குழந்தை நலம்
குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை சேகரிப்பதை குறித்து வைத்துக் கொள்வது. குறித்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி குறித்து வைத்திருக்கிற எல்லா செய்திகளையும் குழந்தைகள் மீது செய்துபார்ப்பது. ஒரு குழந்தையை எவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்த முடியும்? கையாள முடியும், அவர்களை அழிக்க முடியும் என்று எந்த பிரஞ்சையும் இல்லாமல் எந்த விழிப்பும் இல்லாமல் குழந்தைகள் மீதான அழுத்தம் என்பது அதிகரித்துக் கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அழுத்தத்திற்கு மாற்றாக இந்த அழுத்தத்தை குறைக்கிற திசைவழியில் நாம் உரையாடிப் பார்க்கவும் அதில் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கவும் நாம் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் விடை, அந்த முயற்சியின் இலக்கு, அந்த முயற்சியின் விளைவு நிச்சயமாக குழந்தைகளுக்கு அதிக பாரம் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தி தர உதவிசெய்யும். அத்தகைய முயற்சிக்கு மையப் பொருளாக இருப்பது குழந்தைகளை அழுத்தாத மனோபாவம். குழந்தைகளை எவ்வாறெல்லாம் நாம் அழுத்தம் கொடுக்கிறோம்? என்கிற கேள்வியும் எவ்வாறெல்லாம் குழந்தைகளை பயன்படுத்துகிறோம்? என்கிற விழிப்புணர்வும் குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு தேவைப்படுகிற நிலை இன்றும் இருக்கிறது. குழந்தைகளை எப்படித்தான் நாம் பார்க்கிறோம்? என்று ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை தொடர்ந்து இருக்கிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 14 குழந்தைகள் நலம்
சமூக அளவில் ஒவ்வொரு மரபு சார்ந்த வாழ்க்கை முறையும் புதிய நவீன வாழ்க்கை முறைகளும்
கூட குழந்தைகளை எவ்வாறு பார்க்கின்றன? என்றெல்லாம் விசாரித்தோம் என்றால் குழந்தைகளைப் பற்றி பார்க்கப்படுகிற ஒவ்வொரு பார்வையும் குழந்தைகளைப் பற்றி செய்யப்படுகிற ஒவ்வொரு மதிப்பீடும் அந்த சமூகம் தனக்கு இணக்கமான ஒரு தேவையை முன்வைத்து மதிப்பீடு செய்கிறது. தனக்கு இணக்கமான ஒரு இலக்கை முன்வைத்து குழந்தையின் திறமைகளை வகுத்துப் பார்க்கிற
ஒரு மனோபாவம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய மனோபாவம் சமூகத்திற்கு வசதியாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடியது என்று நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நாம் மீண்டும் மீண்டும் அதைத்தான் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். இரண்டு வேறு மரபுசார்ந்த சமூகங்கள் ஒரு குழந்தையை பார்க்கின்ற பார்வை என்பது வேறுபட்டதாக இருந்தாலும் குறிப்பாக ஒரு சமூகம் குழந்தைகளின் மீது அழுத்துகிறது என்று இன்னொரு மரபு சார்ந்த சமூகம் ஒரு விமர்சனத்தை
முன் வைக்கும் என்றால் அந்த மரபு சார்ந்து இருக்கிற வாழ்க்கைமுறையில்
இருக்கிற ஒரு குழந்தைக்கு தரப்படுகிற நெருக்கடி என்பது அணுகுமுறை வேறுபட்டதாகவே இருக்கிறது என்பதைத் தவிர அழுத்தம் என்பது குழந்தையின் மீது நடக்கத் தான் செய்கிறது. விதவிதமான பண்பாட்டுத் தளங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை கருத்தியலாக துன்புறுத்தப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
ALSO READ:CHILD HEALTH PART 13 குழந்தை நலம்
குழந்தைகளை நாம் மிகுந்த மென்மையானவர்களாகவும் அதிக உற்சாகம் உடையவர்களாகவும் பார்க்கத்தானே செய்கிறோம். ஆனால் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற விமர்சனம் பொருத்தமாக இல்லை என்னும் கருத்தில் பேசினோம் என்றால் குழந்தைகளை உடல் அளவில் மென்மையானவர்களாகவும் வயது அனுபவத்தின் அளவில் சற்று வழிகாட்டுதல் தேவைப்படுபவர்களாகவும்
தான் இந்த சமூகம் மதிப்பீடு செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கிற மேன்மையான உயிர்ப்பான மனிதப் பண்பு குறித்து சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற கோட்பாடுகள் பொருத்தம் இல்லாமலேயே இருக்கின்றன.
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு குழந்தை என்னோடு பழகுகிற, என் வயது ஒத்திருக்கிற சிறிய குழந்தைகள் வீட்டிலிருந்து உணவோ தண்ணீரோ கொண்டு வருவார்கள் என்றால்
நாம் பகிர்ந்து உண்ண வேண்டும் என்கிற பண்பை இயல்பிலேயே பெற்றிருக்கிற சமூகமாக இருந்த நினைவு எனக்கு இருக்கிறது. ஒருவேளை நான் எனக்கு வைத்திருந்த உணவையோ தண்ணீரையோ என் பக்கத்தில் இருக்கிற இன்னொரு குழந்தைக்கு பகிர்ந்தளிக்காமல் நான்
திரும்பி என் வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என்றால் என் வீட்டில் உள்ளவர்கள் அந்த குழந்தையோடு எனது உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து உண்ண வேண்டியது அவசியமானது பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது தான் சரியானது என்று நினைவூட்டியதை என்னால் பார்க்க முடிகிறது. இருக்கிற உணவை, இருக்கிற தண்ணீரை பொதுவாக வைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணவேண்டும், நமக்கு தேவையாக இருக்கிற ஒரு பொருளை, ஒரு பகுதியை நாம் பெற்றுக் கொள்ள எவ்வளவு உரிமை இருக்கிறதோ? அத்தகைய உரிமை அந்த பொருள் மீது அந்தப் பொருளின் இன்னொரு பகுதி மீது நம்மோடு வாழ்கின்ற இன்னொரு உயிருக்கு அந்த உரிமை இருக்கிறது என்கிற அடிப்படை மனிதப் பண்பிலிருந்து மனித அறிவிலிருந்து இந்த பகிர்ந்தளிக்கும் உணர்வு குழந்தைகளுக்குள் இருப்பதாக நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
ALSO READ:CHILD HEALTH PART - 12 குழந்தை நலம் பகுதி - 12
இந்தப் புரிதல் இயற்கையோடு இணைந்து வாழ்கிற, காடுகளில் வாழ்கிற, மனிதர்கள் அல்லாத மற்ற ஜீவராசிகளிடம் சராசரியாக மேன்மையாக என்கிற எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொரு ஜீவராசியிடமும் இந்தப் பண்பை நாம் பார்க்க முடியும். எல்லா ஜீவராசிகளும் காடுகளில் வசிக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் இந்த இயற்கை வழங்கியிருக்கிற தனக்கான வாய்ப்பின் பகுதியை மட்டும் பெற்றுக் கொள்வதும் இன்னொரு பகுதியை தன்னைப்போல் இருக்கிற இன்னொரு ஜீவராசிக்கு பெற்றுக் கொள்ள அனுமதிப்பதுமான வாழ்க்கைமுறையை வாழ்ந்து வந்திருக்கின்றன, வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொரு ஜீவராசிக்கும் இத்தகைய அடிப்படை இயல்பு இருக்கத்தான் செய்கிறது என்கிற அடிப்படையில் மனிதனுக்கும் இந்த பகிர்ந்து வாழ்கிற அடிப்படை குணம் இருக்கத்தான் வேண்டும். இந்த பகிர்ந்து வாழ்கிற அடிப்படை குணத்தை மனிதர்கள் இன்று எவ்வாறு பார்க்கிறார்கள்? என்றால் குழந்தைகளுக்குள் இருப்பதை வேகமாக முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை மனித சமூகத்தில் நாம் பார்க்க முடியும்.
தொடரும்…
No comments:
Post a Comment