குழந்தை நலம் பகுதி
- 9
ஒரு குழந்தை வளர்ப்பு முறைக்குள் இருக்கிற மிகப் புனிதமான நிகழ்வு என்று குழந்தை வளர்ப்பை இந்திய சமூகம் கருதுகிறது. குறிப்பாக குழந்தை உடல் ரீதியாக வளர்கிற கருக்கொண்டு ஒரு பத்து மாதங்கள் தாயின் கருப்பையில் வளர்கிற ஒரு நிகழ்வை இந்திய சமூகம் உடல் சார்ந்து குழந்தை வளர்வதை புனிதமாக, உயர்வாக கருதுகிற ஒரு சமூகக் கோட்பாடு இருக்கிறது. கர்ப்பம் என்பது தமிழ்ச் சொல்லில் அதற்கு இணையாக வேறு ஒரு சொல் இறைவனின் வீடு என்கிற பொருளில் வழங்கப்படுகிற வழக்கம் இன்றும் இந்த சமூகத்தில் இருக்கிறது. கர்ப்ப அறை என்பது கடவுளுக்கு மந்திரங்களும் பூஜைகளும் நிகழ்கிற அறை என்று குறிப்பிடுகிற வழக்கம் இந்த சமூகத்தில் இருக்கிறது. இந்த சமூகம் கர்ப்பப்பையை மிகப் புனிதமாக பார்க்கிறது. உடல் ரீதியாக ஒரு செல்லாக இருந்து அந்தக் குழந்தைக்கு அந்த செல்லிற்கு காற்று கிடைத்து, நீர் கிடைத்து, எலும்புகள் வளர்ந்து, சதைகள், தசைகள் எல்லாமும் வளர்ந்து, ஒரு முழு உருவமாக மாறுவதற்கு ஒரு ஒன்பது மாத காலம், பத்து மாத காலம் தேவைப்படுகிறது. இந்த உடல் ரீதியான மாற்றத்திற்கு, வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருப்பது பெண்களின் கர்ப்பப்பை என்று நவீன மருத்துவம் குறிப்பிட்டுச் சொல்கிறது.
ALSO READ:குழந்தை வளர்ப்பு முறை - குழந்தை நலம் பகுதி - 8
இந்தப் பெண்களினுடைய கர்ப்பப்பை எவ்வளவு புனிதமானது? என்று இந்திய சமூகம் இறைவன் அறைக்கு ஒப்பாக பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆக, ஒரு குழந்தை உடல் ரீதியாக வளர்கிற வளர்ச்சி என்பது ஒரு இறைவனின் இறைநிலையின் பொறுப்பிற்கு இணையான ஒரு செயல் என்று இந்திய சமூகத்தின் வார்த்தையின் வழியாக அதன் புனிதத் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு குழந்தை வளர்ப்பு என்பது அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்திய சமூகம் கருதுவதாக நான் நினைக்கிறேன். ஒரு குழந்தை உடல் ரீதியாக வளர்வது என்பது வெறுமனே கை,கால் முளைத்து விடுவது போல் அல்ல. அது ஒரு இறைத்தன்மை கொண்ட வளர்ச்சி. இறைத்தன்மையின் ஆசீர்வாதத்தில் நிகழ்கிற வளர்ச்சியாக இந்திய சமூகம் அதை பார்க்கிறது. எனவே அதை புனிதமாகவும் மேன்மையானகவும் கருதுகிறது. இது உடல் ரீதியாக மட்டுமல்ல. இது ஒரு குழந்தையின் அறிவும் சுதந்திரமும் வளர்கிற போது கூட இத்தகைய மேன்மையும் புனிதமும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது அந்தக் குழந்தையின் கையில் இருக்கிற தகவல் தொழில்நுட்ப சாதனத்தின் வழியாக மட்டும் நிகழ்ந்து விட முடியாது. அது வெறுமனே ஒரு இருட்டு அறையில் கொஞ்சம் ரத்தமும் சதையும் ஒன்றாக சேர்த்து கட்டி இருட்டு அறைக்குள் வைத்து விட்டால் பத்து மாத காலத்தில் அந்த ரத்தமும் சதையும் சேர்ந்து ஒரு குழந்தையாக மாறி விடாது என்பது எவ்வளவு உண்மையோ? அவ்வளவு அடர்த்தியான உண்மை ஒரு குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சி என்பது கையிலிருக்கிற தகவல் தொழில்நுட்ப கருவிகள் வழியாக நிகழாது. இந்த உண்மையோடு நாம் குழந்தையினுடைய அறிவுசார்ந்த வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்பதாக இந்த உரையாடலில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ALSO READ:குழந்தைகள் நலம் பகுதி - 7
