குழந்தை வளர்ப்பு முறை
முழுக்க சமூகம் வைத்திருக்கிற அந்தந்த காலத்திற்கு
உரிய மேன்மையான செய்திகளை, மேன்மையான வாழ்க்கை முறையை ஒட்டி வடிவமைக்கப்பட்ட வளர்ப்பு
முறை. ஒரு நாகரீகமான சமூக வழக்கம் இருக்கிற ஒரு கூட்டத்தில் ஒரு குழுவில் வளர்கிற குழந்தை
நாகரீகத்தின் உச்சத்தை எட்டும் பயிற்சியோடு அந்த குழந்தை வளர்க்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு
கற்றுத்தரப்படுகிறது. அப்படி கற்றுக் கொள்கிற வாய்ப்பு அந்த சமூகம் அந்த குழந்தைக்கு
வழங்குகிறது. இவ்வாறான குழந்தை வளர்ப்பு முறை சமூகத்தில் நாம் பார்க்க முடியும். எல்லா
சமூகத்திலும் காலம் காலமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கி
இருக்கிற, பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் இந்த
நிலைப்பாடு இருப்பதை பார்க்க முடியும். பண்பாடு சார்ந்து ஒரு குடும்பத்தில் ஒரு மூத்தவர்
ஒரு தலைமைப் பொறுப்பை வைத்திருக்கிறார் என்றால் அவரை தொடர்ந்து அந்த பொறுப்பிற்கு அடுத்த
குழந்தைகளை அடுத்த தலைமுறையை தயார் செய்வதில் ஒரு குழந்தை வளர்ப்பு முறையை நாம் பார்க்கமுடியும்.
ALSO READ:ID, EGO, SUPER - EGO
ஒரு ஊருக்கு தலைமை ஏற்கிற தலைமை பொறுப்பு ஏற்கிற கிராமத்து வாழ்க்கை முறை ஒரு வகையான குழந்தை
வளர்ப்பு முறையை குழந்தைகளுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலை சற்று மெருகேற்றப்பட்டு,
உயர்த்தப்பட்டு ஒரு குழந்தையினுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வதன் வழியாக உலகம்
முழுவதும் அந்தக் குழந்தை போற்றுதலுக்கு ஆளாகும் குழந்தையாக மாறும் என்கிற கல்வி முறை சார்ந்த குழந்தை வளர்ப்பு
முறையை பார்க்க முடிகிறது. குறிப்பாக கிபி 1990களுக்குப் பிறகு உலகம் முழுவதும் பொருளாதாரம்
சந்தைப்படுத்தப்படுகிற பொது சந்தை முறை வந்ததற்குப்
பிறகு குழந்தையினுடைய வளர்ப்பு முறை என்பது பெருவாரியாக எல்லா பண்பாட்துத் தளங்களையும்
தகர்த்தெறிந்து விட்டு ஒரு புதிய முறையை நோக்கி நகர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
1990க்கு முன்பு வளர்க்கப்பட்ட குழந்தை வளர்ப்பு விதமும் 90களுக்குப் பிறகு குழந்தை
வளர்க்கிற குழந்தை வளர்ப்பு முறையும் உலகம் முழுவதும் நாம் வரலாற்றுரீதியாக பிரித்து
பார்க்கிற அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1990களில் 91-92 காலங்களில் உலக பொருளாதாரத்தில்
ஏற்பட்டிருக்கிற மாற்றம் குழந்தை வளர்ப்பு முறையை பெரிதாக மாற்றி இருக்கிற மாற்றம்.
ALSO READ:FEAR -பயம்
அந்த மாற்றமானது பொருளாதாரத்தை, பொது சந்தை முறையினை
உருவாக்கியதன் விளைவாக ஏற்பட்டது. அந்த மாற்றத்திற்குப் பின்பு அதே காலகட்டத்தில் தகவல்
தொழில்நுட்ப அறிவு மிக வேகமாக வளர்ந்த நிலையில் குழந்தை வளர்ப்பு முறை மாற்றம் அடைந்தது.
நம்மூரில் குறிப்பிட்ட இயற்கை தந்த அறிவில் மட்டும் வரையறுத்து வாழ்ந்த வளர்ப்பு முறை
என்பது எந்த வளர்ச்சியும் காணாத ஒரு வாழ்க்கை முறை. குழந்தை வளர்ப்பு முறையை உள்ளடக்கிய
வாழ்க்கை முறை. அது பின்பு சமூகமாக மனிதன் வாழ்ந்து பழகியதற்கு பிறகு நடந்த மாற்றங்கள்
உச்சபட்சமாக தற்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தை மையப்படுத்தி அதன் வாயிலாக குழந்தை
வளர்ப்பு முறையை உருவாக்கி வைத்திருக்கிற ஒரு குழந்தை வளர்ப்பு முறையும் உலக பொருளாதாரத்தை
மையமாகக் கொண்டு வளர்க்கிற குழந்தை வளர்ப்பு
முறையும் இன்று நம் கண்முன்னே இருக்கிற குழந்தை வளர்ப்பு முறைகளாக இருக்கின்றன.
