Saturday, January 2, 2021

CHILD HEALTH PART - 10 குழந்தை நலம் - பகுதி 10

         குழந்தை நலம் - பகுதி 10

www.swasthammadurai.com


     குழந்தைகள் நலம் குறித்து நாம் தொடர்ந்து உரையாட வேண்டும் என்கிற தேவை இருக்கிறது. ஒரு நல்ல சமூகம் உயர்வான மக்களை பெறவேண்டும் என்று கருதுகிற சமூகம் உயர்வாக தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு குழந்தைகளில் இருந்து தொடங்குவது எளிய வழிமுறையாக வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில், குழந்தைகள் நலம் பற்றி குழந்தைகளைப் பற்றி உரையாடுவது என்பது சமூக மாற்றத்திற்கான தேவைகளில் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. குழந்தைகள் என்றவுடன் எப்போதும் மகிழ்ச்சியை உடையவர்கள், உற்சாகம் உடையவர்கள், என்று பார்க்கிற ஒரு பார்வை நம்முன் இருக்கிறது. குழந்தைகள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர்கள், அவர்களுக்கு ஒன்றும் பெரிதாகவோ சிறிதாகவோ பொருட்படுத்திக் கொள்கிற அவசியமில்லாமல் வாழ்கிறவர்கள் என்றும் கூட நம் குழந்தைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை கொண்ட சமூகமாக வாழ்கிறோம். குழந்தைகளுக்கு தனியாக வாழத் தெரியாது, அவர்களுக்கு எப்பொழுதும் நாம் வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும், ஏதாவது ஒரு வகையில் நாம் குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நாம் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பதன் வழியாக, குழந்தைகளுக்கு ஏதாவது செய்து கொடுப்பதன் வழியாக, குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுப்பதன் வழியாக, அவர்களைவிட கனமான எந்த  ஆபத்தையும் தடுத்துவிட முடியும் என்கிற மனோபாவமும் இச்சமூகத்தில் இருக்கிறது.

ALSO READ:HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை


                தற்காலத்தில் குழந்தைகளைப் பற்றி, குழந்தைகள் சுதந்திரம் பற்றி, பேசுகிற உரையாடல்களும் விவாதங்களும் பார்க்கிறபோது குழந்தைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு கவலை இருக்கிறது. அவர்களுக்கு சிந்தனை இருக்கிறது. அவர்களை நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்கிற தன்மையில் அந்த உரையாடல் நிகழ்வதை பார்க்க முடிகிறது. உரையாடலுக்குள் குழந்தைகள் மென்மையானவர்கள் என்கிற சமூக பார்வைக்கு எதிராக குழந்தைகளுக்கு நிரந்தர மென்மை தன்மை கிடையாது. குழந்தைகள் தேவையை ஒட்டி வேறுவேறு தளங்களில் இயங்க கூடியவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் திறமை உடையவர்கள் என்கிற விவாதம் முன்வைக்கப்பட்டு நடந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகள் மீன்கள் போல, குழந்தைகள் பட்டுப் பூச்சிகள் போல, குழந்தைகள் பூக்கள் போல என்று வர்ணிக்கும் சமூக மனநிலைக்கு மாற்றாக குழந்தைகளை நீங்கள் அழகிகளாகப் பார்க்க வேண்டியதில்லை என்கிற வாதமும் மறுப்பு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை

                குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. குழந்தைகள் பொறுப்பு இல்லாதவர்கள் என்று சமூகத்தில் பொருந்துகிற மனோபாவத்திலிருந்து குழந்தைகள் மீது வைக்கப்படும் இம்மாதிரியான விமர்சனங்களுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு எல்லாமும் தெரியும். குழந்தைகள் அதிபுத்திசாலிகள் என்கிற மாற்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. குழந்தைகள் நலம் என்று உடனடியாக பேச வேண்டும். குழந்தைகள் நலம் என்று நாம் பேசவேண்டும் என தீர்மானித்த உடன் இந்த இருவகையான கருத்துக்கள் தாண்டி நாம் பேசுவதற்கு அவசியம் இருக்கிறது. இந்த சமூகம் இந்த இரண்டு விதமான கருத்துக்களுக்குள்ளேயே குழந்தைகள் பற்றிய நலத்தை அடக்கிவிட முயற்சி செய்கிறது. இந்த சமூகத்தினுடைய வடிவமைப்பின் விளைவாக இவ்வாறு நடந்தாலும் கூட சமூக வடிவமைப்பில் இருக்கிறவர்களுக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்கிறது. ஒன்று குழந்தைகளை ஒன்றும் அறியாதவர்களாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளவர்கள் சமூகத்தில் இருப்பவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். அல்லது குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் குழந்தைகளை தன் சிறந்த தன்மையிலிருந்து இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களது படைப்பாற்றலை எந்த விதத்திலும் சேதமடைய செய்யக்கூடாது என்கிற வகையில் குழந்தைகளை பார்க்கிற இன்னொரு மனோபாவம் இருக்கிறது.

