குழந்தைகள் நலம்
இது யாருக்கான உரையாடல் என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தைகள் செயல்பாடுடன் நாங்கள் இயங்குகிறோம். குழந்தைகள் செயற்பாட்டாளராக நாம் பயணிக்கிறோம் என்று சொல்கிறபோதெல்லாம் நான் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலான கேள்விகளில் இதுவும் ஒன்று. குழந்தைகள் செயல்பாடு என்றால் என்ன? என்று பொதுவாகக் கேட்பார்கள். பொதுவாகக் கேட்பார்கள் என்பது பெரிய நெருக்கடி ஆகாது. அது தெரிந்துகொள்வதற்காக கேட்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். அல்லது என்னை நானே சமாதானம் செய்து கொள்ளமுடியும். அப்படி கேட்டு முடித்தவுடன் குழந்தைகளை என்ன செய்வீர்கள்? என்று கேட்பார்கள். இது எல்லோரும் என்னிடம் கேட்டது. கிட்டத்தட்ட நான் குழந்தைகளோடு பயணிக்கிறேன் என்று, குழந்தைகளுக்காக வேலை செய்கிறேன் என்று நாம் பேசுகிற, பார்க்கிற, சந்தித்த அனைத்து நபர்களும் என்னை அறிமுகம் செய்து ஆரம்பித்தவுடன் குழந்தைகளை என்ன செய்வீர்கள்? குழந்தைகளுக்காக என்ன செய்வீர்கள்? என்று நான் சொல்லியே ஆகவேண்டும் அவர்களுக்கு. நான் குழந்தைகளுக்கு ஒன்றும் செய்வதில்லை. உண்மையிலேயே நான் குழந்தைகளுக்கு ஒன்றும் செய்வதில்லை. குழந்தைகளோடு வேலை செய்கிறேன் என்று நான் அறிமுகம் செய்து கொண்டாலும் குழந்தைகளுக்காக நான் எதுவும் செய்வதில்லை எதுவும் செய்யப்போவதில்லை இதுவரை எதுவும் செய்தது இல்லை. நான் அவர்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது குழந்தைகளுக்கு நாம் செய்வது ஒன்றும் இல்லை. நீங்கள் எதுவும் செய்து விடக்கூடாது என்பதுதான் என் வேலை என்று நான் சொல்வதுண்டு. இப்படித்தான் நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அனைவருக்குமான குணமாக இது மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ALSO READ:ID, EGO, SUPER - EGO
குழந்தைகளோடு வேலை செய்ய வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த கொந்தளிப்புகளை ஓரத்தில் வைத்து விடுங்கள் என்பது தான் என் முதல் பரிந்துரை. தொடர்ந்து குழந்தைகளினுடைய உரையாடல்களில், குழந்தைகள் பற்றி பேசுகிற கவுன்சிலிங் நிகழ்வுகளில், குழந்தைகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிற பள்ளிக்கூடங்களில், குழந்தைகளுக்காக நடத்தப்படுகிற விளையாட்டு கூடுகைகளில் நாங்கள் செய்வது குழந்தைகளுக்காக ஏதும் செய்வதல்ல. குழந்தைகளை வேறு யாரும் எதுவும் செய்யாமல் இருப்பது தான் எங்களது இலக்கு. அந்த தன்மையினால் தான் இந்த உரையாடலை நான் நடத்த வேண்டும், இந்த உரையாடலை நாம் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். ஆக, எதுவும் செய்யக்கூடாது. நான் என் குழந்தையை எதுவும் செய்துவிடக் கூடாது என்று கவனம் கொள்கிற பெற்றோர்கள் மட்டும்தான் இந்த உரையாடலில், இந்த வேகத்தில் பயணிக்க முடியும். இது அவர்களுக்கானது. இது எல்லோருக்கும் குழந்தைகளின் நலத்தை வெறுமனே குழந்தைகளின் பல் முளைப்பதையும் குழந்தைகள் பல் துலக்குவதையும் கூட முதன்மைப்படுத்திப்ம் பார்க்கிற வேகத்தில் உங்களது கேள்விகளோ உங்களது உரையாடலோ இருந்தது என்றால் நீங்கள் குழந்தைகளுக்காக, இன்னும் சிறிது காலம் உங்களுக்குத் தேவைப்படலாம் என்று நான் நினைக்கிறேன். என் குழந்தைக்குள் ஒரு அசைவை நான் பார்க்கிறேன். அந்த அசைவு என் பொருட்டு சேதமாகக்கூடாது என்று கருதுகிற ஒரு ஆசிரியர் இந்த உரையாடலுக்கு அவசியமானவர். என் குழந்தை ஒரு அதீதமான படைப்புத் திறன் கொண்டவனாக இருக்கிறான். என் குழந்தை அதீதமான படைப்புத்திறன் கொண்டவளாக இருக்கிறாள். அவர்களது படைப்புத் திறனை, அவர்களது மேன்மையை என் பொருட்டு நான் எங்காவது சேதம் செய்துவிடக்கூடாது என்று பார்க்கிற பெற்றோர்களுக்கு மட்டும்தான் இந்த உரையாடல். இந்த உரையாடலின் வேகம் அவர்களது வேகத்தில் ஒத்திசைவாக பயணிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தளத்தில் இருந்து நாம் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த வகையில்தான் இந்த உரையாடலினுடைய மையமான பகுதியாக அது இருக்கிறது. ஒரு பெற்றோர் ,ஒரு ஆசிரியர், ஒருகுழந்தை மீது அக்கறை கொண்ட குழந்தை செயல்பாட்டாளர், எவர் ஒருவரும் குழந்தைகளை நலமாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார் என்றால் குழந்தைகளை நலமாகப் பார்க்க முடியும் என்று நம்புவார் என்றால் எங்கிருந்து அதை துவங்குவது என்றால் குழந்தைகளுக்கு குழந்தைகள் நலமாக வேண்டும் குழந்தைகள் பலமாக வேண்டும் என்று விரும்புகிற, எவர் ஒருவரும் குழந்தைகளுக்காக ஏதும் செய்யாமல் இருப்பது தான் முதன்மையானது. குழந்தைகள் நன்றாக வரவேண்டும் என்று நீங்கள் அந்த குழந்தைக்கு ஏதாவது செய்தீர்கள் என்றால் நத்தை உள்ளிழுத்துக் கொள்வது போல அந்தக் குழந்தைகள் தன் உணர்வில் தங்களுக்குள் மேன்மையான ஒன்றை உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்க்க முடிகிறது.
