குழந்தை நலம்
தனக்கு தேவையான ஒன்றை ஒரு பொருளில் தனக்கு தேவையான பகுதியை மட்டும் வைத்துக் கொள்வது, இன்னொன்றை இன்னொருவர் பயன்படுத்திக் கொள்வதற்கு பகிர்ந்தளிப்பது என்கிற இயற்கை சார்ந்த உயிர்ப்பான மனோபாவத்தை இன்றிருக்கிற சமூகம் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது அதன் மீது அழுத்தம் கொடுக்கிறது. உனக்கான தண்ணீரை நீ மட்டும் வைத்துக்கொள்; பிறரிடம் கொடுக்காதே. பிறரிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாதே, என்று பரிந்துரை செய்து வழிகாட்டி அனுப்புகிற பெற்றோர்கள் அதிகமடைந்து கொண்டே வருகிறார்கள். எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்த மனநிலை. பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படை இயற்கை இயக்கவியலை, அடிப்படை இயற்கை வாழ்க்கை முறையை, குழந்தைகளுக்குள் இருக்கிறது என்கிற அந்த உயிர்ப்பை புரிந்து கொள்ளாத மனோபாவம் குழந்தைகளுக்கு எதிரானது. குழந்தைகள் முழுக்க இயற்கையோடு தன் உடலையும் அறிவையும் பெற்றுக் கொண்டவர்களை இந்த பூமிக்கு வருகின்றனர். இந்த பூமிக்கு வருகையில் அவர்கள் உடல் இயற்கை என்ன கொடுக்க இருக்கிறதோ? அந்த தன்மையில் இருக்கிறது. அந்த நிறம் இயற்கை கொடுத்த நிறம். அந்த உடலின் பலமும் பலப்படுத்திக் கொள்கிற புத்திசாலித்தனமும் இயற்கை அந்தக் குழந்தைக்கு வழங்கியிருக்கிறது. வளப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற அனுபவ சேகரிப்பை அறிவாக வைத்துக்கொள்கிற திறனும் அந்த குழந்தைக்குள் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.
ALSO READ:CHILD HEALTH PART - 15
இத்தகைய உடல் சார்ந்த, அனுபவம் சார்ந்த, அறிவு சார்ந்த, கலவையாக இருக்கிற அந்த குழந்தையினுடைய மையப்புள்ளி இயற்கை தந்திருக்கிற எந்த ஒன்றையும் நமக்குத் தேவையான பகுதி மீது நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ? அதே அளவு உரிமை நாம் பயன்படுத்தாத இன்னொரு பகுதி மீது இன்னொரு ஜீவராசிக்கு இருக்கிறது என்ற புரிதல். இந்த மையமான இயற்கை சார்ந்த அமைதிக்கு வழி கொள்கிற இந்த மையமான உயிர்ப்பான புரிதலை பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிற வழிமுறைகள் நம்மிடம் குறைந்துவிட்டன என்பது
ஒருபுறம். இது இப்போதைய விவாதம் அல்ல.
ஆனால் நாம் செயல்படுத்துகிற செயல்பாட்டு முறையும் இந்த அடிப்படையான உயிர்ப்பு நிலையை இந்த பகிர்ந்து அளிக்கிற பகிர்ந்தளிக்கும் குணத்தை என்ன செய்கின்றன? என்பதுதான். இது தான் குழந்தைகள் மீது நாம் தொடுக்கிற வன்முறைகளில் முதன்மையானதாக இருக்கிறது. குழந்தைகள் அடிதடிக்கு உட்படுகிறார்கள், வயது மூத்தவர்களால் தாக்குதலுக்கு உட்படுகிறார்கள் என்பது ஒருவகையான வன்முறை. குழந்தைகள் பாலியல் துயரங்களுக்கு முற்படுகிறார்கள் என்பது ஒரு வகையான வன்முறை. குழந்தைகள் கருத்தியல் துன்புறுத்தலுக்கு உட்படுகிறார்கள் என்பது ஒரு வகையான வன்முறை.
