குழந்தைகள் நலம்
பகுதி - 6
குழந்தைகளை எவ்வாறு புரிந்து கொள்வது? குழந்தைகளோடு இணக்கமான சூழலை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது? என்று சிந்திக்கிற பெற்றோர்களும் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தமக்கு குழந்தையின் மீது அதிக பொறுப்பும் அக்கறையும் இருப்பதை கடமையாக கொண்டிருக்கின்றனர். இந்த கடமை உணர்வு என்பது அந்தக் குழந்தையை அவர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்று திட்டமிடுகிறார்களோ அவ்வாறு வளர்த்து விடுவது என்கிற அளவிலேயே இந்த கடமை உணர்வு இருக்கிறது. இன்னும் குறிப்பாக இந்த கடமை உணர்வு பற்றி குழந்தை வளர்ப்பின் மீது நாம் பார்க்கிற போது அந்தப் பெற்றோர் தான் என்னவாக இருந்திருக்க வேண்டும்? என்று விரும்புகிறாரோ, தன்னால் எது இயலவில்லை? என்று கருதுகிறாரோ, சமுதாயத்தில் நாம் தான் வெற்றி பெறவில்லை நம் குழந்தையாவது வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்கிறாரோ அந்த முயற்சியின் வடிவத்திலேயே, அந்த முயற்சிக்கு இசைவாக அந்த குழந்தையை வளர்ப்பது கடமையாக பார்க்கப்படுகிறது.
ALSO READ:இயற்கைகு திரும்புவது,நோய்களிலிருந்து விடுபட
குழந்தை வளர்ப்பு என்பது சமூக வழக்கங்களில் ஒன்றாக பார்க்க முடியும். குழந்தையை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும்? என்று காலகாலமாக சமுதாய மக்கள் அவர்கள் சார்ந்திருக்கிற மரபிற்கு உட்பட்டு குழந்தை வளர்ப்பு முறையை வைத்திருக்கிறார்கள். இந்திய எழுத்தாளர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர் ராகுல்ஜி. இந்திய மொழிகளில் நிறைய மொழிப்புலமை உள்ளவர். வெவ்வேறு மொழிகளில் படிக்க, எழுத, பேச, அதில் இலக்கியங்கள் படைக்க என்று மொழிகளுக்குள் நிறைய திறமை உள்ளவர். அதன்பொருட்டு நிறைய வாசிப்பும் வரலாற்று ரீதியில் நிறைய ஆய்வுகளையும் நமது இலக்கியங்கள் வழியாக இந்த சமூகத்திற்கு தந்தவர். அவர் எழுதிய புத்தகங்களில் குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் வரிசையில் வால்கா முதல் கங்கை வரை என்று ஒரு புத்தகத்தை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். வால்கா முதல் கங்கை வரை என்கிற புத்தகத்தினுடைய மையப்பொருள் சமூக வளர்ச்சி நவீனம் அடைவது எவ்வாறு நிகழ்கிறது? என்கிற அடிப்படையில் அந்த புத்தகத்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். அது ஒரு நாவல் போல அந்த புத்தகம் படைக்கப்பட்டிருக்கும். ராகுல்ஜி இந்த புத்தகத்தினுடைய கதாபாத்திரங்கள் குறித்து அந்த புத்தகத்தினுடைய செய்திகளை விளக்கிச் சொல்வதில் நேர்த்தியான பல்வேறு நுட்பங்களை பதிவு செய்திருப்பார். அது மிகக் குறிப்பாக ஒரு குழந்தை வளர்ப்பு முறையை குறிப்பிடுகிறபோது தாய்வழிச் சமூகமாக, தாய் தன் குழந்தையை பராமரிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு ஒரு சமூகம் வளர்ந்தது என்கிற பதிவை அந்த புத்தகத்தில் அவர் கற்றறிந்த வரலாற்று சமூக ஆய்வுகளோடு ஒப்பிட்டு ஒரு செய்தியை பதிவு செய்திருப்பார். இது முழுக்க எல்லா சமூகங்களுக்கும் இந்தப் பொருத்தம் இருந்திருக்கிறது. இருக்கிறது.
ALSO READ:உயிர்ப்பு நிலை பிறழ்வு , மருத்துவர்களுக்கான பரிந்துரை
ஒவ்வொரு சமூக அறிவு இருக்கிற மனிதர்களிடையே உள்ள வாழ்க்கை முறை குழந்தை வளர்ப்பை தனக்கே உரிய மரபோடு வைத்திருக்கிறது. அந்த மரபிற்கு சில நல்லது, கெட்டது என்கிற வரையறைகளும் இருக்கின்றன. அந்த வரையறைக்கு உட்பட்டு ஒரு தாயோ அல்லது தந்தையோ ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதில் பங்காற்றுகிற நிகழ்வு என்பது குழந்தை வளர்ப்பில் இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் குழந்தை எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும்? என்று சங்க இலக்கிய பாடல்கள் இருக்கின்றன. தந்தை தன் குழந்தைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று திருக்குறள் பதிவு செய்து வைத்திருக்கிறது.
ALSO READ:நோயற்ற வாழ்வு
குழந்தைக்கு கல்வி அறிவு கற்றுத்தருவது தந்தையினுடைய
கடமை என்று புறநானூற்றுப் பாடல்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றன. இவ்வாறு குழந்தைக்கு
அன்பை யார் சொல்லித் தரவேண்டும்? அறிவை யார் சொல்லித் தரவேண்டும்? சமூக உறவுகளை யார்
சொல்லித் தரவேண்டும்? என்கிற வேறுவேறு வரிசைகளை குழந்தை வளர்ப்பு என்கிற பட்டியலின்
கீழ் வைத்து குழந்தை வளர்க்கும் முறையை இந்த சமூகம் செய்து வந்திருக்கிறது. அவ்வாறு
செய்து வந்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் வழியாக வரலாறு வழியாக நாம் பார்க்க முடிகிறது.
குழந்தை வளர்ப்பு என்றவுடன் இலக்கியங்களும் வரலாறும் கதைகளின் வழியாக. ஆவணங்களின் வழியாக
எவ்வகையான குழந்தை வளர்ப்பை செய்து வந்திருக்கின்றன? மேலும் எவ்வகையான குழந்தை வளர்ப்பு
முறையை பரிந்துரைக்கின்றன? என்கிற அடிப்படையிலேயே குழந்தை வளர்ப்பு புரிந்துகொள்ளப்படுகிறது.
ALSO READ:குணமளிப்பவர்(HEALER)
ஒரு குழந்தையின் நலம் என்கிற தலைப்பின் கீழ் உரையாடுகிறபோது
சமூகம் வைத்திருக்கிற மரபுசார்ந்த சமூகத்திற்கு இணக்கமான குழந்தை வளர்ப்பு முறையை மட்டும்
இந்த குழந்தை நலம் என்கிற பகுதியில் நாம் பேசுவதற்கு இல்லை. குழந்தை வளர்ப்பு குறித்து
தாவோ ஒரு தங்கக் கதவு என்கிற ஒரு புத்தகத்தில் தத்துவ ஆய்வாளர் ஓஷோ ஒரு குழந்தையை பற்றி
குறிப்பிடுகிறார். அந்த குழந்தை அவர் உருவாக்கியிருக்கிற சமூகத்தில் அது கம்யூன் என்று
அழைக்கப்படுகிற சமூகமாக அடையாளம் காணப்பட்டது. அவர் உருவாக்கிய சமூகத்தில் ஒரு குழந்தை
எவ்வாறு வளர்கிறது? என்பதை சுட்டிக் காட்டுவதற்காக அவர் ஒரு குழந்தையை குறிப்பிட்டுச்
சொல்வார். அந்த குழந்தையின் பெயர் சித்தார்த். சித்தார்த்துக்கு அந்த சமூகத்தில் எல்லா
வீடுகளுக்கும் செல்வதற்கு அனுமதி உண்டு என்று அந்தக் குழந்தையை பற்றி ஓசோ குறிப்பிடுகிறார்.
அந்த சமுதாயம் முழுவதும் ஒரு நூறு, இருநூறு பேர் இருக்கிற ஒரு குடியிருப்பு பகுதியில்
ஒரு குழந்தை ஒரு வீட்டிற்கு சொந்தமான குழந்தையாக இல்லாமல் எல்லா வீடுகளுக்கும் சென்று
வரக்கூடிய குழந்தையாக ஒரு குழந்தை இருப்பதாக குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசுகிறபோது
அவரது உரையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்(HOPELESS PATIENT)
அந்தக் குழந்தையை பற்றி, சித்தார்த் பற்றி பேசுகிறபோது
குறிப்பிட்டு சொல்கிற ஒரு செய்தி அந்தக் குழந்தை சித்தார்த் எந்த வீட்டிற்கு சென்றாலும்
கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் கலைக்கப்பட்டு அந்த வீட்டு உறுப்பினர்கள்,
அந்த வீட்டின் விருந்தினர்கள், போல அந்நியப்பட்டு விடுவார்கள். சித்தார்த் மொத்த விளையாட்டு
பொருட்களையும் அந்த வீடு முழுவதும் பரப்பி வைத்து அது தன் வீடாக மாற்றிக் கொள்கிற சாதுரியம்,
சாமர்த்தியம் சித்தார்த்துக்கு இருந்தது என்று அந்தக் குழந்தையின் துடிப்புத்தனம் பற்றி
ஓஷோ குறிப்பிடுகிறார். இப்படியான சுதந்திரம் குழந்தை வளர்ப்பு முறையில் இருக்க வேண்டும்
என்பது குறிப்பிட்டு சொல்வதற்காக சித்தார்த் பற்றி செய்திக்குறிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது ஒரு வகையான குழந்தை வளர்ப்பு முறை. குழந்தையை இவ்வாறு தான் வளர்க்க வேண்டும் என்று
சமகாலத்தில் இருக்கிற அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு விதமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment