Sunday, February 14, 2021

EDUCATION - PART 1 l கல்வி - பகுதி 1

 

                           கல்வி

www.swathammadurai.com


     குழந்தைகள் கல்வி என்பது குறித்து ஒரு உரையாடலை நாம் துவங்கி இருக்கிறோம். குழந்தைகள் நலம் குறித்தான வெவ்வேறு தளங்களில் இதற்கு முன் ஒரு உரையாடல் செய்தோம். அதன் அனுபவம் என்னவாக இருக்கிறது? என்கிறபோது ஒரு குழந்தையின் நலம் குறித்து அக்கறைப்படும் ஒரு ஆழமான பார்வையோடு, காத்திருப்போடு, குழந்தைகளையும் குழந்தை நலத்தையும் எதிர் கொள்பவர்களுடைய எண்ணிக்கை நாம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தொடர்ந்த உரையாடலில் நாம் கண்டுகொண்டது - குழந்தை நலம் குறித்து அக்கறைப்படுகிற பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒரு வகையில் அனைவரும் குழந்தைகளாக தன் வாழ்நாளை கடந்து சென்ற, சென்று கொண்டிருக்கிற, செல்லவேண்டிய தன்மையோடு இருக்கிற காரணத்தினால் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தன்மையோடு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தைத்தனம் சந்திக்கும் வாய்ப்பை பெற காரணத்தினால் குழந்தை நலம் குறித்து ஒவ்வொருவரும் உரையாட வேண்டும்.

ALSO READ:HOME SCHOOLING - 3 - வீட்டிற்குள் பாடசாலை

    குழந்தைத்தனம் என்பது மீண்டும் மீண்டும் குழந்தைகளை கையாண்டு பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுவதாக இருக்கிறது. குழந்தைகளைக் கையாண்டு பார்ப்பதில் ஒரு மனிதனின் வெற்றி தீர்மானிக்கப்படுவதாக சமூகம் நம்பிக் கொண்டு தான் இருக்கிறது. யாவரையும் கையாண்டு கொள்ளலாம் என்கிற பொருளாதார  போட்டி மனோபாவம், குழந்தைகளையும் கையாண்டு கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்துவது வியப்பூட்டுவது அல்ல. இயல்பானதாகவே அந்த மனநிலை அப்படித்தான் இருக்க முடியும். அந்தவகையில் இந்த மொத்த சமூகமும் ஏதாவது ஒரு தன்மையில் குழந்தைகளை கையாண்டு கொள்வதும் குழந்தைகளுக்குத் தரவேண்டிய சந்தர்ப்பங்களை, வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்காமலும் நகர்ந்துகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த சமூகத்தின் வடிவம் அப்படித்தான் அமையப் பெற்றிருக்கிறது.

ALSO READ:HOME SCHOOLING - 2 வீட்டிற்குள் பாடசாலை

                உளவியல் சார்ந்த ஆவணங்களில் சூப்பர் ஈகோ என்ற ஒரு வார்த்தை பயன்படுத்தப்படும். சூப்பர் ஈகோ என்று மனித மனதிற்குள் இருக்கிற ஒரு சமூகச் சாயலை சூப்பர் ஈகோ என்று வரையறுப்பார்கள். உளவியலின் முதன்மையான ஆசான் சிக்மண்ட் ஃப்ராய்ட் சூப்பர் ஈகோ என்ற வார்த்தையை கண்காணிப்புக்குரிய ஒரு மனிதனை உள்ளிருந்து கண்காணிப்பதற்கான ஒரு முனைப்பு சூப்பர் ஈகோ என்று பொருள்பட வரையறுக்கிறார். பின்னாளில் அது குறித்து வேறுவேறு ஆய்வுகள் செய்யப்பட்ட நிலையில் இன்று சூப்பர் ஈகோ என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கிற, மனிதனை கட்டுப்படுத்துகிற சமூக சாயல். ஒரு மனிதன் எவ்வாறு இயங்க வேண்டும்? என்று அவனைச் சுற்றியிருக்கிற சமூகம் விரும்புகிறதோ அத்தகைய விருப்பத்தின் பாற்பட்டு அந்த மனிதன் இயங்குவதற்கான வேலைகளை அவனுக்குள்ளே இருந்து செய்வதற்கான அமைப்பு சூப்பர் ஈகோ என்று சூப்பர் ஈகோ பற்றி ஒரு சுருக்கமான வரையறை சொல்லமுடியும். அப்படி ஒரு சூப்பர் ஈகோ உருவாவதற்கு மனிதர்களை பழக்கும் சமூகமாக இந்த சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.

ALSO READ:HOME SCHOOLING ( வீட்டு வழி பாடசாலை)

                ஒரு மனிதன்  ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக இருப்பார் என்றால் அந்த மதம் அவருக்கு எத்தகைய வாழ்க்கை முறையை பரிந்துரைக்கிறதோ அந்த வாழ்க்கை முறைக்கு உட்பட்டவராக அவரை தயார்படுத்தும் வேலையை இந்தச் சமூகம் அவருகுள்ளேயே உருவாக்கும் முயற்சியை செய்கிறது. ஒரு குழந்தை மனதிற்குள் யார் கண்காணிப்பும் இல்லாத போதும் கூட ஒரு குழந்தையினுடைய மனம் ஏதாவது ஒரு சமூகத்தைச் சார்ந்து இருக்கிற, ஏதாவது ஒரு சமூகத்திற்கு வயப்பட்டிருப்பதை தன்மையில் உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு அந்த குழந்தைக்கு பயிற்சி அளிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு இந்து மத வழிபாட்டில் பிறக்கிற ஒரு குழந்தை அல்லது கிறிஸ்தவ மத வழிபாடு, இஸ்லாமிய மத வழிபாடு இன்னபிற  மத வழிபாட்டு முறைகளில் பிறக்கிற ஒரு குழந்தை பிறக்கிற போது எந்த வழிபாட்டு முறைகளும் தெரியாத குழந்தையாகவே பிறக்கிறது.

ALSO READ:நரிகள் வடைசாப்பிடுவதில்லை

                 ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் கூட அந்த குழந்தைக்கு எவ்வாறு வழிபட வேண்டும் என்பது தெரியாமலேயே இருக்கிறது. இன்னும் அந்தக் குழந்தையோடு நீங்கள் இருந்து கவனித்தீர்கள் என்றால் அந்த குழந்தைக்கு வழிபட வேண்டும் என்பது கூட  தெரியாத குழந்தையாக அந்த குழந்தை தன் வாழ்நாளை நகர்த்திக் கொண்டே இருக்கும். இந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த குழந்தைக்கு தன்னைப்பற்றி, தன்னைச் சுற்றி இருக்கிற உலகம் பற்றி ஒரு கவனம் வந்ததற்குப் பிறகு அந்த குழந்தை மட்டும் நடந்து செல்கிற ஒரு சாலையில், ஒரு வெளியில், தூரத்தில் கிறிஸ்தவ குழந்தை என்றால் ஒரு தேவாலயமோ, இஸ்லாமிய குழந்தை என்றால் ஒரு மசூதியோ, இந்துக் குழந்தை என்றால் ஒரு திருக்கோயிலோ கண்ணில் படுகிறபோது யார் கவனித்தாலும் கவனிக்காமல் இருந்தாலும்கூட தன் மதச் சின்னத்தை ஒருமுறை வழிபட்டுக் கொண்டு கடந்து செல்கிற ஒரு பாவனையை அந்தக் குழந்தை செய்துவிட்டுப் போவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

                                                                                                                                                                                                                                                                       தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...