ஒரு குழந்தையினுடைய அறிவு சார்ந்த வளர்ச்சி என்பது தகவல் தொழில்நுட்பம் கொடுக்கிற தகவல் வழியாக கருவிகள் வழியாக நிகழாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. அல்லது அத்தகைய நிகழ்வு என்பது மேன்மையானது அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் உடலில் வளர்ச்சி ஏற்படுகிற போது எத்தகைய இயற்கை சார்ந்த இறையியல் சார்ந்த இருத்தல் சார்ந்த ஆசீர்வாதங்கள் இந்த குழந்தைக்கு கிடைக்கப்பெற்றனவோ அப்படியான ஆசீர்வாதங்களோடு அறிவையும் சுதந்திரத்தையும் சுயமரியாதையும் இந்த குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அந்த குழந்தைக்கு நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது குழந்தை வளர்ப்பில் இருக்கிற மிக முக்கிய பொறுப்பு. மேலும் இந்த குழந்தை தனித்திறமை உள்ளவர்களாக அவர்களின் அறிவுத் திறனின் வேகத்தில், படைப்பாற்றலில் இருக்கிற திறமைகளை மதிப்பெண்களாக உருமாற்றம் செய்கிற, மதிப்பெண்களாக மடைமாற்றம் செய்கிற ஒரு பொருளாதாரம் சார்ந்த கணக்குகள் இருக்கின்றன. இந்தக் கணக்குகளின் வழியாக அவர்களை வளர்க்கிற ஒரு வளர்ப்புமுறை இன்று உருவாகி இருக்கிறது. இந்த கணக்குகள் வழியாக குழந்தைகளை வளர்க்கிற வளர்ப்பு முறையும் அல்லது இந்த கணக்குகளுக்காக தமது திறமைகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை குழந்தைகளுக்கு உருவாக்குவதும் கூட நல்ல குழந்தை வளர்ப்பு முறையாக இருக்க முடியாது. ஒரே அளவுகோல் தான்.
ALSO READ:குழந்தைகள் நலம் பகுதி - 6
இந்திய சமூகத்தில் குழந்தை வளர்ப்பிற்கு தருகிற மேன்மை உடல்ரீதியாக ஒரு குழந்தை வளர்வதற்கு எத்தகைய மேன்மையான, புனிதமான அங்கீகாரம் இந்திய சமூகம் வழங்கி இருக்கிறது என்பதை ஒப்பீடாக வைத்துக்கொண்டு நாம் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் ஒரு குழந்தை உடலில் வளர்வதற்கு உடல் ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கு உடல் ரீதியாக இந்த உலகத்தில் உலாவுவதற்கு எத்தகைய ஆசீர்வாதங்கள் இருத்தலிருந்து இயற்கையிலிருந்து கிடைக்கின்றனவோ அத்தகைய ஆசீர்வாதங்களும் புனிதங்களும் அந்த குழந்தை அறிவு சார்ந்த வளர்ச்சி அடைகிற போது கிடைக்க வேண்டும் என்பதை குழந்தை வளர்ப்பாளர்கள் குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது இந்த உரையாடலின் நோக்கம். குழந்தை வளர்ப்பு என்பது வெறுமனே தகவல்களை குழந்தைக்கு ஒரு பைக்குள் பொதிந்து வைத்து இருக்கிற புல் கட்டை போல வைத்துவிட முடியாது.\ ஒரு பொதி சுமக்கிற வண்டியில் பாரம் ஏற்றுவது போல குழந்தையின் தலைக்குள் பாரங்களை ஏற்றி விடுவது விரோதமானது. அந்தக்குழந்தையினுடைய இருத்தல் பண்பிற்கு விரோதமானது. குழந்தை வளர்ப்பு முறையில் நவீனத்தில் இப்படித்தான் இருக்கின்றன. ஒரு குழந்தை காலையில் ஆறு மணிக்கு எழுந்தது என்றால் இரவில் 11 மணி வரை அந்த குழந்தைக்கு தகவல்களை மீண்டும் மீண்டும் வேறு வேறு முகங்களைக் கொண்டு, வேறு வேறு கருவிகளைக் கொண்டு, வேறு வேறு நபர்களை கொண்டு தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கிற ஒரு ஏற்பாடை இந்த சமூகம் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த வழங்கல் முறைக்கு சமூகத்தில் பெருத்த அங்கீகாரம் இருப்பது கவலைக்குரியது.
ALSO READ:குழந்தை நலம் பகுதி -5
காலையில் ஒரு நேரத்தில் கணிதத்திற்காக அவர் செல்கிறார். பின்பு அறிவியல் பாடம், பின்பு சமூக அறிவியல், பாடம் ஒரு பதினோரு மணிக்கு பேட்மின்டன் விளையாட்டு. மூன்று மணிக்கு நீச்சல், நான்கு மணிக்கு மீண்டும் கணிதம், ஐந்து மணிக்கு இயற்பியல் பாடம், ஏழு மணிக்கு வேதியல் பாடம், இவ்வாறு அக்குழந்தையினுடைய ஒட்டுமொத்த நாளும் தகவலை சேகரிப்பது அல்லது தகவலை அந்த குழந்தையினுடைய தலைக்குள் திணிப்பது என்பதாக மாறி கிடக்கிற சமூகமாக நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறுக்கவே முடியாது. இது ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு முறை அல்ல. உடல் ரீதியாக ஒரு குழந்தை வளர்கிற போது அந்த குழந்தைக்கு இயற்கை எத்தகைய சாத்தியங்களை கொடுத்து இருக்கிறதோ? எத்தகைய ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறதோ? அவ்வளவு ஆசீர்வாதங்களையும் அத்தகைய சாத்தியங்களையும் மனரீதியாக புத்திரீதியாக அறிவுரீதியாக அந்த குழந்தை வளர்கிற போது நாம் வழங்க வேண்டும் என்பது நமது பொறுப்பு. இந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிற சமூகமாக நாம் மாறி இருக்கிறோம் என்பது நமது அவமானம். இதை நோக்கி பேசுகிற ஒரு உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் குழந்தை வளர்ப்பிற்கான மிகச் சரியான துல்லியமான ஒரு உரையாடலாக இந்த சமூகத்தில் தேவையை உணர்ந்து கொண்டதாக இருக்க முடியும். வெறுமனே குழந்தைகளுக்காக சிறார் இலக்கியங்களை பதிவு செய்வதும் வாழ்க்கை முறைகளை பதிவு செய்வதும் அறிவியலாளர்களை அறிமுகப் படுத்துவதும் கதைகளை சொல்லிக் காட்டுவதும் பழைய கணக்குகளை, மண்பாண்டங்களை வரலாற்று பொருட்களை குழந்தைகளோடு பகிர்ந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை ஆனால் இது போதுமானது இல்லை.
ALSO READ:குழந்தைகள் நலம் பகுதி - 4
குழந்தையினுடைய அறிவு என்பது குழந்தையினுடைய வளர்ப்பு என்பது சற்று ஆசீர்வாதத்திற்கு உரியது. இந்த நிலையில் குழந்தை வளர்ப்பு நிகழ்த்தப்படிகிறதா? என்ற கேள்வி நம்முன் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த தன்மையோடு குழந்தை வளர்ப்பு நிகழ்கிறதா.? குழந்தை வளர்ப்பு என்பது இப்படியானதாக இல்லை. இந்தப் புரிதல் கூட இல்லாத குழந்தை வளர்ப்பாளர்கள், குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையோடு வேலை செய்கிற ஆசிரியர்கள், குழந்தையின் மீது அக்கறை கொண்ட அக்கறையாளர்கள், எவருக்கும் இத்தகைய பார்வை இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து குழந்தைகளைக் கையாளுவதும் குழந்தைகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் குழந்தைகளின் மீது அழுத்தம் கொடுப்பதும் குழந்தைகள் மீது ஏதாவது ஒரு வகையில் அவர்களை வழிகாட்டி கொண்டிருப்பதுமாக இந்த சமூகம் நகர்ந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. இது நல்ல குழந்தை வளர்ப்பு முறை அல்ல. குழந்தைகளோடு வெறுமனே பயணித்தால் குழந்தைகள் வளர்வார்கள் என்பது பின் பார்த்துக் கொள்ளலாம். அது ஒரு தனியாக விவாதிக்கப்பட வேண்டிய பகுதி. ஆனால் குழந்தை வளர்ப்பு என்று தூக்கி சுமக்கிற கருத்துக்கள் எல்லாமும் தூக்கி சுமக்க வேண்டியது அல்ல. அவை எல்லாமும் போட்டு உடைக்க வேண்டியவை. குழந்தை வளர்ப்பை நாம் இவ்வாறு தான் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ALSO READ:குழந்தைகள் நலம் பகுதி -3
