Monday, November 30, 2020

MEDICATION - TRADITIONAL MEDICINE - PART 2 மருத்துவம் மனிதனை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதில்லை

 

மருத்துவம் மனிதனை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதில்லை


www.swasthammadurai.com


    திருமூலர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே நாம் அதனை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் திருமூலரினுடைய வாக்கை வெறுமனே ஒரு மனப்பாட செய்யுள் போல கடந்து விட்டு நாம் பேசுவது நியாயம் ஆகாது. இந்த மருத்துவங்களினுடைய பணி வெறுமனே உடல் சார்ந்துதான் இருக்கிறதா?  என்று  நாம் வினவுகிறபோது, ஆய்வு செய்கிற போது திருமூலரினுடைய உடலை வளர்ப்பதன் மூலமாக உயிரை வளர்க்க முடியும் என்கிற கூற்று அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் பார்க்கவேண்டும். இம்மாதிரியான கூற்றுக்கள் வெவ்வேறு மருத்துவங்களில், வெவ்வேறு தன்மையில் இருக்கக்கூடும். ஒவ்வொரு மருத்துவத்திற்குள்ளும் ஒவ்வொருவிதமான பார்வையும் சிந்தனையோட்டமும் இருக்கக்கூடும். அதை ஒவ்வொன்றாக நாம் பேசவேண்டும் என்பதால் "இருக்கக்கூடும்" என்கிற யூகமான பதிலை நான் உங்களுக்கு பதிவு செய்கிறேன். ஒவ்வொரு மருத்துவத்திற்குள்ளும் இப்படியான ஒரு ஆழமான பகுதி இருக்கிறது என்பதை நாம் பேசவேண்டும்.

ALSO READ:மருத்துவம் மனிதனை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதில்லை

                "உடலை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே" என்று திருமூலர் பாடுகிற முக்கியமான செய்யுள் பகுதி திருமூலரினுடைய பங்களிப்பில் இருந்து பார்க்கிறபோது திருமூலரினுடைய பார்வையில் இருந்து பார்க்கிறபோது ஒரு உடலை வளர்ப்பது மட்டுமே மருத்துவத்தினுடைய பணி அல்ல, உடலை வளர்ப்பதன் வழியாக அந்த மருத்துவமானது உயிரை வளர்க்கும், வளர்க்க வேண்டும் என்கிற பார்வையில் அவர் பதிவு செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய மருத்துவங்கள் வெறுமனே உடலை வளர்க்கவும் பாதுகாக்கவும் உடலைப் பேணவுமான ஆலோசனைகளை மனிதனுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிற வேலையில் நாம் இதை பேசுவது,  இந்த சிந்தனை ஓட்டத்தில் நாம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உடலை வளர்ப்பது என்றால் வெறுமனே  உடலை வளர்ப்பதுதான் மருத்துவத்தின் பணி அதுதானா? மருத்துவத்தின் சேவை என்பது உடல் வளர்ப்பும் வேலையில்தான் இருக்கிறதா?

                ஆனா உடல் வளர்க்கும் வேலையோடு மருத்துவத்தின் சேவை முடிந்துவிட்டதாக நாம் தொடர்ந்து இந்த பிரசங்கத்திற்கு பிரச்சாரத்திற்கு மனித சமூகம் இலக்காகக் கொண்டே இருக்கிறது. இதில் உடன்பாடு இருப்பவர்களும் உடன்பாடு இல்லாதவர்களுக்குமான ஒரு பொது கேள்வி -  மருத்துவத்தினுடைய  தலையாய பணி என்ன? வெறுமனே உடல் வளர்க்கும் பணி மட்டும்தானா? என்பதுதான். உடல் வளர்க்கும் பணி மட்டும்தானா? என்ற கேள்வியில் இருந்து  நாம் மருத்துவத்தை இன்னும் நெருக்கமாக பார்க்க முடியும் என்று இந்த உரையாடலை உங்களோடு செய்கிறேன். மருத்துவம், எந்த மருத்துவமாக இருந்தாலும் குறிப்பாக மரபுசார்ந்த மருத்துவங்கள் உடலிலிருந்து தமது சிகிச்சையைத் தொடங்குவதில்லை என்பதை பார்க்க முடியும்.  நோய் அறியும் முறையாக மருத்துவங்கள் அவற்றுக்குள் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு மருத்துவமும் அதற்கே உரிய நோய் அறியும் முறையிலிருந்து தனக்கான சிறப்புத் தன்மைகளை வைத்திருக்கின்றன. அவை உடலை மட்டும் அளந்து பார்க்கிற பரிசோதனை கருவிகளோடு மட்டும் தமது மருத்துவத் தொழிலை செய்வதில்லை.

