குழந்தை நலம்
ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை
உங்களுக்கு திறமை இல்லை என்றால் நீங்கள் இன்றிலிருந்து வேலையை விட்டு நிறுத்தப்படுவீர்கள். அப்படியான சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வேலையை விட்டு நிறுத்தியவுடன் அதற்கு சொல்கிற ஒற்றை காரணம் உங்களுக்கு திறமை கிடையாது என்று இந்த சமூகம் வழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறது. திறமை இல்லை என்றால் உங்களுக்கு வசிக்கக் கூடாது, திறமை இல்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வரக்கூடாது, திறமை இல்லை என்றால் உங்களுக்கு தாகம் வரக்கூடாது ,ஏனென்றால் திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே உணவு கிடைக்கும். திறமை இருப்பவர்களுக்கு மட்டும் தான் தண்ணீர் கிடைக்கும். திறமை இருப்பவர்களுக்கு மட்டும் தான் இருப்பதற்கு வீடு கிடைக்கும் என்று இந்த சமூகம் உருவாக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறது அதற்கு ஆதாரமாக கணிதங்களையும் விஞ்ஞானங்களையும் சமூக அறிவியல்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்காக பாடத் திட்டங்களை வைத்திருக்கிறது. அதற்காக இலக்குகளை வைத்திருக்கிறது. அந்த இலக்கில் உங்கள் குழந்தையை பொருத்தக் கூடாது என்பதற்காக இந்த உரையாடல்.
ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)
உங்கள் குழந்தையினுடைய வெகுளித்தனமான அறியாமையிலிருந்து வெளிப்படுகிற குக்கர் சப்தத்தின் எண்ணிக்கைகளும் அப்பாவின் வாசனையும் அம்மாவின் வண்டி சத்தமும் அவர்கள் வெளிப்படுத்துகிற புத்திசாலித்தனம் இந்த சமூக கணிதங்களுக்குள்ளும் சமூக விஞ்ஞானங்களுக்குள்ளும் சிக்கக் கூடாது என்பதற்காக நாம் பேசவேண்டும்.ஆனால் சமூகத்தில் இப்படித்தான் நடக்கிறது. என் குழந்தை புத்திசாலித்தனமான இருக்கிறாள். ஆனால் அறிவியலில் மதிப்பெண் பெறவில்லை என்று புலம்புகிற பெற்றோர்களாக உங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த புலம்பலுக்கும் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கும் இடையில் ஒரு மென்மையான நூல் இருக்கிறது. இதற்குள் நாம் பேச வேண்டிய பகுதி இருக்கிறது. குழந்தைகளின் புத்திசாலித்தனம் என்பது வெறுமனே சமன்பாடுகளுக்குள் ஒளிந்திருப்பது அல்ல என்கிற ஒரு விரிவான தன்மையோடு குழந்தையினுடைய நலம் என்பது பேசப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த உரையாடலை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை
குழந்தையினுடைய புத்திசாலித்தனத்தை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வெறுமனே சும்மா இருக்க வேண்டும் என்பதுதான் நமது பரிந்துரை. உங்களுக்குள் நீங்கள் அமைதியாக, சும்மா இருக்க கற்றுக் கொண்டீர்கள் என்றால் குழந்தைகள் குறித்தும் உங்களால் அமைதியாக சும்மா இருக்க முடியும். இந்த அளவில்தான் குழந்தைகளுக்கான நலம் என்பது உரையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிற தன்மை இருக்கிறது. குழந்தைகளுக்காக என்ன செய்வது? குழந்தைகளுக்காக நீங்கள் என்ன செய்வது? என்று யோசித்த உடன் உங்களுக்கு நான் சொல்கிற பரிந்துரை நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருங்கள். அந்தவகையில் குழந்தைகளுக்காக சும்மா இருக்கும் உங்களது இருப்பு நிச்சயமாக ஒரு மேன்மையான குழந்தையை, புத்திசாலித்தனம் மிக்க குழந்தையை தனது புத்திசாலித்தனத்தில் இருந்து தன்னை மேன்மைப்படுத்தி கொள்கிற, வளர்த்துக் கொள்கிற ஒரு குழந்தையை உருவாக்கும் என்பதில் எந்த வகையிலும் மாற்றுக்கருத்தோ ஐயப்பாடோ இல்லை என்கிற அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .
தொடர்ந்து பேசுவோம் ...
No comments:
Post a Comment