ALSO READ:FEAR -பயம்
குழந்தைகளை புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அந்த காத்திருப்பு நமக்கு பழக்கம் இல்லாத காரணத்தினால் கொஞ்சம் கனத்ததாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் கூட நாம் குழந்தைகளை புரிந்துகொள்வதற்கு காத்திருக்க வேண்டும்.குழந்தைகளினுடைய அக உலகம் என்பது நிறைய உரையாடல்களைக் கொண்டிருக்கிறது. சமமான அளவில் மௌனங்களையும் கொண்டிருக்கிறது. நீங்கள் புறப்படுகிற போதே உங்கள் குழந்தை உங்களிடம் எதுவும் பேசாமல் நீங்கள் கிளம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? என்று தெரியாது. உங்கள் நண்பர் உங்கள் பக்கத்திலேயே இருப்பார். உங்களோடு பேசுவார், உங்களோடு பழகி இருப்பார்,உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு வேலையை செய்து வைத்திருப்பா,ர். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் உங்களை ஏமாற்றி விட்டார் என்று நீங்கள் அவரோடு சண்டை போட்ட காட்சிகள் கூட ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கும். "பக்கத்திலேயே இருந்தா,பக்கத்திலேயே இருந்தாங்க, என்னை ஏமாத்திட்டாங்க" என்று சகஜமான வாழ்க்கை முறையில் நாம் ஏமாந்த பொழுதுகள் அதிகம் இருக்கும். அதிகம் இருக்கும். நிறைய வயது வந்தோர்க்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். "என் நண்பர் பக்கத்திலேயே இருந்தார். அவர் போய் இதைச் செய்வார் என்று நான் நினைக்கல" என்று ஆண்டுக்கணக்கில் எல்லா செய்திகளையும் பகிர்ந்து கொண்ட ஒரு நண்பரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காலையில் எழுந்தவுடன் நீங்கள் வேகவேகமாக நடப்பதைப் பார்த்து, நிமிர்வதைப் பார்த்து, அமர்வதை பார்த்து, குளிப்பதை பார்த்து உங்கள் குழந்தை கண்டுபிடித்துவிடும் நீங்கள் இன்று வெளியில் கிளம்புகிறீர்கள் என்று. இந்த அனுபவம் குழந்தையைப் பெற்ற அனைவருக்கும் உண்டு. இந்த உணர்வு, உங்கள் நண்பரிடம் நீங்கள் கண்டுபிடிக்க முடியாததை பேசியதன் வழியாக, மௌனமாக இருந்ததன் வழியாக, நெருக்கமான பல பொழுதுகளில் பயணித்ததன் வழியாக ஒரு நட்பை உருவாக்கிய இடத்தில், நெருக்கமான நட்போடு பழகிய இடத்தில் நீங்கள் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியத்தை உங்கள் குழந்தைகள் எந்த மொழியும் இல்லாமல் நீங்கள் கிளம்பி கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் வேறொரு காரியத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்கிற உள்ளுணர்வு குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது மிக நெருக்கமான அனுபவம். அனைவருக்கும் இருக்கும்.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
காலையில் எழுந்தவுடன் "அப்பா கிளம்பிட்டீங்களா? அப்படின்னு குழந்தைகள் கேப்பாங்க. அம்மா கிளம்பிட்டீங்களா?னு குழந்தைகள் கேப்பாங்க". இந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கக்கூடும். இந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பதன் வழியாக குழந்தைகளிடமிருந்து என்ன பார்க்கிறீர்கள்? இந்த குழந்தைகளினுடைய நுட்பமான அறிவு எங்கிருந்து வருகிறது? இந்த அறிவை எவ்வாறு பெரிசாக்குவது? இந்த அறிவை எவ்வாறு விரிவு செய்வது? என்று நீங்கள் தேடுகிற போது சமூகம் வைத்திருக்கிற ஒரு பரிந்துரை அல்லது ஒற்றை வாய்ப்பு என்கிற அளவிற்கான பரிந்துரை இந்த அறிவை உடனடியாக கணித சமன்பாடுகளாகவும் விஞ்ஞான சமன்பாடுகளாகவும் மாற்றி விடுவது எவ்வாறு? என்பதுதான். இது அல்ல குழந்தைகள் நலம் என்பது. "ஏ குழந்த காலையில எந்திரிச்ச உடனே கண்டுபிடுச்சு விடுவா, நா
குளுச்சாலே கண்டுபிடுச்சு விடுவா,
பௌடர் போட்டாலே கண்டுபிடுச்சுவிடுவா, அதனால ஏ குழந்தைய பிளஸ் டூல சென்டம் வாங்க வச்சிருங்க" என்று புலம்புகிற, ஆதங்கப்படுகிற, கொந்தளிக்கிற தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன்.
