குழந்தை நலம்
குழந்தைகளை தேவையிலிருந்து பார்க்கிற மனநிலை மாறும் போது மட்டும்தான் குழந்தைகளுக்கு எதிராக இருக்கிற இத்தகைய வழிகாட்டுதல் குறித்தான வன்முறைகளும் கருத்தியலான வன்முறைகளும் ஒரு முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளை எவ்வாறு அணுகவேண்டும்? என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருந்தாலும் கூட ஒவ்வொரு புரிதலுக்குள்ளும் அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்போ, நிறுவனமோ, குடும்ப சூழலோ, பாடத்திட்டங்களோ ஒளிந்திருக்கிறதை நாம் காணமுடிகிறது. வெறுமனே குழந்தைகளிடம் சும்மாய் அமர்ந்திருங்கள் என்று நாம் வலியுறுத்தினோம் அல்லது பரிந்துரைத்தோம் என்றால் குழந்தைகளிடம் சும்மா இருப்பது எப்படி? என்று கேட்கிற அபத்தமான கேள்வி நான் எதிர்கொள்கிறேன். குழந்தையிடம் சும்மா இருப்பது எப்படி? என்பது என்னைப் பொறுத்தவரை அது ஒரு அறிவு தளத்தில் இருந்து எழும்புகிற கேள்வியாக பார்க்க முடியவில்லை. குழந்தைகளிடம் சும்மாதான் இருக்க வேண்டும் என்று புரிந்து வைத்துள்ள ஆள் நான். குழந்தைகளிடம் சும்மா இருப்பதை விட வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று அழுத்தமாக விருப்பம் கொள்கிறவன்.
ALSO READ: பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்
அந்த வகையில் பிறர் எழுப்புகிற நான் எப்படி சும்மா
இருப்பது? என்கிற கேள்விக்கு எனக்கு கோபமான அல்லது இயலாமையான வேறொரு தன்மையில் இந்த
சமூகம் சிக்கி இருக்கிறது என்பதாகத் தெரிகிறது. அவர்களுக்குள் இருக்கிற கோபங்களையும்
சிக்கல்களையும் குழந்தைகள் மீது செலுத்தி விட வேண்டும் என்கிற முனைப்பில் எப்படி சும்மா
இருப்பது? என்று கேட்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில் மீண்டும்
மீண்டும் இங்கு குழந்தைகள் நலம் குறித்து பேசுகிறபோது குழந்தைகள் நலம் என்பது குழந்தைகளை
மையப்படுத்தியதாக இருப்பதை விடவும் குழந்தைகளை அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்று விரும்புகிற
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு நல்ல பாடம் சொல்லித் தர வேண்டும் என்று விரும்புகிற
ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை அக்கறையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிற
குழந்தை மீது அக்கறை கொண்டவர்களுக்கும் இருக்கிற மனநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
பற்றிய நலமாக இந்த குழந்தைகள் நலம் ஒளிந்திருக்கிறது.
ALSO READ:பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்
குழந்தைகள் நலம் என்பது இவர்களை எவ்வாறு செம்மைப்
படுத்துவது? என்கிற தன்மையிலேயே முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகள் எப்போதும் ஒரே
விதமாக பயணிக்க முடிவதில்லை. நான் பல நேரங்களில், பல உரையாடல்களில் இந்த செய்தியை சொல்வதுண்டு.
ஒரு குழந்தை காலை ஆறு மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து வருகிறது என்றால் அந்தத்தாய்
ஞாயிற்றுக்கிழமை தானே என்று ஒரு வாய்ப்பு இருந்தால் அந்த தாய் அந்தக் குழந்தையிடம்
கூறுவது "லீவன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சு என்ன செய்யப்போற? போய் படு"
என்று வழக்கமான மொழியில் பேசுவார்கள். அந்தக் குழந்தை மறுநாள் ஆறு மணிக்கு பிறகு ஒரு
பத்து நிமிடம் தூங்கலாம் என்று விரும்பினால் "இன்னு தூங்கிட்டு இருக்க" என்று
அந்தக் குழந்தையை யேசுகிற தாய் மனோபாவம் இருக்கிறது. இந்த இரண்டு வேறு மனோபாவத்தை அந்தக்
குழந்தை எவ்வாறு புரிந்து கொள்கிறது? என்பது குழந்தையினுடைய மன சிக்கலில் நாம் தேடிப்
பார்க்க வேண்டியிருக்கிறது. குழந்தை இத்தகைய இருவேறு திசைகளில் பயணிக்க வேண்டிய நிர்பந்தம்
காரணமாக மன சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்கிற ஒரு உளவியல் கருத்தும் நிலவி வருகிறது.
ALSO READ: நலம் எனப்படுவது
குழந்தைகள் மன சிக்கலுக்கு ஆளாக்குகிற எல்லா வேலைகளையும்
குழந்தைகள் வெளியில் போய் தேடிக் கொள்வதில்லை குழந்தைகளுக்கு பக்கத்தில் இருப்பவர்களே
இந்த மன சிக்கலுக்கு காரணமாகிறார்கள். குழந்தைகள்
பெரும்பாலும் அல்லது எல்லா குழந்தைகளும் சார்பு வாழ்க்கை முறையை வாழ்கிற ஒரு எதார்த்தம்
இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு மன மாற்றத்திற்கும் உடல் மாற்றத்திற்கும்
அவர்களை முழு பொறுப்பாக ஆக்கிவிட முடியாது. ஆக, குழந்தைகள் நலம் என்பது உளவியல் நலமாக
இருந்தாலும் உடலியல் நலமாக இருந்தாலும் அந்த குழந்தைகளை சுற்றி நடக்கிற சுற்றியிருக்கிற
சூழல் தருகிற நெருக்கடியே மிக முக்கியமான முதன்மையான பங்கு வகிக்கிறது என்கிற அடிப்படையில்
குழந்தைகள் நலத்தை குழந்தைகள் சுற்றியிருப்பவர்கள் மனநிலையில் இருந்து துவங்க வேண்டும்
எங்கிற தன்மையில் இந்த உரையாடலை நான் உங்களிடம் செய்கிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment