மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக இருப்பதைக் குறித்து ஒரு சூத்திரம் தேவைப்படுகிறது. நான் எவ்வாறு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நான் எவ்வாறு இருப்பதன் வழியாக மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்? என்று சமூகம் முழுவதும் மக்கள் தவித்துக் கொண்டிருப்பதையும் ஒரு சமன்பாடு கிடைத்தால் அவர்கள் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டு மிகுந்த உற்சாகத்தோடு தமது வாழ்வை நகர்த்த முடியும் என்கிற தன்மையில் பயிற்சிக்கு ஒரு சூத்திரத்தை இந்த சமூகம் தேடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே ஒரு சூத்திரத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றால் அதற்கு வாய்ப்பில்லை. சூத்திரங்கள் வழியாக மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியாது. சமன்பாடுகள் மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கு வழி செய்யாது. தியானம் செய்யலாம் அல்லது வேறு ஏதாவது உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யலாம் அதன் வழியாக மகிழ்ச்சி வந்து சேருமா? என்றால் அதற்கும் எவ்வளவு வாய்ப்பிருக்கிறது என்பது தெரியவில்லை. ஏனென்றால் தியானம் செய்பவர்களும் உடற்பயிற்சி செய்பவர்களும் மனப்பயிற்சி செய்பவர்களும் கூட, அதை உண்டாக்கிய பிதாமகர்கள் கூட மகிழ்ச்சியோடு இருந்ததாக தெரியவில்லை.
ALSO READ:HAPPY PART - 1 மகிழ்ச்சி பகுதி - 1
இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில் ஒரு கோபமான காட்சியை
இயேசு கிறிஸ்து பற்றிய கதைகள் நமக்குச் சொல்கின்றன. மிகுந்த ஆன்ம பலம் கொண்ட இயேசு
கிறிஸ்து தன் வாழ்நாளில் ஒரு தேவாலயத்தை கடந்து செல்கிற போது அந்த தேவாலயத்தில் சிலர்
தேவாலயத்திற்கு எதிராக விற்பனை செய்து கொண்டிருப்பதும் மது அருந்திக் கொண்டிருப்பதும்
நடப்பதை பார்க்கிறார். அவர்கள் மீது கடும் கோபத்தோடு ஒரு வெள்ளி பூண் போட்ட சவுக்கை
கொண்டு அவர்களை அடித்து விரட்டிய ஒரு கதை இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் படித்திருக்கிறேன்.
ஆக, இயேசு கிறிஸ்து மாதிரியான ஒரு பெரும் அன்பு கொண்டவர் கூட கோபத்திற்குள் சிக்கிக்
கொள்கிற ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
ALSO READ:HAPPY l PART - 2 l மகிழ்ச்சி பகுதி - 2
அந்தவகையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மறை நூல்களோ
எளிமையான சமன்பாடுகளோ சூத்திரங்களோ பயிற்சிகளோ தியான முறைகளோ எவ்வளவு உதவும் என்பது
கேள்விக்குறியானது தான். என்னைப் பொருத்தவரை கிழக்கு சார்ந்த வாழ்க்கை முறையில் மகிழ்ச்சிக்கு
ஒரு குறிப்பு இருப்பதாக நான் பார்க்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று
முடிவு செய்து கொண்டால் இந்தக் குறிப்பை நீங்கள்
உங்கள் வாழ்க்கையில் வழக்கமாக்கிக் கொள்வீர்கள் என்றால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதற்கு
சாத்தியம் இருக்கிறது. மிக உறுதியாக என்னால் ஒன்றை சொல்ல முடியும் நீங்கள் சஞ்சலத்தை
தவிர்ப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால் மகிழ்ச்சியும் சஞ்சலமும் பக்கத்தில்
இருப்பது போன்ற ஒரு சிக்கல் இருக்கிறது. மகிழ்ச்சிக்கும் சஞ்சலத்திற்குமான ஒரு இடைவெளியை
நாம் ஒருபுறம் பேசினாலும் குறைந்தபட்சம் சஞ்சலம் இல்லாத ஒரு மனநிலையை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் சஞ்சலம் இல்லாமல் இருப்பதையே மகிழ்ச்சி என்று கருதிக் கொள்வதும் நடப்பதுண்டு.
ALSO READ:HAPPY PART - 3 l மகிழ்ச்சி பகுதி - 3 l
இந்த கிழக்கு நாடுகள் வைத்திருக்கிற வாழ்க்கை
முறையில் வழிபாட்டு முறைகளுக்குள்ளும் அவை வெளிப்படப் பார்க்கிறேன். அவர்களது வழக்கமான
செயல்பாடுகளிலும் அது பதிவாக இருப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் சொல்கிற இந்த முறைகளில்
நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள் என்றால் மாற்றிக் கொள்வீர்கள் என்றால் நீங்கள்
மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிழக்கத்திய நாடுகள்
சொல்வது இந்த ஒன்றுதான் அது நீங்கள் எப்போதும் முடிவு இல்லாமல் இருங்கள். நீங்கள் முடிவு
இல்லாமல் இருப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க முடியும் என்பது
உணர்வுபூர்வமானது. அனுபவமாக நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். எப்போதும் மகிழ்ச்சிக்கு
எதிராக இருப்பதும் உங்களது முடிவுகள்தான். எப்போதும் உங்கள் முடிவுகள் நிறைவேறாத நேரங்களிலெல்லாம்
நீங்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக நகர்த்திக் கொண்டே இருக்கிற ஒரு ஏற்பாடு இருக்கிறது.
ALSO READ:ID, EGO, SUPER - EGO (இட், ஈகோ, சூப்பர் - ஈகோ)
அந்த வகையில் உங்கள் மகிழ்ச்சிக்கு உத்திரவாதமான
ஒரு சொல் முடிவு இல்லாமல் இருப்பது. நீங்கள் முடிவு இல்லாமல் இருக்க கற்றுக் கொண்டீர்கள்
என்றால், முடிவு இல்லாமல் இருக்க முயற்சி செய்தீர்கள் என்றால் அதுவும் ஒரு முடிவாகப்
போய்விடும். எந்த யோசனையும் இல்லாமல் வெறுமனே அடுத்தகணம் குறித்து முடிவுகளும் கற்பனைகளும்
ஏதுமின்றி ஒரு அனுபவமாக நகர்ந்து செல்கிற வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள் என்று சொன்னால்
நீங்கள் மகிழ்ச்சிக்குறியவர்களாக எப்போதும் இருக்க முடியும்.
தொடரும்...
No comments:
Post a Comment