Sunday, May 23, 2021

WHAT IS HEALTH? நலம் எனப்படுவது - பகுதி 5

 

                 நலம் எனப்படுவது 

www.swasthammadurai.com


நலம் எனப்படுவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற உன்னதத்தை நோக்கி எடுக்கபடக்கூடிய முயற்சிகளின் இறுதி இலக்கு. எல்லா மனிதர்களும் உன்னதமாக, சவுகரியமாக, நலமாக, வாழ்வதற்காகவே தமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கின்றனர். நலம் என்ற சொல்லுக்கு பயன்பாடுகளுக்கு தகுந்தாற்போல் வேறு வேறு பொருட்கள் இருந்தாலும் எல்லா இடங்களிலும் இணக்கமாகவும் இசைவாகவும் முரண்பாடுகள் இல்லாமலும் இருக்கிற ஒரு நிலைக்கு நலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

ALSO READ:சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்

உடல் அளவில், மன அளவில் நலத்தைப் பற்றி உரையாடப்படுகிற எல்லா உரையாடல் குறிப்புகளிலும் உன்னதம், அசவுகரியம் இல்லாமை, இசைவாக இருப்பது என்கிற நேரடி பொருட்களிலேயே நலம் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவ நலம் குறித்த வரையறைகளில் உடல்நலம், சமூக நலம், மனநலம் என்ற ஒரு முக்கோணத்தை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு மனிதன் நலமாக இருப்பதற்கு உடல்நலம் ஒரு பக்கம், மனநலம் மற்றொரு பக்கம், சமூக நலம் மூன்றாவது பக்கம் இந்த மூன்று பக்கங்களும் இணைந்த ஒரு முக்கோணமாக நலம் கருதப்படுகிறது.

ALSO READ:முடிவில்லாமல் இருப்பது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடிப்படை

இந்த மூன்று பகுதிகளில் ஏதாவது ஒரு பகுதி அதிகமாகவோ பற்றாக்குறையாகவோ இருக்கும் என்றால் அந்த பற்றாக்குறையான பகுதி நலக்குறைபாடாக கருதப்பட்டு மற்ற இரண்டு பக்கங்களையும் நலம் அற்றதாக மாற்றிக் கொள்ளக்கூடிய சிக்கல் உருவாகிவிடும் என்று தமது வரையறையில் உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்கிறது. ஒரு மனிதன் மன அளவில், உடலளவில், சமூக அளவில் நலமாக இருப்பது என்பது குறித்து எந்த விமர்சனமும் விளக்கமும் இல்லாத நிலையில் நாம் பேச முடியும்.

ALSO READ:மகிழ்ச்சியாக இருப்பதற்கான கிழக்கு நாடுகளின் குறிப்பு

எல்லா தளங்களிலும் நலம் குறித்து மருத்துவம் சார்ந்த குறிப்புகள், உடல், மனம், சமூகம் என்கிற தலங்களில் நலம் என்பதற்கான வரையறைகளை வைத்திருந்தாலும் ஒரு மனிதன் இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டு, இந்த வரையறைக்குள் பொறுத்துக் கொள்ளாமல் அல்லது புதியதோர் வரையறையை உருவாக்கக்கூடிய கருத்தோடு நலத்தைப் புரிந்து வைத்திருப்பது இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மருத்துவ விளக்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு தனித்தனி நலம் இருக்கிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

                                                                                            தொடரும்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...