ALSO READ:நலம்(health)

                இந்த இரண்டு மனோபாவமும் மட்டுமே குழந்தைகள் பற்றிய உரையாடலில் பெரும்பகுதி அல்லது முழுவதுமான பங்கேற்பாக இந்த இரண்டு வகையான மனநிலை நிலவுவதைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகளைப்  பற்றிய உரையாடலில் எழுபதுகளில், எண்பதுகளில் வாழ்ந்த 1970 காலகட்டங்களில் வாழ்ந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற இந்திய தத்துவ ஆய்வாளர் ஒருவர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. "குழந்தைகள் கற்பதை விடவும் குழந்தைகளுக்கு கற்பிக்க நினைப்பவர்களே கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருக்கிறது" என்று ஒரு கோட்பாடை முன்வைக்கிறார். அந்தக் கோட்பாடு முழுவதும் சரியானதாகவே எனக்கு தோன்றுகிறது. அவர் இதற்கு தனியாக ஒரு உரையாடலை நிகழ்த்திய நிகழ்வை ஒரு புத்தகமாக பின்பு அவரது நிறுவனத்திலிருந்து வெளியிட்டார்கள். "கற்பிப்பவர்களுக்கான கற்றல் முறை" என்று அது ஆங்கிலத்தில் Education for the Educators" என்கிற தலைப்பில் வெளிவந்த புத்தகம். ஏறத்தாழ கல்வி பற்றி பேசுகிற, கற்பித்தல் பற்றி பேசுகிற முறைகளில் குழந்தைகளை மிக நெருக்கமாக அணுகுவதும் குழந்தைகளை மிக நெருக்கமாக புரிந்து கொள்வதற்குமாக இருக்கிற கூறுகளை அந்தப் புத்தகம் நிறைய வைத்திருப்பதாக எனக்கு தோன்றியது. அந்த புத்தகத்தில் குழந்தைக்கும் கல்விக்குமாக இருக்கிற உறவைப் பற்றி கூடுதலாக பேசுவது ஒருபுறம் இருந்தாலும் கூட குழந்தைகளை எவ்வாறு பார்க்க வேண்டும்? என்பதில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாதம் குழந்தை தளத்திலிருந்து பார்ப்பதை விடவும் குழந்தைகளை அணுகக்கூடிய மனநிலையில் உள்ளவர்களினுடைய தளத்திலிருந்து அவரது வாதம் மதிப்புமிக்கதாக நான் பார்க்கிறேன்.

ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)

                அந்தப் புத்தகம் முழுவதும் அவர் பேசி முன்வைக்கிற கருத்துக்களை நாம் பார்க்கிற போது, குழந்தைகள் ஒருபுறம், இன்னொருபுறம் குழந்தைகளை எப்படியாவது உயர்த்தி விட வேண்டும் என்று கருதுகிற சமூக மனநிலை கொண்டவர்கள் இன்னொருபுறம். இதில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் குழந்தைகளுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற மன நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் குழந்தைகள் பற்றி அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்துகிறார். ஜே கிருஷ்ணமூர்த்தியினுடைய குழந்தைகள் பற்றிய பார்வை சரியானதும் கூட. இந்த சமூகத்தில் எவர் ஒருவரையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மனநிலையை நாம் பெற்றிருக்கிறோம். நம் தேவையை ஒட்டி ஒருவரை பயன்படுத்திக் கொள்வது, தேவையை ஒட்டி ஒருவரோடு இணங்குவது, பிணக்கம் காட்டுவது என்கிற தேவை சார்ந்த மனவடிவம் சமூகம் முழுவதும் பரவி இருக்கிற சூழலில் குழந்தைகளையும் அவ்வாறே பார்ப்பதற்கும் பழகி இருக்கிறோம்.

ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை

     ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தை குடும்பத்தின் தேவையை நிவர்த்தி செய்கிற பொருளாக பார்ப்பதை அந்தக் குடும்பம் வைத்திருக்கிறது. வேறுவேறு பெயர்களில், வேறுவேறு நுட்பங்களில் அந்த குழந்தைக்கு வெவ்வேறான பயிற்சி முறைகள் தரப்பட்டாலும் இறுதியாக அந்தக் குழந்தை அந்தக் குடும்பத்தினுடைய ஏதோ ஒருவிதமான வடிவத்தில் இயங்குவதற்கு தயாராக வேண்டும் என்பது அந்த குடும்பத்தினுடைய கட்டளையாக இருக்கிறது.

                                                                                                                   தொடரும்...


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...