத்துவம் பொருந்துவதில்லை, போதுமானதாகவும் இருப்பதில்லை.
ALSO READ:நோயற்ற வாழ்வு
என்னைப் பொருத்த அளவில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறைக்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் திறனும் தகுதியும் வாய்ப்பும் மருத்துவத்திற்கு இருப்பதாக நான் பார்க்கிறேன். அது மருத்துவத்துறையால் மட்டுமே முடியும் என்றும் நான் நம்புகிறேன். மருத்துவத்தை ஒரு உடல் நலம் சார்ந்து இயங்குகிற இயக்கத்திற்கு இலகுத்தன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் உயவு எண்ணெயை உற்பத்தி செய்வது போல் மருந்துகளை உற்பத்தி செய்து கொண்டு, கைகளிலும் கால்களிலும் பூசிக் கொள்ளலாம் என்கிற மனோபாவத்தோடு பார்க்கிற நிலை என்பது அதிகரித்து வருகிறது. உண்மையிலேயே உடலை மட்டும் இயக்குவதற்கும் உடலை மட்டும் இயங்கச் செய்வதற்கும் தேவையான உயவு எண்ணெய்களை உற்பத்தி செய்து கொடுக்கிற ஒரு துறைதான் மருத்துவமா? என்றால் அப்படி இல்லை. கால் வலிக்கு ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுத்து சாப்பிட்ட உடன் அல்லது உடம்பில் செலுத்தியவுடன் கால் வலி சரியாகிவிடும். கண் பார்வை குறைபாடு ஒரு குறிப்பிட்ட வகையான மருத்துவத்தை எடுத்துக்கொண்டோம் என்றால் கண்பார்வை சரியாகிவிடும் என்பது மாதிரியாக மருத்துவத்தை புரிந்து கொள்கிற தன்மை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனுடைய விகிதாச்சாரம் கடந்த காலங்களை விட இந்த காலம் இந்த காலத்தை விட எதிர்காலத்தில் இது பன்மடங்காகும் என்று எனக்கு யூகிக்க முடிகிறது. அப்படித்தானா? மருத்துவம் என்பது. எந்த மருத்துவமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட புள்ளியை தொட்டு தூண்டுவது அல்லது ஒரு சிறிய ஊசி கொண்டு தூண்டுவது என்கிற பரிந்துரை அக்குபஞ்சர் மருத்துவம் வைத்திருக்கிறது. அந்த அளவில் என்னென்ன நோய்கள் வருகின்றன? என்பதை தொகுத்துக்கொண்டு அந்த நோய்களுக்கு உரிய மருத்துவ புள்ளிகள் அல்லது தொடவேண்டிய இடங்கள் அடங்கிய ஒரு சிறிய புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டால் அந்த மருத்துவத்தில் எல்லாம் தெரிந்து விட்டதாகவும் அல்லது அந்த மருத்துவத்தினுடைய பரப்பே அவ்வளவுதான் என்பதாகவும் நாம் புரிந்துகொள்ள முடியுமா? என்பது கேள்வி.
