நலம் எனப்படுவது - பகுதி 6
ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனியான நலம் பற்றிய விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஹோமியோபதி மருத்துவம் குறிப்பிடுகிற நலம்சார்ந்த வரையறை மருத்துவ வரையறைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நலம் என்று ஒன்று இருக்க முடியாது. இந்த கருத்தை சற்று நுட்பமாக நாம் பார்க்க வேண்டும். நலம் பற்றி கேள்வியை எழுப்பி பார்க்கிறவர்கள், நலம் பற்றி ஒரு தேடலை துவங்குகிறவர்கள், நிச்சயமாக வெவ்வேறு நலம் குறித்தான விளக்கங்களில் நிறைவடையாமல் இருக்கக்கூடும்.
ALSO READ:சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்
நலம் என்றவுடன் உலகில் அதிக அளவு விளக்கங்களை
பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ள துறையாக இருக்கிறது. அந்த வகையில் நலம் என்று ஒருவர் பேசத்
துவங்கியவுடன் தேடத் துவங்கியவுடன் நலம் குறித்து பெறப்படுகிற தகவல் தேடுபவருக்கு உதவி
செய்யும் தன்மையில் இல்லாமல் போவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது. அதற்கு காரணம் தேடுபவர்
எதிர்பார்க்கிற, விரும்புகிற உன்னதமான பகுதியை அவர் தேடிப் பெற்ற செய்திக் குறிப்புக்குள்
பார்க்க முடியுமா? என்பது வாய்ப்பில்லாத ஒன்று.
ALSO READ:உடலோடு பரிவாக இருங்கள்
இன்றளவும் ஒரு மனிதனுக்கு இருமல் ஏற்படுகிறது
என்று தமது இருமலுக்கான சிகிச்சை குறிப்பை தேடினால் இருமலுக்கு மருந்தாக, மருத்துவக்
குறிப்பாக, பரிந்துரைகளாக, ஆயிரக்கணக்கான பதிவுகளை நாம் பார்க்க முடியும். வித விதமான
மருத்துவங்கள் தனது பரிந்துரைகளை செய்திருக்கும். ஒரே மருத்துவம் கூட விதவிதமான மருத்துவ
ஆலோசனைகளை, குறிப்புகளை கொடுத்திருக்கும் என்றாலும்கூட அந்தப் பதிவுகளின் வழியாக தேடுகிறவர்
தமக்கான நலத்தை, உன்னதத்தை பெற்றுக்கொள்வது நடப்பதில்லை. அதற்குரிய காரணம் அனைவருக்கும்
பொதுவான நலம் என்று ஒன்று இல்லை என்பதே.
தொடரும்...
No comments:
Post a Comment