குழந்தை நலம்
இந்த குடும்ப நிலைகளிலிருந்து குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்வார்கள் என்றால் பள்ளிக்கூடத்தினுடைய சட்டதிட்டங்களுக்கு அல்லது பள்ளிக்கூடத்தினுடைய வருடாந்திர இலக்கிற்கு அந்த குழந்தையை தயார் செய்வது என்று அந்தப் பள்ளிக்கூடம் சில பாடத் திட்டங்களை வைத்திருக்கிறது. இப்படி குழந்தைகள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் அந்த நிறுவனத்தின் அல்லது அந்த அமைப்பின் அந்த வடிவத்தின் இலக்கு என்பது குழந்தைக்கு இடப்படுகிற கட்டளையாக மாறி நிற்பதை பார்க்க முடிகிறது. இப்படி குழந்தைகளை கட்டளைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரம் இந்த சமூகத்திற்கு இருப்பதாக சமூகம் தொடர்ந்து. சொல்லிக் கொண்டே இருக்கிறது? அதை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது இதை யார் கேட்பது? அல்லது யார் இதோடு போராடுவது? என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு சமூகம் முழுவதும் இத்தகைய குழந்தைகளுக்கு எதிரான அதிகாரம் விரவிக் கிடக்கிறது. இது மொத்தமும் சமூகம் வைத்திருக்கிற தேவையான நிலையிலிருந்து ஒருவரை பயன்படுத்திக் கொள்வது என்கிற மனநிலையோடு நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கிறது. அந்தவகையில் குழந்தைகளும் தேவைக்கு பயன்படுத்துகிற பொருளாக, தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிற நபராக குழந்தைகளையும் புரிந்து வைத்திருக்கிற போக்கு இருக்கிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 10
இந்த போக்கிலிருந்து இந்த சமூகத் தன்மையிலிருந்து
மனநிலையிலிருந்து குழந்தைகளை நாம் விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பினோம் என்றால்
நாம் வேலை செய்ய வேண்டிய பகுதி குழந்தைகளிடம் அல்ல. குழந்தைகளை அணுக வேண்டும் என்று
அல்லது குழந்தைகளோடு வேலை செய்ய வேண்டுமென்று குழந்தைகளுக்கு கற்பித்து தரவேண்டும்
என்று கூறும் நபர்களிடம். ஒரு குழந்தைக்கு நான் ஏன் ஒரு கல்வியை தர வேண்டும்? அல்லது
ஒரு குழந்தைக்கு நான் ஏன் மரபுசார்ந்த செய்தியை தர வேண்டும்? ஒரு குழந்தைக்கு நான்
ஏன் ஒரு நல்ல கருத்தை உடனடியாக கற்பித்துக் கொடுக்க வேண்டும்? என்று ஒவ்வொருவரும் கேட்டுப்
பார்க்கிற சுய பரிசோதனையை செய்வதன் வழியாக இந்த இலக்கை நாம் இலகுவாக அடைய முடியும்.
இந்த இலக்கை அடைய வேண்டிய தேவை என்ன? என்பதை நாம் ஒரு முறை பேசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
குழந்தையை பற்றி பேசுவதை விடவும் குழந்தையின் மீது அக்கறைப்படுபவர்களிடம் பேசுவதை முக்கியமானதாக
நான் இந்த உரையாடலில் பதிவு செய்ய விரும்புகிறேன். குழந்தை பற்றி, கல்வி பற்றி, குழந்தை
கற்க வேண்டிய முறைகள் பற்றி எல்லாமும் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிற சமூக வழக்கமாக
வைத்திருக்கிறோம்.
ALSO READ:CHILD HEALTH PART - 9
இந்த குழந்தைகள் பற்றிய உரையாடல்களில் கற்பிக்கும்
முறைகள் பற்றி பேசுபவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் கற்பிக்கும் முறை என்பது கற்பவர்கள்,
கற்பிப்பவர்கள் என்கிற இரண்டு தளத்தில் கற்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் கற்பிப்பவர்களுக்கு
புதிய புதிய உத்திகளை சொல்லித் தருகிற கற்பிக்கும் முறைகளை வலியுறுத்தும் ஆய்வுகள்
வந்து கொண்டே இருக்கின்றன. பயிற்சி முறைகள் பற்றி பேசுகிற பயிற்சிக் கூடங்களில் பயிற்சி
கொடுப்பவர்கள், பயிற்சி பெறுபவர்கள் குழந்தைகளாக இருக்கிறபோது பயிற்சி பெறுபவர்கள்
பற்றி எந்தவிதமான யோசனையும் இல்லாமல் பயிற்சி
தருபவர்களுக்கு என்னென்ன சிறப்பு முகாம்கள் நடத்த முடியும்? என்பதை திட்டமிடுகிற கூட்டங்கள்
நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இங்கு பயிற்சி பெறுபவர்களாக, கற்பவர்களாக எளிய மனிதர்களாக
இருக்கக்கூடிய குழந்தைகளைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் அவகாசம் இல்லாத அளவிற்கு ஓட்டம்
நடந்து கொண்டே இருக்கிறது.
ALSO READ:குழந்தை வளர்ப்பு முறை
இது ஒரு
கற்பவர்கள் அல்லது பயிற்சி பெறுபவர்கள் என்கிற ஒரு சிறு கூட்டத்திற்கு அது பெரும் கூட்டமாக
இருந்தாலும் கூட மரியாதை கிடைக்கப்பெறாத, மதிப்பு கிடைக்கப்பெறாத வயதில், அனுபவத்தில்
அதிக வாய்ப்பு வழங்கப்படாத ஒரு கூட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறை. புதிய குழந்தைகளும்
குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு பெரும் கூட்டமும் எண்ணிக்கை அளவில் மிக முக்கியமானது.
அவர்களுக்கு வழங்கப்படுகிற வாய்ப்பும் மிக முக்கியமானது. அந்த வகையில் அவர்களுக்கு
மிகக் குறைந்த வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன அல்லது வாய்ப்புகள் முழுவதும் மறுக்கப்பட்டு
இந்த சமூகம் என்ன கருதுகிறதோ? இந்த அமைப்பு என்ன கருதுகிறதோ? பள்ளிக்கூடம் என்ன கருதுகிறதோ?
வீடு என்ன கருதுகிறதோ? அவரைவிட அந்த குழந்தையை கையாளுகிறவர் என்ன நினைக்கிறாரோ? அதை
அந்த குழந்தை மீது மீண்டும் மீண்டும் சொல்லி அந்த குழந்தையை வழிகாட்ட, அழுத்த அல்லது
அந்த குழந்தைக்கு திணிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அவ்வளவும் செய்யக்கூடிய ஒரு
ஏற்பாடை நாம் தொடர்ந்து அங்கீகரித்துக் கொண்டே
இருக்கிற சூழலில் குழந்தைக்கு எதிராக நடத்தப்படுகிற
இத்தகைய கருத்தியல் வன்முறைகளுக்கும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் கூடிய இந்த
வழிகாட்டுதல் வன்முறைக்கும் கூட நாம் எதிராக இருக்க வேண்டும் என்று இந்த தலைப்பின்
தேவையை நான் வலியுறுத்துகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment