ஒவ்வொரு மருத்துவத்திற்கும் மனிதனை குணப்படுத்தும் வல்லமை இருக்கிறது
மாற்று மருத்துவத்தில் மனிதனினுடைய பார்வை சற்று விசாலமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மனிதனுக்கு ஏன் காய்ச்சல் ஏற்படுகிறது? அல்லது ஒரு மனிதனுக்கு ஏன் கட்டி ஏற்படுகிறது? என்று மாற்று மருத்துவ ஆய்வு நூல்களில் பார்க்கிறபோது சற்று ஆழமாக அவை பேசுகின்றன. ஒரு மனிதனின் உடலில் ஏற்பட்டிருக்கிற உடல்சூடு பொதுவாக பித்த உடம்பில் சூடு சற்று முதன்மையானதாக இருக்கும். வாத உடல் கட்டமைப்பு ,பித்த உடல் கட்டமைப்பு, கப உடல் கட்டமைப்பு என்று மரபு சார்ந்த மருத்துவங்கள் இந்திய மரபில் உடல் கட்டமைப்பை பிரித்து வைத்திருக்கிறது. அதில் பித்த உடல் கட்டமைப்பைப் பெற்றிருக்கிற உடலுக்கு சற்று சூடு அதிகமாக முதன்மையாகக் தெரியும். மற்ற இரண்டு வகையான உடல் கட்டமைப்பில் இந்த உஷ்ணத்தின் அளவு சற்று முன்பின் பார்க்கமுடியும். இந்த வாத, பித்த, கப உடல் கட்டமைப்பிற்குள்
ஏற்பட்டுள்ள மாற்றத்தை மையமாக வைத்து மாற்றத்தின் அடிப்படையாக நிகழ்கிற இயங்கும் முறையில் இருக்கிற ஒவ்வொன்றையும் கூறுகளாகப் பிரித்து காய்ச்சலின் காரணத்தை மரபு மருத்துவங்கள் தொகுக்கின்றன.
ALSO READ:SUICIDE(தற்கொலை)
மிக ஆழமான தன்மையோடு, விசாலமான பார்வையோடு அவை பயணிக்கின்றன. இந்த இரண்டு வகையான சிந்தனை ஓட்டத்தில் ஒரு நவீன மருத்துவ சிந்தனை ஓட்டத்தில் பார்க்கிறபோது ஒரு நவீன மனிதனின் அறிவியல் என்பது சற்று விசாலமான எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் நவீன மருத்துவத்தின் ஆய்வுகள் என்பது பொருள் சார்ந்த நிலையிலிருந்து பொருளுக்கு காரணமாக இருக்கிற இன்னொரு பொருளைத் தேடிப் பயணிக்க நிலையை நோக்கி நகர்கிற பார்வையில் இருப்பதால் அதற்கு இணையாக இன்னொரு புறத்தில் இருக்கிற மாற்று மருத்துவங்கள், மரபு சார்ந்த மருத்துவங்கள் பொருள் சார்ந்த நிலையிலிருந்து சற்று ஆழமாக பொருளுக்கு காரணமாய் இருக்கின்ற வேறு ஒன்றை நோக்கி தமது பார்வையை செலுத்தி ஆய்வு செய்து அவற்றை ஆவணப்படுத்தி இருக்கிற ஆவணங்களை நாம் பார்க்கிறோம். இந்த இரண்டையும் நேர்மையாக ஒப்பிடவும் நேர்மையாக சரிபார்க்கவும் நேர்மையாக செய்து பார்க்கவும் வேண்டும் என்கிற தன்மையோடு இந்த உரையாடல் நாம் செய்கிறோம்.