இந்த சமூகம் கலவரம் இல்லாமல், இந்த சமூகம் வன்முறைகள் இல்லாமல், போர்கள் இல்லாமல் நிறைவான அமைதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இருத்தலின் இயற்கையின் அல்லது இறை நம்பிக்கை என்றால் இறைநம்பிக்கையின் ஆசிர்வாதம் இல்லாமல் பெறுகிற எந்த அறிவாலும் இது சாத்தியமில்லை. தகவல் தொழில்நுட்ப கருவிகள் வழியாக அமைதியை கொண்டு வரவே முடியாது. விஞ்ஞானக் கூடங்களில் குழந்தைகளை அறிவு சார்ந்து விளையாட விடுவதின் வழியாக அவர்களுக்கு அமைதியை ஏற்படுத்தி விடவே முடியாது ஆய்வுக்குறிப்புகள் வழியாக குழந்தைகளுக்கு அமைதி கிட்டாது. அதற்கு கர்ப்பப்பை போன்ற ஒரு இருட்டு அறை தேவை. அந்த உடல் வளர்வதற்கு அந்த ரத்தமும் சதையும் கலந்து ஒரு கண்ணாக, மூக்காக, வாயாக, உடல் உறுப்புகளாக மாறி கொள்வதற்கு ஒரு பெருத்த அமைதியும் இருட்டும் தேவைப்பட்டது போல அந்த குழந்தையின் அறிவு வளர்வதற்கு ஒரு பெருத்த அமைதியும் இருளும் கூட கிடைத்தால் நல்லது என்று நான் பரிந்துரைக்கிறேன். இதுதான் குழந்தை உடல் ரீதியாக மன ரீதியாக படைப்பாக படைப்பாளராக மாறுவதற்கு வளர்க்கிற வளர்ப்பு முறை. இத்தகைய வளர்ப்பு முறை சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழுந்தால் அதைப்பற்றி எனக்கு எந்தவிதமான அபிப்ராய பேதமும் கிடையாது. அது உங்களுடைய பார்வை. ஆனால் குழந்தை வளர்ப்பில் இப்படி ஒரு நுட்பம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய அழுத்தமான பரிந்துரை. இந்த வளர்ப்பு முறையில் தான் ஒரு குழந்தை இந்த சமூகத்தை நேசிக்க முடியும் இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய முடியும்.
ALSO READ:குழந்தைகள் நலம் -பகுதி - 2
இந்த சமூகத்தில் இருக்கிற அழுக்குகளை களைத்துப் போட்டு விட்டு ஒரு புதிய சமூகத்திற்கான வரையறைகளை உருவாக்க முடியும். சமூகத்திற்காக குழந்தைகள் உருவாக வேண்டும் என்று பேசுபவராக இருந்தாலும் அந்தக் குழந்தை அதன் அளவில் அமைதியாக இருக்க வேண்டுமென்று உரையாடும் தன்மை உள்ளவர்களாக இருந்தாலும் ஒரு போர் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தத்துவம் உரைக்கிற தத்துவவாதிகளாக இருந்தாலும் எவர் ஒருவரும் முரண்பட முடியாத மையப்புள்ளியாக நான் பார்ப்பது இந்த ஒரு புள்ளி தான். குழந்தை ஆரோக்கியமான குழந்தை, அறிவு சார்ந்து புத்திசாலித்தனங்களை உள்ளடக்கிய ஒரு குழந்தை, வன்முறைகளை விரும்பாத ஒரு குழந்தை, வளர்வதற்கு குழந்தை வளர்ப்பு முறை மிகவும் உதவி செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. மிகுந்த கவனத்திற்குரியது. அத்தகைய கவனத்திற்குரிய அந்த வளர்ப்பு முறையை இந்த சமூகம் எவ்வளவு விரைவாக சாத்தியமாக்குகிறதோ அவ்வளவு விரைவாக இந்த சமூகத்தின் மைய இலக்காக அமைதியும் வன்முறைகள் இல்லாத சமூக வாழ்க்கையும் போர்கள் இல்லாத நாடுகளின் இணக்கமும் உருவாகுவதற்கு சாத்தியம் இருக்கிறது. இது குழந்தை வளர்ப்பில் இருக்கக் கூடிய மிக முக்கியமான நாம் தெரிந்துகொள்ள வேண்டிய, உறுதியாக கடைப்பிடிக்க வேண்டிய படி நிலைகள் என்று எனக்கு தோன்றுகிறது.
மீண்டும் தொடர்ந்து பேசுவோம்...
நன்றி.
No comments:
Post a Comment