நலம் எனப்படுவது ...
நலம் குறித்து பேசப்படுகிற எல்லா உரையாடல்களும் மேம்போக்கான, தற்காலிகமான நிலையில் மட்டும் பரிந்துரைக்கிற தன்மையில் இருக்கிறது. நோய் என்பது எங்கிருந்து துவங்குகிறது? என்கிற ஒரு ஆழமான விவாதத்திலிருந்து நலம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு நோய் தும்மல் என்கிற அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும் என்றால் அதற்கு பரிந்துரைக்கப்படுகிற நலம் குறித்தான பரிந்துரை தும்மலுக்கு உரிய மருந்துகளையும் மாத்திரைகளையும் முன்வைக்கிறது. இதே வேளையில் ஒரு மனிதனுக்கு தும்மலுக்கான மையம் என்கிற அளவில் நோயின் தன்மை விவாதிக்கப்படும் என்றால், ஆராயப்படும் என்றால் அதற்கான நலம் குறித்த பரிந்துரையும் சற்று ஆழமாக இருக்கிறது.
ALSO READ:நரிகள் வடை சாப்பிடுவதில்லை
ஆக, நலம் குறித்த விவாதம், உரையாடல் என்பது
நோய் பற்றிய புரிதலில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஒரு
ஆழமான நோயில் இருந்து விடுபட வேண்டும் என்கிற தீர்க்கமான, ஆழமான தேடல் இல்லாத ஒருவருக்கு
துல்லியமான பரிந்துரையும் ஆழமான நோயிலிருந்த விடுதலையும் கிடைப்பதில்லை.
ஒரு மனிதன் வெறுமனே நோய்க்குள் ஏற்படுகிற அசௌகரியத்தை
அது வெளிப்படுகிற உடலளவில் மட்டும் பார்க்கிறார் என்றால் உடலில் அது மாற்றத்தை தரக்கூடிய,
உடல் அசௌகரியத்தை தீர்த்துக் கொள்ளக் கூடிய மருத்துவப் பரிந்துரைகளை மட்டும் போதுமானதாக
எடுத்துக்கொள்கிறார். ஆனால், நோய் என்பது உடலில் வெளிப்படுகிறது. உடலிலே பிறந்திருக்கிறதா?
உடலுக்கு முன்பு நோய் குறித்து வேறு ஏதேனும் பகுதிகள் இருக்கிறதா? என்றெல்லாம் கூட
பார்க்க முடியும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்று தமிழில் ஒரு இலக்கிய வாக்கியம்
இருக்கிறது. இந்த வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது.
ALSO READ:நீங்கள் முழுவதும் படித்தவுடன் யோசிப்பீர்கள்
நோயை பார்ப்பதை விடவும் நோய் உருவாகி இருக்கிற
மையத்தை நோயினுடைய தளத்தில் இருந்து சற்று ஒருபடி முன்னே போய் பார்ப்பதற்கு முயற்சி
செய்கிற தன்மை சிறந்த மருத்துவத்திற்கு நலம் பெற்றுத் தருகிற பொறுப்பிற்கு உகந்தது.
அந்த வகையில் நலம் என்பது தேடுவதில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. ஆழமான தேடல் இருப்பவர்களுக்கு
துல்லியமான நலம் சாத்தியமானது.
தொடரும்...
No comments:
Post a Comment