ALSO READ:FEAR -பயம்

                சற்று ஆழமாக அவற்றுக்குள் வேறு சில கதைகள் இருப்பதை நீங்கள் மருத்துவத்தை ஆய்வு செய்கிற போது பார்க்க முடியும். ஒரு மனிதன் ஒரு மருத்துவமனைக்குள் நுழைகிறார். ஒருவேளை சித்த மருத்துவமனையாக இருக்கும் என்றால் அந்த மனிதனுடைய உடல் அமைப்பில் தெரிகிற குறிகுணங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அந்த உடலுக்குள் இருக்கிற, உடல் கூறாக இருக்கிற, வாத, பித்த, கபத்தில் இருந்து அந்த மருத்துவத்தினுடைய சிகிச்சை முறை துவங்குகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாத, பித்த, சிலேத்துமம் என்கிற தன்மையில் அந்த மருத்துவத்தினுடைய சிகிச்சை முறை நோயறிதல் முறை துவங்குகிறது. ஒரு மனிதனுடைய வடிவம் எவ்வாறு இருக்கிறது? அந்த மனம் தனிம வகையைச் சேர்ந்த மனநிலையா? விலங்கு வகையைச் சேர்ந்த மனநிலையா? தாவர வகையைச் சேர்ந்த மனநிலையா?  அந்த மனமானது எப்படி இயங்குகிறது? அந்த மனதிற்கு ஏற்படும் நோய்  என்ன? அந்த நோயினுடைய தன்மை என்ன? மனம் அந்த உடலின் வழியாக எவ்வாறு வேலை செய்கிறது? என்று நுட்பமாக பிரித்துப் பார்க்கிற தன்மையோடு ஹோமியோபதி மருத்துவம் மனித உடலை மனிதனின் மனதை அந்த மனிதனின் உடலுக்கும் மனதுக்குமாக இருக்கிற நோய்க்கூறு வெளிப்பாடுகளை பகுத்து அந்த மனிதருக்கு சிகிச்சையை துவங்குகிறது. நோய் அறியும் தன்மையிலிருந்து வேலை செய்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சை முறை என்பதும் ஒரு மனிதனை தனக்கு சிகிச்சைக்காக உட்படுத்தும் போது அது மனிதனுடைய உடல் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவருக்கு சிகிச்சை துவங்காமல் அந்த மனிதனின் உடைய உடலுக்குள் இருக்கிற ஐம்பூதங்களின் இயக்கமுறை எவ்வாறு இருக்கிறது? அந்த ஐம்பூதங்களும் உடல் உறுப்புகளில் எவ்வாறு செயல்படுகிறது? அந்த ஐம்பூதத்திற்கும் உடல் உறுப்புகளுக்கும் இடையே இருக்கிற இணைப்பு என்ன? பிணைப்பு என்ன? துண்டிப்பு என்ன? என்கிற தளங்களிலிருந்து  நோயுற்ற துயரருக்கு சிகிச்சையை துவங்குகிறது அக்குபஞ்சர் மருத்துவம். சக்தி மருத்துவமாக இருக்கிற ரெய்கி மருத்துவமோ அல்லது பிராணிக் ஹீலிங் மருத்துவமோ இவ்வாறு இருக்கிற தன்மையிலேயே இயங்குகின்றன. உடலில் ஒரு சக்தி நிலை இருப்பதாகவும்  ஆரா என்ற பெயரில் அவை வழங்கப்படுவதாகவும் அவற்றின் குணங்கள் இவ்வாறு இருக்கின்றன என்றும் கூட வகுத்து வைத்திருக்கிற ,தொகுத்து வைத்திருக்கிற மருத்துவங்களாக ரெய்கி, பிரானிக் ஹீலிங் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவையும் உடலிலிருந்து சிகிச்சையை துவங்குவது இல்லை

