குழந்தைகள் நலம்
குழந்தைகளைப் பற்றி ஏதாவது பேச வேண்டும் என்கிற அடிப்படை உரையாடல் வடிவத்தில் துவங்கி, குழந்தைகளின் நலம் குறித்து ஒரு ஆக்கமான ஒரு பொது மனநிலையை உருவாக்குவது தேவையாக இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த தேவையின் அடிப்படையில் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. மேலும் குழந்தைகளின் நலம் குறித்து உரையாடுகிற உரையாடிப்பார்க்கிற பல்வேறு நபர்களுக்கும் குழந்தைகளின் நலம் என்பது உண்மையில் என்னவாக இருக்கிறது? என்பது பற்றிய புரிதலோடு நகர வேண்டும் என்பதும் விருப்பமாக இருக்கிறது. குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று நாம் பேசுவதற்கும் நாம் தெரிந்து கொள்வதற்கும் ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் குழந்தைகள் பார்க்கப்படுவதும் இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளை அணுகுவதும் தகவலை பெற்றுக்கொள்பவருக்கு உற்சாகம் தருகிற வேலையை செய்கின்றன. தகவல்களை திரட்டி அதிலிருந்து ஒரு வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது என்பது மனித வரலாற்றில் தற்காலத்திற்கு புதிது. அது எவ்வளவு வெற்றிபெறும் என்பது அனுபவத்தில் இருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.
ALSO READ:CHILD HEALTH PART 13 குழந்தை நலம்
இந்த சமூகம் இன்று எட்டி இருக்கிற ஒவ்வொரு வளர்ச்சியும் மனித சமூகத்தினுடைய
குழு வாழ்க்கையில் ஏற்பட்ட தேவையும் தனிமனிதனின் வாழ்க்கை முறைக்கு உண்டான நெருக்கடிகளும் மன உணர்வாக ஒரு மனிதன் சந்தித்து கடந்துவந்த சலிப்புகளும்தான் இன்றைய புதிய வாழ்க்கை முறைக்கு முதன்மையானதாக தூண்டுகோலாக இருந்து வந்திருக்கிறது. வாழ்வின் நெடுகிலும் இத்தகைய காட்சிகளை நாம் பார்க்க முடியும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தேவையிலிருந்து மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனி மனிதனின் தேவையாகவோ சமூகத்தின் தேவையாகவோ இருந்திருக்கிறது. கடந்த கால அனுபவத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளும் கடந்த கால அனுபவத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டுபிடித்ததும்தான் புதியதொரு குறைபாடில்லாத முயற்சியை குறைபாடில்லாத வடிவத்தை உருவாக்குவதற்கு தோற்றுவாயாக அமைந்திருக்கிறது என்பதை
வரலாற்றில் பார்க்கிறோம்.
ALSO READ:CHILD HEALTH PART - 12 குழந்தை நலம் பகுதி - 12
ஆக, ஒவ்வொரு வாழ்க்கை முறையும் கண்டுபிடிப்பும் புதிய செயல்பாட்டு முறையும் பழைய அனுபவத்திலிருந்து பெற்றுக் கொண்டவை என்கிற அடிப்படையில் அழகானவையாகவும் மரியாதைக்குரிய நிலையிலும் இருக்கின்றன இருந்திருக்கின்றன. ஒரு தனி மனிதன் மிடுக்கான ஆடை உடுத்திக் கொள்வதற்கு அந்த ஆடை வடிவமைப்பு அவரது இலைதளைகளை போர்த்திக் கொண்டு வாழ்ந்து நகர வாழ்க்கை முறையோடு அனுபவத் தொடர்பை பெற்றிருக்கிறது. அமர்ந்திருக்க நாற்காலி அந்த மனிதனின் வாழ்க்கையில் ஈரம் படிந்த விழிகளில் அமர்ந்து ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டவை என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. நாம் இன்று பயன்படுத்துகிற ஒவ்வொரு நவீன கருவிகளும் அணுகுமுறைகளும் கூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதன் தனிப்பட்ட முறையில் தன் வாழ்வில் பெற்றுக்கொண்ட நெருக்கடிகளையும் அனுபவங்களையும் முதன்மையாக வைத்து கண்டுபிடிக்கப்பட்டவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 11 குழந்தை நலம்