ALSO READ:GET RID OF MISERY - துயரங்களிலிருந்து விடுபட
உலகப் பொருளாதாரத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்கும்
நெருக்கமாக இருக்கிற தொடர்பைக் கொண்டு குழந்தை வளர்ப்பு முறை தீர்மானிக்கப்படுகிறது
என்று உங்களால் யூகிக்க முடிந்தால் நல்லது. ஆனால் இன்று குழந்தைகள் கையில் இருக்கிற
தொலைக்காட்சி பெட்டிகளும் தொலைபேசி கருவிகளும் குழந்தை வளர்ப்பில் எவ்வளவு செல்வாக்கு
செலுத்துகின்றன? என்பதை பார்க்கிற போது எளிமையாக இந்த உண்மையை உங்களால் உணர்ந்து கொள்ள
முடியும். தொலைக்காட்சிப் பெட்டிகளும் தொலைபேசி கருவிகளும் இன்ன பிற தகவல் தொழில்நுட்ப
கருவிகளும் குழந்தை கையில் வருவதற்கு துவங்கிய காலம் 1990. இதற்குப் பின்பு குழந்தை
வளர்ப்பு முறையை புதிதாக உருவாக்கிக் கொள்கிற தன்மையோடு இந்த சமூகம் உள்வாங்கிக் கொண்டது.
இந்த சமூகம் அதை ஏற்றுக்கொண்டது. அந்தப் புதிய குழந்தை வளர்ப்பு முறையை இந்த சமூகம்
தனக்கு தகுந்தாற்போல கற்றுக்கொண்டு குழந்தையை வளர்க்க துவங்கியது. அந்த வகையிலேயே கல்வி
முறைகள் இருந்தன. இன்றும் அப்படியே இருக்கின்றன. அந்த வகையிலேயே குழந்தைகளுக்கு பயிற்சிகள்
தரப்படுகின்றன. இந்த தகவல் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் மையப்படுத்திய இந்த இரண்டு
மையப் பொருட்களை உள்ளடக்கிய குழந்தை வளர்ப்பு முறை என்பது மனித சமூக வளர்ச்சிப் போக்கில்
வளர்ச்சி என்று கணக்கிட்டு கொண்டாலும் குழந்தையினுடைய அடிப்படை படைப்பாற்றலை குழந்தையினுடைய
சுயமரியாதையை என்ன செய்கிறது? என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.
ALSO READ:DESIRE - ஆசை
அது ஒரு குழந்தையை ஒரு கோழி குஞ்சு தன் குஞ்சுகளுக்கு
பயிற்சி அளிப்பது போல் இலகுவாக, இயற்கை சார்ந்து இருக்கிறதா? என்ற கேள்வியும் காடுகளில்
வாழ்கிற பாலூட்டி இனங்கள் தனது குட்டிகளுக்கு அக்கறை செலுத்துவது போல இன்றைய குழந்தை
வளர்ப்பு முறை இந்த பொருளாதார தகவல் தொழில்நுட்ப குழந்தை வளர்ப்பு முறை இருக்கின்றதா?
என்றால் இல்லை. வளர்ச்சி என்கிற வகையில் இவை மேற்பட்டவை. ஆனால் தரம் என்பதில் இவை பழைய
இயற்கை வாழ்க்கை முறைக்கு எந்த அறிவும் இல்லாத இயற்கை தந்திருக்கிற இயல் முறைக்கு உட்பட்ட
ஒரு ஜீவராசிகளின் அறிவின் அளவிற்குக் கூட தரமில்லாத வளர்ப்பு முறையாக மாறி இருப்பதை
பார்க்க முடிகிறது. இன்று கையில் வழங்கப்பட்டிருக்க பாடப் புத்தகங்களும் குழந்தைகள்
கையில் இருக்கிற தகவல் தொழில்நுட்ப அறிவு சார்ந்த செய்திக் குறிப்புகளும் கருவிகளும்
இந்த கருவிகளின் வழியாக காட்டப்படுகிற படங்களின் வழியாக குழந்தையை வளர்க்க வேண்டும்
என்கிற பெற்றோரின் மன நிலையும் ஒரு குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஆபத்தான அல்லது உடனடியாக
தலையிட்டு சரி செய்யப்பட வேண்டிய பகுதியாக நான் பார்க்கிறேன். ஒரு குழந்தை பொருளாதாரத்திற்காகவும்
தகவல் தொழில்நுட்பத்திற்காகவும் தயார்படுத்திக் கொள்ள முடியும். தயார்படுத்திக்கொள்ள
வேண்டும் என்று ஒரு சமூகம் கருதும் என்றால் அந்த சமூகம் அறிவு வளர்ச்சியில் மிகவும்
பின் தங்கி இருப்பதாகவே நான் யோசிக்கிறேன். இது சிறந்த குழந்தை வளர்ப்பு முறையாக இருக்க
முடியாது.
தொடரும்...
No comments:
Post a Comment