மகிழ்ச்சி பகுதி
5
முடிவில்லாமல் இருப்பது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடிப்படை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பட்டியலில் பின்வருமாறு குறிப்புகள் சேர்க்கப்பட வேண்டும். ஒரு ஒட்டுமொத்த வாழ்நாளில் உங்கள் நினைவிற்கு உட்பட்டு எப்போதெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறீர்கள்? எப்போதெல்லாம். நீங்கள் துன்பமாக இருந்திருக்கிறீர்கள்? என்று அந்தப் பட்டியலை தயார் செய்யுங்கள். அந்தப் பட்டியல் முழுவதும் உங்கள் மகிழ்ச்சி, துன்பம் குறித்த காட்சிகளும் செய்திகளும் மட்டும் இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தப் பட்டியல் தயார் செய்து முடித்த உடன் அந்த பட்டியலை நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தால் ஒரு உண்மையை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். அது நீங்கள் கடந்து வந்த எதார்த்தம். அந்த எதார்த்தம் என்ன சொல்கிறது? என்று நீங்கள் பார்த்தால் பின்வருமாறு அந்த எதார்த்தம் உங்களுக்குச் சொல்லும்.
ALSO READ:மகிழ்ச்சியாக இருப்பது குறித்து என்னதான் நடக்கிறது?
நடக்கிற நிகழ்வு குறித்து, நடக்கவிருக்கிற காட்சிகள்
குறித்து, நீங்கள் ஒரு விருப்பம் கொண்டவராக எப்போதும் இருந்து வந்திருப்பீர்கள். உங்கள்
விருப்பத்தில் இருந்து எதிர்கொள்ளக்கூடிய காட்சியில் சில பகுதிகள் இவ்வாறு இருக்க வேண்டும்
என்று நீங்கள் முடிவு செய்து வைத்திருப்பீர்கள். உங்கள் முடிவிற்கு இசைவாக அந்தக் காட்சி
இருக்கும் என்றால் நீங்கள் அப்போதெல்லாம் மகிழ்ச்சியான ஆளாக இருந்திருப்பீர்கள். ஒருவேளை
நீங்கள் முடிவு செய்த அடிப்படையில் அந்தக் காட்சியோ அந்த இசைவின்மையோ நீங்கள் பார்த்திருப்பீர்கள்
என்றால் நீங்கள் அந்தக் காட்சி குறித்து அந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சியற்றவராக,
துன்பம் நிறைந்தவராக இருப்பீர்கள். அந்தப் பட்டியல் முழுவதும் இப்படித்தான் நிரம்பி
இருக்க முடியும். ஏனென்றால் இந்த சமூகத்தில் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தீர்மானிப்பது
அடுத்தகணம் குறித்த முடிவுகளும் விருப்பங்களும் கற்பனைகளும் தான்.
ALSO READ: எப்போதெல்லாம் நமக்கு மகிழ்ச்சி குறைபாடு ஏற்படுகிறது?
ஆக, ஒரு மனிதன் மகிழ்ச்சி இல்லாமல் வாழ வேண்டும்
என்பதை விடவும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை விடவும் இந்த சமூகம் அக்கறை கொள்கிற,
இந்த மனிதர்கள் அக்கறை கொள்கிற, மிக முக்கியமான ஒரு செய்தியை இந்தப் பட்டியல் உங்களுக்கு
தரும். இந்தப் பட்டியல் உங்களது சொந்த பட்டியல்தான். நீங்கள் அனுபவித்த அனுபவங்களை
தொகுத்திருக்கிறீர்கள். இதற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உண்மை முடிவு இல்லாமலும்
கற்பனை இல்லாமலும் நீங்கள் இருக்கிற போது துன்பத்திற்குள்ளும் இன்பத்திற்குள்ளும் பயணிக்காத
ஒரு சாதாரண நிலையை பார்க்க முடியும். எதிர்வரும் காலத்தில் இந்தப் பட்டியலில் தந்த
அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் முடிவுகளையும்
கற்பனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு வெறுமனே இசைவோடும் அல்லது இசைவில்லாமலும் நீங்கள்
அந்தக் காட்சியை கடந்துசெல்ல முடிவு செய்வீர்கள் என்றால் அந்த காட்சியில் நகர்ந்து
செல்வதற்கு நீங்கள் இசைவாக இருப்பீர்கள் என்றால் அந்தக் காட்சி அந்த நிகழ்வு உங்களுக்கு
மகிழ்ச்சியை தருவதை விடவும் நிச்சயமாக துன்பத்தைத் தருவதாக அமையாது. அது ஒருபோதும்
துன்பத்தைத் தரக்கூடிய வல்லமையோடு உங்களை சந்திக்காது.
ALSO READ:மகிழ்ச்சியாக இருப்பதற்கான கிழக்கு நாடுகளின் குறிப்பு
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அல்லது துன்பம்
இல்லாமல் இருப்பதற்கு காரணமாயிருக்கும் ஒரு செயல்பாடு எது குறித்தும் முன் முடிவோடு
எப்போதும் இராதீர்கள்.
நன்றி.
No comments:
Post a Comment