Friday, January 8, 2021

CHILD HEALTH PART 13 குழந்தை நலம்

                                                    குழந்தை நலம் 

    

www.swasthammadurai.com

    குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் பேசுகிற போதெல்லாம் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் வழியாக அவர்கள் நலமாக இருப்பார்கள் என்றும் குழந்தைகளுக்கு ஏதாவது வழிகாட்ட வேண்டுமென்று அதன் வழியாக அவர்கள் நலமாக இருப்பார்கள் என்றும் குழந்தைகளோடு உயர்வதற்கு ஏதாவது நாம் செய்துவிட வேண்டும் அதன் வழியாகவே நலமாக இருப்பார்கள் என்றும் பேசுகிற வழக்கமான பேச்சுக்களை நிறுத்தி வைத்துவிட்டு குழந்தைகள் கல்வியின் வழியாகத்தான் நலமாக வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அவர் ஏன் கல்வியை தேர்வு செய்கிறார்? என்கிற அவரது தேர்வு மனநிலையை அவர் உரசிப் பார்க்க வேண்டியிருக்கிறது. நல்ல உணவு கொடுப்பதன் வழியாகத்தான் குழந்தைகள் வளர முடியும், அறிவாளியாக மாற  முடியும், படைப்பாளியாக சிறக்க முடியும் என்று ஒரு தாய் விரும்பினால் குழந்தை படைப்பாளியாக மாறுவதற்கும் சிறப்பாக வளர்வதற்கும் உணவு தான் காரணமாக அமையும் என்று ஒரு தாய்க்கு ஏன் தோன்றுகிறது? என்று அந்தத் தாய் யோசிக்க வேண்டும் என்கிற தளத்தில் இந்த உரையாடலை நாம் நடத்தி பார்க்க விரும்புகிறோம்.

ALSO READ:HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை

அப்படியான ஒரு உரையாடல் எங்கும் பார்க்க முடியவில்லை. ஒரு குழந்தை கதையை ஏன் தேர்வு செய்கிறது? என்று தெரிந்துகொள்ள துடியாய்த் துடிக்கிற பெற்றோர்கள் நம் கண்முன்னே இருக்கிறார்கள். ஒரு குழந்தையை ஏழு, எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையை அழைத்து வந்த ஒரு தந்தை என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்தக் குழந்தைக்கு ஏதோ உளவியல் சிக்கல் இருப்பதாக என்னிடம் அழைத்து வந்தார்கள். அப்படி வந்த போது அந்த குழந்தை ஆண் குழந்தை. அந்தக் குழந்தையோடு நான் தனியாக பேச வேண்டும் என்று கேட்டேன். உடனே அந்த தந்தையானவர், “நான் சும்மா இருக்குறே பரவாயில்ல” என்று ரொம்ப முடிவாகச் சொன்னார். குழந்தையோடு பேச வேண்டும் என்று கருதுகிற என்ற அடிப்படையில் மிகுந்த கரார் தன்மையோடு நீங்கள் வெளியில் தான் அமர வேண்டும் என்று வெளியில் அனுப்பி விட்டேன். அந்தக் குழந்தையோடு பேசியபோது அந்தக் குழந்தை மிக இலகுவாக இயல்பாக அவருக்கும் அந்த தந்தைக்கும் தாய்க்குமாக இருக்கிற கேள்விகளையும் அவருக்கு ஏற்பட்ட விருப்பங்களையும் சந்தேகங்களையும் என்னோடு சுத்ந்திரமாக பகிர்ந்து கொண்டார்.

ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை

      பின்பு அவர் தந்தையை அழைத்து பேசியபோது அவர் நாங்கள் பேசிய எந்த ஒன்றையும் கேட்கிற மனநிலையில் இல்லை. அவரைப் பற்றி அந்த குழந்தையைப் பற்றி உளவியல் நுட்பங்கள் வழியாக சில சங்கதிகளை சேகரித்து தந்தைக்கு சொல்வேன் என்று அந்த தந்தை எதிர்பார்த்திருக்கிறார். உளவியல் நுட்பங்கள் என்றால், என் குழந்தை இப்படி உட்கார்ந்தால் என்ன அர்த்தம்? இப்படி நின்றால் என்ன அர்த்தம்? என்று சில உளவியல் கோட்பாடுகள் சமூகத்தில் உலவும். ஒருவர் நேராக நடந்து வருகிறார் என்றால் அவர் கம்பீரமானவர் என்று சமூக பார்வையில் உளவியல் கோட்பாடுகள் உலவுவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அந்த வகையான என் பையனுக்கு என்ன படிக்க வைக்கலாம்? அவனுக்கு சயின்ஸ் வருமா? மேக்ஸ் வருமா? என்று அவர் கேள்வியை அடுக்கிக்கொண்டே போகிறார். இப்படி குழந்தையை பார்க்கிற பார்வை தான் குழந்தைகளுக்கு ஏன் கணிதம் வருகிறது? நல்ல வாய்ப்பு இருந்தும் அவருக்கு ஏன் ஆங்கிலம் வரவில்லை? தினசரி கீரைகள் உண்கிறார். ஏன் அவருக்கு நினைவாற்றல் குறைகிறது? என்று குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்களை ஏன்? ஏன்? என்று கேட்கிற பெற்றோர்களும் ஆசிரியர்களும் நம் கண்முன்னே, நம் பக்கத்தில் இருப்பதை பார்த்திருக்கிறேன் நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.

ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)

இந்தக் கேள்வி குழந்தைகளுக்கு பொதுவான கேள்வியாக குழந்தைகள் அதிகம் சந்திக்கிற கேள்வியாக இது வரை இருந்து வந்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் குழந்தைகள் நலம் பற்றி நாம் பேசுகிறபோது ஒரு குழந்தைக்கு எல்லா வாய்ப்பும் தரப்பட்டும் ஒரு குழந்தை ஏன் நினைவாற்றல் குறைவாக இருக்கிறது? என்று நீங்கள் சிந்திக்கிற மாதிரியே சிந்திப்பது போலவே ஒரு குழந்தைக்கு கீரை உள்ளிட்ட நினைவாற்றலுக்குரிய கணிதத்திற்குரிய அறிவியலுக்குரிய உணவு பொருட்களை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்ட போதும் அந்த குழந்தைக்கு ஏன் கணிதம் சரியாக கற்க முடியவில்லை? என்று கவலைப்படுகிற தாயினுடைய மனநிலையில், ஆசிரியருடைய மன நிலையில் ஏன் இந்த குழந்தைக்கு இது வருகிறது? ஏன் இது வரவில்லை? என்று கேட்பது போலவே ஒரு குழந்தையை குறித்து ஏன் எனக்கு இந்த கேள்வி வருகிறது? என்று ஒவ்வொருவரும் கேட்டுப் பார்க்க வேண்டி உள்ளது.

ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை

ஒரு குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு குழந்தையிடம் நன்றாக படிக்கவேண்டும் என்கிற திருத்தத்தை செய்ய வேண்டும் என்று நான் ஏன் விரும்புகிறேன்? என நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டி இருக்கிறது. “நல்லா படிச்சா நல்லா வாழலாம்” என்ற ஒரு சொல்லில் ஒரு வாக்கியத்தில் உங்கள் விடை இருக்கக்கூடாது. படிப்பு உங்களை என்ன செய்கிறது? ஏன் அது குழந்தையின் மீது வெளிப்படுகிறது? என்று உங்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது என்று நீங்கள் சற்று ஆழமாக பயணிக்க வேண்டும். குழந்தைகளுக்குள்ளே இருக்கிற ஒவ்வொரு செயல்பாடு குறித்தும் ஏன்? என்ற கேள்வி நமக்கு வருவதை நாம் அன்றாடம் கவனித்துக் கொண்டே இருப்பது குழந்தைகளின் நலத்திற்கு முக்கியமான பொறுப்பு. என் குழந்தைக்கு ஏன் இந்த ஆடை பிடிக்கிறது? என்று ஒரு குழந்தையை பார்த்து கேட்கிற பெற்றோருக்கு நான் முன்வைப்பது ஒரு ஆடை பிடிப்பதை நீங்கள் ஏன் கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள்? என்று உங்களை நோக்கி நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. இப்படி ஏன்? ஏன்? என்று குழந்தைகள் பக்கமாக கேட்கிற எல்லா கேள்விகளையும் ஏன் இவ்வாறு கேட்கிறேன்? என்று உங்களை நோக்கி திருப்பி கேட்டுப் பார்க்கிற ஒரு தளத்திலிருந்து குழந்தையினுடைய நலம் மிக அடர்த்தியாக, மிக பலமாக வளர்ச்சி அடையும் என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. மிக பலம் கொண்ட குழந்தைகள் நலத்தை நீங்கள் பேண முடியும். குழந்தைகளின் நலம் என்பது குழந்தைகளை சுற்றியிருப்பவர்கள் தன்னை நலமாக வைத்துக் கொள்வதன் வழியாகவே குழந்தைகள் நலம் சாத்தியமாக இருக்க முடியும். சுற்றியிருப்பவர்கள் பரபரப்பாகவும் அவசரமாகவும் சமூக நெருக்கடியோடும் களைப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிற மன ஓட்டத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட பாடத்திட்டங்களோ கவிதை புத்தகங்கள் கூட, இலக்கியங்கள் கூட குழந்தைக்கு பெரிய அக மாற்றத்திற்கு உதவி செய்ய முடியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ALSO READ:நலம்(health)

ஒரு நல்ல மனநிலையை இல்லாத ஒரு சமூகம் நல்ல கவிதைகளையோ நல்ல இலக்கியங்களையோ நல்ல பாடத் திட்டங்களையோ  படைத்துவிட உருவாக்கிவிட  முடியாது. ஆக, குழந்தையின் நலம் என்பது குழந்தையை சுற்றி இருப்பவர்களுடைய நலம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதோ? அந்த கட்டமைப்பிலிருந்து அந்தக் குழந்தையின் நலம் பலம் கொண்டதாக மாறும் என்ற அடிப்படையில் இந்த “தன்னைத் தானே கேட்டுப் பார்க்கிற” குழந்தைகள் மீது நான் ஏன் இத்தகைய செய்முறையை விரும்புகிறேன்? என்று தன்னைத் தானே உரசிப் பார்க்கிற தைரியத்தில் இருந்து  ஒரு நல்ல குழந்தை மீது அக்கறை கொண்ட நபரை நீங்கள் உங்களுக்குள் கண்டுபிடிக்க முடியும். இந்த உங்களது சுய கண்டுபிடிப்பில் இருந்து ஒரு நல்ல குழந்தைக்கு பலமிக்க அக்கறையாளராக தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் உங்களால் பயணிக்க முடியும் என்கிற அடிப்படையில் இந்த பரிந்துரையை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு குழந்தை நலத்தினுடைய மிக முக்கியமான பகுதிகளில் குழந்தைக்கு இதைச் செய்ய வேண்டுமென்று நான் ஏன் விரும்புகிறேன்? என்கிற தொணியில், என்கிற கோணத்தில் உங்களது பதில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் என்றால் அந்த பதில் குழந்தைக்கு நெருக்கமானதாக இருக்கும் என்றால் நிச்சயமாக குழந்தைகள் நலம் உங்களால் சாத்தியம்.

நன்றி.

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...