மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள்
மருத்துவம் குறித்தான
உரையாடல் தொடர் நிகழ்வாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம். மருத்துவத்தின் வெவ்வேறு பரிமாணங்களை, மருத்துவத்தின் வெவ்வேறு அணுகுமுறைகளை பார்ப்பதும் பேசுவதும் இந்த உரையாடலின் நோக்கமாக வைத்திருக்கின்றோம். மருத்துவத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அப்படியான நோக்கத்தோடு எல்லா மருத்துவங்களும் செயல்படுகின்றன. இந்தப் புரிதலை மருத்துவம் பற்றிய தெளிந்த பகுதியை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற தளத்தில் இருந்து இந்த உரையாடல் நிகழ்த்தப்படுகிறது. மருத்துவங்கள் மனிதனின் மன அளவில், தனக்குத்தானே விளக்கம் சொல்லிக் கொள்கிற தன்மையோடு மட்டுமே பார்க்கப்படுகிறது.
ALSO READ:துயரரின் மருத்துவ தேர்வு,துயரருக்குரிய முதலுதவி
பொதுவாக மருத்துவங்கள் இரண்டு முறையில் இயங்குவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இரண்டு வகையில் இயங்குவதாக சொல்லப்படுகிற விளக்கங்கள் சரியானவை. ஆனால் போதுமானவையாக இல்லை. ஒன்று மருத்துவங்கள் மனிதனை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு பயன்படுகிற கலை அல்லது அறிவியல். இந்த வகையில் மருத்துவங்களும் ஆய்வுகளும் ஆவணங்களும் பகுக்கப்படுகின்றன, தொகுக்கப்படுகின்றன. இரண்டாவது வகையில் ஒரு மருத்துவத்திற்கு மாற்றாக வேறொரு மருத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் மனோபாவம். மனிதர்களை தனித்தனியாக விடுதலை செய்வது முதல் ஒரு மனித சமூகத்தைக் கூட்டமாக கரைத்தேற்றும் திறமை கொண்ட வல்லமை கொண்ட ஒரு அரிய பெரிய நுட்பம் ஒளிந்திருப்பது போன்று மருத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிற பாங்கு. மருத்துவத்திற்கு அத்தனை பெரிய வல்லமை இருக்கிறது என்றால் அந்த விருப்பமும் நம்பிக்கையும் மாற்றுக் கருத்துக்கு உரியது அல்ல, வரவேற்புக்கு உரியது தான். ஆனால் மருத்துவம் இந்த இரண்டையும் கடந்து, அன்றாடம் இயங்குகிற, செயல்படுகிற மனிதர்களுக்கு அவன் உடல் அளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அசௌகரியங்களை சரிசெய்து கொள்ளும் தன்மையில் துவங்கி மனிதனுக்குள் மிக ஆழமான பகுதிகளில் அந்த மனிதனுக்குள் மன அளவில், உயிர்ப்பு அளவில், ஆற்றல் அளவில் ஏற்பட்ட சிக்கல்களை களையும் பெரும் முயற்சியை மருத்துவங்கள் செய்கின்றன என்று நான் பார்க்கவேண்டி இருக்கிறது.
ALSO READ:நோய் தோற்றம்,நோய் தீரும் வழிமுறை
இந்தப் பார்வையை மனிதர்கள் பெருத்த நிதானத்தோடு இருந்தால் மட்டுமே பார்க்கக் கூடியதாக இந்தச் செய்தி இருக்கிறது. உடனடியாக நோய் தீர வேண்டும் என்கிற பரபரப்பிலோ, நான் பார்த்திருக்கிற மருத்துவம் இந்த உலகத்திலேயே தலை சிறந்த மருத்துவம் என்கிற ஆணவப் போக்கிலோ ஒரு மருத்துவத்தை புரிந்துகொள்ள முடியாது என்று நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மருத்துவமும் மனிதனின் வாழ்க்கை முறையை மனிதனுக்குள் சிதறிக் கிடக்கிற தன்மைகளை ஒன்றுபடுத்தி ஒரு நேர்த்தியான திசையில் நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன என்கிற புரிதலில் இருந்து மருத்துவத்தை நான் பார்க்கிறேன். எனவே சாதாரணமாக, மருத்துவம் தலை சிறந்த மருத்துவம் இது ஒன்று தான் என்கிற வேகத்தில் இருந்தும் அல்லது மருத்துவம் இப்படித்தான் இருக்கிறது, அப்படித்தான் இருக்கிறது என்கிற முடிவில் இருந்தும் மருத்துவத்தை பார்த்துவிட முடியாது என்பதை நான் அழுத்தமாக கூறுகிறேன்.