எந்த மருத்துவத்தினுடைய ஆவணங்களையும் தவிர்த்து விடாமல் உயர்த்திப் பிடிக்காமல் ஒவ்வொரு மருத்துவமும் மனித உடலை, மனித உடலுக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களை, நோய்க்கூறுகளை எவ்வாறு பார்க்கின்றன? அவை எவ்வாறு பார்க்கப்பட வேண்டும்? என்று கருதுகின்றன என்கிற தளத்தில் இருந்து ஒரு நேர்மையான விசாரிப்பு நிகழ்த்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் இதை பேசிக்கொண்டு இருக்கிறோம். அது மருத்துவத்தினுடைய பொறுப்பு. மருத்துவத்தின் உடைய முதன்மையான கடமை. ஏற்கனவே குறிப்பிட்டது போல உடலை வளர்ப்பது என்பது உயிரை வளர்ப்பதாக இருக்க வேண்டுமென்று திருமூலரின் உடைய செய்யுள். ஒரு மருத்துவம் என்பது வெறுமனே உடல் சார்ந்து இயங்குகிற தளத்தில் மட்டுமே இருப்பது போதுமானதல்ல என்கிற நிலையில் இரண்டு கேள்விகள் எனக்கு எழுகிறது. ஒன்று மருத்துவம் இவ்வாறு இருக்கிறது என்றால் உடல் சார்ந்த தளத்தில் இருப்பதை விடவும் சற்று ஆழமாக உடலைக் கடந்து உயிர் சார்ந்த தளத்தில் மருத்துவத்தினுடைய ஆய்வுகளும் நோயறியும் முறைகளும் இருக்கின்றன என்றால் அப்படியான மருத்துவங்களை, அப்படியான ஆய்வு முறைகளை நாம் விரிவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்கிறோமா? என்கிற கேள்வி எழுகிறது. செய்ய வேண்டும் அல்லது செய்பவர்களை அங்கீகரிக்க வேண்டும். எல்லோருக்கும் செய்கிற வாய்ப்பு இருக்கிறதா? என்பது இன்றைய காலச்சூழலில் நேரமும் வாய்ப்பும் குறைவாக இருக்கக்கூடும்.
ALSO READ:MEDITATION(தியானம்)
ஒரு மருத்துவத்தை நேர்மையாக விசாரிக்கிற ஒரு விசாரிப்பு முறையை அங்கீகரிக்கும் ஒரு மனோபாவம் நம்மில் பலருக்கு குறைந்திருக்கிறது. அவ்வளவு சீக்கிரமாக நாம் ஏற்றுக் கொள்வதில்லை ஒரு மருத்துவத்திற்குள் இருக்கிற நுட்பங்களை. ஆழமாக பேசுவோம், விவாதிப்போம். ஆனால் அந்த நேரத்தில் ஒரு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற போது இந்த ஆழமான விசாரிப்பும் ஆழமான பார்வையும் நமக்கு வேண்டும் என்பதை மறந்து விடுவோம். இப்படியான மன ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த உரையாடலினுடைய நோக்கம். ஒவ்வொரு மருத்துவமும் மாற்று மருத்துவமாக இருந்தாலும் அல்லது நவீன மருத்துவமாக இருந்தாலும் ஒரு மனித உடலை எவ்வாறு அணுகுகிறது? அந்த மனித உடலில் அவை வைத்திருக்கிற பார்வை என்ன? அவை ஏற்படுத்துகிற விளைவுகள் என்ன? என்கிற தன்மையிலிருந்து அந்த மருத்துவத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லா மருத்துவங்களும் மரியாதைக்குரியவைதான் என்றாலும் கூட அந்த மரியாதை என்பது அந்த மருத்துவத்தின் மீது இருக்கிற பயத்திலேயோ அந்த மருத்துவத்தின் மீது இருக்கிற புரியாத பகுதிகளின் மீது இருந்தோ வருவது நியாயமில்லாதது. அந்த மருத்துவத்திற்கு அது தேவையில்லாததும் கூட. நான் பயத்தில் இருந்து ஒரு மருத்துவத்தை போற்றுகிறேன் என்றால் அந்த மருத்துவம் எனது பயத்தை விரும்பாது. பயத்தில் இருந்து ஒரு மருத்துவத்தை நான் தூக்கிப் பிடிக்கிறேன் என்றால் அந்த மருத்துவம் என் பயத்தை எட்டி உதைத்து விடும் என்று நான் பார்க்கிறேன். அது எந்த மருத்துவமாக இருந்தாலும் சரி? திடீரென்று ஏதாவது நெருக்கடியான நேரத்தில் பலி வாங்கி விட்டால் என்ன செய்வது? என்று சித்த மருத்துவத்தை நாம் தூக்கிப் பிடிக்கிறேன் என்றால் எனக்கு தூக்கி பிடிப்பதற்கு வசதியாக இருக்கலாம். ஆனால் சித்த மருத்துவத்திற்கு அது பிடிக்காது. இது எல்லா மருத்துவத்திற்கும் பொருந்தும்.
