Monday, February 1, 2021

HAPPY PART - 3 l மகிழ்ச்சி பகுதி - 3 l

  மகிழ்ச்சியாக இருப்பது குறித்து என்னதான் நடக்கிறது?

www.swasthammadurai.com


    மகிழ்ச்சியாக இருப்பது குறித்து என்னதான் நடக்கிறது ஒரு மனிதனுக்குள் என்று ஆய்வு செய்கிற நிலையில் நிறைய உரையாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எல்லா மனிதனின் அடிப்படை இலக்கு இன்பக் கோட்பாடு என்று சிக்மன்ட் பிராய்டு என்கிற உளவியல் மேதை குறித்து வைத்திருக்கிறார். அந்த வகையில், இன்பக் கோட்பாடு என்பது ஒரு மனிதன் இன்பமாக இருப்பதற்கான செயல்பாடுகளை அந்த மனிதனின் மனம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. அது அவனது ஆழமான அனுபவங்களின் தொகுப்பாக அவனுக்குள் பதிவாகி இருக்கிறது என்று இன்ப கோட்பாடை தொகுத்து வைத்திருக்கிற அந்த மாமேதையின் குறிப்பு அது.

ALSO READ:HAPPY l PART - 2 l மகிழ்ச்சி பகுதி - 2

     உண்மையிலேயே மனிதனின் மனம் என்பது தன்னை இன்பமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் ஒரு ஆர்வத்தோடு இருக்கிறது. இந்த இன்பக் கோட்பாடு என்பது கிழக்கு நாடுகளில் ஆன்ம அடைதல் என்று தத்துவ மரமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் இது உன்னதம் சார்ந்து ஒரு மனிதனின் கரைந்து போகிற பேரின்பம் சார்ந்து விளக்கம் சொல்லப்படுகிற கோட்பாடாகவும் இந்த இன்பக் கோட்பாடு இருக்கிறது. இத்தனை பெரிய தளத்தில் மகிழ்ச்சிக்குரிய வேறுவேறு உரையாடல்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதன்முதலில் சிக்மன் பிராய்ட் மகிழ்ச்சியைப் பற்றி பதிவு செய்த அவரது பதிவுகள் இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் மீண்டும் மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிற ஆய்வாளர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அப்படி ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது.

ALSO READ:HAPPY PART - 1 மகிழ்ச்சி பகுதி - 1

     ஆரம்பத்தில் பேசப்பட்ட ஒரு கருதுகோள் என்பது காலப்போக்கில் வளர்ச்சியின் காரணமாக சமூகத்தின் தேவை குறித்து தன்னை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்  ஏற்படத்தான் செய்யும். அந்த அவசியத்தின் அடிப்படையில் இன்பக் கோட்பாடை வரையறுத்து சொன்ன சிக்மன் பிராய்டினுடைய வரையும் கூட இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வாளர்களின் கூற்று உண்மையானதுதான். எத்தகைய வரையறைக்குள்ளும் இந்த இன்பக் கோட்பாடை அல்லது இன்பமாக இருக்க வேண்டும் என்பதை உன்னதமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற மனதின் விருப்பத்தை நாம் மகிழ்ச்சி என்றே பொதுமைப் படுத்திக்கொள்ள முடியும்.

ALSO READ:ID, EGO, SUPER - EGO (இட், ஈகோ, சூப்பர் - ஈகோ)

     காலகாலத்திற்கு கோட்பாடுகளின் வழியாக மகிழ்ச்சி விதவிதமாக விளக்கப்பட்டாலும் கூட அடிப்படையில் ஒற்றைச் சொல்லாக மகிழ்ச்சி என்றே அவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். மகிழ்ச்சி என்ற சொல் நீண்ட காலமாக இதே பொருளிலேயே இருக்கிறது. ஒருவேளை ஒரு காலத்திற்குப் பிறகு மகிழ்ச்சி என்ற சொல் வேறு ஒரு பொருளில் அழைக்கப்படும் என்றால் இன்று மகிழ்ச்சி என்ற சொல் எந்தப் பொருளில் அழைக்கப்படுகிறதோ வழங்கப்படுகிறதோ அந்த பொருளுக்குரிய தன்மையிலேயே மகிழ்ச்சியை நாம்  உன்னதம் என்று புரிந்து கொள்ளலாம். பேரின்பம் என்று புரிந்து கொள்ளலாம். எல்லா வகையான மனதினுடைய அடிப்படை இலக்கு பேரின்பமும் உன்னதமும் தான். எல்லா மனிதர்களும் பேரின்பத்தையும் உன்னதமாக இருப்பதையும் விரும்புவதிலேயே தமக்கான வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த விருப்பம் தான் அவர்களை இயக்குகிறது என்று உளவியல் கூறுகிறது.

ALSO READ:FEAR -பயம்

     ஆக, பேரின்பமாகவும் உன்னதமாகவும்  பெருமகிழ்ச்சியாகவும் இருப்பது மனிதனின் அடிப்படையான இயக்க விதி. வழக்கு மொழிகளில் தலையெழுத்து என்ற ஒரு வார்த்தையை நீங்கள் தமிழிலே பார்த்திருக்கக்கூடும். மாற்றி அமைக்க முடியாத இயல்பு என்கிற பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. மனதின் தலையெழுத்து கிட்டத்தட்ட இன்பமாக இருக்க வேண்டும் என்கிற ஒற்றை வேகத்திலேயே பயணிப்பதாக இருக்கிறது. அந்தவகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பயணம் என்பது, நகர்வு என்பது, அசைவு என்பது மகிழ்ச்சியை, உன்னதத்தை, பேரின்பத்தை நோக்கியதாகவே இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. நீங்களும் கூட இதை பார்த்திருக்கக்கூடும்,. அனுபவித்து இருக்கக்கூடும்.

                                                    தொடரும்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...