ALSO READ:DESIRE - ஆசை
உங்கள் குழந்தை புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதிய உடன் அல்லது புத்திசாலித்தனமாக இருக்கிறார் என்று நீங்கள் கருதிய உடன் அந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களை நூற்றுக்கு நூறு வாங்க வைக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்குகிற உங்கள் மனநிலையை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உரையாடல். அப்படி மாற்றுகிற, மாற்ற தயாராக இருக்கிற ஒரு குழந்தை மீது அக்கறை கொண்ட ஒருவருக்கு இந்த உரையாடல் பயன்படும் என்று நான் பார்க்கிறேன். அவர்கள் பங்கேற்கிற உரையாடலாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என் குழந்தை வீட்டில் இருக்கிற போதே நான் கதவை திறந்தவுடன் கண்டுபிடித்துவிடுவாள் அம்மா வந்துட்டாங்க, அப்பா வந்துட்டாங்க என்று அப்பாக்களும் அம்மாக்களும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். சரி மகிழ்ச்சி. அவ்வளவு புத்திசாலி என் குழந்தை. சரி மகிழ்ச்சி. என்னோடு உரையாடிய பெற்றோர்கள் பலரிடம் இந்த கருத்து வந்திருக்கிறது. என்ன செய்யலாம்? அலுவலகத்துக்கு வருவார்கள் குழந்தை பற்றி பேச வேண்டும் என்று எங்களோடு பேசுவார்கள். பேசுகிறபோது என்
குழந்தை அற்புதமான புத்திசாலித்தனம் உள்ளவள். நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்தியவுடன் அப்பா வந்திருக்காங்கன்னு கண்டுபிடுச்சுடுவா. சரி, அம்மா வந்திருக்காங்கன்னு கண்டுபிடுச்சுடுவா. சரி, என்ன குழம்பு வச்சிருக்கீங்க என்று கண்டுபிடுச்சுருவா. சரி, எத்தனை விசில் வந்திருக்கு குக்கர்ல கண்டுபிடிச்சுடுவா,என்ன செய்யலாம்? ஆனா கணக்கு மட்டும் வரமாட்டேங்குது. எங்களுக்கு புரியாது. ஒரு குழந்தையினுடைய புத்திசாலித்தனம் கணக்கு வரவேண்டும் என்று நீங்கள் அழுத்துவது எந்த விதத்தில் நியாயம்? நாம் அழுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று பார்க்கிற பெற்றோர்களுக்கான உரையாடல் இது. நாம் அப்படித்தான் உரையாட வேண்டும்.
ALSO READ:EDUCATION FOR THE CHILD (குழந்தைக்கான கல்வி)
குழந்தைகளினுடைய புத்திசாலித்தனத்தை தயவுசெய்து கணிதத்திற்கான, விஞ்ஞானத்திற்கான, சமூக அறிவியலுக்கான மதிப்பெண் பெறும் இலக்காக மாற்றக்கூடாது. அது மாற்றக் கூடாது என்பது எதற்காக நான் பரிந்துரைக்கிறேன்? என்றால் சமூக அறிவியலும் விஞ்ஞானமும் கணிதமும் இந்த சமூகத்தின் விளைவுகளாக, இந்த சமூகத்திற்குள் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிற சாதனங்கள். இந்த சமூகம் ஒருவரை ஒருவர் திறமையை வைத்து , திறமை இருக்கிறவர்கள் எந்த இரக்கமும் இல்லாமல் ஒருவரை வீழ்த்தலாம் என்று கற்றுக் கொடுக்கிற சமூகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
தொடரும்...
No comments:
Post a Comment