ALSO READ:மருத்துவ பயிற்சி முறை
வேறு குறிப்பிட்ட வகையான நோய்களுக்கு சித்த மருத்துவமோ ஆயுர்வேத மருத்துவமோ ஒருவிதமான மருந்துகளை , சூரணங்களை, பொடிகளை, கசாயங்களை, லேகியங்களை பரிந்துரைக்கின்றன. குறிப்பிட்ட வகையான தலைவலிக்கு இந்த லேகியத்தை காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைக்கு நாம் எடுத்துக் கொண்டால் அந்த தலைவலி என்பது முழுவதுமாக தீர்ந்து விடும் என்கிற தன்மையில் அந்த லேகியத்தை எடுத்துக்கொண்டு இது மாதிரி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான லேகியங்களையும் சூரணங்களையும் பயன்படுத்திக் கொண்டால் அதுதான் மருத்துவம். அந்த மருத்துவத்தின் எல்லை என்பது அவ்வளவுதான் இருக்கிறதா? என்றால் அப்படி முடிவு செய்து விட முடியுமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது. எல்லா மருத்துவங்களும் இப்படித்தான் நமக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன உண்மையிலேயே இப்படித்தான் மருத்துவங்கள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றனவா? அல்லது மருத்துவம் தாண்டி மருத்துவத்தை இப்படித்தான் வெளிப்படுத்திக்கொள்ள வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்களா? என்கிற தளத்தில் இருந்து இந்த உரையாடலைப் பேசவேண்டும் என்று நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
ALSO READ:மருத்துவரின் பொறுப்பு
மருத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட புள்ளிகளை, ஒரு உணவு பண்டத்தின் ஒரு குறிப்பிட்ட சுவைக்கு குறிப்பிட்ட பொருளை சேர்ப்பது போல ஒரு வாசனைக்கு குறிப்பிட்ட பொருளை ஒரு ஊதுபத்தியிலோ சந்தனத்திலோ சேர்ப்பது போல உடலின் இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட மருந்தை, குறிப்பிட்ட சூரணத்தை, குறிப்பிட்ட புள்ளியை சேர்த்துக் கொண்டு இயங்க விட்டால் அது இயங்கிக்கொண்டே இருக்கும் என்கிற புரிதலில் தான் மருத்துவத்தை நாம் பழகி வைத்திருக்கிறோம். உண்மையிலேயே மருத்துவம் அப்படித்தான் இருக்கிறதா? என்பதை பேசுவதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது. மருத்துவத் துறை என்பது ஒப்பிட முடியாத அளவிற்கு மனிதனுக்கு மனித சமூகத்திற்கு மனித வளர்ச்சிக்கு அறிவிற்கு உடலுக்கு மிக நெருக்கமானது. வேறு எந்தத் துறையையும் அவ்வளவு நெருக்கமாக நாம் பார்க்க முடியாது. எந்த துறைக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு இல்லை. மனித சமூகம் வெளிச்சம் இல்லாமல் இன்று மனித சமூகத்தால் இயங்க முடியாத அளவிற்கு மனித சமூகத்தில் வெளிச்சம் ஒளிபாய்ச்சி இருக்கிறது என்றாலும் கூட மின்சாரம் மனித சமூகத்திற்கு நெருக்கமாய் இருப்பதை விடவும் மருத்துவம் நெருக்கமானது. தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதற்கும் தொலைத்தொடர்பு சாதனங்கள் உபயோகத்தில் நாம் இந்த உலகை பக்கத்தில் பார்த்துக் கொள்வதற்கும் ஏராளமான ஏற்பாடுகள் இருந்தாலும் கூட தொலைத்தொடர்புத்துறை நெருக்கமாக இருப்பதை விடவும் மருத்துவம் மனிதனுக்கு நெருக்கமானது. அதை நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. எனவே நாம் ஒருமுறை மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. தேவைப்படும் போதெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது என்கிற பல கோணங்களில் இந்த உரையாடலை செய்துகொண்டு இருக்கிறோம்.
ALSO READ:துயரரின் மருத்துவ தேர்வு,துயரருக்குரிய முதலுதவி
மருத்துவம் அப்படியான தன்மையோடு புரிந்து கொள்ளப்படவேண்டும். ஆனால் அப்படியான தன்மையோடு புரிந்து கொள்ளப்படுவதில் நிறைய தேக்கங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது மருத்துவத்திற்குள். மனிதனுக்கு மிக நெருக்கமாக இருக்கிற ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலை உணவாகவும் மருந்தாகவும் உடல் வளர்க்கும் பொருளாகவும் கொடுப்பதை ஒரு குழந்தை எந்தவித கேள்வியும் வாய்ப்பும் இல்லாமல் எவ்வாறு முழு உணர்வோடு பருகிக் கொள்கிறதோ? பெற்றுக்கொள்கிறதோ? அத்தனை நம்பிக்கையும் நெருக்கமும் ஒரு மருத்துவரின் பரிந்துரையை ஒரு நோயாளி பெற்றுக்கொள்கிறார். ஒரு குழந்தை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் பிறந்து இரண்டு மணி நேரங்கள் மூன்று மணி நேரங்கள் இருக்கிற ஒரு குழந்தை ஒரு தாயிடம் இருந்து பெற்றுக் கொள்கிற உணவை தாய்ப்பாலாக பெற்றுக்கொள்கிற உணவை எவ்வாறு நம்புகிறதோ? உங்கள் குழந்தைக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு தாய்ப்பால். அப்படியான ஒற்றை வாய்ப்பிற்கும் அந்த வாய்ப்பின் மீது இந்த குழந்தை வைத்திருக்கிற நம்பிக்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ? எவ்வளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ? அத்தனை நம்பகத்தன்மையும் முக்கியத்துவமும் மருத்துவர் கொடுக்கிற பரிந்துரைக்கும் உணவு முறைக்கும் இருக்கிறது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு நெருக்கமானது மனிதனுக்கு மருத்துவம் என்பது.