ALSO READ:CHILD HEALTH PART - 14
இப்படி குழந்தைகள் மீது செயல்படுத்தப்படுகிற வன்முறைகள் ஏராளமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய வன்முறைகள் குழந்தைகள் அல்லாத எல்லோரிடமும் நிகழ்த்தப்படும் சமூகத்தில். ஒரு வயது வந்த ஒருவர் மீது கருத்தியல் வன்முறை நடத்துகிற
சமூக யதார்த்தம் இருக்கிறது. வயது வந்த பெண்களிடம் பாலியல் வன்முறை நடத்துகிற சமூக யதார்த்தம் இருக்கிறது. வயதான, வயதுவந்த ஒரு நபரிடம் உடல் ரீதியான அடக்கு
முறைகளையும் துன்புறுத்தல்களையும் நடத்துகிற சமூக எதார்த்தம் இருக்கிறது. இவை அனைத்தும் சமூகத்தில் நடக்கிற எதார்த்தமான வன்முறை நிகழ்வுகள். இதை குழந்தைகள் மீது மட்டும் நடத்தப்படுவதாக
நாம் புரிந்துகொள்வது பொருத்தமில்லாதது. இது தனியாக பேசப்பட வேண்டிய செய்தி என்றாலும் கூட குழந்தைகளின் மையமாக இருக்கிற இயற்கை வழங்கியிருக்கிற அறிவு, இயற்கைத் தன்னோடு தொடர்பு கொள்வதற்கு வைத்திருக்கிற மொழி, இயற்கை தான்
இருப்பதற்கு சாட்சியாக குழந்தைக்குள் பிரதிபலிக்கிற காட்சி, இவை எல்லாமும் குழந்தைகள் சுமந்து வருகிறார்கள்.
ALSO READ:CHILD HEALTH PART 13
எந்த ஒரு தனக்கு அல்லாத பொருளையும் தன் தேவையின் பொருட்டு தேவைக்கு தகுந்த அளவில் மட்டும் பயன்படுத்துகிற உரிமை தனக்கு இருக்கிறது என்கிற அறிவோடு குழந்தைகள் பயணிக்கிறார்கள். இந்தப் புரிதலில் குழந்தைகள் தனக்குத் தேவையான பகுதியைத்தான் எடுத்துக் கொள்வது போல இன்னொரு பகுதியை இன்னொருவர் எடுத்துக்கொள்ள முடியும் என்கிற பகிர்ந்தளிக்கிற மனோபாவம் இருக்கிறது. இத்தகைய மையப்பட்ட உயிர்ப்பு நிலையிலுள்ள குழந்தை மனோபாவத்தை இந்த சமூகம் என்ன செய்கிறது? இந்த மையப்பட்ட பகிர்ந்தளிக்கிற, பகிர்ந்து பெற்றுக் கொள்கிற, குழந்தைத் தன்மையை இந்த சமூகத்தின்
குழந்தை வளர்ப்பு முறை என்ன செய்கிறது? என்பதுதான் குழந்தை நலத்திலிருக்கிற முக்கியமான சிக்கல்களில் ஒன்று. இதைக் காட்சியாக நீங்கள் பார்த்திருக்கக்கூடும். உன்
உணவை நீ மட்டும் உண்டு, உன் நீரை நீ மட்டும் பருகிக்கொண்டு பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று கட்டளையிட்டு பள்ளிக்கு அனுப்புகிற பெற்றோர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ALSO READ:CHILD HEALTH PART - 12
உன் பகுதி மக்களோடு நீ பழகு; உன் பகுதி மக்களோடு நீ பேசு; பிறரோடு பேசக் கூடாது; பழகக் கூடாது என்று அச்சுருத்தப்படுகிற சமூக மனிதர்கள் இன்று
வந்து கொண்டிருக்கிறார்கள்; இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான சமூக மாற்றங்கள் குழந்தைகளுக்குரிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையிலேயே குழந்தைகளை பார்க்க வேண்டுமென்றும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டுமென்றும் பாடத்திட்டங்களை செயல்முறைகளை அனுபவக் குறிப்புகள் தந்து கொண்டே இருக்கின்றன. இந்த பாடத்திட்டங்களும் செயல் முறைகளும் அனுபவக் குறிப்புகளும் குழந்தைகளை என்ன செய்துகொண்டிருக்கின்றன? எவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன? என்பதில்
தான் ஒரு குழந்தையின் நலம் என்பது சிதைக்கப்படுவதாக, சேதப் படுத்தப்படுவதாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு
குழந்தையின் நலம் என்பது அந்த குழந்தை இயற்கைக்கு நெருக்கமாக இருக்கிற எந்த அம்சத்தையும் சிதைக்காததாக இருக்கவேண்டும். இயற்கை
வழங்கியிருக்கிற பகிர்ந்தளிக்கும்
பண்பை பாழ்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடாது. இயற்கையும் குழந்தையும் சாராம்சத்தில் மிக நெருக்கமான உயிர்ப்பு நிலை கொண்டவை. அந்தவகையில் குழந்தையினுடைய நலம் என்பது இயற்கையினுடைய நெருக்கத்திலேயே தொடர்ந்து இருக்கிறது. இந்த நெருக்கம் குழந்தைக்கும் குழந்தைகளால் உருவாக்கக்கூடிய எதிர்கால சந்ததிகளுக்கும் எதிர்கால சமூகத்திற்கும் மிகுந்த ஆரோக்கியமானது; நலம் தரக்கூடியது.
தொடர்ந்து பேசுவோம்...
நன்றி.
No comments:
Post a Comment