ஒரு வாழ்க்கை முறையும் ஒரு புதிய செயல்பாட்டு முறையும் புதிய அணுகுமுறையும் கடந்தகால அனுபவம் சார்ந்தவையாக இருப்பதுதான் மனிதனை மேன்மையுற செய்திருக்கிறது. ஒரு நிலையிலிருந்து நிதானத்திற்கு சமூகமாக வாழ்கிற கூட்டு வாழ்க்கை முறைக்கு நகர்த்தியிருக்கிறது,பழக்கியிருக்கிறது என்கிற உண்மையிலிருந்து குழந்தைகள் நலம் குறித்து நாம் பேசிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் இந்த அனுபவங்கள் தான் அவர்களை வளமையாக்கி இருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால் குழந்தை வளர்ப்பில் மட்டும் அனுபவங்களை நாம் தகவல் சேகரிப்பு என்கிற தளத்திலேயே நிலையிலேயே பெற்றுக் கொள்கிறோம். வீட்டில் சமையல் செய்வதற்கும் முகத்தில் அலங்காரங்களை பூசிக் கொள்வதற்கும் நமது பண்பாடு சார்ந்து கிடைத்த தகவல்களை சேகரித்துக் கொண்டு நான் செய்து பார்த்து நமக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொண்டு பிணக்காக உள்ளவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு பயணிக்கிற ஒரு செயல்பாட்டு வடிவம் அனைவருக்குள்ளும் இருக்கிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 10 குழந்தை நலம் - பகுதி 10
இன்றும் கூட இந்த குறிப்புகளை சேகரிப்பதில் குழந்தைகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் நாம் அமர்ந்து குறிப்புகளை சேகரித்து கொள்வோம். தொலைக்காட்சியில் வருகிற மருத்துவ நிகழ்ச்சிகளில் மரபு சார்ந்த மருத்துவ நிகழ்ச்சிகளில் சொல்லப்படுகிற மருந்துகளின் பெயர்களையும் செய்முறைகளையும் மிகப் பொறுப்பாக இருந்து ஓராண்டிற்கு கூட ஒரு தனி புத்தகத்தில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்கிற வழக்கம் நமக்கு நம்மோடு வாழ்கின்ற பலருக்கு வந்திருக்கிறது. அந்தக் குறிப்புகளை பயன்படுத்திக்கொண்டு அவர் தன் வாழ்வில் தன்னை நோயில்லாமல் பார்த்துக் கொள்கிறாரா என்றால் அவர் அனுபவத்தில் அத்தகைய செயல்பாடுகளை செய்து கொள்ள முடிவதில்லை. வழக்கமாக அவர் எந்த மருத்துவத்தை பயன்படுத்தி வந்திருக்கிறாரோ, எந்த மருத்துவம் அவருக்கு வாழ்வில் சௌகரியத்தை தந்திருப்பதாக அவர் நம்புகிறாரோ அந்த மருத்துவத்தை தான் இறுதித் தேர்வாக செய்கிற நிலை அனுபவத்தில் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 9 குழந்தை நலம் பகுதி - 9
அந்த வகையில் ஏராளமான குறிப்புகளை செய்து கொண்டு, சேர்த்துக்கொண்டு, பயன்படுத்திக்கொண்டு நமது வாழ்க்கை முறையை தயார் செய்தாலும் கூட நாம் செய்து பார்க்கிற எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருக்கிற செய்து குறிப்புகளிலிருந்து மட்டும் செய்வதில்லை. நூறு தகவல்களைக் குறித்து வைத்திருக்கிறோம் என்றால் நமக்கு வசதி இல்லை என்றால் 99 தகவல்களையும் கூட நாம் புறக்கணிக்கிற தேர்வை செய்யத்தான் முடிகிறது. ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை நாம் அவ்வாறு செய்வதில்லை. எவ்வாறு குழந்தைகளை வளர்க்க வேண்டும்? என்று ஒரு தாய் வலைத்தளம் முழுவதும் குறிப்புகளை சேகரித்து வைத்துக்கொண்டு இதுவரை குழந்தை வளர்ப்பில் வெளிவந்திருக்கிற நூல்களையும் செய்திகளையும் சேகரித்து வைத்துக்கொண்டு குழந்தை வளர்ப்பாளர்களுடைய கருத்துக்களை சேகரித்து வைத்துக்கொண்டு இந்த சேகரிப்பின் மொத்தத்தையும் குழந்தைகளுக்குள் செய்து பார்க்கிற ஒரு திணிப்பு மனோபாவம் நடப்பதை நான் பார்க்கிறேன். எந்த ஒரு மனிதனும் ஒரு நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக விதவிதமான தகவல்களை சேகரிக்கவும் பெற்றுக் கொள்ளவும் அதை பயன்படுத்தி பார்ப்பதற்கும் உரிமை உள்ளவனாக இருக்கிறார். அந்த உரிமை என்பது அவர் ஒரு புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான தன்மையோடு இருக்க வேண்டும்
அப்படித்தான் புதிய அனுபவத்தை கொடுப்பவருக்குரிய மரியாதையும் அந்த உரிமையில் ஒளிந்திருக்கிறது. இப்படி சேகரிக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்து பார்ப்பது என்பது புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிற நோக்கத்தில் இருப்பதும் புதிய அனுபவத்திற்குப் பிறகு சேகரித்த எல்லாவற்றையும் செய்து பார்க்காது தேவையான வசதியான ஏதாவது ஒரு பகுதிகளை மட்டும் தன் வாழ்வின் வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்கிற ஒரு தன்மை என்பது ஒரு மனிதனுக்குள் நடக்கிற மாற்றமாக இருக்கிறது. இத்தகைய செயல்பாடு குழந்தைகளிடம் இருப்பதில்லை.
தொடரும்…
No comments:
Post a Comment