குழந்தைகள் நலம் பகுதி - 7
சமீபத்தில் ஒரு
இலக்கிய மாத இதழை படிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிறார்களுக்கான இலக்கியங்கள்
படைக்கப்பட வேண்டும் என்று அந்த மாத இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. சமகாலத்தில் சிறார்களுக்காக,
குழந்தைகளுக்காக இலக்கியங்களை படைக்கிற இலக்கிய படைப்பாளர்களினுடைய கருத்துக்களை தொகுத்து
பதிவு செய்து வைத்திருந்தது. ஒரு குழந்தை எவ்வாறு வளரவேண்டும்? என்பதில் ஒவ்வொரு குழந்தை
செயல்பாடு செய்பவரும் குழந்தை செயல்பாட்டாளரும் வெவ்வேறு கருத்துக்களை பதிவு செய்து
வைத்திருக்கிற செய்திக்குறிப்பு அந்த இலக்கிய மாத இதழில் பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில்
குழந்தைகள் எவ்வாறு கற்பித்துக் கொடுக்கப்படுகின்றன? ஒரு குழந்தைக்கு செய்திகள் எவ்வாறு
கடத்தப்படுகிறது? ஒரு கல்வி முறை குழந்தைக்கு எவ்வாறு உதவி செய்கிறது? என்றெல்லாம்
கூட குழந்தை வளர்ப்பு முறையாக குழந்தை வளர்ப்பு குறித்து ஒரு விரிவான பதிவை அந்த மாத
இதழ் பதிவு செய்திருத்தது.
ALSO READ:CHILD HEALTH PART - 5 குழந்தை நலம் பகுதி -5
குழந்தை வளர்ப்பு இவ்வாறாக வேறுவேறு தன்மை கொண்ட, முகம் கொண்ட வளர்ப்பு
முறைகளாக நாம் பார்க்க முடிகிறது. கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ஏழு குழந்தைகள், எட்டு
குழந்தைகள் இருந்த வாழ்க்கை முறை இருந்தது. ஒரு ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய
சமூகத்தில் ஒரு வீட்டில் சாதாரணமாக, சராசரியாக ஒரு வீட்டில் ஒரு கிராமத்து வாழ்க்கை
முறையில் ஆறு பேர், ஏழுபேர் குழந்தைகளாக அந்த வீட்டினுள் இருப்பார்கள். அந்த ஏழு குழந்தைகள்
பற்றி பெற்றோர்களுக்கு ஒரு கவனம் இருப்பதை தாண்டி பெரிய அக்கறை ஒன்றும் இருக்காது.
ஒரு வீட்டில் பிறக்கிற போது 12 குழந்தைகள் இருப்பார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு
பிறகு கணக்கெடுத்துப் பார்த்தால் அந்த வீட்டில் ஐந்து குழந்தைகளோ ஆறு குழந்தைகளோ மிஞ்சி
இருப்பார்கள். மீதமிருக்கிற குழந்தைகள் இறந்து போயிருப்பார்கள். நோய்வாய்ப்பட்டு இயல்பாக
இல்லாத குழந்தைகளாக இருப்பார்கள்.
ALSO READ:CHILD HEALTH PART - 4 குழந்தைகள் நலம் பகுதி - 4
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு இந்திய சமூகம்
ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இந்த சமூகத்தில் இருக்கின்ற குழந்தை
வளர்ப்பு முறை என்பது குழந்தைகள் வருவதும் போவதும் ஒரு குடும்பத்தில் நடக்கிற இயல்பான
ஒன்றாக இந்த சமூகம் கருதி இருந்த வாழ்க்கை முறையும் இருந்திருக்கிறது. இப்படியான ஒரு
குழந்தை வளர்ப்பு முறையும் நாம் பார்க்கமுடிகிறது. தன் குழந்தைகளை பிரபஞ்சத்தில் வாழ்கிற
சக உயிர்கள் பாதுகாக்கிற முறை கவனத்திற்குரியது. குழந்தைகளை ஒரு குருவி தான் சேகரித்து
வைத்திருக்கிற தானியங்களை உணவுக்காக தன் குஞ்சுகளுக்கு கொண்டுவந்து கொடுக்கிற ஒரு வளர்ப்பு
முறையை நாம் பார்க்கமுடியும். தனது முட்டையை இன்னொரு பறவையின் கூட்டில் ஒளித்து வைத்திருக்கிற
பறவைகள் இருக்கின்றன என்று பறவைகள் பற்றிய ஆய்வு பதிவு செய்கிறது. இது ஒரு வகையான தன்
குஞ்சை வளர்க்கிற முறையாக பாதுகாக்கிற முறையாகவும் நாம் பார்க்க முடிகிறது.
ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்
பாலூட்டி இனங்களில் கங்காரு போன்ற இன உயிர்கள்
தன் குழந்தையை தன்னோடு தூக்கி சுமக்கிற வளர்ப்பு முறையை இன்றும் நாம் காண முடிகிறது.
குரங்குகள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவி விளையாடுகிற போது தன் குழந்தைகளை
தன் மார்போடு ஏந்தி கொள்கிற, அவை பிடிப்பதில்லை தனது குழந்தைகளை குரங்குகள் எப்போதும்
பிடித்துக் கொள்ளாது. குழந்தைகள்தான் தாயையோ தந்தையையோ பிடித்துக் கொள்கிற வழக்கம்
குழந்தைகளில் காணமுடியும். அப்படி ஏந்திக் கொள்கிற குழந்தை பாதுகாப்பு முறை பார்க்க
முடிகிறது. இவ்வாறாக உயிர்களில் இருந்து குழந்தை வளர்ப்பு முறை ஒரு தன்மையோடும் சமூக
அளவில் மரபு சார்ந்து குழந்தை வளர்ப்பு முறை ஒரு தன்மையோடும் இருப்பதை காண முடிகிறது.
இத்தகைய வளர்ப்பு முறைகளுக்கு உட்பட்டுத்தான் நாம் குழந்தை வளர்ப்பு முறையை பற்றி பேசுகிறோமா?
என்றால் இந்த வளர்ப்பு முறைக்கு அப்பாற்பட்டு குழந்தையினுடைய வளர்ப்பு நிகழ்த்தப்பட
வேண்டும் என்று நாம் பேசுகிறோம். இந்த இருவேறு வளர்ப்பு முறைகளில் நாம் பார்க்கக்கூடிய
மிக நுட்பமான வேறுபாடுகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் வழியாக இந்த வளர்ப்பு முறை நாம்
பரிந்துரைக்கிற முறை எத்தகையது? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
ALSO READ:மருத்துவரின் பொறுப்பு,அணுகுமுறை
இயற்கை சார்ந்து வாழ்கிற, இயற்கை வழங்கியிருக்கிற அறிவிலிருந்து தன் வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்கிற உயிர்கள் ஒரு வகையான குழந்தை வளர்ப்பு முறையை வைத்திருக்கின்றன. அவைகளுக்கு இயற்கை எவற்றை வழங்கி இருக்கிறதோ, அந்த வளர்ப்பு முறைக்கு வளர்ப்பு வரையறைகளுக்கு உட்பட்டே அந்த உயிர்களின் வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது. ஒரு கோழிக்குஞ்சு தனது தாய் கோழியிடமிருந்து இரையைப் பெற்றுக்கொள்வதும் பாதுகாப்பை தேடி கொள்வதுமாக நடக்கிற இந்த விளையாட்டு, தன் பாதுகாப்பு கருதி நடக்கிற அணுகுமுறை என்பது காலத்திற்கும் மாறாத நிரந்தரமாக வரையறுக்கப்பட்ட இயற்கை அறிவாக இருக்கும். காடுகளில் வாழ்கிற விலங்குகளில் காண்கிற போது தன் குட்டிகளை பராமரிக்கிற புத்திசாலித்தனம், ஒரு குறிப்பிட்ட காலம்வரை தன்னோடு வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த குட்டிகளை காடுகளுக்கு தனித்து அனுப்புகிற வாழ்க்கைமுறையை விலங்குகள் இயற்கை தந்த அறிவோடு இயற்கையில் இணைந்திருக்கிற வாழ்க்கை முறையோடு அறிவு முறையோடு அவை அந்த வளர்ப்பு முறையை வைத்திருக்கின்றன. இது முழுக்க புதிதாக சிந்திப்பதற்கு புதிதாக உருவாக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அல்லது எந்த முயற்சியும் இல்லாத ஒரு குழந்தை வளர்ப்பு முறை.
