மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக இருப்பது பற்றி நிறைய கேள்விகள், நிறைய உரையாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் சார்ந்திருக்கிற துறையில் மகிழ்ச்சி குறித்து எழுப்பப்படுகிற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒருபுறம். ஆனால் மற்ற துறைகளை விடவும் மருத்துவம் உடல்நலம், உளவியல் சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு? என்று தெரிந்திருக்கக்கூடும் என்று இந்த சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இது சமூகத்தின் நம்பிக்கையாக மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சமூகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிற பொறுப்பை மருத்துவம் சார்ந்தவர்களும் உளவியல் துறையில் பணிபுரிபவர்களும் உடல் நலம் குறித்து பணிபுரிபவர்களும் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான, இந்த சமூகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குவதற்கான ஒரு பெரும் பொறுப்பை பெற்றிருக்கிறார்கள் என்று இந்த சமூகம் விரும்புகிறது.
ALSO READ:HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை
ஆக எந்த ஒரு மனிதரும் அவர் சார்ந்திருக்கிற எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறைக்கு எத்தகைய கடமைகள் இருக்கிறது? என்று தெரியவில்லை. அந்தத் துறை எதற்காக நிறுவப்பட்டதோ? எதற்காக உண்டாக்கப்பட்டதோ? அதற்கு உரிய கடமைகளோடு, பொறுப்புகளோடு இருக்கக்கூடும். பொறியியல் துறையில் இருப்பவர்கள் தொழில்நுட்பக் கருவிகளையும் பெரும் கட்டிடங்களையும் உண்டாக்கவல்ல வல்லமை உடையவர்களாக இருப்பார்கள். இயந்திர துறையில் இருப்பவர்கள் இயந்திரங்களை கட்டமைக்கவும் இயந்திரங்களை இயக்கவும் கூடிய புத்திசாலித்தனத்தோடு இருக்கக்கூடும். எளிமையாக உழைத்து தன் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிற ஒரு உழைப்பாளர் அவர் சார்ந்திருக்கிற உழைப்பின் வழியாக பொருளாதாரம் ஈட்டிக் கொள்ளவும் அதன் வழியாக வாழ்க்கையை நடத்திக் கொள்ளவும் கூடிய தன்மையோடு இருப்பார்.
ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை
ஆனால், உடல் நலம் குறித்து, மனநலம் குறித்து வேலை செய்கிறவர்களுக்கு அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிற நிலையில் மட்டும் அந்த உழைப்பு இருக்கக்கூடாது என்று சமூகம் பொறுப்பு அளித்துள்ளது. இவர்கள் இந்த சமூகத்திற்கு ஆக்கமான ஒன்றை கொடுப்பவர்கள் என்கிற முதல் வரிசை இருக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஒரு சமூகத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்க எல்லா வாய்ப்பும் பெற்றவர்கள் உடல் நலம் சார்ந்தும் மன நலம் சார்ந்தும் இயங்குகிற பயிற்சியாளர்கள். இந்த வாய்ப்பு என்பது அவர்களை சமூகம் உயர்த்தி வைத்திருப்பதற்கான அடையாளம்.
ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)
மகிழ்ச்சியைக் கொண்டு
வருவதற்கு அவர்களுக்கு தரப்பட்டிருக்கிற பொறுப்பினுடைய குறியீடு. அந்தவகையில் மகிழ்ச்சிக்கான முன்வரிசையில் யாரெல்லாம் உடல் நலம் பற்றி
அக்கறை கொள்கிறார்களோ? யாரெல்லாம் உளவியல் நலம் பற்றி
அக்கறை கொள்கிறார்களோ? தன்னை உடல் நலம்
குறித்தும் உளவியல் நலம் குறித்தும்
வளர்த்துக்கொள்ளவேண்டும், மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்களோ அவர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கவல்ல வாய்ப்பு இந்த சமூகம் கொடுக்கும்.
இந்த வாய்ப்பு என்பது மகிழ்ச்சியை உருவாக்கக்கூடிய
சமூகப் பொறுப்பாக மலரும்.
தொடரும்...
No comments:
Post a Comment