அப்படி என்றால் மருத்துவம் என்பது வெறுமனே உடலை இயக்குகிற ஒரு குறிப்பிட்ட செயல் முறைகளையும் மருந்துகளையும் வைத்திருக்கிற மிக எளிய பயன்பாட்டு துறை போல பார்த்துவிட முடியுமா? என்றால் அப்படி பார்க்கப்படுகிற பார்வையை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற தன் முனைப்போடு நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. மருத்துவம் என்பது உடல் மீது வேலை செய்கிறது. ஆனால் உடலுக்காக வேலை செய்வதில்லை என்பது என் கருத்து. திருமூலர் என்கிற ஒரு சித்தமருத்துவத்தினுடைய பிதாமகர்களில் ஒருவர். சித்த மருத்துவத்தை துவங்கியவர்களில் ஒருவர். சித்த மருத்துவத்தினுடைய வரலாற்றில் திருமூலரினுடைய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. நிறைய சித்த மருத்துவர்களும் சித்தமருத்துவம் சார்ந்த ஆய்வுகளையும் படைப்புகளையும் கொடுத்திருந்தாலும் கூட திருமூலரினுடைய படைப்பும் ஆக்கமும் அதிக நுட்பங்களை பெற்றிருப்பதாக இருக்கிறது. அது ஒரு சாயலில் உடலுக்குள் இருக்கிற ஆன்மாவைத் தொட்டு பயணிக்கிற சாயலில் உயிரை தொட்டு பயணிக்கிற சாயலில் என்று திருமூலருக்கு உரை எழுதும் அன்பர்கள் விதவிதமாக சொன்னாலும்கூட திருமூலரினுடைய மருத்துவ பங்களிப்பு என்பது மிக போற்றுதலுக்குரியது.
ALSO READ:நோய் தோற்றம்,நோய் தீரும் வழிமுறை
சித்தமருத்துவ வரலாற்றில் திருமூலரினுடைய பதிவுகள் மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்று. மருத்துவத்தை உள்வாங்கிக்கொண்டு மருத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு பேசும் திருமூலர் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் "உடலை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே" என்று. இந்தச் சொல்லுக்குள் வாக்கியத்திற்குள் இந்த செய்யுளுக்குள் ஒளிந்திருக்கும் கருத்து - உடலை வளர்ப்பதன் வழியாக உயிரை வளர்க்க முடியும் என்று நேரடியாக நாம் பொருள் கொள்ள முடியும். அதற்கு முன்பு சில செய்திகளை அவர் குறிப்பிடுகிறார். உடலுக்குள் எதுவும் இல்லை. வெறுமனே உடலை வெறும் உடலாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமே, வெறும் உடல் தானா அது. உடல் என்பது வெறும் உடல் அல்ல. உடலுக்குள் உத்தமன் குடியிருக்கிறார். உத்தமன் குடி இருப்பதை நான் கண்டு கொண்டேன். அந்த உத்தமனை போற்றும் வகையில் உடலை வளர்த்து என் உயிரை வளர்க்கும் வழியை பெற்றுக் கொண்டேன் என்று ஒரு நீண்ட செய்யுளை தொகுத்து செய்யுளின் இறுதியில் இந்த பாடலை பதிவு செய்கிறார். உடலை வளர்ப்பது உயிரை வளர்ப்பதற்காக என்று. உயிரை வளர்க்கும் நுட்பத்திற்காகத்தான் மருத்துவம் இருக்கிறது என்று திருமூலரின் உடைய வாக்கு.
தொடரும்...
No comments:
Post a Comment