நீங்கள் ஒரு மருத்துவத்தை உங்கள் பயத்திலிருந்து நம்புகிறீர்கள், உங்கள் பயத்திலிருந்து தூக்கிப் பிடிக்கிறீர்கள், உங்கள் பயத்திலிருந்து போற்றுகிறீர்கள் என்றால் அது உங்களுக்கு வேண்டுமென்றால் வசதியாக இருக்கும். ஆனால் அந்த மருத்துவம் உங்களை பொருட்படுத்தாது. ஒரு உடல், உடலுக்குள் இருக்கிற குடல் என ஒவ்வொரு பகுதியாக முன் குடல், பின் குடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தொந்தரவுகள் , அவற்றிற்கான காரணங்கள் அங்கே சுரக்கிற சுரப்பிகள், இப்படியாக ஒவ்வொரு செல்லையும் தொகுத்து, பகுத்து, அவர்கள் பார்த்து வைத்திருக்கிற ஒரு பெரிய பணி என்பது நவீன மருத்துவத்தில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட மருத்துவத்தை நாம் வெளியிலிருந்து மலிவான காரணத்தை வைத்துக் கொண்டு போற்றவோ தூற்றவோ செய்வது என்பது அந்த மருத்துவத்திற்கு நாம் கொடுக்கிற அவமரியாதை என்று அந்த மருத்துவத்திற்கு தெரியும். எனவே மருத்துவம் என்பது மிகவும் நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆவணங்களை தன்பக்கம் வைத்திருக்கிறது எல்லா மருத்துவமும். அந்த ஆவணங்களில் இருக்கிற குறிப்புகளிலிருந்து ஆவணங்கள் முன்வைக்கிற விசாலமான விரிவான பார்வையில் இருந்து அந்த மருத்துவத்திற்கு நாம் மரியாதையை கொடுக்க முடியும். அந்த மருத்துவத்தினுடைய ஆழமான தன்மைகளை பார்க்க முடியும். அதிலிருந்து அந்த மருத்துவத்தை நாம் உயர்த்திப் பிடிக்க முடியும்.
ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)
அப்படிப் பார்க்கிறபோது மனித உடலை மனிதனுக்கு வழங்கப்பட்ட உடல் என்பது மட்டும்தான் மனிதனா? அல்லது மனித உடலுக்கு பின்னால் சற்று ஆழமாக மனித உடலுக்குள் மருத்துவம் செய்வதற்கு வேறு பகுதிகள் இருக்கின்றனவா? வேறு காரணங்கள் இருக்கின்றனவா? வெறுமனே ஒரு கிருமியோ ஒரு பொருளோ ஒரு துகளோ உடலில் ஏற்படுத்துகிற விளைவுகள் மட்டும்
தான் நோயா? அந்த நோய்க்கு அந்த துகள் தான் காரணமாக இருக்கிறதா? என்று தோற்றங்கள் சார்ந்து விசாரிக்கிற மருத்துவ விசாரணை என்பது இன்னும் ஆழமாக, இன்னும் அகலமாக, விசாரணை செய்து வைத்திருக்கிற மரபு மருத்துவங்களை ஒப்பிடும்போது இன்னும் பயணிக்க வேண்டிய பகுதியாக இருக்கிறது. ஒரு மனிதனுக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒவ்வொரு மாற்றமும் நோய்க் குறிகளும் குணங்களும் அந்த மனிதனின் உடல் சார்ந்தவை மட்டுமல்ல, அவை மனிதனுக்குள் ஆழமான வேறு வேறு பகுதிகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றம். அந்த மாற்றங்கள் காரணமாக அவை குறிகளாகவும் குணங்களாகவும் உடலில் வெளிப்படுகிறது என்கிற தன்மையில் மரபு சார்ந்த மருத்துவங்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு வியாதிக்கும் இப்படியான மரபுசார்ந்த மருத்துவப் பதிவுகள் இருக்கின்றன. இத்தகைய மரபு சார்ந்த மருத்துவங்களின் பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கிறபோது நவீன மருத்துவம் முன்வைக்கிற பொருள் சார்ந்த ஆய்வு என்பது இன்னும் நீண்ட தூரம் பயணிப்பதற்கு தேவை உள்ளதாக இருக்கிறது. அதை நவீன மருத்துவ ஆய்வாளர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.