ALSO READ:துயரரின் மருத்துவ தேர்வு,துயரருக்குரிய முதலுதவி
ஆட்டுக் குட்டிகள் எப்போதும் தன் குழந்தை
பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும் என்று திட்டமிடுவதே கிடையாது.அப்படி ஒரு ஆட்டுக்
குட்டியை நாம் பார்க்க் முடியாது. காட்டில் இருக்கிற சிங்கங்கள் இந்த காட்டிற்கு அடுத்த
அரசனாக என் பிள்ளை தான் வரவேண்டுமென்று அந்த
குழந்தை சிங்கத்திற்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தருகிற போக்கு சிங்கங்களிடம் கிடையாது.
அவை பிறக்கும். எவ்வாறு அவை இயற்கையை புரிந்து வைத்திருக்கின்றனவோ இயற்கை என்ன வாய்ப்பு?
அந்த சிங்கங்களுக்கு வழங்கி இருக்கின்றனவோ அந்த வாய்ப்பின் வழியாக மட்டுமே வாழ்நாள்
முழுதும் வாழ்ந்து கழிக்கிற ஒரு வழக்கம் காட்டில் இருக்கிற விலங்குகளுக்கு இருக்கிறது.இன்றும்
இருக்கிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் கூட அத்தகைய வளர்ப்பு முறை வாழ்க்கை முறையோடு இருந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள் மனிதகுல ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர்.
ALSO READ:நோய் தோற்றம்,நோய் தீரும் வழிமுறை
இந்த வகையான குழந்தை வளர்ப்பு முறை போதுமானது
அல்ல. இது ஒரு வரையறைக்கு உட்பட்டது. அந்த சிங்கத்திற்கு வேறு எதுவும் தெரியாது. அங்கு
பறக்கிற பறவைகளுக்கு இயற்கை வழங்கியிருக்கிற வாய்ப்பை தவிர வேறு எந்த ஒரு மாற்றுச்
சிந்தனையும் உருவாக்கிக் கொள்கிற வாய்ப்பு இல்லாத இலகுவான இயற்கையான வரையறைக்கு உட்பட்ட
எந்திரத்தனமான வாழ்க்கையாகவே அவை முடிந்து போகின்றன. இந்த வரையறுக்கப்பட்ட குழந்தை
வளர்ப்பு முறை நாம் பேசுவது அல்ல. நாம் பேசுவது வரையறைக்கு சற்று மேலானது. சற்று மேலானது
என்று நாம் பேசுகிற போது சமூகமாக மனிதன் வாழ்ந்து பழகியதற்குப் பிறகு மனிதன் தன் குழந்தைகளை
சமூகத்திற்கு உரிய கட்டமைப்போடு, சமூகத்திற்கு உரிய தயாரிப்புகளோடு வளர்க்கிற வளர்ப்பு
முறை. என்ன செய்தால் நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும்? இந்த சமூகத்தில், என்று துவங்கி
அந்த குடும்பத்திற்கு உரிய மரபு சார்ந்த குணங்களோடு ஒரு குழந்தையை வளர்க்கிற வளர்ப்பு
முறை. சமூகத்தில் இருக்கிற பெரியோர்களுக்கு எவ்வாறு உதவுவது? அல்லது அவர்களிடமிருந்து
எவ்வாறு அறிவை பெற்றுக் கொள்வது? தன் வயது உள்ளவர்களோடு எவ்வாறு பழகிக் கொள்வது? இணங்கிக்
கொள்வது? தன் அடுத்த தலைமுறையோடு எவ்வாறு உறவு பாராட்டுவது? என்று சமூகம் சார்ந்து
ஒரு குழந்தையை வளர்க்கிற வளர்ப்பு முறை விலங்கினத்தில் இருந்து சற்று மேலானது.ஆனால்
சமூகம் சார்ந்தது.
தொடரும்...
No comments:
Post a Comment