Wednesday, February 17, 2021

EDUCATION PART - 2 l கல்வி பகுதி - 2

 

                            கல்வி

www.swasthammadurai.com
பாவனையை அல்லது  அந்த நம்பிக்கையை உள்ளடக்கிய நபராக நீங்களும் கூட இருந்திருக்கக்கூடும். வழிபாடு குறித்து எந்தவித அக்கறையும் பார்வையும் தேவையும் இல்லாத ஒரு குழந்தை,ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாருமே தன்னை கண்காணிக்கவில்லை என்றாலும் யாரும் தன்னைப் பின் தொடரவில்லை என்றாலும் தான் மட்டும் தனித்து நடந்தாலும் கூட அந்தக் குழந்தை ஒரு மத வழிபாட்டை பொறுப்புடன் செய்து கடந்து செல்கிற இயங்கு முறையை உருவாக்கியது யார்? எப்படி? என்பது குழந்தை உளவியலின் முக்கியமான கேள்வி. இந்தப் பகுதியை உருவாக்குவதில் சமூகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் நாம் பேச வேண்டிய உரையாடலின் மையம்.

ALSO READ:EDUCATION - PART 1 l கல்வி - பகுதி 1

                அந்தக் குழந்தைக்கு சமூகம் விரும்புகிற அல்லது சமூகம் விரும்பாத எந்த ஒரு பகுதியும் செயலும் கூட அந்தக் குழந்தை முன் வந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமூகம் விரும்புகிற அல்லது சமூகம் விரும்பாத ஒரு செய்தியை ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவும் புகுத்தவும் அந்தக் குழந்தையைச் சுற்றி ஒரு ஏற்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. சமூகம் விரும்புகிற என்று சொன்னால், எல்லாம் சமூகமும் விரும்புகிற ஒரு கருத்து. உதாரணமாக திருடக்கூடாது  என்று ஒரு சமூகக் கருத்தை ஒரு குழந்தைக்கு உட்செலுத்துகிற ஒரு வேலையை இச்சமூகம் செய்கிறது. திருடலாமா? வேண்டாமா? என்கிற அறத்திற்குள் இந்த உரையாடலை நான் செய்ய விரும்பவில்லை.

ALSO READ:CHILD HEALTH - PART 1 குழந்தை நலம் - பகுதி 1

                ஆனால் திருடக்கூடாது என்கிற ஒரு  கோட்பாடை ஒரு குழந்தைக்கு இச்சமூகம் கற்பிக்க முயற்சி செய்கிறது. குழந்தையைப் பொருத்தவரை திருட்டு என்பது ஒன்று கிடையாது. குழந்தையின் உலகத்தில் திருட்டு பற்றி எந்த பார்வையும் கிடையாது; அபகரிப்பு பற்றி என்ற பார்வையும் கிடையாது; பரிவர்த்தனை செய்து கொள்வது பற்றி எந்த பார்வையும் கிடையாது;இந்த பொருளாதார லௌதீக வரையறைகள் எதுவும் இல்லாததால் அந்த குழந்தைக்கு திருட்டு பற்றி எதுவும் தெரியாது. எனவே திருட்டு குறித்து பின் குழந்தைகளை நாம் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.  ஆனாலும் இந்த சமூகம் ஒரு குழந்தைக்கு திருடக் கூடாது என்று வலியுறுத்த விரும்புகிறது.

ALSO READ:CHILD HEALTH - PART -2 குழந்தைகள் நலம் -பகுதி - 2

                அந்த வகையில் அந்த குழந்தைக்கு சமூகம் பொது வரயறையாக திருடக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தையினுடைய வளர்ச்சியில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு  அந்தக் குழந்தை தனியாக ஒரு காட்டில் யாருமே இல்லாது யார் ஒருவரும் தன்னை பின் தொடரவில்லை என்று தெரிந்தாலும் கூட அந்த குழந்தையால் திருட முடியாது, இன்னொருவர் பொருளை அபகரிக்க முடியாது. இந்த அபகரிக்க முடியாத நிலை என்பது எங்கிருந்து வருகிறது? என்றால் திருட்டைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லாத குழந்தைக்குள் திருடக்கூடாது என்ற ஒரு தொடர்ந்த உரையாடல் சமூகத்தின் வாயிலாக நடத்தப்பட்டு அதன்பின் அந்தக் குழந்தை திருடக் கூடாது என்று ஒரு பொது புத்தியை உருவாக்கிக் கொள்கிறது. ஒரு பொது மனநிலையை அந்தக் குழந்தைக்கு இந்த சமூகம் சுமத்தி வைக்கிறது.

ALSO READ:CHILD HEALTH PART - 3 குழந்தைகள் நலம் பகுதி -3

                இவ்வாறு சமூகம் சுமத்தி வைக்கிற, சமூகம் சார்ந்து யாருமே இல்லாத போதும் கூட சமூகம் இயங்குகிற இயங்குதளத்தில் சமூகம் இயங்க வேண்டும் என்கிற பாதையில் ஒரு குழந்தையை இயங்கச் செய்கிற வேலைக்கு சூப்பர் ஈகோ என்று சிக்மன்ட் ப்ராய்டு பெயர் சூட்டியிருக்கிறார். அது சமூகம். இந்த உளவியலை ஒரு குழந்தைக்குள் உருவாக்கி வைக்கிற திட்டங்கள் பல இருக்கின்றன இந்த சமூகத்தில். அந்த குழந்தை சார்ந்திருக்கிற சமூகம் சார்ந்து, சமூக வரையறை சார்ந்து, மத வரையறை சார்ந்து அந்தக் குழந்தை இயங்கலாம். மனித குலத்திற்கே பொதுவாக இருக்கிற ஒரு சொல்லை ஒரு கருத்தை பற்றிக்கொண்டு அந்த குழந்தை இயங்கலாம். ஆனால் அந்த குழந்தை பிறந்த போது அது சார்ந்திருக்கிற சமூகம் குறித்தோ அது சார்ந்திருக்கிற மதம் குறித்தோ அது சார்ந்திருக்கிற சாதியப் பாகுபாடுகள் குறித்தோ அது மறுக்கவோ ஏற்கவோ எந்த அறிவும் இல்லாமல் எந்த யோசனையும் இல்லாமல் அந்தக்குழந்தை வெறுமனே  இந்த பூமியை பார்க்க வருகிறது. அதற்குள் எந்த ஆபத்தும் இல்லாத பெரும் அமைதியோடு அந்தக் குழந்தை தன் வாழ்வை துவங்குகிறது. இயற்கையின் இயங்குமுறை அப்படித்தான் இருக்கிறது. அந்த வகையில் தான் அந்தக் குழந்தை இந்த பிரபஞ்சத்திற்கு வருகிறது. அப்படி வருகிற அந்தக் குழந்தைக்கு ஒரு திட்டமிட்ட மேடையை, இயங்கும் முறையை, சமூகம் அதற்கு சாதகமான அதற்கு இசைவான தன்மையில் உருவாக்கி வைக்கிற ஒரு  ஏற்பாட்டிற்குப் பெயர் சூப்பர் ஈகோ என்று சிக்மன்ட் ப்ராய்ட் வரையறுக்கிறார்.

                                                                                                                                                                                தொடரும்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...