நமது பரிந்துரை என்னவென்றால் நவீன மருத்துவமாக இருந்தாலும் மரபுசார்ந்த மருத்துவமாக இருந்தாலும் ஒரு நோயைப் பற்றி அவர்கள் வைத்திருக்கிற குறிப்புகளும் ஆவணங்களும் எவ்வாறு இருக்கின்றன? என்பதை பொதுவாக்க வேண்டும். அனைவரும் அதில் உரையாடிப் பார்க்க வேண்டும். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்தது, தேவை சார்ந்தது, அவசியம் சார்ந்தது அது ஒருபுறம். ஆனால் ஏதாவது ஒரு மருத்துவம் மட்டுமே உயர்ந்தது என்கிற பார்வையை நாம் தொடரக்கூடாது. ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒவ்வொரு நோய்க்கூறு பற்றி, உடல் மாற்றம் பற்றி, உடலுக்குள் நிகழ்கிற இயங்கு முறை பற்றி தெளிவான புரிதல் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மருத்துவமும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றன என்கிற நிதர்சனத்தில் இருந்து அந்த உண்மையிலிருந்து மனிதனைக் குணப்படுத்தும் ஆற்றல் வேறொரு மருத்துவத்திற்கு இருந்தால் அந்த மருத்துவம் குணப்படுத்தட்டும் என்று எல்லா மருத்துவங்களும் சொல்கின்றன. ஏனென்றால் மருத்துவ ஆவணங்கள் பரந்த விரிவான பார்வை உள்ளவை. எப்படியாவது மனிதன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்கிற நோக்கம் மருத்துவங்களுக்கு இருப்பதால் அவ்வாறு தான் பேச முடியும்.
ALSO READ:துயரரின் மருத்துவ தேர்வு,துயரருக்குரிய முதலுதவி
ஆக, எல்லா மருத்துவங்களும் விசாரிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் மருத்துவத்தினுடைய ஆவணங்கள் வெறுமனே தொகுப்பு செய்யுள்கள் அல்ல. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மனப்பாடப் பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை கடந்து போவது சரியானது அல்ல. ஒரு விரிவான உரையாடல் அதன் மீது மக்கள் மத்தியில் நடத்துவதற்கும் நடத்துபவர்களை அங்கீகரிப்பதற்குமான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது மாதிரியான இயக்கத்தில், தவிப்பில் இந்த உரையாடலை நாம் செய்துகொண்டு இருக்கிறோம். மருத்துவம் பற்றிய தத்துவார்த்த உரையாடல்களும் மருத்துவம் பற்றிய சிந்தனா முறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும் அவசியமானதாக இருக்கின்றது இருக்கிறது இந்த காலகட்டத்தில். மருத்துவ நண்பர்களோடு பேசும் போது சிக்கலை நான் பார்க்கிறேன். மருத்துவத்தைப் பற்றி உரையாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால் உடனடியாக அவர்கள் சார்ந்திருக்கிற மருத்துவம் உயர்ந்ததாகவும் மற்ற மருத்துவங்கள் பின்னால் இருப்பதாகவும் பேசுகிற வழக்கு அவர்களின் சிக்கலாக இருக்கிறது. அவற்றை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
மக்கள் மத்தியில் ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அக்கறைப்படுகிற ஒவ்வொரு மருத்துவருக்குமான தவிப்பு, மன அவா அந்த மனிதன் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை அவரை குணமாக்க வேண்டும் என்று தவிப்புள்ள ஒவ்வொரு மருத்துவரின் சிந்தனையும் இப்படித்தான் இருக்கிறது. மருத்துவங்கள் எல்லா மருத்துவங்களுக்கும் மனிதனைக் குணப்படுத்தும் பொறுப்பும் வாய்ப்பும் இருக்கிறது என்கிற தன்மையில் மருத்துவர்களும் மருத்துவங்களும் தனக்குள் ஆவணங்களை வைத்திருக்கின்றன. அந்த ஆவணங்களை பற்றி பேசுகிற, அந்த ஆவணங்களை பொருள்படுத்தி பேசுகின்ற உரையாடல் அதிகமானால் மட்டும்தான் ஒரு மருத்துவத்தின் புனிதங்கள் கடந்து, ஒரு மருத்துவத்தின் குறைபாடுகள் கடந்து மருத்துவத்தின் மையமான குணப்படுத்தும் புகழுக்குரிய பகுதியை நாம் கண்டுபிடிக்க முடியும். மனித சமூகத்திற்கு அது அவசியமானது. ஏனென்றால் எந்த துறையை விடவும் மருத்துவத்துறை மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது. எந்தத் துறையை விடவும் மருத்துவத்துறை மனிதனுக்கு அவ்வளவு உதவிகளை செய்யக்கூடியது.