ALSO READ:MEDICATION - HOME REMEDIES - வீட்டு வைத்தியம்

    உடலில் வெளிப்படுவது வெறுமனே  குறியீடுகள் மட்டும்தான். அந்த குறியீடுகளும் அந்த குணங்களும் மனிதனினுடைய உடல் சார்ந்தவை  தவிர மனிதன் என்பது வெறுமனே உடலில் மட்டும் இருக்கிற இயக்கம் அல்ல. மனித இயல்பு என்பது உடலைக் கடந்து சற்று ஆழமாக வேறு ஒன்றாக இருக்கிறது  என்பதை மருத்துவங்கள் புரிந்து வைத்திருக்கின்றன என்பது இன்று பரவலாக்கப்படாத இரகசியமாக இருக்கிறது என்பதாலேயே நாம் இதை பேசுகிறோம். வெறுமனே ஒரு பெண்மணிக்கு கர்ப்பப்பை இறங்குகிறது என்றால் அந்த கர்ப்பப்பையில் ஏற்பட்டிருக்கிற இறக்கம் என்பதை, கர்ப்பப்பையில் ஏற்பட்டிருக்கிற நகர்வு என்பதை உடல் சார்ந்த மாற்றமாக புரிந்து கொள்கிறோமா? அல்லது சற்று ஆழமாக வேறு ஏதும் அதற்குள் மருத்துவ கூறாக ஒளிந்து இருக்கிறதா? என்பதை நான் பார்க்க வேண்டும். நாம் அவ்வாறு பார்க்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்புவதுதான் இந்த உரையாடலின் நோக்கம். இறந்து கிடக்கிற ஒரு உடலுக்கு எல்லா உறுப்புகளும் இருக்கும். வேறு உரையாடலில் இதை நாம் பேசி இருக்கிறோம் என்று நினைவு இருக்கிறது. இறந்த உடலுக்குள் இருக்கிற இதயமும் உயிரோடு இருக்கிற ஒரு நபருக்கு இருக்கிற ஒரு இதயமும்  ஒரே தன்மை உள்ள இதயங்கள் தானா? என்றால் நிச்சயமாக அவை இரண்டும் ஒரே தன்மை கொண்டவை என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படி ஒரே தன்மை உடையவை அல்ல. ஒரு பொருளுக்குள் இருக்கிற வெறும் சதை தொகுப்பும் உயிரோடு இருக்கிற ஒரு உயிர் தன்மை இருக்கிற சதை இயக்கமும் வெவ்வேறானவை, வெவ்வேறு தன்மை கொண்டவை. அந்தத் தன்மையிலிருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய தன்மையுள்ள அணுகுமுறையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிகிச்சைகளுக்கு முன் இருக்கிற கட்டளை

ALSO READ:TRADITIONAL MEDICINE - மரபு மருத்துவம்

    ரபு சிகிச்சைகள் எல்லாமும் இவற்றை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அவற்றின் பின்னால் அவை செல்கின்றன. ஒரு மனிதனுக்கு தீராத காய்ச்சல் இருந்தாலும் கூட அந்த மனிதனினுடைய ரத்தம் பற்றியோ அந்த மனிதனினுடைய சிறுநீர் பற்றியோ மற்றும் மலம் போவது பற்றியோ சித்த மருத்துவமோ ஆயுர்வேத மருத்துவமோ அக்குபஞ்சர் மருத்துவமோ வேறு இன்னபிற மரபு சார்ந்த பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கோ அக்கறை இருக்காது. அக்கறை எல்லாம் அந்த மனிதனினுடைய உடல் வெப்பம் பற்றியது அல்ல. அந்த வெப்பத்தை உண்டாக்குவதற்கு அந்த மனித உடலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற நோய் தேக்கம் என்ன? காரணம் என்ன? என்பது பற்றியது. எல்லா மருத்துவங்களும் நோயை காண்பதை விடவும் நோய்க்கான முதன்மையை, அடி ஆழத்தை, நோய்க் காரணியை கண்டுபிடிக்கும் தன்மையோடு மரபுசார்ந்த மருத்துவங்கள் தனது நோய் அறியும் முறையை வைத்திருக்கின்றன. ஒரு நோய் ஏன் ஏற்படுகிறது? நவீன மருத்துவ நண்பர்களோடு பேசுகிற போது ஒரு மனிதனுக்கு ஏன் காய்ச்சல் ஏற்படுகிறது? என்று பேசுகிறபோது, மருத்துவ ஆய்வுகளை படிக்கிற போது அவர்கள் சொல்வது அந்த நோய்க்கான காரணம் அந்த உடலில் ஏற்பட்டிருக்கிற ஒரு கிருமித்தொற்று. ரத்தத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது அந்த ரத்தத்தில் இயல்பு முறை கோளாறு ஏற்படுகிறது என்றால் எதற்காக அங்கு ரத்தம் தேங்குகிறது? கட்டியாகிறது என்று ஆய்வு நூல்களை தேடினோம் என்றால் அது ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கிற அடைப்பு. இதுதான் அந்த உடல் தோற்றத்திலிருந்து காரணத்தைக் கண்டுபிடிக்கும் அதிகபட்ச எல்லையாக மனிதனினுடைய அறிவு நவீன மருத்துவ வடிவில் இருக்கிறது. இது ஒருபுறம்.

                                                                                                                        தொடரும்....

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...