ஒரு மருத்துவம் மனிதனுக்கு என்னவெல்லாம் செய்யும் என்கிற மனிதனினுடைய அறிவு வரையறைக்கு அப்பாற்பட்டு மருத்துவம் இயங்குகிறது என்பதை மனிதர்கள் இன்னும் பார்க்காத நிலையிலேயே மருத்துவங்கள் இருக்கின்றன. மனிதர்கள் மருத்துவத்தை அதீத பற்றுதலிலிருந்து ஏற்றுக்கொள்வதும் அல்லது எதிர்மறையான அனுபவங்களிலிருந்து புறக்கணிப்பதுமான தளத்திலேயே மருத்துவங்கள் இன்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. மருத்துவங்களின் ஆவணங்களும் கூட, மருத்துவங்களின் தத்துவக் குறிப்புகளும் கூட இத்தகைய மதிப்பீடுகளில் இருந்தே வாசிப்பு செய்யப்படுவதால் மருத்துவத்தினுடைய ஆழமான நீரோட்டத்தை புரிந்து கொள்வது என்பது சிக்கலாகவே இருக்கிறது. மருத்துவத்தை புரிந்துகொள்வதற்கு மனிதர்களுக்கு ஒரு ஒருமை நிலை தேவைப்படுகிறது.
ALSO READ:இயற்கைகு திரும்புவது,நோய்களிலிருந்து விடுபட
மருத்துவத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு நிதானம் அவசியமாகிறது. உடல் நலம் குறைவாக இருக்கிறது. எனது உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்ள ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது. என் உடல்நலம் உடனடியாக மேன்மை செய்யப்படவேண்டும், சீராக்கப்பட வேண்டும் என்கிற தேவையும் நெருக்கடியும் அவசரமும் இருக்கிற ஒருவரால் ஒரு மருத்துவத்தினுடைய ஆழமான பகுதிகளை, தத்துவார்த்தமான பகுதிகளை புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அவர் தனக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய தேவையிலிருந்து, தனக்கு உடனடியாக தீர வேண்டும் என்கிற அவசரத்தில் இருந்து, தன் அசௌகர்யத்தினுடைய கனமான தன்மையிலிருந்து, தான் விடுபட வேண்டும் என்கிற வேகத்திலிருந்து ஒரு பொருளை தேர்வு செய்வது போல மருத்துவத்தை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படி தேவையில் இருந்தும் அவசரத்தில் இருந்தும் தேர்வு செய்கிற மருத்துவம் குறித்து அவர் தீர்க்கமான, நியாயமான, சரியான ஒரு முடிவுக்கு வந்து சேர முடியும் என்பது சாத்தியமில்லாதது. ஏனென்றால் அவசரத்தில் எடுக்கப்படுகின்ற எந்த ஒரு முடிவும் அறிவார்ந்த தளத்தில் சரியானதாக இருப்பதில்லை. தேவையில் இருந்து செய்யப்படுகிற எல்லா காரியங்களும் ஆக்கமானதாக நிறைவேறுவதில்லை. மருத்துவத்திற்கும் இந்த இரண்டு கோட்பாடுகளும் பொருந்தும்.
ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)
ஒரு மனிதன் மருத்துவத்தை புரிந்து கொள்வதற்கு தேவையும் அவசரமும் கடந்து அந்த மனிதனினுடைய நிதானமான ஒருமை முக்கியமானதாக இருக்கிறது. அவருக்குள் மையப்பட்டவராக இருக்க வேண்டும். அவர் மருத்துவத்தை போற்றுகிற நபராகவோ, மருத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிற நபராகவோ, மருத்துவத்திற்குள் இருக்கிற சாதகமான அம்சங்களை மெச்சுகிற நபராகவோ இருந்தால் கூட அவர் மருத்துவத்தின் உண்மையான தன்மையை தவற விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வெறுமனே மருத்துவம் ஒரு மனிதனை எவ்வாறு நேசிக்கிறதோ மருத்துவம் ஒரு மனிதனுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று கருதுகிறதோ, அந்த மருத்துவத்தினுடைய சாயலோடு அந்த மருத்துவர் அல்லது ஒரு மனிதன் தன்னை பொருத்திக் கொள்வார் என்றால் மருத்துவத்தினுடைய உண்மையான செயல்பாடு குறித்து அவருக்கு ஏதாவது ஒன்று பிடிபடக் கூடும். இன்று மருத்துவங்கள் இத்தகைய சாயல் உள்ள நபர்களுக்கு வந்து சேர்வதில் ஒரு பெரிய கருத்தியல் தடை இருக்கிறது.
ஒரு பெரும் முயற்சியின் வழியாகவும் பெரும் காத்திருப்பின் வழியாகவும் ஒரு மருத்துவரின் உந்துதல் காரணமாகவும் மருத்துவத்தினுடைய மெய்ப்பொருளைக் கண்டு கொள்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த தனிப்பட்ட பயிற்சியாளரோ அல்லது ஒரு மருத்துவ நம்பிக்கையாளரோ அதை செய்ய முடியும். ஆனால் மருத்துவம் பற்றி பொதுவான புரிதலும் பொதுவான அணுகுமுறையும் சமூகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் அவசரமான ஒரு நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது எந்த மருத்துவம்? எந்த மருத்துவத்தால் எல்லா நோய்களையும் தீர்க்க முடியும்? இடுப்புக்குக் கீழ் வலிக்கிறது. அதற்கு எந்த மருத்துவம் உதவி செய்யும்? எனக்கு சாப்பிட்டபின் ஏப்பம் விட சிரமமாக இருக்கிறது. அதற்கு எந்த மருத்துவம் தலை சிறந்த மருந்து கொடுக்கிறது? என்கிற அளவிலேயே மருத்துவத்தின் மீதான பார்வை என்பது சுருங்கி இருப்பது அழகானதல்ல. ஒரு சிந்தனை செய்கிற சமூகத்திற்கு இது போதுமானதல்ல.
ALSO READ:நலம்(health)
(நிறைய நுணுக்கங்களையும் நுட்பங்களையும்) ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே இருக்கிற தூரம் என்பது குறைந்து, ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே இருக்கிற தூரம் என்பது குறையத் துவங்கி இருக்கிற சிந்தனை இன்று பெருகி இருக்கிறது. ஆழமான சிந்தனையாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று உலகம் முழுவதும் கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களும் தமது மார்தட்டிக் கொள்கின்றன. எளிமையான வாழ்க்கை முறையை இயற்கை வழியில் கண்டுகொள்ள முடியும் என்று குறிப்புகளையும் ஆவணங்களையும் சேர்த்து தொகுத்து வைத்திருக்கிற, இயற்கையை நோக்கி மனிதக் கூட்டத்தை நகர்த்த வேண்டும் என்று முயற்சி செய்கிற இயற்கை வள சிந்தனையாளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிற சூழலும் இன்று இருக்கிறது. பொருளாதாரத்தில் பெரும் வல்லமையான தன்மையை இந்த சமூகம் அடைந்திருக்கிறது என்கிற சத்தமும் நமக்கு கேட்கிறது.
No comments:
Post a Comment