எனவே மருத்துவத் துறையை தத்துவார்த்தமாகவும் மருத்துவத்துறையில் இருக்கக்கூடிய எல்லா நேர்மையான தளங்களை வைத்து விசாரிக்க விசாரிப்புகளையும் இந்த மனித சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இந்த மனித சமூகம் ஆமோதிக்க வேண்டும். முதன்மைப்படுத்த வேண்டும் என்கிற தேவை இருக்கிறது. இது வெறுமனே மருத்துவமாக ஒரு துறை சார்ந்த புரிதலாக இருக்கிற மன வடிவம் மாறவேண்டும் மனிதர்கள் மத்தியில். ஒரு இலக்கியவாதி மருத்துவத்தைப் பற்றி பேசிக் கொள்கிற சூழல் ஏற்படும் என்றால் அந்த இலக்கியவாதியின் மருத்துவ பேச்சு அவர் எந்த மருத்துவத்தை தொட்டு பேசுகிறாரோ அந்த மருத்துவத்தினுடைய புனிதங்களை போற்றும் தன்மையோடு பேசி நிறைவு செய்வது பார்க்கலாம். எந்த இலக்கியவாதியின் இலக்கிய குறிப்புகளும் எந்த படைப்பாளியின் படைப்புத் திறனும் அந்த மருத்துவத்தினுடைய தத்துவார்த்த பகுதிகளை தொடுவதில்லை என்பதை நான் பார்க்கிறேன். இது மனிதர்களுக்கு பொது விசாரிப்பில்
தான் ஏற்படும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் இலக்கியத்தைப் படிப்பது போன்று மருத்துவப் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சிறந்த சினிமா வழியாக ஒரு மருத்துவம் பரிந்துரைக்கப்படும் என்றால் அந்த சினிமாவைப் பார்த்து மருத்துவத்தை பெற்றுக்கொள்ளும் மனோபாவத்தை ஒரு ரசிகன் வளர்த்துக் கொள்வான் என்றால் அது ஆரோக்கியமான போக்கு அல்ல.
ALSO READ:நோய் தோற்றம்,நோய் தீரும் வழிமுறை
ஒவ்வொரு மருத்துவத்திற்கும் மனிதனை குணப்படுத்தும் வல்லமை இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு மனிதனையும் தான் பெற்ற குழந்தைபோல் பார்க்கிறது என்கிற தத்துவ பார்வையிலிருந்து மட்டும்தான் ஒரு மருத்துவத்தினுடைய குணமாக்கும் வல்லமையை இந்த மனித சமூகம் புரிந்து கொள்ள முடியும். அப்படியான கேள்விகளை இந்த மனித சமூகம் நம்மை சார்ந்து இருக்கிற, நம்மோடு இருக்கிறார் நண்பர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் உரையாடல் வடிவத்தில் ஏற்படும் என்றால் அது இன்னும் ஆரோக்கியமான நிலைக்கு பலம் சேர்க்கும் தன்மையோடு இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். அந்த வகையில் தொடர்ந்து மருத்துவத்தினுடைய மையமான பொருள் பற்றி நாம் பேசிக்கொண்டே இருப்போம். மருத்துவம் எப்போதும் மனிதனை வெறும் உடலாக பார்ப்பதில்லை என்று நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் பார்க்க முடியும் என்கிற பொருண்மையின் கீழ் இன்று நாம் பேசி இருக்கிற இந்த உரையாடலை இன்னும் விரிவான தன்மையில் பேசலாம் .
நன்றி.
No comments:
Post a Comment